திங்கள், 28 ஜூலை, 2014

இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்

இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்

குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்ய, உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)  (அல்குர்ஆன், 2:185)

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்க ளுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்;  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி  தக்பீர் செய்யும் பொருட்டு  இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; எனவே நல்லோர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக (அல்குர்ஆன், 22:36-37)

இஸ்லாத்தின்; மிக முக்கிய சிறப்பம்சங்களுள்  ஒன்றுதான் இரு பெருநாள் தினங்களுமாகும் இது   இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் முக்கிய ஒன்றாகும்  இதை நாம் மதித்து கண்ணியப்படுத்துதல் தக்வா எனும் பயபக்தியைச் சார்ந்ததாகும்.  ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: 

'அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை யார் கண்ணியப்படுத்துகின்றாரோ நிச்சயமாக அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடேயாகும்'. (22:32)  

இப்புனித நாளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.''நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு திருநாள்கள் இருந்தன. அவ்விரு நாட்களிலும் அவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''இவ்விரு நாட்களை விடச்சி றந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி தியாகத் திருநாள், மற்றும் ஃபிதர் ஈகைத் திருநாள் ஆகிய இரண்டுமாகும்'' எனறார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள்  நூல்: அபூதாவூத், நஸயீ)

எனவே இப்புனித நாளை நாம்  நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நின்று அனுஷ்ட்டிப்பது  அவசியமாகும்;. இதுவே ஏனைய சமூகத்தினர்களதும் நமதும் பெருநாளைக்குள்ள வேறுபாடாகும்.

முதலாவது தக்பீர் சொல்லுதல்

முதலில் மகிழ்ச்சிகரமான இவ்விருநாட்களை நாம் தக்பீர் முழக்கத்துடன் வரவேற்க வேண்டும்;. 

நோன்புப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்ய, உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)  (அல்குர்ஆன், 2:185)

ஹஜ்ஜுப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனைச் சென்றடையும்;  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி  தக்பீர் செய்யும் பொருட்டு  இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்;  (அல்குர்ஆன், 22:36-37)

அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்களுக்கும் இன்னும் இவ்வாறான புனிதத் தினங்களை வழங்கியதற்கும் நாம் நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வை பெருமைப் படுத்தும் விதமாக, அன்றைய தினங்களில் தக்பீர் சொல்லுதல் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அதிகமதிகம் தக்பீர் தஸ்பீஹ் போன்றவைகளை சொல்வதில் கழிக்கப்படல் வேண்டும்.

குளித்லும் தொழுதலும்

அடுத்ததாக நாம்  இந்நாளை ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் தொழுகையைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

''நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்து பலியிடுவோம் யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழி முறையைப் பேணியவராவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ரா (ரழி) அவர்கள்  நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு (மைதானத்திற்கு) செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்த பின்னர் மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள், (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள், ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப நாடியிருந்தால் அனுப்புவார்கள். ஏதேனும் (கட்டளையிட வேண்டியிருந்தால் கட்டளையிடுவார்கள் பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி  (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னதாகக் குளித்து சுத்தம் செய்து கொள்வது சுன்னத்தாகும் அத்துடன் தன்னிடம் இருக்கக்கூடிய ஆடைகளில் சிறந்ததை அணிவதுடன் தம்மிடம் இருக்கக்கூடிய வாசனைத் திரவியங்களிலும் பூசிக்கொள்ளுதல்; நபி வழியாகும். ஆனால் பெண்கள் தங்களின் அலங்காரங்களை வெளிக்காட்டாத வகையில் ஆடையணிவதுடன் வாசனை எதுவும் பூசிக்கொள்ளாமல் தொழுகைக்குச்; செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளில் அந்நிய ஆண்கள் இல்லாத போது தங்களை அலங்கரித்து வாசனைகளை பூசிக்கொள்வதில் தவறேதும் கிடையாது. பெருநாள் தொழுகை நடை பெறுவது பள்ளிவாயிலாக இருந்தால் மாதவிடாய், மற்றும் பிரசவத் தீட்டையுடைய  பெண்கள் செல்லக்கூடாது ஆனால் தொழுகை பள்ளி வாயிலுக்கு வெளியே மைதானத்தில் நடைபெறுமாகவிருந்தால் அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாது பயான் மற்றும் தக்பீர் சொல்லுதல் போன்ற ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லலாம். பெருநாள் தொழுகையை திறந்த ஒரு மைதானத்தில்  நிறைவேற்றுவதுதான் நபிவழியாகும் எனினும் மழை மற்றும் கடினமான வெய்யில்;  போன்ற காரணங்கள் இருந்தால் பள்ளிவாசலில் தொழலாம். 

