திங்கள், 10 நவம்பர், 2014

உணரப்படாத இறைத் தண்டனைகள்.

உணரப்படாத இறைத் தண்டனைகள்.

அல்லாஹ்வின் தண்டனை என்பது பல்வேறு வடிவம் கொண்டதாகும் அவற்றுள் ஒரு மனிதகுக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்ற மிகப்பெரிய தண்டனை என்பது அது அல்லாஹ்வின் தண்டனை என்பதனை ஒருவன் உணர்ந்து கொள்ள முடியாத விதத்தில் அவன் தண்டிக்கப்படுவதாகும் உதாரணமாக ஒருவன் நேர்வழியிலிருந்து நெறிபிறழ்ந்து வழி கேட்டில் நிலைத்திருத்தல்;. ஆனாலும் தான் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றேன் என்பதனை அவன் உணர்ந்து கொள்வதில்லை.

இபுனு கைய்யூம் அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் பனீ இஸ்ராயீல்களின் அறிவிப்பிலிருந்து ஒரு சம்பவத்தினைக் கூறுகின்றார்கள் : பனீ இஸ்ராயீல்களில் ஒரு மனிதன் என் இறiவா நான் உனக்கு எவ்வளவோ மாறு செய்கின்றேன் ஆனால் நீ என்னைத் தண்டிப்பதாக இல்லையே என்று கூறினான். அதற்கு அல்லாஹ் நான் எவ்வளவோ உன்னைத் தண்டிக்கின்றேன் அது உனக்குத் தெரியாது இருக்கின்றது. ஏன் உனக்கு நான் எனது வழிபாட்டின்; இன்பத்தைத் தடுக்கவில்லையா? என்று அறிவித்தான்.

மேற்படி சம்பவம் ஒரு பாவி தனது உடல் ஆரோக்கியம் பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றை வைத்து தான் எந்த அளவு பாவங்கள் செய்த போதிலும் தான் தண்டிக்கப்படவில்லை என்று எண்ணிக் கொள்கின்றான் இந்த எண்ணமே அவனுக்குரிய தண்டனையாகும் என்பதனை அவன் உணர்ந்து கொள்ள முடியாதிருப்பதுவும் அவ்வாறே இறை வழிபாட்டில் நாட்டமில்லாது இருப்பதுவும் அவனுக்குரிய மிகப்பெரிய தண்டனையாகும் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.

ஆம் ஒரு மனிதன் தான் செய்வது தவறு என்று உணரும் போது அதிலிருந்து தவ்பா செய்து மீண்டு கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : தவிரää மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும்ää அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும்ää அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.(அல்-குர்ஆன் : 3:135)

ஆனால் அதனைப் பாவம் என்று உணர்ந்து கொள்ள முடியாத மனிதனால் அதிலிருந்து விடுபட முடியாது. அவன் தான் செய்வது சர்வசாதாரணமான ஒன்றுதான் என்று எண்ணிக் கொண்டு அந்த செயலில் தொடர்ந்து இருந்து விடுவான்.

அல்லாஹ் கூறுகின்றான் : ''(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?"" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் மிகப் பெரும் நஷ்டவாளிகள். (அல்-குர்ஆன்: 18:103-104)

இவ்வாறு மனிதனால் உணரப்படாது தொடர்ந்து கொண்டிருக்கும்; அல்லாஹ்வின் பல்வேறுபட்ட தண்டனைகளுள் சில.

1.    ஒருவனுக்கு வணக்க வழிபாடுகள் மீது ஆர்வம் இல்லாது போதல்.

2.    பாவங்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படல்.

3.    அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து தடுக்கப்படல்.

4.    அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் சந்தர்பங்கள் இலகுவாகக் கிடைத்தல்;.

5.    அந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குக் கிடைத்தப் பெரும் பாக்கியம் எனக்கருதுதல்.

6.    தான் செய்து கொண்டிருக்கும் பாவங்களைப் பெருமையாகக் கருதிக் கொள்ளல்.

7.    ஹராமான வழியில் பொருளாதாரம் கிடைக்கும் போது அதில் மகிழ்ச்சி காணுதல்.

8.    ஒட்டு மொத்தத்தில் நேர்வழியிலிருந்து விலகி வழி கேட்டில் செல்லுதல்.

ஒரு பாவத்திற்குப் பின் இன்னுமொரு பாவம் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அந்தப் பாவத்திற்கான தண்டனையாகும். அவ்வாறே ஒரு நன்மைக்குப் பின் இன்னுமொரு நன்மை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படல் என்பது முன்னய செயல் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அடையாளமாகவும் அந்த நன்மைக்குரிய பிரதிபலனாகவும் இருக்கும்.

அல்லாஹ் ஒரு அடியானுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அருள் அவனை வழிகேட்டில் செல்வதிலிருந்து தடுத்து நேர்வழியின்பால் இட்டுச் செல்வதாகும் அவ்வாறே ஒரு அடியானுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை அவனை நேர்வழியிலிருந்து தூரமாக்கி வழிகேட்டில் விட்டு விடுதலாகும்.

ஆகவே நாம் நேர்வழியில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோமா அல்லது வழிகேட்டில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேதாமா என்பதைக் கவனித்து மேற்படி இரு வகுப்பார்களில் நாம் எந்த வகுப்பில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதனைப் புறிந்து கொள்ளலாம்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் மானக்டோன பாவமான செயல்களிலிருந்தும் அவனுக்கும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறு செய்வதிலிருந்தும் பாதுகாத்து வழிகேட்டிலிருந்து தூரமாக்கி நேர்வழியில் செலுத்துவானாக.

முனாப் நுபார்தீன்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

கலைந்து போன அரசியல் கனவுகள்! » Sri Lanka Muslim

கலைந்து போன அரசியல் கனவுகள்! » Sri Lanka Muslim

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்) » Sri Lanka Muslim

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்) » Sri Lanka Muslim

கலைந்து போன கணவுகள்.

கலைந்து போன கணவுகள்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் பல்வேறு கணவுகள் தோன்றிக் கலைந்து சென்று கொண்டிருப்பதனைப் பார்க்குகின்றோம். நமது கையாலாகாத தனத்தினால் இன்று வரை ஒரு கணவைக் கூட நனவாக்கிக் கொள்ள முடியாது போய் உள்ளது. அந்தவகையில் சமகால அரசியல் வரலாற்றுக் கணவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.

அரசியல் ரீதியாக இரு பெரும் தேசிய கட்ச்சிகளில் மாத்திரம் அங்கம் வகித்து இரு பெரும் பிரிவுகளாகக் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தை ஒரே அணியில் ஒன்று சேர்க்க வேண்டும் அதன் ஊடாக நமது உரிமைகளைப் பெற வேண்டும் என்று நமது தேசியத் தலைவர் மர்ஹ{ம் எம். எச். எம். அஸ்ரப் அவர்கள் கணவு கண்டார்கள்.

அவர்களின் கணவை நினைவாக்கும் வகையில் தேசிய மட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களுடன் அணிதிரண்டார்கள் அதன் காரணமாக அவர்களின் கணவு அவரது வாழ் நாளிலேயே ஓரளவு நிதர்சணமாக நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்தப் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகிழ்ச்சிகரமான ஒரு தேநசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயனத்திலேயே அந்த மாமனிதர் தன்னை அற்பணித்தார் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

அவ்வாறான கால கட்டத்தில் அன்னாரின் வாழ்நாளிலேயே அன்னாரின் கணவுகளைக் கலைக்கும் விதத்தில் பல்வேறு சாத்தானியர்கள் உருவெடுத்து அன்னாரின் அபாரமிகு ஆளுமைக்கும் அறிவாற்றலுக்கும் ஈடு கொடுக்க முடியாது சிலர் அன்னாரின் தலைமையின் கீழேயே சங்கமிக்க நேர்ந்தது மற்றும் சிலரோ கால ஓட்டத்தின் வேகத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் முகவரியற்றுப் போயினர்.

நமது தேசியத் தலைவர் அவர்களின் மறைவை அடுத்து நம் சமூகத்தின் ஒட்டு மொத்தக் கணவாக இருந்த நமது ஒரேத் தலைமை உரிமை பாதுகாப்பு பொருளாதார மேம்பாடு போன்ற அத்தனையும் கலைந்து செல்ல ஆரம்பித்தன. அதற்க்கான மிக முக்கிய காரணம் அவரால் நமக்குப் பெற்றுத்தரப்பட்ட நமது தேசிய கட்ச்சியாகிய சிறீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸின் சில சுயநலமிகளின் தவறான உறவின் மூலம் அது பல குட்டிக் கட்ச்சிகளைப் பிரசவிக்கத் தொடங்கியது. அதனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக இருந்து வந்த நமது சமூகம் இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பரினமித்துள்ளதைப் பார்கின்றோம்.

எனவே இன்றைய நிலையில் நாம் இந்த நிலைக்கு உடனடியாக முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைக்கத் தவறின் அது பிரசவித்திருக்கும் தவறாகப் பிறந்த அந்தக் குட்டிகளும் இன்னும் பல பேரக் குட்டிகளைப் பிரசவிப்பதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும் என்பது நிதர்சனமாகும்.

அவ்வாறு நமது சமூகம் இன்னும் பல பிரிவுகளாகப் பிரிந்து செல்லும் போது நம் சமூகம் சகல துறையிலும் பலமிளந்து மேலும் மேலும் பலவீனப்பட்டு நலிவுற்ற நாதியற்ற ஒரு சமூகமாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். ;.(அல்-குர்ஆன் : 8:46)

இந்த மோசமான பிரிவினைதான்;; நமது கடந்தகால நிகழ்கால எதிர்கால கணவுகள் அத்தனையும் கலைந்து நாம் இன்று நிஜ வாழ்வை அடைந்து கொள்ள முடியாமைக்கான பிரதானமான காரணங்களாக தடைக்கற்க்களாக அமைந்துள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை.

எனவே நமது கணவுகள் கலைந்து செல்லாது நினைவாக மலர வேண்டுமாக இருந்தால் நாமனைவரும் நமது அரசியல் வேறுபாடுகள் போலி கௌரவம் போன்ற அத்தனையையும் மறந்து அனைத்து கட்சிகளையும் புறந்தள்ளி தூய்மையானதும் ஆளுமை மிக்கதுமான ஒரேத் தலைமையின் கீழ் உடனடியாக ஓரணி சேர்தல் அவசியமாகும். மட்டுமின்றி இது நமது தாரமீகக் கடமையுமாகும்.

அந்த அணி ஈயத்தால் வார்க்கப்பட்ட அரணைப் போன்று உறுதியாக இருப்பதுவும் மிகவும் அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுää அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோää அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.(அல்-குர்ஆன் : 61:4)

எனவே சமூகத்தின் மீது உண்மையான பற்றும் இறையச்சமும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்காக ஓரணிதிரள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான ஆற்றலையும் தளராத மனவுறுதியையும் சந்தர்ப்ப சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருவானாக.

முனாப் நுபார்தீன்.

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்)

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இஸ்லாத்தை ஏற்று போதியளவு வாழ்வாதாரம் வழங்கப்பட்டு அவனுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அல்லாஹ் அவனைத் திருப்தியுறச் செய்தானோ அவன் உண்மையாகவே வெற்றி பெற்று விட்டான். (நூல் : முஸ்லிம்)

மேற்படி நபிவழிச் செய்தி மனிதனுக்கு இன்றியமையாத மிக முக்கியமான திருப்தி எனும் ஒரு பண்பு பற்றி வலியுறுத்துகின்றது. திருப்தி என்பது அல்லாஹ்வால் வழங்கப்பட்டதைக் கொண்டு பொருந்திக் கொள்வதாகும். அடியான் அல்லாஹ்வால் அவனுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு பொருந்திக் கொள்ளும் போது அவன் அல்லாஹ்வால் அவனுக்கு பங்கீடு செய்யப்பட்டதில் திருப்தியுற்றவனாவான் அப்போது அவனின் உள்ளம் அமைதி பெற்று நிம்மதியடைவான்.

திருப்தி கொள்வதின் மூலம் நாம் அடையும் நற்பயன்கள்:

1.    திருப்தி என்பது அழிந்து போகக்கூடிய இந்த அற்ப்ப உலகிற்குப் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தும் அவனை அது பாதுகாக்கின்றது.

2.    ஒரு இறை விசுவாசி தனக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதாரம் அது குறைவாக இருந்த போதிலும் ஆகுமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளச் செய்கின்றது.

3.    ஆகுமானதல்லாதது எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை வெறுத்தொதுக்கி வாழ வழி செய்கின்றது.

4.    திருப்தி கொள்ளுதல் என்பது ஆகுமான வழியில் பொருளீட்டாதிருத்தல் அல்லது தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் புறக்கணித்தல் என்பதோ அல்ல.

5.    அது பிறருக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறைகாணாது அவர்கள்மீது பொறாமை கொள்ளாது வாழச் செய்வதாகும்.

6.    திருப்தி கொள்ளுதல் என்பது அற்ப உலக சுகபோகங்களை அதிகரிக்கச் செய்வதற்காக தன்னைத் தனது சக்;திக்கப்பால் சிரமப்படுத்துவதிலிருந்து தடுத்துக் கொள்ளும்.

7.    திருப்தி என்பது அற்ப உலக சுகபோகங்களுக்காக அல்லாஹ்வின் கடமைகளைப் பாழ்படுத்துவதிலிருந்து பாதுகாப்பளிக்கும்.

8.    திருப்தி என்பது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி இருதரப்பினர்க்கும் பொதுவானதே.
9.    திருப்தி என்பது உள்ளம் சார்ந்ததாகும் அதற்கும் தன்வசமுள்ள செல்வங்களுக்கும் சம்மந்தம் கிடையாது.

10.    திருப்தியடையாத ஒரு செல்வந்தன் அவன் தனது இறைவனை அறிந்து கொள்வதிலிருந்து அவனின் செல்வம் அவனைத் தடுத்துவிடக் கூடும்.

11.    திருப்தியடையாத ஒரு ஏழை அவனின் வாழ்வாதாரத் தேடல் அவனை அல்லாஹ்வின் கடமைகளைப் பாழ்படுத்தச் செய்து விடக் கூடும்.

