அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 03)
தொழுகை - (ஸதகா)தர்மம் - பொறுமை.
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
மேற்படி நபி வழிச் செய்தியின் சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். என்பது வரை கடந்த எமது தொடர் 1-2 ஆகியவற்றில் விளக்கி இருந்தோம் எனனே அதன் அடுத்த பகுதிகளாகிய தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். என்பகைவள் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.
தொழுகை ஒளியாகும்.
ஓளியினால்; நாம் இருளில் வெளிச்சம் பெறுகிறோம். அதன் மூலம் நாம் நன்மை பயக்கக்கூடிய மற்றும் தீமை செய்யக் கூடியவற்றை பிரித்தறியவும் சரியான வழியை பெறவும் முடிகிறது. அவ்வாறே ஒரு அடியான் அல்லாஹ் கட்டளையிட்டவாறு தொழுகையை நிறைவேற்றும் போது அவனது இதயம் நேர்வழி எனும் ஒளியைப் பெறுகின்றது. சத்தியம் அசத்தியத்தைப் பிரித்தறியும் நிலை ஏற்படுகிறது. அல்லாஹ் கூறுனிறான்: (நிச்சியமாக தொழுகை மானக்கேடான வெறுக்கத்தக்கக் காரியங்களிலிருந்து தடுக்கிறது. (அல்-குர்ஆன் : 29;: 45).
அதே போன்று தொழுகின்றவரின் முகத்தில் உலகில் பிரகாசம் உண்டாகிறது. அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களது முகங்களில் சுஜுதின் அடையாளங்கள் தென்படும்) (அல்-குர்ஆன் : பத்ஹ்-29)
தொழுபவர் மறுமை நாளையிலும் ஒளியுடையவராகக் காணப்படுவார். அல்லாஹ் கூறுகின்றான்: ( அவர்களிடத்திலும் அவர்களது வலதுகரங்களிலும் ஒளி காணப்படும்- (அல்-குர்ஆன் : ஹதீத்-12)
இதனால் தான் நபியவர்கள் தொழுகை அதனை நிறைவேற்றுபவருக்கு ஒளியாக இருக்கும் என்றார்கள். இங்கு கடமையானää உபரியான தொழுகையின் பால் பெரருமளவு ஆசையூட்டப்படுகிறது. ஒரு அடியான் தனது உள்ளம் தூய்மைபெற அழுக்குகளிலிருந்து தூய்மையடைய ஏவப்பட்டது போல் அதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் நல்லடியார்களோடு சேர்ந்து சுவர்க்கம் நுழைய இலகுவாக இருக்கும்.
தர்மம் ஆதாரமாகும்
புர்ஹான் என்பது: தெளிவான பிரித்துக் காட்டக் கூடிய ஆதாரமாகும்
மனித உள்ளங்கள் செல்வத்தின் பால் ஆசை கொள்கின்றன. இறைவன் கூறுகின்றான்;: மனிதர்களுக்கு பெண்கள்ää குழந்தைகள்ää தங்கம் வெள்ளியால் குவிக்கப்பட்ட குவியல்கள்ää பயிற்றப்பட்ட குதிரைகள்ää கால்நடைகள்ää விளைச்சல் என்பவற்றின் பாலான மோகம்ää ஆசை அலங்காரமாக்கப்பட்டுள்ளன) (அல்-குர்ஆன் : ஆலு இம்ரான்:14)
அல்லாஹ் கூறுகின்றான்: (நீங்கள் சொத்தின் பால் அதிக மோகம் கொள்கின்றீர்கள்) (அல்-குர்ஆன் : பஜ்ர்: 20) அடியான் கருமித்தனம் கொண்டவனாக இருக்கும் நிலையில் ஒரு அடியான் தனது எஜமானின் கட்டளைக்குப் பணிந்து மறுமை நாளில் தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள நற்கூலியை எதிர்பார்த்தவனாக தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்தி ஆசையை அடக்கி கடமையாக்கப்பட்ட ஸகாதை அல்லது ஸதகாவை வெளியே எடுத்து தனது சக சகோதரனுக்கு வழங்கும் போது இச்செயற்பாடு அவனது விசுவாசம்ää நிலைத்திருத்தல்ää தூய்மையான உலகப் பொருள் என்பவற்றின் ஆதாரமாக இருக்கிறது.