பெருநாள் தொழுகையைக் கழாச் செய்தலும் அதற்குரிய நேரமும்.

ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்து தாங்கள் நேற்று பிறையைப் பார்த்தாக சாட்சி அளித்தனர். நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், காலை விடிந்ததும் தொழும் திடலுக்கு செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர் (ரழி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ

மேற்படி அறிவிப்பு பெருநாள் தொழுகை ழுஹருடைய நேரத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும், அவ்வாறு அதற்கு உரிய நேரத்தில் அதனை நிறைவேற்ற முடியாது போனால் மறுநாள் அதன் நேரத்தில்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும் சான்றாகும்.

இரு பெருநாளைக்கும் இடையிலான வேறுபாடுகள்.

Y       நோன்புப் பெருநாளைக்குரிய தக்பீர் சவ்வால் பிறை தெரிபட்டால் அன்று மஃரிபிலிருந்து  மறு நாள் பெருநாள் தொழுகை வரை சொல்லப்படும்
Y       ஹஜ் பெருநாளைக்குரிய தக்பீர் இரு விதமாக சொல்லப்படும். 
1.       துல்ஹஜ் பிறை 01 ஆம் நாள் மஃரிபிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை பள்ளி வாயில்கள், கடைத்தெருக்கள், வீடுகள் போன்ற அனைத்து இடங்களிலும் தக்பீர் சொல்லுதல்  ஆண்கள் சப்தமாக கூறுவது விரும்பத்தக்கது பெண்கள் சத்தமாகச் சொல்லக் கூடாது. 

2.       இரண்டாம் வகை அரஃபாவுடைய தினம் அதாவது துல்ஹஜ் 9ம் நாள் சுபஹிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் தக்பீர்  சொல்லுதலாகும்.

Y       நோன்புப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் ஒற்றைப்பட ஈத்தம்பழங்களை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சுன்னத்தாகும் ஈத்தம் பழம் கிடைக்கவில்லையாயின் ஏதாவது தன்னிடம் இருக்கக்கூடிய உணவை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சிறந்ததாகும்.

Y       ஹஜ்ஜுப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் எதுவும் சாப்பிடாமல் செல்வது சுன்னத்தாகும் அவ்வாறே தான் குர்பான் கொடுப்பவராக இருந்தால் அவர் குர்பான் இறைச்சியையே அன்றைய தினம் தொழுதுவிட்டு வந்து சாப்பிட வேண்டும் இதுவே அவருக்கு சுன்னத்தாகும் அவர் குர்பான் கொடுக்கவில்லையாயின் தன்னிடம் இருக்கக்கூடிய உணவைச் சாப்பிடலாம்.

Y       நோன்புப் பெருநாளைக்குத் தொழுவதற்கு முன் ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது கடமையாகும். தொழுகை முடியும் வரை பிற்ப்படுத்துதல் கூடாது.

Y       ஹஜ்ஜுப் பெருநாளைக்கு தொழுகை முடிந்த பிறகு உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்தாகும். தொழுகைக்கு முன் கொடுக்கக் கூடாது.

Y       ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது ரமழானின் இறுதி நாளிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்லும் வரையிலாகும். ஓரிரு தினங்கள் முன்னதாகக் கொடுத்து விடுவதில் தவறில்லை.

Y       உழ்ஹிய்யா கொடுப்பது பெருநாள் தினத்திலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று தினங்களுடன்  துல்ஹஜ் 10, 11, 12, 13  ஆகிய நான்கு நாட்க்களுமாகும். பெருநாளன்று கொடுப்பது மிகவும் ஏற்றமுடையதே.