12.    ஒட்டு மொத்தத்தில் யார் அல்லாஹ்வால் தனக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு பொருந்திக் கொண்டு திருப்தியடைகின்றார்களோ அவர்களது வாழ்க்கை இவ்வுலகில் மணமானதாக மலரும்.

அல்லாஹ் கூறுகின்றான் : ஆணாயினும்ää பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும்ää நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(அல்-குர்ஆன் : 16:97)

மேற்படி வசனத்திற்கு விரிவுரை வழங்க வந்த அனேகமான விரிவுரையாளர்கள் மணமான வாழ்க்கை என்பது திருப்தி கொள்ளுதல் என்றே விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஏனெனில் ஒரு மனிதன் தனக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரங்களைக் கொண்டு திருப்தி கொள்ளாதவரை மணமான நிம்மதியான வாழ்க்கையினை அடைந்து கொள்ள முடியாது.
ஆதலால்தான் அல்லாஹ் திருப்தியுறாது பேராசை கொண்டு வாழக்கூடிய ஏழை மற்றும் செல்வந்தர் ஆகிய இரு தரப்பிகளைப் பற்றியும் இவ்வாறு கூறுகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான் : செல்வத்தைப் பெருக்கும் பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லைää விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்லää விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும்ää நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்க (அல்-குர்ஆன் : 102: 1-8)

முனாப் நுபார்தீன்

திங்கள், 3 நவம்பர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04) மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும். » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04) மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும். » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04) மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும்.

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04)
மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்) 

மேற்படி நபி வழிச் செய்தியின் சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். என்பது வரை கடந்த எமது தொடர் 1-3 வரையிலான தொடர்களில் விளக்கி இருந்தோம் எனவே அதன் இறுதிப் பகுதியாகிய குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். என்பகைவள் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம். 

குர்ஆன் அடியார்களுக்கான அல்லாஹ்வின் ஆதாரமாகும் 

நபியவர்களின் கூற்று: (குர்ஆன் உனக்கு சார்பான அல்லது உமக்கெதிரான ஆதாரமாகும்) அதாவது யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து சிலவற்றைக் கற்று அதில் கடமையானவற்றை செயற்படுத்தியும் தடுக்கப்பட்டவற்றை விலக்கியும் அதன் வரையறைகளோடு நின்று கொள்கின்றாரோää அவருக்கு குர்ஆன் மறுமை நாளில் ஆதாரமாகவும சிபாரிசு செய்யக் கூடியதாகவும் இருக்கும். 

அபூ உமாமா அல்பாஹிலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (குர்ஆனை ஓதுங்கள். அது மறுமை நாளில் அதனை ஓதியவருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். ஸஹ்ராவைன் என அழைக்கப்படும் சூறா பகராää ஆலு இம்ரான் ஆகிய இரு சூறாக்களையும் ஓதுங்கள். அவையிரண்டும் மறுமை நாளில் மேகமாக அல்லது இறக்கைகளை விரித்த பறவையாக வரும் அவை தமது தோழர்களை மூடிக்கொள்ளும். சூறா பகராவை ஓதுங்கள் அதனை எடுத்துக் கொண்டால் அது பரக்கத்தாக அமையும். அதனை விட்டுவிட்டால் கைசேதமாகும். அதனை எந்த சூனியக் காரியாலும் வெற்றி கொள்ள முடியாது) (ஸஹீஹ் முஸ்லிம்). 

யார் அதன் படி செயற்பட வில்லையோ அதன் படி வழிநடக்கவில்லையோää இன்னும் அதனை எவர் பரகத்துக்காக மற்றும் இறந்து போனவர்களுகான வைபவங்களுக்காகவும் மாத்திரம்  ஓதியுள்ளார்களோ. அப்போது குர்ஆன் அவருக்கெதிராக ஆதாரமாக அமையும். உலகத்திற்கு முன்னால் மறுமையில் அது அவருக்கு கடிவாளமிடும். இப்னு மஸ்ஊம் கூறும் போது: “யார் அதனை முதுகுக்குப் பின்னால் வைக்கிறாரோ அது அவரை நரகத்தின் பால் இட்டுச் செல்லும். மேலும்: மறுமை நாளில் குர்ஆன் வந்து அதன் தோழனுக்கு சிபாரிசு செய்யும். சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும். அல்லது அவருக்கெதிராக சாட்சிகூறி அவரை நரகத்திற்கு இட்டுச் செல்லும். (ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்). 

நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும்.

நபியவர்களின் கூற்று: ஒவ்வொரு மனிதரும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்வதன் பால் விரைகிறார்கள். சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு அதனை விடுவிப்பவராக அல்லது அழிப்பவராக இருக்கின்றார்) ஒவ்வொரு மனிதரும் காலை மாலையை அடைகின்றார்கள். உலக விவகாரங்களுக்காக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கலல்லர். அவர்களில் சிலர் தமது ஆத்மாவை இம்மை மறுமையின் தண்டனைகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதனூடாக. இன்னும் சிலர் அந்த ஆத்மாவை அழித்து இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்குகிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதனூடாக அவனது கட்டளைக்கு மாற்றமாக நடப்பதனூடாக. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும். (சூரத்துல் லைல்: 4). 

இப்னு ரஜப் கூறுகிறார்: இந்த ஹதீஸ் ஒவ்வொறு மனிதனும் தனது ஆத்மாவை அழித்துக் கொள்ள அல்லது விடுவிக்க முயற்சிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை அல்லாஹ்வுக்காக விற்று அவனது தண்டனையிலிருந்து அதனை விடுவித்துக் கொண்டார். யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை பொடுபோக்காக விற்று அதனை அல்லாஹ்வின் தண்டனைக்குரிய பாவங்களில் அழித்து விட்டார். ((ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்) 

முடிவுரை.

மேற்படி ஹதீஸின் ஆரம்பம் சுத்தம் பற்றிக் குறிப்பிடுகின்றது சுத்தம் எனும் போது அது அகபுறச் சுத்தம்; ஆகிய இரண்டையும் குறிக்கும். இஸ்லாம் எவ்வாறு புறச் சுத்தத்தை வலியுறுத்துகின்றதோ அவ்வாறே அகச் சுத்தத்தையும் கடுமையாகவே வலியுறுத்துகின்றது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் துnhழர்கள் சகிதம் இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்;கள் அப்போ அந்த இரண்டு மண்ணறைவாசிகளும் வேதனைச் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் வேதனைச் செய்யப்படுவது பெரும்பாவங்களுக்காக அன்றி சிறுபாவங்களுக்காவே என்று கூறிவிட்டு இருவருள் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாத காரணத்திற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசித்திரிந்ததன் காரணத்திற்க்காகவுமே  வேதனை செய்யப்படுகின்றார்கள் என்று கூறினார்கள்.

மேற்படி சம்பவத்திலிருந்து ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாது புறச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசியதன் மூலம் அகச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததன் காரணமாகவும் அவர்கள் இருவரம் தண்டிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தண்ணீர் நமது உடல் உறுப்புக்களையும் ஆடைகளையும் ஏனையவைகளையும் சுத்தம் செய்வது போன்று நமது உள்ளங்களைச் சுத்தம் செய்யும் வகையில் இறைத் துதியின்பால் ஆர்வமூட்டப் பட்டடுள்ளது. அடுத்து மனிதனை மானக்கேடான தீய செயல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் தொழுகை அவனது வாழ்வில் ஒளியாக இருக்க வேண்டும்.

அவ்வாறே மேற்கூறப்பட்ட அத்தனையையும் மனிதன் செயல்படுத்துவதற்கு அவனுக்கு பொறுமை எனும் பேரொளி அவசியமாகும். இந்த இடத்தில் பொறுமை சூரியனுக்கு ஒப்பாகும். சூரியனின் ஒளி இன்றி சந்திரன் உட்பட எந்தவொன்றும் ஒளி பெற முடியாது அவ்வாறே பொறுமை எனும் பேரொளியின் துணை  இன்றி அவனால் எதனையும் சாதிக்க முடியாது. அனைத்துக்கும் மிகவும் இன்றியமையாதத் தேவையாக இருப்பது பொறுமைதான் ஆதலால்தான் தொழுகையை ஒளி என்றும் பொறுமையை அதற்கும் மேலான பேரொளி என்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

அடுத்ததாக மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் தனது ஆண்மாவிற்குப் பாதகமான அல்லது சாதகமான வகையில் தன்னை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் அவ்வாறு விற்பனை செய்யும் விடயத்தில் யார் அல்-குர்ஆனைத் தனது முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகின்றார்களோ அவர்களுக்கு அல்-குர்ஆன் சாதகமாகச் சாட்சி கூறும் யார் அல்-குர்ஆனைப் புறக்கணித்து வாழ்தார்களோ அவர்களுக்கு அல்-குர்ஆன் பாதகமாக சாட்சி கூறும்.


முனாப் நுபார்தீன்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 03) தொழுகை - (ஸதகா)தர்மம் - பொறுமை.


அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 03)
தொழுகை - (ஸதகா)தர்மம் - பொறுமை.

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)

மேற்படி நபி வழிச் செய்தியின் சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். என்பது வரை கடந்த எமது தொடர் 1-2 ஆகியவற்றில் விளக்கி இருந்தோம் எனனே அதன் அடுத்த பகுதிகளாகிய தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். என்பகைவள் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

தொழுகை ஒளியாகும்.

ஓளியினால்; நாம் இருளில் வெளிச்சம் பெறுகிறோம். அதன் மூலம் நாம் நன்மை பயக்கக்கூடிய மற்றும் தீமை செய்யக் கூடியவற்றை பிரித்தறியவும் சரியான வழியை பெறவும் முடிகிறது. அவ்வாறே ஒரு அடியான் அல்லாஹ் கட்டளையிட்டவாறு தொழுகையை நிறைவேற்றும் போது அவனது இதயம் நேர்வழி எனும் ஒளியைப் பெறுகின்றது. சத்தியம் அசத்தியத்தைப் பிரித்தறியும் நிலை ஏற்படுகிறது. அல்லாஹ் கூறுனிறான்: (நிச்சியமாக தொழுகை மானக்கேடான வெறுக்கத்தக்கக் காரியங்களிலிருந்து தடுக்கிறது. (அல்-குர்ஆன் : 29;: 45).

அதே போன்று தொழுகின்றவரின் முகத்தில் உலகில் பிரகாசம் உண்டாகிறது. அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களது முகங்களில் சுஜுதின் அடையாளங்கள் தென்படும்) (அல்-குர்ஆன் : பத்ஹ்-29)

தொழுபவர் மறுமை நாளையிலும் ஒளியுடையவராகக் காணப்படுவார். அல்லாஹ் கூறுகின்றான்: ( அவர்களிடத்திலும் அவர்களது வலதுகரங்களிலும் ஒளி காணப்படும்- (அல்-குர்ஆன் : ஹதீத்-12)

இதனால் தான் நபியவர்கள் தொழுகை அதனை நிறைவேற்றுபவருக்கு ஒளியாக இருக்கும் என்றார்கள். இங்கு கடமையானää உபரியான தொழுகையின் பால் பெரருமளவு ஆசையூட்டப்படுகிறது. ஒரு அடியான் தனது உள்ளம் தூய்மைபெற அழுக்குகளிலிருந்து தூய்மையடைய ஏவப்பட்டது போல் அதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் நல்லடியார்களோடு சேர்ந்து சுவர்க்கம் நுழைய இலகுவாக இருக்கும்.

தர்மம் ஆதாரமாகும்

புர்ஹான் என்பது: தெளிவான பிரித்துக் காட்டக் கூடிய ஆதாரமாகும்

மனித உள்ளங்கள் செல்வத்தின் பால் ஆசை கொள்கின்றன. இறைவன் கூறுகின்றான்;: மனிதர்களுக்கு பெண்கள்ää குழந்தைகள்ää தங்கம் வெள்ளியால் குவிக்கப்பட்ட குவியல்கள்ää பயிற்றப்பட்ட குதிரைகள்ää கால்நடைகள்ää விளைச்சல் என்பவற்றின் பாலான மோகம்ää ஆசை அலங்காரமாக்கப்பட்டுள்ளன) (அல்-குர்ஆன் : ஆலு இம்ரான்:14)

அல்லாஹ் கூறுகின்றான்: (நீங்கள் சொத்தின் பால் அதிக மோகம் கொள்கின்றீர்கள்) (அல்-குர்ஆன் : பஜ்ர்: 20) அடியான் கருமித்தனம் கொண்டவனாக இருக்கும் நிலையில் ஒரு அடியான் தனது எஜமானின் கட்டளைக்குப் பணிந்து மறுமை நாளில் தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள நற்கூலியை எதிர்பார்த்தவனாக தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்தி ஆசையை அடக்கி கடமையாக்கப்பட்ட ஸகாதை அல்லது ஸதகாவை வெளியே எடுத்து தனது சக சகோதரனுக்கு வழங்கும் போது இச்செயற்பாடு அவனது விசுவாசம்ää நிலைத்திருத்தல்ää தூய்மையான உலகப் பொருள் என்பவற்றின் ஆதாரமாக இருக்கிறது.

பொறுமை பிரகாசமாகும்

பொறுமை பிரகாசமாகும். பொறுமை என்பது பதட்டப்படுவதிலிருந்து உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.

பிரகாசம்:

இப்னு ரஜப் அவர்கள் கூறும் போது: (பிரகாசம் என்பது சூரியனின் பிரகாசத்தையொத்த வெப்பம்ää எரிதன்மை கொண்ட ஒரு வகையான ஒளிச் சுடராகும். அது சந்திரனின் ஒளிக்கு மாற்றமானது. அது எரியும் தன்மையற்ற வெறும் பிரகாசமேயாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: “அவன் தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். (அல்-குர்ஆன் : யூனுஸ்: 5)

மேலும் அவர் கூறுகிறார்: ( பொறுமை உள்ளங்களுக்கு கஷ்;டமாகவும் அது உளப்போராட்டத்தை அதன் கட்டுப்பாட்டை ஆசைகளிலிருந்து அதனை தடுப்பதை வேண்டி நிற்கும் காலமெல்லாம் பிரகாசமாக இருக்கும். (ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)

பொறுமை என்பது பிரகாசமாகும் என்பதன் அர்த்தம் பற்றி இமாம் நவவி கூறும் போது :(பொறுமை புகழப்படக்கூடியது அதனைக் கொண்டுள்ளவன் எப்போதும் பிரகாசமுடையவனாக நேர்வழி பெற்றவனாக சரியானதில் இருப்பவனாகக் காணப்படுவான்) (முஸ்லிமின் விளக்கம்ää தூய்மை என்ற பாடம்.)