பொறுமை பிரகாசமாகும்
பொறுமை பிரகாசமாகும். பொறுமை என்பது பதட்டப்படுவதிலிருந்து உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.
பிரகாசம்:
இப்னு ரஜப் அவர்கள் கூறும் போது: (பிரகாசம் என்பது சூரியனின் பிரகாசத்தையொத்த வெப்பம்ää எரிதன்மை கொண்ட ஒரு வகையான ஒளிச் சுடராகும். அது சந்திரனின் ஒளிக்கு மாற்றமானது. அது எரியும் தன்மையற்ற வெறும் பிரகாசமேயாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: “அவன் தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். (அல்-குர்ஆன் : யூனுஸ்: 5)
மேலும் அவர் கூறுகிறார்: ( பொறுமை உள்ளங்களுக்கு கஷ்;டமாகவும் அது உளப்போராட்டத்தை அதன் கட்டுப்பாட்டை ஆசைகளிலிருந்து அதனை தடுப்பதை வேண்டி நிற்கும் காலமெல்லாம் பிரகாசமாக இருக்கும். (ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)
பொறுமை என்பது பிரகாசமாகும் என்பதன் அர்த்தம் பற்றி இமாம் நவவி கூறும் போது :(பொறுமை புகழப்படக்கூடியது அதனைக் கொண்டுள்ளவன் எப்போதும் பிரகாசமுடையவனாக நேர்வழி பெற்றவனாக சரியானதில் இருப்பவனாகக் காணப்படுவான்) (முஸ்லிமின் விளக்கம்ää தூய்மை என்ற பாடம்.)
இங்கு கீழ்வரும் சில முக்கிய விடயங்களில் தெளிவு பெறுவது அவசியமாகும்:
1. அல்லாஹ் பொறுமையின் பால் கட்டளையிட்டுள்ளான்
அல்லாஹ் கூறுகின்றான்: (விசுவாசிகளே நீங்கள் பொறுமையாக இருங்கள்ää பரஸ்பரம் பொறுமை கொள்ளுங்கள் ஒன்றிணைந்திருங்கள்ää அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்) (அல்-குர்ஆன் :ஆலு இம்ரான்:200)
அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள்ää நயவஞ்சகர்களின் தீங்குகளிலிருந்து பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டான். (அவர்கள் கூறும் விடயங்களில் பொறுமையாக இருப்பீராகää காலையிலும் மாலையிலும் அவனது புகழை துதி செய்வீராக) (காப்: 40)
2. பொறுமையின் சிறப்பு:
பொறுமைக்கான கூலி நிலையான அருள்கள் நிறைந்த சுவர்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: (அவர்கள் பொறுமையாக இருந்தமைக்காக சுவர்க்கத்தில் தனியான அறை வழங்கப்படும் அங்கு அவர்கள் பாதுகாப்புää ஸலாம்ää வாழ்த்துக்களைப் பெறுவார்கள். நிரந்தரமாக இருப்பார்கள். அது நிலையான சிறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கிறது) (புர்கான்:76)
அல்லாஹ் கூறுகின்றான்: (பொறுமையாளர்களைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் மகத்தான அதிரஷ்டசாலிகளைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்hர்கள்) (புஸ்ஸிலத்: 35)
அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களின் பொறுமைக்குக் கூலி சுவர்க்கமும் பட்டுமாகும் (அல்இன்சான்:12)
அல்லாஹ் கூறுகின்றான்:( பொறுமையாளர்களின் கூலிகள் கணக்கின்றி நிரப்பமாக வழங்கப்படும்) ஸ{மர்:10)
3. பொறுமையின் வகைகள்:
பொதுவாகப் பொறுமை மூன்று வகைப்படும்.
1. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் பொறுமை கொள்ளல்:
ஒரு அடியான் கடமைகளை நிறைவேற்ற தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். கட்டுப்படுதலை தடுக்கும் தடைகள் நிறைய காணப்படுகின்றன. அவற்றுள் ஷைத்தான்ää ஆத்மாää மனோ இச்சைää உலக ஆபாசங்களளும் அதன் மோகங்களும் முக்கியமானவை.
அல்லாஹ் கூறுகின்றான்: (தொழுகையைக் கொண்டு உமது குடும்பத்தை ஏவுவீராகää அதில் நீர் பொறுமையாக நிலைத்திருப்பீராக) (தாஹா:132)
அல்லாஹ் கூறுகின்றான்: ( உமக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுவீராகää அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமை கொள்வீராக) (யூனுஸ்:109)
அல்லாஹ் கூறுகின்றான்: ( அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவர்களாக தமது இரட்சகனை காலையிலும் மாலையிலும் அழைப்பவர்களோடு உமது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவீராக) (கஹ்ப்:28)
அல்லாஹ் கூறுகின்றான்: (வானங்கள் பூமி அவற்றுக்கிடைப்பட்டவற்றின் இரட்சகனை வழிபட்டு அவனை வழிப்படுவதில் பொறுமை கொள்வீராக) (மர்யம்:65)
2. பாவங்களை விட்டுவிடுவதில் பொறுமை கொள்ளல்:
பாவங்களை ஷைத்தான் அலங்கரித்து மக்களுக்கு நல்லதாகக் காண்பிக்கிறான். அவற்றின் பால் பிழையான வழிகளில் அழைக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: (நிச்சியமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாகும். அவனை நீங்கள் எதிரியாகக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தை அழைப்பதெல்லாம் நரகத்திற்குரியவர்களாக இருப்பதற்காகும்.) (பாதிர்:6)
3. சோதனைகளைத் தாங்கிக் கொள்வதில் பொறுமை:
சோதனைகள் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் நியதிகளில் உள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: அலிப் லாம் மீம் - மனிதர்கள் சோதனைகளைச் சந்திக்காது நாம் ஈமான் கொண்டு விட்டோம் எனக் கூறினால் விட்டுவிடப்படுவார்கள் என நினைக்கின்றார்களா?. அவர்களுக்கு முன்சென்றோரையும் நாம் சோதித்திருக்கிறோம். உண்மைபடுத்தியோரையும் பொய்யர்களையும் அல்லாஹ் நன்கறிவான்) (அன்கப10த்:1-2)
ஒருவன் தனது உடம்புää சொத்துää பிள்ளைகள்ää குடும்பத்தால் சோதனைக்குட்படுத்தப்படுவான். அல்லாஹ் நாடியிருந்த இந்த சோதனை மீது அவன் பொறுமை கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “நாம் உங்களை அச்சம்ää பசிää சொத்துக்கள்ää உயிர்கள்ää பயிர்களின் நஷ்டம் என்பவற்றால் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாறயாம் கூறுவீராக. அவர்களுக்கு ஏதாவது சோதனை துன்பம் நேரிட்டால்ää நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள்ää அவன் பக்கமே மீள்கிறோம் என்று கூறுவார்கள். அவர்கள் மீது அவர்களது இரட்சகனின் கிருபையும் அருளும் உண்டு. அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்). (பகரா- 157.)
இன்ஷா அல்லாஹ் இதன் எஞ்சிய பகுதிகளை அடுத்தத் தொடரில் பார்ப்போம் அதுவரை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களையும் பரிசுத்தவாண்களாக சதா இறை நினைவுடையவர்களாக ஐங்காலத் தொழுகைகளையும் பேணி தானதர்மங்கள் செய்து பொறுமையைக் கைகொண்டு வாழும் நற்பாக்கியசாலிகளாக ஆக்கியருள்வானானாகவும்.
முனாப் நுபார்தீன்.