குர்பானியை நிறைவேற்றுபவர் தனது உழ்ஹிய்யாவின் இறைச்சியை உண்பது நபிவழியாக இருப்பதுடன் அல்லாஹ்வின் கட்டளையாகவும் உள்ளது.

'அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்'( அல்குர்ஆன், 22:28) 

Y       தொழுகைக்குச் செல்லும் போது ஒரு வழியாலும்  திரும்பி வரும்  போது வேறு வழியாலும் செல்லுதல் நபிவழியாகும்.

தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகள்.

இசையுடன் கூடிய பாடல்களை கேட்டல், திரைப்படங்கள் பார்த்தல், ஆண்கள் பெண்கள் கலந்து கலியாட்டங்களில் ஈடுபடுதல் பட்டாசு கொழுத்துதல் மற்றும் ஏனைய அணைத்துவிதமான வெறுக்கத்தக்க காரியங்களிலும் ஈடுபடுதல் போன்றவைகளை அந்தப் புனித நாட்களில் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் வந்தால்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் ஏற்படுமேயானால் இரண்டு தொழுகையையும் வெவ்வேறாக தொழுதாக வேண்டுமா அல்லது இரண்டில் ஒன்றை மட்டும் தொழுதால் போதுமா? என்ற கேள்வி எழலாம். 

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

''இன்றைய தினம் இரு பெருநாள்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்கும் போதுமானதாகும். ஆனால் நாம் ஜும்ஆ நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராÊ நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா

மேற்படி அறிவிப்பின் மூலம் பெருநாள் தொழுகை தொழுதால் ஜும்ஆ தொழுகை விரும்பினால் தொழலாம் இல்லையெனில் விட்டுவிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழுலாமா?

பெருநாள் தொழுகைக்கு முன்பாக லுஹர் தொழுகை உட்பட எத்தொழுகையும் தொழக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்Ê நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு எத்தொழுகையும் தொழமாட்டார்கள், வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் திரும்பினார்கள். இரண்டு ரக்அத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத( ரழி) நூல்: இப்னுமாஜா

பெருநாள் தொழுகை பள்ளிவாயலுக்கு வெளியில் மைதானத்தில் நிறைவேற்றப்படுமானால் அத்தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தவொரு தொழுகையும் தொழக்கூடாது. ஏன்றாலு வீட்டில் தொழுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறே பெருநாள் தொழுகை பள்ளிவாயலில் நடாத்தப்பட்டால் பள்ளிவாயலுக்குச் செல்பவர் பள்ளிக் கானிக்கை இரண்டு ரகஅத்து தொழுவது அவசியமாகும்.

முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம 


செவ்வாய், 8 ஜூலை, 2014

Minister Rauff Hakeem Parliament Speech on Aluthgama & Beruwala(17-06-2014)

Mervin Silva Minister's reply to BBS (Bodu Bala Sena - Muslim ladies' Dr...

Aluthgama dharga town attack, Who threw the first stone to start?

Aluthgama darga town bodubala sena speech (Gossipbook.lk)

Aluthgama situation update 09-05-2014

Gnanasara outside the courts on 07-07-14

சனி, 5 ஜூலை, 2014

அனுராதபுரம் முதல் அலுத்கம வரை

அனுராதபுரம் முதல் அலுத்கம வரை

இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து விதமான வண்முறைகளும் அராஜகங்களும் பகிரங்கமாகவே அரச அங்கிகாரத்துடனும் ஆதரவுடனும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றன. இந்நிலையில் இவற்றை எதிர் கொள்வதற்க்கு நாம் பல்வேறு விதமான ஜனநாயக வழிமுறைகளை முன்னெடுத்தும் அவைகள் எவ்விதப் பலனையும் நமக்குப் பெற்றுத் தந்ததாகத் தெரியவில்லை. மாறாக கடந்த சில நாட்க்களாக குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பள்ளி அல்லது வர்த்தக நிலையம் போன்ற ஏதாவதொன்று எரிக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டுள்ளது  எனும்; செய்தியுடனேயே நாம் கண் விழிக்கின்றோம்.