இங்கு கீழ்வரும் சில முக்கிய விடயங்களில் தெளிவு பெறுவது அவசியமாகும்:

1.    அல்லாஹ் பொறுமையின் பால் கட்டளையிட்டுள்ளான்

அல்லாஹ் கூறுகின்றான்: (விசுவாசிகளே நீங்கள் பொறுமையாக இருங்கள்ää பரஸ்பரம் பொறுமை கொள்ளுங்கள் ஒன்றிணைந்திருங்கள்ää அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்) (அல்-குர்ஆன் :ஆலு இம்ரான்:200)

அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள்ää நயவஞ்சகர்களின் தீங்குகளிலிருந்து பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டான். (அவர்கள் கூறும் விடயங்களில் பொறுமையாக இருப்பீராகää காலையிலும் மாலையிலும் அவனது புகழை துதி செய்வீராக) (காப்: 40)

2.    பொறுமையின் சிறப்பு:

பொறுமைக்கான கூலி நிலையான அருள்கள் நிறைந்த சுவர்க்கமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: (அவர்கள் பொறுமையாக இருந்தமைக்காக சுவர்க்கத்தில் தனியான அறை வழங்கப்படும் அங்கு அவர்கள் பாதுகாப்புää ஸலாம்ää வாழ்த்துக்களைப் பெறுவார்கள். நிரந்தரமாக இருப்பார்கள். அது நிலையான சிறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கிறது) (புர்கான்:76)

அல்லாஹ் கூறுகின்றான்: (பொறுமையாளர்களைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் மகத்தான அதிரஷ்டசாலிகளைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்hர்கள்) (புஸ்ஸிலத்: 35)

அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களின் பொறுமைக்குக் கூலி சுவர்க்கமும் பட்டுமாகும் (அல்இன்சான்:12)

அல்லாஹ் கூறுகின்றான்:( பொறுமையாளர்களின் கூலிகள் கணக்கின்றி நிரப்பமாக வழங்கப்படும்) ஸ{மர்:10)

3.    பொறுமையின் வகைகள்:

பொதுவாகப் பொறுமை மூன்று வகைப்படும்.

1.    அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் பொறுமை கொள்ளல்:

ஒரு அடியான் கடமைகளை நிறைவேற்ற தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். கட்டுப்படுதலை தடுக்கும் தடைகள் நிறைய காணப்படுகின்றன. அவற்றுள் ஷைத்தான்ää ஆத்மாää மனோ இச்சைää உலக ஆபாசங்களளும் அதன் மோகங்களும் முக்கியமானவை.

அல்லாஹ் கூறுகின்றான்: (தொழுகையைக் கொண்டு உமது குடும்பத்தை ஏவுவீராகää அதில் நீர் பொறுமையாக நிலைத்திருப்பீராக) (தாஹா:132)

அல்லாஹ் கூறுகின்றான்: ( உமக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுவீராகää அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமை கொள்வீராக) (யூனுஸ்:109)

அல்லாஹ் கூறுகின்றான்: ( அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவர்களாக தமது இரட்சகனை காலையிலும் மாலையிலும் அழைப்பவர்களோடு உமது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவீராக) (கஹ்ப்:28)

அல்லாஹ் கூறுகின்றான்: (வானங்கள் பூமி அவற்றுக்கிடைப்பட்டவற்றின் இரட்சகனை வழிபட்டு அவனை வழிப்படுவதில் பொறுமை கொள்வீராக) (மர்யம்:65)

2.    பாவங்களை விட்டுவிடுவதில் பொறுமை கொள்ளல்:

பாவங்களை ஷைத்தான் அலங்கரித்து மக்களுக்கு நல்லதாகக் காண்பிக்கிறான். அவற்றின் பால் பிழையான வழிகளில் அழைக்கின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: (நிச்சியமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாகும். அவனை நீங்கள் எதிரியாகக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தை அழைப்பதெல்லாம் நரகத்திற்குரியவர்களாக இருப்பதற்காகும்.) (பாதிர்:6)

3.    சோதனைகளைத் தாங்கிக் கொள்வதில் பொறுமை:

சோதனைகள் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் நியதிகளில் உள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: அலிப் லாம் மீம் - மனிதர்கள் சோதனைகளைச் சந்திக்காது நாம் ஈமான் கொண்டு விட்டோம் எனக் கூறினால் விட்டுவிடப்படுவார்கள் என நினைக்கின்றார்களா?. அவர்களுக்கு முன்சென்றோரையும் நாம் சோதித்திருக்கிறோம். உண்மைபடுத்தியோரையும் பொய்யர்களையும் அல்லாஹ் நன்கறிவான்) (அன்கப10த்:1-2)

ஒருவன் தனது உடம்புää சொத்துää பிள்ளைகள்ää குடும்பத்தால் சோதனைக்குட்படுத்தப்படுவான். அல்லாஹ் நாடியிருந்த இந்த சோதனை மீது அவன் பொறுமை கொள்வது அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: “நாம் உங்களை அச்சம்ää பசிää சொத்துக்கள்ää உயிர்கள்ää பயிர்களின் நஷ்டம் என்பவற்றால் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாறயாம் கூறுவீராக. அவர்களுக்கு ஏதாவது சோதனை துன்பம் நேரிட்டால்ää நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள்ää அவன் பக்கமே மீள்கிறோம் என்று கூறுவார்கள். அவர்கள் மீது அவர்களது இரட்சகனின் கிருபையும் அருளும் உண்டு. அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்). (பகரா- 157.)

இன்ஷா அல்லாஹ் இதன் எஞ்சிய பகுதிகளை அடுத்தத் தொடரில் பார்ப்போம் அதுவரை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களையும் பரிசுத்தவாண்களாக சதா இறை நினைவுடையவர்களாக ஐங்காலத் தொழுகைகளையும் பேணி தானதர்மங்கள் செய்து பொறுமையைக் கைகொண்டு வாழும் நற்பாக்கியசாலிகளாக ஆக்கியருள்வானானாகவும்.

முனாப் நுபார்தீன்.

வியாழன், 30 அக்டோபர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் -02)
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள்:

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)

அல்-ஹதீஸ் விளக்கம் தொடர் 01 ல் மேற்படி நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸின் முதல் பகுதியாகிய சுத்தம் ஈமானின் பாதியாகும் என்பது பற்றி விளக்கி இருந்தோம் எனவே இந்த 02ம் தொடரில் அதன் இரண்டாவது அம்சமாகக் கூறப்பட்டுள்ள இறைதியானம் பற்றி பார்ப்போம்.

இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும்.)

1.    இந்த நபி மொழியின் மேற்படி கூற்று அல்லாஹ்வைப் புகழ்தல் துதித்தல் போன்ற உயரிய வார்த்தைகளுக்கு உயர்ந்த கூலியை உத்தரவாதப்படுத்திpயுள்ளது.

2.    அந்த வகையில் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒரு வார்த்தை மறுமை நாளில் ஒரு அடியானின் தராசியை பாராமாக்குகிறது.

3.    அல்லாஹ் எம்மீது சொரிந்துள்ள உள்ளக வெளியக அருள்களுக்காக அவனைப் போற்றிப் புகழ்ந்து பரிசுத்தப்படுத்துவதின் பால் ஆர்வமூட்டுகின்றது.

4.    அதே போன்று சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்-ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைகளுக்கு உயர்ந்த கூலி உண்டு அதாவது அது நன்மையால் வானம் பூமிக்கு இடைபட்டவைகளை நிரப்பி விடுகின்றது.

சில அறிஞர்கள் கூறினார்கள்ää: அவை இரண்டினதும் கூலியை அளவிட்டால் அது வானம் பூமிக்கு இடைப்பட்டவற்றை நிரப்பி விடும்.

தஸ்பீஹ்: (துதித்தல்)

குறைபாடுகளை விட்டும் அல்லாஹ்வை தூய்மைப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது. இவ்விரு வார்த்தைகள் பால் ஆர்வமூட்டும் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதில் அபூ ஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இரண்டு வார்த்தைகள் அவை நாவுக்கு மிக இலகுவானவை. தராசியில் மிக பாரமானவை. அல்லாஹ்வுக்கு விருப்பமானவை. அவை தான்: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹிää சுபஹானல்லாஹில் அழீம். என்றார்கள். (புகாரிää முஸ்லிம்).

தராசி (மீஷான்) மீது விசுவாசம் கொள்வது கட்டாயமாகும்.

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான விடயம் பற்றியும் தெளிவு படுத்ததல் அவசியமாகும் அதாவது தராசியை (மீசான்) ஈமான் கொள்ளுதல் அஹ்லுஸ் ஸ{ன்னா வல்ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடாகும். அபூ ஜவ்பர் அல் தஹாவி குறிப்பிடும் போது: ( மறுமை நாளின் மீண்டெழுதல்ää செயல்களின் கூலிää காண்பித்தல்ää விசாரணைää பட்டோலை வாசிக்கப்படுதல்ää கூலி கொடுத்தலும் தண்டனை வழங்கலும்ää சிராத் (நேரான பாதையில் செல்லல்)ää தராசி (நன்மை தீமையை அளவீடு செய்தல்) ஆகியவற்றை நாம் விசுவாசம் கொள்கின்றோம்) .(தஹவிய்யா-456). இது குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறும் போது: “நாம் மறுமை நாளைக்காக நீதி எனும் தராசியை வைத்;துள்ளோம். ஒரு ஆத்மா எவ்விதத்திலும் கடுகளவேனும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. விசாரணை செய்ய நாம் போதுமானவர்கள். (அல்-குர்ஆன் : 21: 47)

இன்னும் அல்லாஹ் கூறும் போது: “எவரது தராசு கணதியாக இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். எவரது தராசு கணதியற்றதாக இருக்கின்றதோ அவர்கள் தான் தங்களது ஆத்மாக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியவர்கள். அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்-குர்ஆன் : 23;:102-103).

மேலும்: “அந்நாளில் கூலிகளை நிறுவை செய்வது உண்மையாகும். எவரது தராசு பாரமா இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் : 7 : 8).

சுன்னாவில் இதனை உறுதிப்படுத்துவதற்காக இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மறுமை நாளில் படைப்புகளுக்கு முன்பாக எனது உம்மத்திலிருந்து ஒருவனை வெளியெடுப்பான். அவனுக்கு முன்னால் 99 பதிவேடுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு பதிவேடும் அவனின் பார்வையின் நீளமாக இருக்கும். பின்னர் கூறுவான்: இதில் ஏதாவது ஒன்றை நீர் நிராகரிக்கிறாயா? எனது பாதுகாவல்களான எழுத்தாளர்கள் (பதிவாளர்கள்) உனக்கு அநீதி இழைத்தார்களா? அவன் இல்லை இறiவா எனக் கூறுவான். உனக்கு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என இறைவன் கேட்பான். அதற்கு அவன் இல்லை இறைவா என்பான். அதற்கு அல்லாஹ் அனால் உமக்கு எம்மிடத்தில் ஒரு நன்மை உண்டுää இன்று உமக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது எனக் கூறுவான். ஒரு காகித அட்டை வெளிக்கொனரப்படும்

அதில் أشهد أن لااله إلاالله وأشهد أن محمدا عبده ورسوله  என்றிருக்கும்.  அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடிமையும் தூதுவருமாகும் என காணப்படும். நான் உமது நிறுவையைக் கொண்டுவருகிறேன் என அல்லாஹ் கூறுவான். அம்மனிதன் இந்த பதிவுகளோடு இந்த அட்டையால் என்ன ஆகப்போகின்றது? என வினவுவான். அதற்கு அல்லாஹ்: நீர் அநியாயம் செய்யப்படமாட்டீர் எனக் கூறுவான். பிறகு அந்த பதிவேடுகள் தராசின் ஒரு தட்டிலும் அந்த சிறியக் காகிதத் துண்டு ஒரு தட்டிலும் வைக்கப்படும்;. பதிவுகள் வெறுமையாகிப் போய் அட்டை பாரமாக இருக்கும். இது அல்லாஹ்வின் திருநாமத்தை விட எதுவும் பாரமாக இருக்காது என்பதனாலாகும். (அல்பானியின் ஸஹீஹான ஹதீஸ்களின் தொடர்ச்சி.)

இன்ஷா அல்லாஹ் இந்த நபி வழிச் செய்தியின் அடுத்தப் பகுதி பற்றி எமது அடுத்தத் தொடரில் பார்ப்போம். அதுவரை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களையும் அகபுற சுத்தத்துடன் அவனைத் துதித்து தூய்மைப் படுத்தி வாழ அருள் செய்வானாக.


முனாப் நுபார்தீன்.

புதன், 29 அக்டோபர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் -01) சுத்தம் ஈமானின் பாதியாகும் » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் -01) சுத்தம் ஈமானின் பாதியாகும் » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் -01) சுத்தம் ஈமானின் பாதியாகும்


அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் -01)

சுத்தம் ஈமானின் பாதியாகும்

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)

மேற்படி நபி மொழி பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

1.    அது தூய்மையின் பால் கட்டளையிடுகிறது.

2.    உள்ளங்கள் அமைதியடையக்கூடிய இறை தியானத்தின் பால் ஆர்வமூட்டுகிறது.

3.    பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் தர்மத்தின் பால் தூண்டுகிறது.

4.    தௌஹீதின் (ஏகத்துவம்) பிற்பாடு மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகிய தொழுகையின் பால் ஆர்வமூட்டுகிறது.

5.    மனித பண்புகளில் அதி உயர் பண்பாகிய பொறுமையின் பால் ஆர்வமூட்டுகின்றது.

6.    அல்லாஹ்வின் வேதத்தின் பால் கவனம் செலுத்துமாறும் அதன் படி செயற்படுமாறும் தூண்டுதலளிக்கிறது.

7.    அதே போல் இறைவழிகாட்டலின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் ஆத்மாவை பாதுகாத்துக் கொள்ள பிரயத்தனம் செய்யுமாறு தூண்டுகிறது.

மேற்படி நபி வழிச் செய்தியின் முதல் பகுதியாகிய சுத்தம் ஈமானின் பாதியாகும் என்ற பகுதியைப்பற்றி முதலில் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுத்தம் ஈமானின் பாதியாகும் இங்கு சுத்தத்தைக் குறிக்க அத்-தஹ{ர் எனும் வார்த்தைப் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையைப் பிரயோகித்திலும் அதற்குப் பொருள் கொள்ளுதலும்

அத்-தஹ{ர்:  இதன் முதல் எழுத்து ழம்மு செய்யப்படுமாயின் அது செயலைக் குறிக்கும் மூலச் சொல்லாகும். அதன் முதல் எழுத்து பத்ஹ{ செய்யப்படுமாயின் அது சுத்தம் செய்யக் கூடிய பொருளைக் குறிக்கும். அது தஹாரா என்ற அறபுச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். அது புலன்களுக்குத் தெரியக்கூடிய தெரியாத அழுக்குகளிலிருந்து தூய்மையாகுதல் எனப் பொருள்படுகிறது. ஷரீஆ ரீதியாக தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை அகற்றுவதற்கான செயற்பாடு என்ற கருத்தைத் தருகிறது. 

ஷத்ர்: எனும் அரபுச் சொல் ஒரு பொருளின் இரு பகுதிகளில் ஒன்றைக் குறிக்கும். ஆதலால் அத்தஹ{ரு ஷத்ருல் ஈமான் என்ற வாசகத்தின்; அர்த்தத்தில் அறிஞர்கள் பல கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறோம்.

1.    தஹ{ர் என்பதன் கருத்து: பாவங்கள்ää பெரும்பாவங்களை விட்டு விடுவதன் மூலம் தூய்மைப் பெறுவதாகும். ஏனெனில் இதே கருத்தில் இன்னொரு குர்ஆனிய வசனமும் காணப்படுகிறது. (அவர்கள் தூய்மையான மனிதர்கள்- (அல்-குர்ஆன் : 16: 56) இங்கு தூய்மை என்பது ஓரினச் சேர்க்கை போன்ற பெரும்பாவங்களிலிருந்து தூய்மை பெறுவதை குறிப்;பதாகும். அதன் படி ஈமான் என்பது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை நன்மைகளை செய்வதும் விலக்கப்பட்டவைகளை விட்டு விடுவதுமாகும். விலக்கப்பட்டவைகளை விட்டு விடுவது என்பது தூய்மை பெறுவதாகும். இதனால் அது ஈமானின் பாதியாகிறது.

2.    தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை நீர் அல்லது தயம்மும் செய்வதன் மூலம் நீக்குவதாகும். ஈமான் என்பது தொழுகையைக் குறிக்கிறது. ஈமான் என்ற சொல் தொழுகை என்ற அர்த்தத்திலும் அல்-குர்ஆனில் வந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் உங்கள் ஈமானை வீணாக்குபவனல்ல (பகரா: 143) இதன் கருத்து நீங்கள் பைதுல் முகத்திசைப் பார்த்து தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்குபவனல்ல என்hதாகும். தொழுகை சுத்தமின்றி நிறைவேறாது. இந்த கருத்தின் படி சுத்தம் (தஹ{ர்) அதன் ஒரு பகுதியாகும். இமாம் நவவி குறிப்பிடும் போது : இந்தக் கூற்று மிக நெருக்கமான கூற்றாகும். எனக் குறிப்பிடுகின்றார்கள். (முஸ்லிமின் விளக்கம் பாடம் சுத்தம்.)

3.    தஹ{ர் என்பதன் அர்த்தம் வுழு செய்வதாகும். அது சிறிய பாவங்களை மன்னிக்கச் செய்கிறது. ஈமான் பெரும்பாவங்களை மன்னிக்கச் செய்கிறது அதனால் சுத்தம் ஈமானின் பாதியாக ஆகிவிடுகின்றது.

4.    வார்த்தைகளில்ää செயற்பாடுகளில் ஈமானின் பண்பு யாதெனில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகிறது. நீரினால் சுத்தம் செய்வது உடம்பை சுத்தப் படுத்துகிறது. இதனால் ஈமானின் பண்புகள் இரு வகைப்படுகின்றன. ஒன்று வெளிப்பகுதியை சுத்தப்படுத்துவது மற்றையது உட்பகுதியை சுத்தப்படுத்துவதாகும்.

இது போன்ற இன்னும் பல்வேறு கருத்துக்கள் அறிஞர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது. என்றாலும் அத்தனைக் கருத்துக்களையும் பறைசாற்றுவதாகவே மேற்படி நபி வழிச் செய்தி அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

எனவே இஸ்லாம் எவ்வாறு ஒரு மனிதன் வெளியில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை விருப்புகின்றானோ அவ்வாறே அவன் உள சுத்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது.

இன்ஷா அல்லாஹ் இந்த நபி வழிச் செய்தியின் அடுத்தப் பகுதியாகிய இறைத்துதி பற்றி எமது அடுத்தத் தொடரில் பார்ப்போம். அதுவரை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களையும் அகபுற சுத்தத்துடன் வாழ அருள் செய்வானாக.

முனாப் நுபார்தீன்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம் அறியாமை அரசோச்சும் அகிலத்தின் அந்திமக் காலம். » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் அறியாமை அரசோச்சும் அகிலத்தின் அந்திமக் காலம். » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் அறியாமை அரசோச்சும் அகிலத்தின் அந்திமக் காலம்.

அல்-ஹதீஸ் விளக்கம்
அறியாமை அரசோச்சும் அகிலத்தின் அந்திமக் காலம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களுக்கு ஒரு காலம் வரும் (அப்போது மனிதர்கள்) அவர்களின் நோக்கம் அவர்களின் வயிறாகவிருக்கும். அவர்களின் கௌரவம் அவர்களது சொத்துக்களாகவிருக்கும். அவர்களின் கிப்லா அவர்களின் பெண்களாக இருப்பார்கள் அவர்களின் மார்க்கம் தங்கம் வெள்ளி ஞானயங்களாகவிருக்கும். அவர்கள்தான் மிகக்கெட்ட படைப்பாவார்கள் அவர்களுக்கு அல்லாஹ்விடம் எவ்வித பாக்கியதையும் கிடையாது.(நூல் : கன்சுல் உம்மால்)

இன்றய அவசரமான உலகில் பொருளியல் அரசியல் அறிவியல் ஆண்மீகம் என்று பல்வேறு போட்டிகள் அரங்கேறிக்கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம் இந்த அத்தனைப் போட்டிகளிலும் எதில் அதிகமான பொருளிட்டipனை அடைந்து கொள்ள முடியுமோ அதிலேயே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டக் கூடியவர்களாகவும் அதிகம் கவணம் செலுத்தக் கூடியவர்களாகவும் உள்ளனர். ஆதலால்தான் அரசியல் முதல் ஆண்மீகம் வரை அத்தனை அம்சங்களும் இன்று பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்ட வியாபாரமாகவே மாறிவிட்டிருப்பதனைப் பார்க்கின்றோம்.

ஒரு அரசியல்வாதியை எடுத்துக் கொண்டால் அவனது அரசியலின் அடிப்படை நோக்கமே மக்கள் சேவை என்பதை விட தன்னலம் காத்தல் எனும் அடிப்படையில் பொருளீட்டலாகவே காணப்படுகின்றது. அவ்வாறே அறிவியலைப் பொறுத்தவரையிலும் அறிவியலின் அத்தனைப் பகுதியினர்களதும் ஒரே இலட்சியம் பொருளாதாரமே அவ்வாறேதான் ஆண்மீகத் துறையைப் பொறுத்தவரையிலும் பொருளாதாரமே முன்னி வகிப்பதனைப் பார்க்கின்றோம். ஆதலால்தான் தங்களை அழைப்பாளர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடியவரகளிடம் கூட அறியாமை அரசோச்சுவதனைப் பார்கின்றோம்.

மேற்படி நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட நபி வழிச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் உலகின் இறுதிக்காலங்களில் மனிதர்களின் நோக்கம் அதற்கான அவர்களின் முன்னெடுப்புக்கள் செயல்பாடுகள் எவ்வாறு காணப்படும் என்பது பற்றித் தெளிவு படுத்தியுள்ளார்கள்

அவைகளாவன.

1.    மனிதர்களின் முழு நோக்கமும் அவர்களின் வயிறாகத்தான் இருக்கும். அதாவது வயிற்றுப் பிளைப்புக்காகவே வாழ்கை நடாத்துவார்கள்.

2.    சொத்து இருப்பதே கௌரவம் என்று எண்னுவார்கள். ஆதலால் சொத்து சேர்ப்பதில் போட்டி போடுவார்கள்.

3.    அவர்களின்; மணைவி மக்களே அவர்களின் கிப்லாவாகும் என்பதன் பொருள் தங்கள் மனைவி மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதுவே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும்.

4.    அவர்களின் மார்க்கம் தங்கம் வெள்ளி ஞானயங்களாகவிருக்கும் என்பதன் பொருள். பணத்திற்காக வேண்டி மார்க்கத்தையே புறக்கணித்து வாழ்வார்கள்.

மேற்படி நான்கு நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களையே நாம் இன்று அதிகளவில் கண்டு கொண்டிருக்கின்றோம். இந்த நிலை நீடிக்கும் போது ஏற்படும் கால சூழல் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் மீது மோசடியான சில வருடங்கள் நிலவும்; அக்காலத்தில் பொய்யன் உண்மையாளனாகக் கருதப்படுவான் உண்மையாளன் பொய்யனாகக் கருதப்படுவான் மோசடிக்காரன் நம்பப்படுவான் நம்பிக்கையாளன் மோசடிக்காரனாகக் கருதப்படுவான் அப்போது றுவைபிளாக்கள் பேசுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது றுவைபிளாக்கள் என்போர் யார்? அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கேட்க்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அறிவற்ற மனிதன் பொது விடயம் பற்றி பேசுவான் என்று கூறினார்கள்.

மேற்படி நபி மொழியில் உலகின் கடைசிக் காலங்களில் இவ்வுலகில் ஏற்பட இருக்கும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

1.    எங்கு பார்த்தாலும் மோசடியே நிறைந்து காணப்படும்

2.    அந்த மோசடி நிறைந்த காலம் பல வருடங்கள் நீடித்து நிலை பெற்றிருக்கும்.
3.    பகிரங்கமாகவே பொய் பேசக்கூடியவனைக் மக்கள் உண்மை பேசுகிறான் என்று நம்புவார்கள்.

4.    உண்மை பேசுபவனை மக்கள் பொய்யன் எனக் கருதுவார்கள்.

5.    சதா அனைவருக்கும் மோசடி செய்து கொண்டிருப்பவனை அவன் மோசடிக்காரன் என்று தெரிந்து கொண்டே மக்கள் அவனை நல்லவன் என்று நம்புவார்கள்.

6.    நம்பிக்கையாக நடக்கக்கூடிய ஒருவனை மக்கள் சந்தேககண் கொண்டு பார்ப்பார்கள் அவனை நம்ப மறுப்பார்கள்.

7.    அப்படிப்பட்டக் காலத்தில் அறிவிலிகள் ஆதிக்கம் செலுத்துவார்கள். எங்கும் எதிலும் அறியாமையே ஆரசோச்சும்.

இந்த நிலையைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம் மேலே நாம் பார்த்த அந்த இரண்டு நபி வழிச் செய்திகளும் முன்னறிவிப்புச் செய்துள்ள அத்தனை அம்சங்களும் நிறைந்ததாகவே இன்றய காலம் காணப்படுகின்றது.
எனவே நம் சமூகம் இவ்வுலகில் தன்னம்பிக்கை மிக்க அச்சமற்ற ஒரு சமூகமாக வாழ வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக இந்த நிலை மாற வேண்டும் மாற்றப்பட வேண்டும். அதற்காக நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முன்னறிவிப்புக்கள் எமக்குச் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே இந்த நிலையை மாற்றி சிறந்ததொரு சூழ்நிலைக்கு உலகைக் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம்களாகிய நம்மைச் சாரும் எனவே நாமனைவரும் நமது கடமையை உணர்ந்து செயல்டுவோமாக என அன்புடன் அழைக்கின்றோம்.

முனாப் நுபார்தீன்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

நமது எதிர்கார அரசியல் நகர்வு எவ்வாறு அமைதல் வேண்டும்.


நமது எதிர்கார அரசியல் நகர்வு எவ்வாறு அமைதல் வேண்டும்.
 
இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பாராளு மன்றத்திற்கான தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன அனேகமாக எதிர்வரும் 2015 ம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மீண்டும் எவ்வாறு மக்களை ஏமாற்றி தங்களது அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்வது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே நேரம்; மஹிந்த சிந்தனையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களாகிய எமக்கு அறிவுபூர்வமாக சிந்தித்து ஆக்கபூர்வமானதும் தீர்க்கமானதுமான் முடிவுகளை எடுக்க வேண்டிய தீர்மானகரமான கால சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டே இருக்கின்ஙேறாம் இதில் மாற்றுக்கருத்துடைய எந்தவொரு முஸ்லிமும் இருக்க மாட்டான் என்றே கருதுகின்றோம்.
இப்படியான இந்த அரசியல் கால சூழ்நிலையில் விலைக் குறைப்புக்களும் மக்கள் சேவைகளும் அபிவிருத்திப் பணிகளும் மிகவும் மும்முரமாகவே நடை பெற்றுக் கொண்டிருப்பது போன்றே நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் பொளப்பு நடாத்திக் கொண்டிருக்கும் சில ஒப்பந்தக்காரர்கள் உட்பட அதிகமான அரசியல்வாதிகளும் அரசாங்கம் பாதை அமைத்துக் கொடுத்தது குழங்கள் போக்குகள் நிர்மானித்துக் கொடுத்தது இன்னும் இது போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்று கூறி அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அபிவிருத்தியும் அதன் அந்தரங்கமும்.
அபிவிருத்திப் பணிகள் என்று அரசாங்கம் நெடுச் சாலைகள் அமைப்பதும் குளங்கள் கட்டுவதும் பாலங்கள் போக்குகள் நிர்மாணிப்பதும் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக அரசியல்வாதிகளும் அவர்களின் குடுப்பத்தினர்களும் அவர்களைச் சார்திருப்பவர்களும் அவர்களுக்குக் காலத்துக்கக் காலம் வக்காலத்து வாங்கும் இந்த ஒப்பந்தக்காரர்களும் பொருளீட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இதுதான் இந்த அபிவிருத்தியின் அந்தரங்கம்.
நான் உங்கள் ஊருக்கு ரோட்டு போட்டேன் குழம் கட்டினேன் போக்கு போட்டேன் என்று பெருமை பேசுபவர்கிடம் அவற்றை நீங்கள் சேவையாக செய்தீர்களா? அல்லது தொழிலாக செய்தீர்களா? என்று கேட்க விரும்புகின்றோம்;.
அத்துடன் நமது முஸ்லிம் கட்சிகளுக்கு மத்தியில் பேரம் பேசல்களும் கூட்டு ஒப்பந்தங்களும் கட்சித் தாவல்களும் நிகழ்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. இவர்களின் சிந்தனை எல்லாம் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விலையாகக் கொடுத்தேனும் தனது ஆட்சிக் கதிரையையும் அதிகாரத்தினையும் தக்க வைத்து தான் சுகுபோகமாக வாழ வேண்டும் என்பதுதான்.
எனவே முஸ்லிம்களாகிய நாம்; இந்த சுயநலமிகளின் கதைகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் நம் சமூகத்தை அடிமைகளாக்க துணை போய்விடக் கூடாது என்று நம் சமூகத்தின் அணைத்துத் தரப்பினர்களையும் மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்.
அறிவும் புத்தியும் மனசாட்சியும் உண்மையான சமய பற்றும் சமூக உணர்வும் கொண்ட வெட்க்கம் உரோஷம் மானமுள்ள எந்தவொரு முஸ்லிமும் இதன் பிறகு ஒரு போதும் மஹிந்தவுக்கோ அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கோ வாக்களிக்கவோ வாக்கு கேட்கவோ மாட்டான். ஏனெனில் இலங்கை வரலாற்றில் மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு இழைத்த இன்னும் இழைத்துக் கொண்டிருக்கும் துண்பங்களும் துயரங்களும் அனைத்தையும் மிகைத்ததே. சிறிதேனும் மூளையுள்ள எந்தவொரு முஸ்லிமும் இதன் பிறகு எக்காரணம் கொண்டும் மஹிந்தவுடைய எந்தவொரு வாக்குறுதியையும் நம்பி ஏமாற மாட்டான்.
மஹிந்த அரசு நாட்டை பௌத்தத் துறவிகளின் அணுசரனையுடன் தனி பௌத்தமயமாக்கலின் பக்கம் நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்பது புத்தியுள்ள அனைவரும் அறிந்ததே. பௌத்தத் துறவிகளும் இதனை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மிகக்கச்சிதமாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.இந்நிலையில் தொடர்ந்தும் மஹிந்த அரசை ஆதரிப்பதென்பது இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக செயல்படுதல் என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
அவர்கள் எந்த அளவு பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் நிச்சயமாக அவர்களால் ஒன்றுபடவே முடியாது என்பதை ஒரு ஈமானியன் மறந்து விடாது இந்த சவாலுக்கு முகம் கொடுக்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்ää அவர்களுக்குள்ளேயே போரும்ää பகையும் மிகக் கடுமையானவைää (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள்ää சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்; மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.(அல்-குர்ஆன் : 59:14)
எனவே கடந்த தேர்தல்களில் நாம் அடைந்து கொண்ட அனுபவங்கள் அதனூடாக நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து எதிர்வருகின்ற தேர்தல்களில் செயல்படுதல் வேண்டும் அதுவே அறிவுடமையான செயலாக இருக்கும்.
அவ்வாறின்றி இம்முறையும் யாராவது தம்தமது சுயநலன்களை மாத்திரம் கருதி அற்ப்ப இலாபங்களுக்காகவும் சமூகத்திற்குத் துரோகம் செய்ய நினைத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் தண்டனை அத்தகயவர்களை வெகு விரைவில் வந்தடைந்தே தீரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

முனாப் நுபார்தீன்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஞானசாரரின் ஞான சூண்யம் - 05

திருவாளர் ஞானசாரர் அவர்களின் ஞான சூண்யம் பற்றி இதற்கு முன்னய எமது 3ம் மற்றும் 4 ம் தொடர்களில்; இல.1 லிருந்து 12 வரை சுட்டிக் காட்டி இருந்தோம் எனவே இந்தத் தொடரில் இல. 13 லிருந்து தருகின்றோம்.

13    அல்-குர்ஆன் 9: 05 ல் புனித மாதங்கள் நான்கும் முடிந்ததன் பிறகு இணை வைத்து வணங்குவோர்களை கண்ட கண்ட இடத்தில் வெட்டி வீழ்தி கொலை செய்யுங்கள் அவர்களைப் பிடித்துக் கட்டி வைய்யுங்கள். அவர்கள் செல்கின்ற இடமெல்லாம் அவர்களை அடித்துத் துண்புறுத்துங்கள்.அதன்போது அவர்கள் அச்சம் கொண்டு அவர்கள் தங்களது மார்க்கத்தை விட்டு விலகி அல்லாஹ்வின் மார்க்கதைப் பின்பற்றுவவதற்கு இணங்குவார்களேயானால் அவர்களை மாத்திரம் தெரிவு செய்து விட்டு விடுங்கள். ஏனய அனைவரையும் கொலை செய்யுங்கள் அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாவான். என்று கூறப்பட்டுள்ளதாக திருவாளர் ஞான சூண்யம் கூறுகின்றார்.

அட ஞான சூண்யமே உனது அறியாமைக்கு அளவே கிடையாதா? எங்கிருந்து இவற்றையெல்லாம் கற்பனை செய10தீர். நீர் கூறுவது போன்று ஒன்றும் கிடையாது உமக்கு அல்-குர்ஆனைப் புறிந்து கொள்ள முடியாமைக்கு நாம் பொறுப்பாக முடியாது. எம்மைப் படைத்த இறைவன்தான் உம்மையும் படைத்திருக்கின்றான் எமக்குள்ள மூளைதான் உமக்கும் வழங்கப்பட்டுள்ளது அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு உமது மனோ இச்சை உமக்கு இடம் கொடுக்காமைக்கு நாம் என்ன செய்வது.

திருவாளர் ஞான சூண்யம் அவர்களே நீர் கூறுவது போன்று உலக இஸ்லாமிய வரலாற்றில் எங்காவது நடைபெற்றதுண்டா? உலகில் எங்காவது உம்மைப் போன்று இணைவைப்பவர்கள் இணை வைப்பவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டார்களா? கட்டி வைக்கப்பட்டார்களா? அடித்துத் துன்புறுத்தப்பட்டார்களா? இல்லையே.

நீர் கூறுவது போலன்றி அந்த வசனத்தின் விளக்கத்தினை சரியாகப் புறிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அதன் முன் பின் உள்ள வசனங்கள் என்ன சொல்கின்றது என்று பார்க்க வேண்டும். எனவே அதனை முதலாவது வசனத்திலிருந்து தருகின்றேன் உமக்கு மூளை இருந்தால் மூளையைக் கொண்டும் உள்ளத்தைக் கொண்டும் விளங்க முயற்சி செய்யவும்.

அல்லாஹ் கூறுகின்றான் : 9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோää அவர்களிடமிருந்து அல்லாஹ்வும்ää அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.

9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும்ää நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

9:3. அல்லாஹ்வும்ää அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.

9:4. ஆனால்ää நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில்ää எதையும் குறைத்து விடாமலும்ää உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதாää துல்ஹஜ்ஜுää முஹர்ரம்ää ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள்ää அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்ää ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டுää தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும்ää கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால்ää அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்

மேற்படி வசனங்களில் முதல் வசனம் (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோää அவர்களிடமிருந்து அல்லாஹ்வும்ää அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர். என்று கூறுகின்றது அப்படியாயின் மேற்படி இரு தரப்புக்கும் மத்தியில் ஒரு உடன்படிக்கை நடைபெற்றிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

அதே நேரம் வசனம் 4 ல் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில்ää எதையும் குறைத்து விடாமலும்ää உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து ஏற்கனவே இரு தரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையை எதிர் தரப்பினர்களில் சிலர் மீறி உள்ளார்கள் ஆதலால் அல்லாஹ்வும் அவனது தூதரும் குறித்த உடன்படிக்கையிலிருந்து வலகிக் கொண்டார்கள் எனவே முஷ்லிம்களும் அதிலிருந்து விலகிக் கொள்வதில் தவறில்லை என்பது தெளிவாகின்றது.

என்றாலும்; மேற்படி வசனம் 4ன் இறுதியில் ஒப்பந்த்தை முறிக்காது நடந்து கொண்டவர்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாது அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - என்ற கட்டளையும் இடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு உடன்படிக்கைக்கு இஸ்லாம் மதிப்பளிப்பதனால்தான் உடன்படிக்கையை முறிக்காதவர்களின் உரிமைகளை மதிக்குமாறும் அதனை மீறி அநியாயம் அக்கிரமம் போன்ற செயற்களில் ஈடுபடுவோர்களை மாத்திரம்அடையாளம் கண்டு தண்டிக்குமாறும் அடுத்து வருகின்ற வசனத்தில் கூறப்பட்டிரகின்றது.

அவ்வாறே வசனம் 6ல் (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால்ää அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்குப் பாதுகாப்பாக அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். என்று கூறி மனித நேயம் மனிதாபிமானம் ஆகியவற்றை போதிக்கின்றது.

நீர் குறிப்பிடுவது போன்று இணை வைப்பவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்ற ஒட்டு மொத்தமாக வெட்டி வீழ்த்துங்கள் என்று பொருள் கொண்டால் வசனம் 6 ல் (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால்ää அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக என்றும் அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பீராக என்றும்  அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள் என்றும் கட்டளை இடப்பட்டிருப்பதன் பொருள் என்ன சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? ஞான சூண்யம் அவர்களே?

முனாப் நுபார்தீன்



சனி, 18 அக்டோபர், 2014

நாம் சமுதாயச் சண்டைக் கோழிகளே உங்களைத்தான்! » Sri Lanka Muslim

நாம் சமுதாயச் சண்டைக் கோழிகளே உங்களைத்தான்! » Sri Lanka Muslim

நாம் சமுதாயச் சண்டைக் கோழிகளே உங்களைத்தான்.

நாம் சமுதாயச் சண்டைக் கோழிகளே உங்களைத்தான்.

•    எங்கிருந்து எப்படி எதைக் கொண்டு ஆரம்பிப்பது?

•    பேரினவாத பாசிச கும்பல்களின் இஸ்லாமிய விரோத போக்கைக் கொண்டா?

•    அல்லது அரக்கன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் அரசைக் கொண்டா?

•    அல்லது அதிகாரத்திற்காகவும் அற்ப்ப சலுகைகளுக்காகவும் சமூகத்தைப் பலிக்கடாவாக்கி பொளப்பு நடாத்திக்  கொண்டிருக்கும் நம் அரசியல் தலைமைகளைக் கொண்டா?

•    அல்லது சுவர்க்கத்திற்க்கு உரிமை கொண்டாடி சமூகத்தைப் பிளவுக்கு மேல் பிளவுப் படுத்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் நம் சமூக இயக்கங்கள் குழுக்களைக் கொண்டா?

•    அல்லது அனைத்தையும் கை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்மீக அறிஞர்களைக் கொண்டா?

என்று ஒன்றும் புறியாத ஒரு குழப்பம் நிறைந்த தெளிவற்ற நிலையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

பொது பள சேனாவின் சர்வதேச மாநாடு கடந்த 28-09-2014 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு சுகதாச அரங்கில் நடைபெற்றதை நாமறிவோம் குறித்த மாநாட்டைப் பற்றிப் பலரும் பலதரப்பட்டக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் மேற்ப்படி மாநாட்டைப் பொறுத்த வரை அங்கு ஆற்றப்பட்ட உரைகளைப் பார்க்கின்ற போது அந்த மாநாடு குறிபாக முஸலிம்களுக்கெதிரான ஒன்று கூடல் எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய ஞானசாரர் உட்ப்பட அனைத்துப் பேச்சாளர்களும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைத்தக் கருத்துக்கள் அத்தனையிலும் முஸ்லிம் விரோதப் போக்கு தாராளமாகச் செல்வாக்குச் செலுத்தியதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. குறித்த மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அத்தனையிலும் எந்த அளவுக்கு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இனவாதத்தைக் கக்க முடியுமோ அந்த அளவுக்குக் கக்கிக் கொட்டினார்கள். அல்-குர்ஆனிலும் அல்-ஹதீதிலும் இல்லாததையெல்லாம் இருப்பதாகக் கூக்குரலிட்டார்கள்.

அந்தக் கூக்குரல்களிலிருந்து அதன் கதாநாயகனின் குளறுபடிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவரால் பிழையாக புறியப்பட்டுடதுடன் திரிபுபடுத்தப்பட்டு கருத்து மோசடி செய்யப்பட்டு முன் வைக்கப்பட்ட சில நபி வழிச் செய்தி மற்றும் அல்-குர்ஆன் வசனங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.இவைகளுக்கு நம் சமுதாய சண்டைக் கோழிகளில் எத்தனை பேர் பதிலழித்துள்ளார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஞான சாரரின் ஞானசூண்யங்கள்.

1.    புஹாரி எனும் நூலில் பதிவாகியுள்ளது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறி இஸ்லாத்தை ஏற்கும் வரை மனிதர்களுடன் போராடுமாறு நான் அல்லாஹ்வால் கட்டளைப் பிறப்பிக்கப் பட்டுள்ளேன் என்றும் அவ்வாறு யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களின் உயிரும் உடமைகளும் பாதுகாப்பு பெறும் என்றும் முகம்மத்; (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;. இதற்க்கு உங்கள் பதில் என்ன? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இது இங்கு செல்லுபடியாகுமா? இல்லையா? இதனை நீங்கள் இங்கு செயல்படுத்துகின்றீர்களா ? இல்லையா?