அனுராதபுர அட்டப் பொக்குன ஸியாரத் தகர்புடன் ஆரம்பமான இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான அத்து மீறல்கள் இன்று அலுத்கமயில் இனக்கலவரமாகப் பரினாமம் பெற்று பல முஸ்லிம் உயிர்களையும் பல மில்லியன் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களையும் பலி கொண்டுள்ளதுடன் நூற்றுக்கனக்கான நம் சகோதரர்களை பாசிச கும்பல்களின் அடிதடிகளுக்கும் ஆளாக்கியுள்ளதானது இந்த நாட்டின் முஸ்லிம் விரோத போக்குடையக் காவிக் காடையர்களின் அராஜகத்தின் அதி உச்ச கட்ட வளர்ச்சியினைப் பறைசாட்டுவதாகவுள்ளது.

இந்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியவர்கள் வழமை போன்று சட்டத்தை யாரும் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அவரின் வழமையான பளய பல்லவியையே இம்முறையும் பாடிக் கொண்டிருக்கின்றார்.

அவ்வாறே ஏனைய அரசத் தலைவர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பௌத்த பிக்குகள் அரசத் தலைவர்கள் அதிகாரிகள் புத்திஜீவிகள் போன்றோரை உள்ளடக்கிய அமைப்பொன்றை ஏற்ப்படுத்தி குறித்தப் பிரதேசத்தில் இதன் பிறகு இவ்வாறான இனக்கலவரங்கள் ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவும் அவர்களின் பளய பல்லவிதான்.

உண்மையில் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டில் இனவாதம், இனக்கலவரம் போன்றவைகளை விரும்பவில்லை என்பது உண்மையாகவிருந்தால் அவர் செய்ய வேண்டிய முதற்பணி இவ்வாறான இனவாதங்களை அதிகாரபூர்வமாக அரங்கேற்றிக் கொண்டிருக்க்கக் கூடிய பொது பள சேனா என்ற அமைப்பைத் தடை செய்து அதன் செயலாளர் அதி பயங்கரவாதி ஞானசாராவைக் கைது செய்ய வேண்டும். அவ்வாறின்றேல் ஜனாதிபதி ஒரு நயவஞ்சகர் என்றே கூற வேண்டியுள்ளது.

ஏனெனில் இத்தகய வண்முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொது பள சேனா எனும் தீவிரவாத அமைப்புத் தடைசெய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கை சமாதான சகவாழ்வை விரும்பக் கூடிய அனைத்துத் தரப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டடுக் கொண்டிருக்கின்றன என்றாலும் எக்காரணம் கொண்டும் பொது பள சேனா எனும் தீவிரவாத அமைப்புத் தடைசெய்யப்பட மாட்டாது அவ்வாறு தடை செய்யப்பட்டால் அவர்கள் கதாநாயகர்களாக மாறி விடுவார்கள் என்று இந்த நாட்டின் ஜனாதிபரியவர்கள் கூறியதாக சில ஊடகங்கள் கடந்த 21.06.14 அன்று செய்தி வெளியிட்டிருந்தன. ஜனாதிபதியவர்களின் இந்த கூற்றிலிருந்து பொது பள சேனா எனும் அமைப்புத்  தீவிரவாத வில்லர்களின் அமைப்பு என்பதும் அவர்களை அரசு வில்லர்களாக வைத்துக் கொண்டிருக்கவே விரும்புகின்றது என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இதே நேரம் அசாட் சாலியவர்களுக்கு முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்று நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை அரசின் இத்தகைய செயற்கள் அதன் இனவாதத்தின் அதி உச்ச நிலையைப் பறைசாட்டுவதாகவே உள்ளன.


அத்துடன் கடந்த 21.06.14 அன்று ஜனாதிபதியவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அவசரமாக பதுளைக்கு அழைத்து ஒரு கலந்துரையாடல் நடாத்தியதாகவும் குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஸேட செய்தியொன்றை கூறுதல்இ யாராக இருந்தாலும் ஒரு இனத்தை தாக்கி பேசுவதை கண்டிப்பாக நிறுத்துதல்இ மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் மா அதிபர் ஏற்படுத்தல்இ ஒவ்வொரு வாரமும் அமைச்சர் பசில் ராஜபகசவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்சவின் பங்கு பற்றுதலுடன் சந்திப்பை ஏற்படுத்தி அந்த வாரத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற் கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்திவியிட்ள்ளன.