2.    அல்-குர்ஆன் 2:193 ல் முஸ்லிம்களே அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் தவிர ஏனைய அனைத்து மதங்கள் மற்றும் அவற்றை வழிபடுபட்டு பூமியை நாசம் செய்பவர்கள் இல்லாதொழிந்து ஒரே மார்க்கம் இஸ்லாம் எனும் நிலை தோன்றும் வரை அவர்களுக்கு எதிராக கலகத்தையும்; போரையும் ஏற்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தயவு செய்து இது உங்கள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பதை எமக்குத் தெளிவு படுத்துங்கள் அப்போது எம்மால் சகவாழ்க்கையை ஏற்படுத்த முடியும் அப்போது நாம் எமது இழம் சகோதரிகளையும் இன்னும் வேண்டிய அனைத்தையும் விட்டுத் தருவோம்.

3.    அல்-குர்ஆன் 9: 05 ல் புனித மாதங்கள் நான்கும் முடிந்ததன் பிறகு இணை வைத்து வணங்குவோர்களை கண்ட கண்ட இடத்தில் வெட்டி வீழ்தி கொலை செய்யுங்கள் அவர்களைப் பிடித்துக் கட்டி வைய்யுங்கள். அவர்கள் செல்கின்ற இடமெல்லாம் அவர்களை அடித்துத் துண்புறுத்துங்கள்.அதன்போது அவர்கள் அச்சம் கொண்டு அவர்கள் தங்களது மார்க்கத்தை விட்டு விலகி அல்லாஹ்வின் மார்க்கதைப் பின்பற்றுவவதற்கு இணங்குவார்களேயானால் அவர்களை மாத்திரம் தெரிவு செய்து விட்டு விடுங்கள். ஏனய அனைவரையும் கொலை செய்யுங்கள் அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாவான்.

4.    அல்-குர்ஆன் 2 : 216 ல் ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம் அல்லாதார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புனிதப் போராகும் இது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாய கடமையாக்கப் பட்டுள்ளது. அதனை நீங்கள் வெறுத்த போதிலும் அது உங்களுக்கு கட்டாயக் கடமையாக்கப் பட்டுள்ளது.

5.    அல்-குர்ஆன் 05: 33 ல் அல்லாஹ்வுக்கும் அவனுடைய பிரதிநிதிக்கும் எதிராகவும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் விடுத்து வேறு கடவுளையோ  அல்லது மதத்தையோ வழிபடுகின்ற பாவிகளுக்கான தண்டனை அவர்களைக் கொலைசெய்தல் அல்லது சிலுவையில் அறைதல் அல்லது அவர்களின் ஒரு பக்கத்து கையையும் அதற்க்கு எதிர் பக்கத்துக் காலையும் வெட்டுதல் அல்லது அவர்களை பூமியில் நாடு கடத்துதல் ஆகும் இவ்வாறான இந்த தண்டனை மூலம் அவ்வாறானவர்களை இவ்வுலகில் இழிவுக்கு உட்படுத்தலாம்.

மேற்படி ஞானசாரர் அவர்களின் புலப்பல்களில் எந்த அளவு நபி மொழிகளையும் இறை வசனங்களையும் பாமர மாற்று மதத்தவர்களின் உள்ளங்களில் இனவாதத் தீயை பற்ற வைக்கும் நோக்கில் தவறாக சித்தரித்துள்ளார் என்பதனை நன்றாகக் காணக்கூடியதாக உள்ளது.

இவற்றை அனைத்து ஊடகங்களும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தது. இவை அத்தனை நடந்தும் நம் சமுதாயச் சண்டைக் கோழிகள் வாய் திறந்ததாகத் தெரியவில்லை ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயர்களும் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக ஒரு சில கண்டண அறிக்கைகளுடன் மாத்திரம் மறைந்து விட்டார்கள்.

சமுதாயச் சண்டைக் கோழிகளே சுவர்க்கத்தின் ஏகபோக உரிமையாளர்களே இஸ்லாத்தின் அறங்காவலர்களே உங்களைத்தான் கேட்குகின்றேன் எங்கே நீங்கள் இவை ஒன்றும் உங்களுக்குத் தெரியவில்லையா?

சமுதாயத்திற்குள் சமூக உயர்வுக்காகவும் சமய மேண்பாட்டுக்காகவும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள் குழுக்கள் மற்றும் அற்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனி நபர்கள் மனித பலவீனத்திற்குட்பட்டு தவறுதலாக சற்றேனும் சறுக்கி விட்டால் அல்லாஹ்வே அதனைப் பொருட்படுத்தாது மன்னிப்பழிப்பேன் என்று கூறியிருந்தும் இஸ்லாத்தின் பண்பாடுகளுக்கப்பால் சென்று இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவம் புறிந்துணர்வு சகிப்புத் தண்மை விட்டுக் கொடுப்பு போன்றவைகள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு மேடை போட்டு ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக அநாகரியமான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் கீழ்தரமான முறையில் வாய் கிழிய கத்துவீர்களே உங்களது அந்த ஆக்ரோஷம் அன்னிய காபிர்கள் விடயத்தில் எங்கே ஓடி ஒழிந்ததோ. 

இதனை நாம் கூறும் போது சிலர் நாம் கண்டணம் தெரிவித்தோம் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தோம் என்று கூறுவார்கள் நாம் இங்கு அவற்றைப் பற்றி பேசவில்லை மாறாக இவ்வளவெல்லாம் சமூகத்துடன் சண்டையிடும் நாம் நம் சகோதர முஸ்லிமைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கும் நாம் ஏன் பொது பளசேனாவின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிலளிக்கக் கூடாது என்றுதான் கேட்குகின்றோம்.

முனாப் நுபார்தீன்

வெள்ளி, 17 அக்டோபர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம். காலம் அறிந்து கருமமாற்றுவோம் » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம். காலம் அறிந்து கருமமாற்றுவோம் » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம். காலம் அறிந்து கருமமாற்றுவோம்

அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெரால்..

அல்-ஹதீஸ் விளக்கம்.
காலம் அறிந்து கருமமாற்றுவோம்

காலம் என்பது மனித வாழ்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். இந்த காலமின்றி மனித வாழ்வு கிடையாது மனித வாழ்வென்பதே காலம்தான் ஆதலால்தான் இஸ்லாம் இந்தக்காலத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும்ää எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்துää சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துää மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)அல்-குர்ஆன் : 103: 1-3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாளை மறுமையில் ஒரு அடியானுடைய பாதம் நான்கு கேள்விகளுக்குப் பதிலழிக்காத வரை நகராது.
1.    அவனது வாழ்க்கை அதனை எதில் கழித்தான்.
2.    அவனது தேகம் அதனை எதில் பயன்படுத்தினான்.
3.    அவனது கல்வியறிவு அதனைக் கொண்டு என்ன செய்தான்.
4.    அவனது பொருளாதாரம் அதனை எங்கிருந்து சம்பாதித்தான் எதிலே செலவு செய்தான்.(நூல் : திர்மிதி)
மேற்ப்படி நபிவழிச் செய்தி நாளை மறுமையில் ஒரு மனிதன் அவனுக்கு வழங்கப்பட்ட நான்கு வகை அருட்களுக்குப் பதில் சொல்லாத வரை அந்த இடத்திலிருந்து தனது பாதத்தை அகற்ற முடியாது என்று கூறுகின்றது. அதில் முதலாவது அவனுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்கை எனும் காலமாகும்.
எனவே நாம் முடிந்த வரை எமது காலங்களைப் பாதுகாத்து நல்லறங்களில் கழிப்பதற்கு முயற்சித்தல் வேண்டும் அவ்வாறே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கால சூழ்நிலைகள் பற்றியும் நாம் தெரிந்திருத்தல் அவசியமாகும். அப்போதுதான் நாம் சரியான முறையில் எமது காலத்தை நிர்வகிக்க முடியும்.
அந்த வகையில் இஸ்லாத்திற்கு சற்று முற்பட்ட காலம் முதல் உலக முடிவு நாள் வரை ஏற்படவிருக்கும் காலங்கள் பற்றியும் அந்தக் காலங்களுக்கு நாம் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் எமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். எனவே அவற்றைத் தெரிந்து சரியாகப் புறிந்து காலமறிந்து கருமமாற்றுதல் நமது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு :
நபி (ஸல்) அவர்களுக்கும் ஹ{தைபா பின் யமான் (ரழி) அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சம்பாசனையினை ஹ{தைபா பின் யமான் (ரழி) அவர்கள் இவ்வாறு இவ்வாறு விபரிக்கின்றார்கள்:
ஹ{தைபா பின் யமான் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் : மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியே கேட்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள் நான் தீமைகள் பற்றியே கேட்க்கக் கூடியவனாக இருந்தேன் அவை என்னைப் பற்றிக் கொள்ளக் கூடும் எனும் அச்சத்தின் காரணமாக.
அல்லாஹ்வின் திருத் தூதர் அவர்களே நாம் அறியாமையிலும் தீமைகளிலும் இருந்தோம் எனவே அல்லாஹ் இந்த நன்மையை எமக்குக் கொண்டு சேர்த்தான் இந்த நன்மையின் பின் தீமைகள் தோன்றுமா? என்று நான் கேட்டேன்.
அதற்க்கு ஆம் என்று கூறினார்கள்.
நான் அந்தத் தீமைக்குப் பின் நன்மை உண்டாகுமா என்று கேட்டேன்
அதற்கு ஆம் அதிலே தெளிவின்மை இருக்கும் என்று கூறினார்கள்
நான் தெளிவின்மை என்றால் என்ன என்று கேட்டேன்.
அதற்க்கு ஒரு கூட்டம் எனது முன்மாதிரி அல்லாததை முன்மாதிரியாகவும் எனது வழிமுறை அல்லாததை வழிமுறையாகவும் கொண்டிருப்பார்கள் அவர்களிலிருந்து நீ தெரிந்து கொண்டு வெறுப்பாய் என்று கூறினார்கள்.
அப்போது நான் அந்த நன்மைக்குப் பின்னர் தீமை ஏற்படுமா? என்று கேட்டேன்.
அதற்கு ஆம் சில அழைப்பாளர்கள் நரகின் வாயிற்களில் இருந்து கொண்டு அழைப்பார்கள் யார் அதற்குப் பதிலழிக்கின்றாரோ அவரை அதிலே பிரவேசிக்கச் செய்வார்கள்.
அப்போது நான் அவர்களைப் பற்றி எனக்கு விபரியுங்கள் என்றேன்.
அதற்கு ஆம் எமது வழித்தோன்றல்களான எமது மொழியைப் பேசக்கூடிய ஒரு கூட்டம் என்று கூறினார்கள்.
அதற்க்கு நான் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அதனை நான் சந்தித்தால் ( நான் என்ன செய்ய வேண்டும் என்று) கருதுகின்றீர்கள் என்று கேட்டேன்.
அதற்க்கு முஸ்லிம்களின் கூட்டத்தையும் அவர்களின் தலைவரையும் பற்றிக் கொள் என்று கூறினார்கள்.
அதற்க்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்பும் தலைவரும் இல்லாதிருந்தால் என்று கூறினேன்.
அதற்க்கு நீ அந்தப் பிரிவுகள் அத்தனையையும் விட்டு விலகி விடு ஒரு மரத்தின் வேரைக் கவ்விக்கொண்டு அதே நிலையில் உனக்கு மரணம் ஏற்ப்படாலும் சரி என்று கூறினார்கள்.(நூல் : முஸ்லிம்)
மேற்படி நபி வழிச் செய்தி பின் வரும் ஐந்து வகையான கால சூழலைப் பற்றி விவரிக்கின்றது.
1.    நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட அறியாமைக்காலம்
2.    நபி (ஸல்) அவர்களது காலமும் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய இரண்டு நூற்றாண்டுகளுமாகிய மிகச் சிறந்த மூன்று நூற்றாண்டு காலம்
3.    அதற்கடுத்து வரக்கூடியதான ஒரு தீய காலம்
4.    அதற்கடுத்து வரக்கூடியதான நன்மையும் தீமையும் கலந்த தெளிவற்ற ஒரு காலம்.
5.    அதற்கடுத்ததாக வரக்கூடிய தீய காலம்

மேற்படி ஐந்து வகையான காலங்களில் முதலாவது காலமாகிய நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட அறியாமைக்காலமும் நபி (ஸல்) அவர்களின் வருகையுடன் உருவாக்கம் பெற்ற சிறந்த நூற்றாண்டு என்று வர்னிக்கப்படுகின்ற ஹிஜ்ரி முதல் மூன்று நூற்றாண்டுகளும் நமறிந்ததே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் சிறந்தவர் எனது நூற்றாண்டில் உள்ளவராவார் பிறகு அதனைத் தொடர்ந்து வரக்கூடிய நூற்றாண்டில் உள்ளவராவார் பிறகு அதனைத் தொடர்ந்து வரக்கூடிய நூற்றாண்டில் உள்ளவராவார். (நூல் : புகாரி)
அந்த இரண்டு காலங்களும் தவிரவுள்ள ஏனைய மூன்று காலங்களிலும் முதல் காலமாகிய தீய காலமல்ல இது என்பதுவும் தெரிகின்றது. அதனை நாம் கடந்து வெகு தூரம் சென்றுள்ளோம் என்பது உறுதி ஆகவே எஞ்சியுள்ள இரண்டு வகையானக் காலங்களில் ஒன்றில்தான் நாம் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே இன்றுள்ள பிரச்சினை நாம் அவற்றுள் எந்தக் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதுதான்.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நான்காம் காலகட்டமாகிய நன்மையும் தீமையும் கலந்த தெளிவற்ற காலமாகவிருந்தால் அவ்வளவு தூரம் பிரச்சினை அல்ல ஏனெனில் அத்தகைய காலத்தை நபி (ஸல்) அவர்கள் கெட்ட காலம் என்று கூறாது நல்ல காலம் என்றே கூறியுள்ளார்கள். எனவே முடிந்த வரை ஒவ்வொரு தனிமனிதனும் இயக்கங்கள் குழுக்கழும் அல்-குர்ஆன் அல்-ஹதீஸைப் பின்பற்றி வாழ்வதற்கு முயற்ச்சித்தல் வேண்டும் அவ்வாறு முற்படுகின்ற போது தத்தமது ஆய்வுகளுக்கேற்ப்ப ஏதும் தவறுகள் பிழைகள் ஏற்பட்டாலும் அவற்றை நாம் ஏற்றுக் கொண்டு அதிலிருந்து தௌபா செய்து மீண்டு விடுதல் வேண்டும் அப்போது அவற்றை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும்.
அல்லாஹ் கூறுகின்றான் : வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும்ää நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்ää பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.(அல்-குர்ஆன் : 9:102.)
அதே நேரம் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இறுதி காலகட்டமாகிய தீய காலமாகவிருந்தால் அப்போது நாம் முஸ்லிம்களின் தலைமைக்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுதல் அல்லது அவ்வாறான ஒரு தலைமையும் கூட்டமைப்பும் முஸ்லிம்களிடம் காணப்படாதவிடத்து அனைத்துவிதமான பிரிவுகளையும் புறக்கணித்து தனியா தன்னையும் தனது மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.இதனைத்தான் நபி (ஸல்) அவர்கள் மேற்படி நபி வழிச் செய்தியில் நீ அந்தப் பிரிவுகள் அத்தனையையும் விட்டு விலகி விடு ஒரு மரத்தின் வேரைக் கவ்விக்கொண்டு அதே நிலையில் உனக்கு மரணம் ஏற்ப்படாலும் சரி என்று கூறினார்கள்.
அவ்வாறு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தை ஆராய்ந்து பார்கின்ற போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய இந்த நூற்றாண்டு அதிகமான கலங்கல் தன்மை நிறைந்த தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. எனவே இது இறுதியில் வரக்கூடிய தீய காலமன்று அதற்கு முன்னால் தோன்றக்கூடிய நன்மையும் தீமையும் கலந்த கலங்கல் தன்மை கொண்ட தெளிவற்ற காலமாகத்தான் இன்றைய காலம் இருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது. ஆதலால்தான் இன்றைய காலம் தீயோர்களிலிருந்து நல்லோர்களைப் பிரித்தறிய முடியாத ஒரு காலமாக உள்ளது. அதிலும் பாமர மக்களைப் பொறுத்தவரை உண்மையையும் பொய்யையும் பிரித்தறிந்து கொள்வதில் அவர்கள் படும் பாடு மிகவும் வேதனைக்குரியதே.
இவர்களின் இந்த நிலைக்குக் காரணம் நமது மார்க்க அறிஞர்கள்தான் என்றால் அது மறுப்பதற்க்கில்லை. ஏனெனில் தங்களை மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தங்களுக்குள்ளேயே உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது பலக் குழுக்களாகவும் பலப் பிரிவுகளாகவும் பிளவு பட்டு சமூகத்தையும் தங்கள் மனம் போல் கூறு போட்டு ஆளுக்காள் ஒவ்வொரு திசையில் பயனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு தனிமனிதனும் இயக்கமும் குழுவும் தாம் கொண்ட கொள்கைதான் சரியானது என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் மேற்படி முன்னறிவிப்பில் “”ஒரு கூட்டம் எனது முன்மாதிரி அல்லாததை முன்மாதிரியாகவும் எனது வழிமுறை அல்லாததை வழிமுறையாகவும் கொண்டிருப்பார்கள் அவர்களிலிருந்து நீ அவற்றைத் தெரிந்து வெறுப்பாய்” என்று கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி விளக்கம் தனித்தனிக் கொள்கை இந்நிலையில் பாமரர்கள் உண்மையை அறிந்து கொள்ள முடியாது குளம்பிப் போய் நாம் யார் சொல்வதை கேட்டு நடப்பது என்று கேட்கின்றார்கள். அது மாத்திரமின்றி எமது இந்த முறண்பாடு மாற்று மதத்தவர்களும் நமது மார்க்கத்தை விமசிக்க வழி  கோலியுள்ளது.
இன்றைய இந்த நிலையை அப்படியே விட்டு விடுவோமாக இருந்தால் காலக்கிரமத்தில் அது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த தீய காலகட்டத்திற்கு நம்மை நகர்த்தி சென்று விடும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே நாம் அனைத்துத் தரப்பினர்களும் நமது கருத்து வேறுபாடுகளைக் கடந்து நின்று முஸ்லிம்களின் கூட்டமைப்பதையும் தலைமைத்துவத்தினையும் உருவாக்குதல் வேண்டும்.

முனாப் நுபார்தீன்

வியாழன், 16 அக்டோபர், 2014

ஞானசாரரின் ஞானசூண்யம் - 4. » Sri Lanka Muslim

ஞானசாரரின் ஞானசூண்யம் - 4. » Sri Lanka Muslim
ஞானசாரரின் ஞானசூண்யம் - 4.

திருவாளர் ஞானசாரர் அவர்களின் ஞான சூண்யம் பற்றி இதற்கு முன்னய எமது ஆக்கத்தில் இல.1 லிருந்து 8 வரை சுட்டிக் காகாட்டி இருந்தோம் எனவே இந்தத் தொடரில் இல. 9 லிருந்து துவங்குகின்றோம்.

9.    திருவாளர் ஞானசாரர் அவர்கள் கூறுகின்றார் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் சவுதியைப் போன்று உடை அணிகின்றார்களாம். அட ஞான சூண்யமே முஸ்லிம் பெண்கள் சவுதியைப் போன்று உடை அணியவில்லை இஸ்லாமிய முறைப்படி அணிகின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்வீராக.இலங்கையில் மாத்திரமின்றி முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்த போதிலும் அவர்கள் இஸ்லாமிய ஆடையைத்தான் அணிவார்கள்.

10.    முஸ்லிம்களுக்குத் தனியான காதி நீதி மன்றம் இருக்கின்றது ஏன் அவர்களுக்கு மட்டும் இந்தத் தனித்துவம் இதனை அரபு நாடாக்கப் பார்கின்றார்களா? என்று ஞானசாரர் புலம்புகின்றார். அட ஞான சூண்யமே முஸ்லிம்கள் இலங்கையில் மட்டுமின்றி உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தங்களது இஸ்லாமிய சட்டத்தின்படிதான் செயல்படுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்வீராக. அதைத் தடுக்க உமக்கு மட்டுமன்றி உலகில் எந்தவொரு கொம்பனுக்கும் முடியாது.

11.    புஹாரி எனும் நூலில் பதிவாகியுள்ளது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறி இஸ்லாத்தை ஏற்கும் வரை மனிதர்களுடன் போராடுமாறு நான் அல்லாஹ்வால் கட்டளைப் பிறப்பிக்கப் பட்டுள்ளேன் என்றும் அவ்வாறு யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களின் உயிரும் உடமைகளும் பாதுகாப்பு பெறும் என்றும் முகம்மத்; (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;. இதற்க்கு உங்கள் பதில் என்ன? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இது இங்கு செல்லுபடியாகுமா? இல்லையா? இதனை நீங்கள் இங்கு செயல்படுத்துகின்றீர்களா ? இல்லையா? என்று ஞானசாரர் சூளுரைக்கின்றார்.

அட ஞான சூண்யமே இலங்கையை விட்டு விடு நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை கடந்த 1435 வருடகால இஸ்லாமிய வரலாற்றில் உலகில் எங்காவது இஸ்லாத்தை முஸ்லிம்கள் போர் முனையில் வலுகட்டாயப்படுத்தி தினித்தார்கள் என்பதற்கு ஒரேயொரு சான்றையேனும் உம்மால் சமர்ப்பிக்க முடியுமா? அவ்வாறு ஒரேயொரு நபரையேனும் முஸ்லிம்கள் மதம் மாற்றியுள்ளார்கள் என்பதையாவது உம்மால் காட்ட முடியுமா? நிச்சயமாக உம்மால் முடியாது.

நீர் கூறுவது போன்று இஸ்லாம் ஆயுதத்தால் பரப்பப்பட்டதும் கிடையாது அப்படி பரப்ப வேண்டும் எனும் அவசியமும் அதற்கில்லை. மாறாக இஸ்லாம் மனிதாபிமானத்தால்தான் வளர்ந்தது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
நீர் கூறுவது போலன்றி இறைவன் எமக்கு கற்றுத் தரும் அழகிய அனுகுமுறையினை சற்று கவனிப்பீராக.

இஸ்லாத்தின் சகிப்புத் தன்மை

அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல்ää வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்-குர்ஆன் :6:108)

மேற்படி வசனம் முஸ்லிம்கள் ஏணைய சமூகத்தினர்கள் கற்பனையாக கடவுள் என்றெண்ணி வழிபட்டுக் கொண்டிருப்பவற்றை எக்காரணம் கொண்டும் நிந்திக்கக் கூடாது என்றே எமக்குப் போதிக்கின்றது. அத்துடன் அவர்கள் அவ்வாறு கற்பனைக் கடவுள்களை வழிபடுமளவிற்கு அச்செயலை அவர்களுக்கு அழகுபடுத்தியவனும் இறைவனே என்று கூறுகின்றது.

இஸ்லாத்தின் விட்டுக் கொடுப்பு

அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) நீர் சொல்வீராக: ''காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும்ää நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும்ää நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும்ää நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."" (அல்-குர்ஆன் : 1-6)

இஸ்லாத்தில் நிர்ப்பந்தித்தல் ஆகாது

அல்லாஹ் கூறுகின்றான் : (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால்ää எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2: 256)

யாரையும் எச்சந்தர்ப்பத்திலும் நிர்ப்பந்திக்கவோ நிந்தனை செய்யவோ கூடாது என்று கூறி சகிப்புத்தன்மை பற்றியும் விட்டுக் கொடுப்பு பற்றியும் போதிக்கின்ற இறைவன் ஆயுத முனையில் இஸ்லாத்தைப்பரப்ப கட்டளை இடுவானா? இதை புத்தியுள்ள எவனாவது ஏற்றுக் கொள்வானா? ஏன் உங்களுக்கு சிந்திப்பதற்கு புத்திதான் இல்லை இவற்றை உணர்ந்து கொள்ள உள்ளமுமா இல்லை? அப்படி என்றால் நீங்கள் மனிதர்களே இல்லையா?

12.   அல்-குர்ஆன் 2:193 ல் முஸ்லிம்களே அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் தவிர ஏனைய அனைத்து மதங்கள் மற்றும் அவற்றை வழிபடுபட்டு பூமியை நாசம் செய்பவர்கள் இல்லாதொழிந்து ஒரே மார்க்கம் இஸ்லாம் எனும் நிலை தோன்றும் வரை அவர்களுக்கு எதிராக கலகத்தையும்; போரையும் ஏற்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தயவு செய்து இது உங்கள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பதை எமக்குத் தெளிவு படுத்துங்கள் அப்போது எம்மால் சகவாழ்க்கையை ஏற்படுத்த முடியும் அப்போது நாம் எமது இழம் சகோதரிகளையும் இன்னும் வேண்டிய அனைத்தையும் விட்டுத் தருவோம் என்று கூறி திருவாளர் ஞான சூண்யம் அவர்கள் தமது அறியாமையை அரங்கேற்றினார்.

அட ஞான சூண்யமே அப்படி நீர் கூறுவது போன்று எமது குர்ஆனில் ஒரு வசனம் கூட இல்லை என்று என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.
அப்படி நீர் கூறுவது போன்று ஒரு வசனமேனும் அல்-குர்ஆனில் இடம்பெற்றிருந்தால் இன்று நீர் இப்படி பேசுவதற்கு உயிருடன் இருந்திருக்க மாட்டீர் என்பதைப் புறிந்து கொள்ளும்.

இதோ நீர் சுட்டிக்காட்டிய இறைவசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பு நீர் சுட்டிக்காட்டிய 193ம் வசனத்திற்கு சற்று மேலே சென்று 190 வது வசனத்திலிருந்து படித்துப்பாரும் உமக்கு புத்தியிருந்தால் உண்மை விளங்கும்

அல்லாஹ் கூறுகின்றான் :

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும்ää அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும்ää அவர்களைக் கொல்லுங்கள். இன்னும்ää அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோää அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும்ää கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும்ää மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில்ää நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

2:192. எனினும்ää அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும்ää கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193.  ஃபித்னா(குழப்பமும்ää கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரைää நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.(அல்-குர்ஆன் : 2: 190-193)

இதுதான் உமது கேள்விக்கான பதில் மேற்படி வசனங்கள் நீர் குறிப்பிட்ட கருத்துக்கு முற்றிலும் மாற்றமான கருத்தையே கொண்டிருக்கின்றது.

நீர் கேட்டுக் கொண்டது போன்று நான் உமக்குப் பதில் தந்து விட்டேன் எங்கே உமது இந்த வினாவுக்கான பதிலை நாம் தந்தால நீர் வாக்களித்தது போன்று நீர் எமக்குத் தருவதாகக் கூறிய உமது வாக்குறுதியை நிறைவேற்றுவீரா?

முனாப் நுபார்தீன்.

புதன், 15 அக்டோபர், 2014

முஹர்ரம் மாதத்தின் சிறப்பும் ஆசூரா நோன்பும். » Sri Lanka Muslim

முஹர்ரம் மாதத்தின் சிறப்பும் ஆசூரா நோன்பும். » Sri Lanka Muslim

முஹர்ரம் மாதத்தின் சிறப்பும் ஆசூரா நோன்பும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பும் ஆசூரா நோன்பும்.

இப்புவியில் வாழும் அனைத்து இனத்தினர்களும் மதத்தினர்களும் தங்களுக்கென்று வேறுபட்ட சில வருடப் பிறப்புக்களைக் கொண்டாடி வருவதனைப் பார்கின்றோம். அந்த வகையில் ஆங்கில வருடப் பிறப்புää தமிழ் வருடப் பிறப்புää சிங்கள வருடப் பிறப்பு என்ற வழக்கம் நடைமுறையில் இருப்பதனை எம்மால் காண முடிகின்றது. உலகில் பொதுவாக சூரிய சுழற்சியைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள நாட்காட்டியே பயன்பாட்டில் இருந்த போதும் அனைத்தினத்தினர்களும் சந்திரனைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள நாட்காட்டியின் அடிப்படையிலேயே தங்களது வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் நமது வருடப்பிறப்பாக ஹிஜ்ரி வருடம் காணப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு அல்லாஹ்வின் அருளால் எமது வருடப்பிறப்பாகிய நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சி (ஹிஜ்ரத்) நடந்தேறி   1435 சந்திர வருடங்களைக் கடந்து எதிர் வருகின்ற 25-10-2014 ம் கிருஸ்த்து வருடம் சனிக்கிழமைன்று ஹிஜ்ரி 1436 ல் நுழைய இருக்கின்றது.