இந்நிலையில் மேற்படி கலந்துரையாடல் பதுளையில் அவசர அவசரமாக நடாத்தப்பட்டதற்கான காரணம் என்ன? ஏன் இத்தனை நாட்க்களாக அது கொழும்பில் நடாத்தப்படவில்லை? அவ்வாறே கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாட் பதிய்யுத்தீன் அவர்களைக் கண்டித்தமைக்கான காரணம் என்ன? பதுளை கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டத் தீர்மானங்களை ஏன் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்க முடியவில்லை என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இவையனைத்தும் ஜனாதிபதியவர்களின் வெறும் கண்துடைப்பும் நம்மை ஏமாற்றும் கைங்கரியமும் என்பதை நாம் புறிந்து கொள்ளுதல் அவசியமாகும். அது மட்டுமின்றி மேற்ப்படித் தீர்மானங்கள் எமக்கு எதிரானவையாகவே அமையும் என்பதும் இங்கே கவனிக்கபட வேண்டிய முக்கிய விடயமாகும்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்புபவர்களை இனவாத்தைத் தூண்டினார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம்களை கைது செய்வதே இதன் நோக்கமாகும் என்றே கருத வேண்டி உள்ளது.

அடுத்ததாக ஊவா மாகாணத்திற்க்கான மாகான சபைத் தேர்தல் அண்மித்துக் கொண்டிருப்பதனாலும் ஊவா மாகான முஸ்லிம்கள் ஓரணியில் நின்று தமது பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ளும் முயற்ச்சியில் கரிசனைக் காட்டிக் கொண்டிருப்பதனாலும் முஸ்லிம்களை ஏமாற்றி மீண்டும் அந்த மாகானத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று பேரினவாதிகளை ஆட்ச்சியில் அமர்த்தும் ஒரு நயவஞ்சகத்தனத்தையே ஜனாதிபதியவர்கள் செயல்படுத்தப் பார்க்கின்றார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய  முக்கிய விடயமகம்.

எனவே நாம் தொடர்ந்தும் நமது தலைமைகளை விமர்சித்துக் கொண்டிருக்காது உடனடியாக நாம் களமிறங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நமது பொறுமையும் விட்டுக் கொடுப்பும் தொடர்ந்தும் நமக்குத் தோல்விக்கு மேல் தோல்விiயே தோற்றுவித்துக் கொண்ருக்கின்றன என்பதுவே கசப்பான உண்மையாகும் இந்நிலையில் தொடர்ந்தும் இதே வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்காது எமது அனுகு முறைகளில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் நாம் கடந்த பல மாத காலமாக நம் சமூகத்திடம் நம்மைப் நாமே பாதுகாத்துக் கொள்ள பொது மக்களாகி நாமனைவரும் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள முன் வரல் மிக அவசியமாகும் எனும் கருத்தை ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி வருவதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

எனவே மீண்டும் அந்தக் கருத்தினையே நாம் வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றோம் அவ்வாறின்றேல் நமது எதிர்காலம் மிகவும் அச்சம் நிறைந்ததாகவே ஆகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். 


எனவே ஒரு முஃமின் ஒரு குழியில் இரண்டு முறைகள் விழ மாட்டான் எனும் நபி (ஸல்)அவர்களின் கூற்றுக்கிணங்க நாம் தொடர்ந்து இத்தகய நயவஞ்சகர்களை நம்பி ஏமாந்து விடாது மிகவும் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியமாகும். இவ்வளவு நடந்த பிறகும் நாம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிப்போமாக இருந்தால் உண்மையில் எமது ஈமானின் நிலை பற்றி நாம் மீழ் பரிசீலனைச் செய்யக் கடமைப் பட்டுள்ளோம். 

முனாப் நுபார்தீன்

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...