முஹர்ரம் என்பது ஹிஜ்ரி வருடத்தின்; முதல் மாதம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது - புனிதமிக்கது அல்லது தடுக்கப்பட்டது என்பது பொருளாகும்.

வல்ல அல்லாஹ் மனிதர்களாகிய நாம் தீமைகளிலிருந்து தவிர்த்து அதிகமான நன்மைகளில் நம்மை ஈடுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட சில இடங்கள் காலங்கள் ஆகியறவற்றை புனிதம் வாய்ந்ததாகவும் அந்த இடங்களிலும் காலங்களிலும் தீமைகள் புரிவதைத் தடுக்கப்படதாகவும் ஆக்கி இருக்கின்றான்.

அவ்வாறு புனிதம் வாய்ந்த தீமைகள் தடுக்கப்பட்ட மாதங்களில் முஹர்ரம் மாதம் முதன்மையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன்: 9:36)

மேற்படி வசனத்தில் கூறப்பட்டுள்ள புனிதமான மாதங்கள் என்பது முறையே
1.    முஹர்ரம்
2.    துல்-கஃதா
3.    துல்-ஹஜ்
4.    ரஜப்

ஆகிய நான்கு மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் அவற்றுள் மூன்று மாதங்கள் தொடராக வரக்கூடிய துல்-கஃதா துல்-ஹஜ் மற்றும் முஹர்ரம் அத்துடன் ஜமாதில் ஆகிர் ஷஃபான் ஆகியவற்றுக்கிடையில் வரக்கூடிய ரஜபுல் முழர் எனும் மாதமுமாகும்.(நூல் : புகாரி)

நாம் மேலே குறிப்பிட்ட அல்-குர்ஆனின் 9:36 வசனத்தின்படி நாம் இந்த மாதங்களில் எவருடனும் போர் புரிதல் கூடாது. அதே சமயம் நமது விரோதிகள் நம்முடன் வலிய சண்டைக்கு வந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் போரிடலாம் என்பதை அறிகிறோம். இதன் மூலம் மனித சமுதாயத்தில் சண்டைச் சச்சரவற்ற ஒரு அமைதியான நிலையை உருவாக்குதல் முஸ்லிம்களின் கடமையாகிறது. இது அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் மூலம் நமக்கிடும் கட்டளையாகும். இக் கட்டளையை சரிவர நிறைவேற்றுவோம் என உறுதி பூண்டவர்களாக ஹிஜ்ரி வருடத்தை வரவேற்க வேண்டும். இதுவே திருக்குர்ஆன் முஸ்லிம்களிடையே எதிர்பார்க்கும் விசேட செயலாகும்.

அத்துடன் இவ்வாறு புனிதத்தன்மை வாய்ந்த இடங்களிலும் காலங்களிலும் தீமை செய்வதென்பது ஏனைய இடங்களிலும் காலங்களிலும் செய்யப்படும் தீமைகளை விட மிகக் கடுமையானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்@ர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்ää மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும்ää தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.(அல்-குர்ஆன் : 22:25)

இந்த மாதத்தில் முடிந்த அளவு அதிகமாக நோன்பு நோற்றல் வரவேற்க்கத்தக்கதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு - அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ழான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும். ( நூல் : முஸ்லிம்ää அஹ்மது.)

ஆஷ_ரா நோன்பு :

இந்த மாதத்தில் 10 நாளன்று நோன்பு நோற்றல் சுன்னத் நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷ_ரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள்ää நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள்.

அதற்கு யூதர்கள் : இது ஒரு புனிதமான நாள். இன்று தான் மூஸா (அலை) அவர்களையும்ää அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன்ää அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றிää அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம் என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் விசயத்தில் உங்களை விட நானே அதிகம் உரிமையும்ää தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்றுää பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (நூல்; : புகாரிää முஸ்லிம்ää அஹ்மத்)

இந்த நோன்பு கடந்த ஒரு வருடத்திற்குரிய பாவத்திற்கான பரிகாரமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆஷ{ரா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது அல்லாஹ் அதை கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவான். (நூல்; : திர்மிதி)

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷ_ரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டாயக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டாயக் கடமையல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் - ரமழானின் கட்டாய (பர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது - நிகந்த நிகழ்ச்சியாகும் இது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷ_ரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டுமென ரசூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்க்காணும் நபி மொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ஆஷ_ரா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டபின்ää விரும்பியவர்கள் ஆஷ_ரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடட்டும் எனக் கூறினார்கள். (நூல்; : புகாரிää முஸ்லிம்ää முஸ்னத்-அஹ்மத்.)

யூதர்களுக்கு மாறு செய்தல்.

அன்றய நாளில் யூதர்களும் நோன்பு வைப்பதனால் அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 10ம் தினத்திற்கு முன்னால் 9ம் தினத்தையும் அல்லது 11ம் தினத்தையும் இணைத்து இரண்டு நோன்புகள் வைத்தல் வேண்டும்.

ஆஷ_ரா (பத்தாம்) தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போதுää அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுகு;கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடன் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (நூல் : முஸ்லிம்ää அபூதாவூத்ää அஹ்மத்)

இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹர்ரம் மாதம் 9ää10 நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி (சுன்னத்) என்பதை அறியலாம். அவ்வாறு 9. 10ம் தினங்களில் நோன்பு வைக்கத்தவறின் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் 10. 11 ம் தினங்களில் வைக்கலாம்.

முனாப் நுபார்தீன்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

Bodu Bala Sena උලමට අභියෝගයක්


ஞானசாரரின் ஞான சூண்யம் -3. » Sri Lanka Muslim

ஞானசாரரின் ஞான சூண்யம் -3. » Sri Lanka Muslim

ஞானசாரரின் ஞானசூண்யம் -3. | importmirror.com

ஞானசாரரின் ஞானசூண்யம் -3. | importmirror.com

ஞானசாரரின் ஞானசூண்யம் -3.

ஞானசாரரின் ஞானசூண்யம் -3.
 
பொது பள சேனாவின் சர்வதேச மாநாடு கடந்த 28-09-2014 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு சுகதாச அரங்கில் நடைபெற்றது குறித்த மாநாட்டைப் பற்றிப் பலரும் பலதரப்பட்டக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் மேற்ப்படி மாநாட்டைப் பொறுத்த வரை அங்கு ஆற்றப்பட்ட உரைகளைப் பார்க்கின்ற போது அந்த மாநாடு முக்கியமான இரண்டு கருப்பொருற்களைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

1.    முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டி விடுதல்.
2.    அதன் ஊடாக தனி பௌத்த பேரினவாதத்தை ஆட்சியேற்றல்.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய ஞானசாரர் உட்ப்பட அனைத்துப் பேச்சாளர்களும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைத்தக் கருத்துக்கள் அவர்களின் அறியாமையின் அதி உச்சகட்டத்தினை தெளிவு படுத்துவதாகவுள்ளது. மாநாட்டின் ஆற்றப்பட்ட உரைகள் நூறு வீதம் முஸலிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியுமே அமைந்திருந்தது. இவர்களின் இந்த உரைகளைக் கேட்டு அதனை யாராவது ஏற்பார்களாக இருந்தால் அது அவர்களின் அதி கூடிய முட்டாள்தனமாகும்.
பேச்சாளர்களின் முட்டாள்தனங்களைச் சற்று பாருங்கள்.

1. அகில இலங்கை உலமா சபை ஒரு தீவிரவாத அமைப்பு என்பதே அனைவரது உரையிலும் தொக்கி நின்ற செய்தியாகும். இந்த மடையர்களுக்கு 1924 ம் ஆண்டு அகில இலங்கை உலமா சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை சுமார் 90 ஆண்டு கால வரலாற்றில் அகில இலங்கை உலமா சபையால் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு தீவிரவாத செயலையேனும் காட்ட முடியுமா?

2.    இலங்கை என்பது பல்லின மக்கள் வாழும் நாடு கிடையாது இது சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றார்கள். இந்த மடையர்களுக்கு இந்த நாட்டில் ஆரம்ப காலம் முதல் பல்லின மக்கள் வாழ்து கொண்டிருப்பது எவ்வாறு தெரியாமல் போனது.? சுருங்கச் சொல்வதாயின் இந்த நாட்டிற்குள் பௌத்த மதம் ஊடுருவுவதற்கு முன்னிருந்தே யாராலும் எந்த சக்தியாலும் இன்று வரை மத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட முடியாது ஓரிறைக் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்து வரும்  இந்த நாட்டின் ஆதி குடிகளாகிய இலங்கைச் சோனகர்களுக்கே இந்த நாடு செந்தமாகும் என்பதுவே நியாயமான வாதமாகும்.

3.    முஸ்லிம் நாடொன்றுக்குச் சென்று நம்மால் (பல்லின மக்கள் வாழும் நாடு எனும் ) இதனைக் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த மடையர்களுக்கு இலங்கைக்கும்ää இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு தெரியவில்லையா? தனி முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட மத்திய கிழக்கு நாடுகள் தவிரவுள்ள பங்களாதேஸ்; போன்ற பிற இனங்களையும் தன்னகத்தே கொண்ட நாடுகளில் அந்த அந்த மதங்களுக்குரிய சுதந்திரங்கள் வழங்கப்பட்டு அவர்களுக்குரிய மதவழிபாட்டுத் தலங்களும் அமைக்கப்படிருப்பது இந்த வடிகட்டிய முட்டாள்களுக்குப் புறியாமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?

4.    உலகிலேயே உள்ள மிகப்பளமை வாய்த 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள ஒரே மதம் பௌத்த மதம் என்று கூறப்பட்டது. இந்த மடையர்களுக்கு உலகிலேயே உள்ள மிகப்பளமையானதும் முதன்மையானதுமான மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே என்பது தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இஸ்லாம் என்பது 1400 வருடங்களுக்கு முன் நபி முகம்மது (ஸல்) அவர்களாள் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் என்றே அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடேயாகும். இஸ்லாம் என்பது ஆதி மனிதர் மனிதகுலத் தந்தை ஆதம் (அலை) அவர்களின் வருகையுடன் உருவான மார்க்கமாகும். அதுவே உலகில் தோன்றிய முதல் மார்க்கமாகும்.

5.    முஸ்லிம்கள்  இந்த நாட்டு பௌத்தர்களை மதம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்களாம். இந்த மடையர்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதி ஒரு பௌத்தராகவும் பிரதமர் பௌத்தராகவும் இருக்கும் அதே நேரம் வெறும் 08 விகிதமாக மிகவும் சிறுபாண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களால் இந்த அபாரமிகு செயலை எவ்வாறு வெற்றிகரமாக செய்ய முடியும் என்பது புறியவில்லையா?

6.    அரபு நாடுகளின் எரிபொருள் எமக்குத் தேவையில்லை நாம் எரிபொருள் பெறுவது சிங்கப்பூரிலிருந்தாகும் என்று கூறி ஞானசாரர் தனது ஞானசூண்யத்தினை மீண்டும் பதிவு செய்தார்; இந்த மடையனுக்கு உலகுக்குத் தேவையான எரிபொள்களில் 90 வீதமானவற்றை வளைகுடா அரபு நாடுகள்தான் ஈடு செய்கின்றது என்பது தெரியாது போலும்.
7.    முஸ்லிம் இழைஞர் யுவதிகள் மாற்று மத இழைஞர் யுவதிகளுடன் காதல்வயப்பட்டால் அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றித் திருமணம் செய்கின்றார்களாம். அவர்களோ அவரவர் மதத்தில் இருந்து கொள்ள விட்டு விடுவார்களாம் இது எவ்வளவு பெரிய பொன்னத்தனமும் முட்டாள்தனமுமான கொள்கை என்பதுகூட அவருக்குப் புறியாது போய்யுள்ளது.

8.    ஞானசாரரின் அடுத்த ஞானசூண்யம் முஸ்லிம்கள் கள்ளத்தனமாக மார்க்கத்தைக் கற்பிற்கின்றார்களாம் அவர்களோ அனைத்து விடயங்களையும் வெளிப்படையாகவே செய்கின்றார்களாம். இந்த அறிவிலிக்கு முஸ்லிம்களின் அத்தனை கலாபீடங்களும் பகிரங்கமாக நாட்டு சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு உரிய முறையில் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் அல்லதுதினைக்களங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது கூட தெரியாதா?

ஞானசார அவர்களே உலகிலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்கப்பட்டு மிகவும் வெளிப்படையாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி போதிக்கப்படுகின்ற பின்பற்றப் படுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம்தான். உமக்கு உலகிலுள்ள எந்த மொழியில் வேண்டுமானும் எமது மார்க்கம் கிடைக்கும். அவ்வாறு எமது இஸ்லாம் மார்க்கம் உமது மொழியிலும் தாராளமாகக் கிடைப்பதனால்தான் நீரும் அதனைத் தப்பும் தவறுமாக விளங்குகின்றீர் இல்லை என்றால் நீர் வாய் திறக்கவே முடியாது.

இன்னும் நீர் உங்கள் மார்க்கம் மிகவும் வெளிப்படையானது என்று கூறினீரே நீர் உமது கூற்றில் உண்மையாளராக இருந்தால் உமது மார்கத்தை உலகிலுள்ள எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிச்சத்திற்க்குக் கொண்டு வந்திருக்கின்றீர் என்று கூற முடியுமா? குறைந்த பட்சம் இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு மாற்று மொழியாகிய தமிழ் மொழியிலாவது?

திருவாளர் ஞானசார அவர்களே பேசும் போது நாவிற்;க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் உளறிக் கொட்டாது சற்று சிந்தித்துப் பேசுவீராக நீர் மடயன் என்பதற்காக அனைவரையும் மடயர்கள் என்று எடைபோடுவதென்பது உமது முட்டாள்தனத்தின் அதி உச்சகட்டமாகும்.

முனாப் நுபார்தீன்

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...