எமது மாவட்ட முஸ்லீம்களும்,
பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபகாத்ஹ்
இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 67 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும்ää பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றனää அண்மைக்காலமாக இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமூகமாக ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இந்த நாட்டை ஆட்சி செய்த சிறிலங்கா சுதந்திர கட்;ச்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்தது. இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் அந்த நாட்க்கள் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வந்ததனை நாம் அனைவரும் மறந்நிருக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறைகள் நாளுக்கு நாள் மிகவும் தீவிரம் அடைந்து சென்று கொண்டிருந்த அந்த நாட்கள் நமது அரசியல் மற்றும் சமயத் தலைமகளின் அதி தீவிர பலவீனத்தையே பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. இந்த மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு ஆட்ச்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் அரியதொரு வாய்ப்பினை நமக்கு வழங்கியிருந்தான். அதன் பயனாக நாம் கடந்த சுமார் 5-6 மாத காலங்கள் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது.
இதற்கிடையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு பொதுத் தேர்தலின் ஊடாக முஸ்லீம்களின் பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்யும் வாய்ப்பினை நமக்கு வழங்கியுள்ளான். எனவே இவ்வாறான இந்த அசாதாரண சூழ் நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச் சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும்; இதை தமக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகும்.
ஏனெனில் நமது சமூகம் கமூக, சமய, அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை.
எனவே நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நாம் ஏதோ ஒரு அடிப்படையில் எமது கருத்து முறன்பாடுகளை புறந்தள்ளி எமது மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல் காலத்தின் தேவையாகும். அதற்கான அரியதோர் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தினை நாம் தவற விட்டு விடுவோமானால் இனிமேலும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.
இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம், எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டுமாகவிருந்தால் நமது முஸ்லிம் அரசியல் கட்ச்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓரணியில் தனிச்சின்னத்தில் போட்டி இட்டிருக்க வேண்டும் அதை நமது தலைமைகள் தவறி விட்டன.
இந்நிலையில் நாம் இம்முறையாவது நமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அது எந்தக் கட்ச்சியின் எந்த வேட்ப்பாளரின் மூலம் சாத்தியமோ அதனை சரியான முறையில் ஆராய்ந்து இனங்கண்டு அதன் மூலம் இதனை நாம் சாதித்தேயாக வேண்டும். இந்தப் பாரிய பொறுப்பிலிருந்து நாம் யாரும் விடுபட முடியாது. “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும்” என்பது நபி வாக்காகும். எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் “எமது மாவட்ட முஸ்லீம்களும் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்” எனும் இத்தலைப்பினை அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பள்ளி வாயிற்களின் நிருவாகிகள், இமாம்கள், சமூக சேவை சங்கங்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஆராய்ந்து நமது மாவட்டத்தின் அனைத்து முஸ்லீம்களுக்கும் அறிவுறுத்துவது கடமையாகும்.
அந்த வகையில் இந்த நாட்டை ஆண்டாண்டு காலமாக மாறிமாறி ஆட்ச்சி செய்து வரும் இரு பெரும் கட்ச்சிகளிலும் நமது விடயத்தில் ஓரளவேனும் கரிசனைக் காட்டக்கூடிய நன்மை பயக்கும் ஒரே கட்ச்சி ஐ.தே.கட்ச்சிதான் எனவே அனுராதபுர மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதற்கும் மிகவும் பொருத்தமான கட்ச்சி; ஐ.தே.க.என்பதனையும் பொருத்தமான வேட்ப்பாளர் நமது மாகானசபை உறுப்பினர் ஆசிரியர் பி. சுஹீது அவர்கள் என்பதனையும் நாம் இணங்கண்டுள்ளோம்.
ஆசிரியர் பி. சுஹீது அவர்கள் எந்த அடிப்படையில் பொருத்தமானவராகக் கருதப்படுகின்றார்.
1. சுமார் 23 வருடகால நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.
2. கட்ச்சி தோல்வியுற்ற போதும் மக்களின் அபிமானம் காரணமாக தொடர்ந்து வெற்றி பெற்றமை.
3. நமது மாவட்ட நீண்டகால அரசியல் வரலாற்றில் ஒரேயொரு முதல் முஸ்லிம் தொகுதி அமைப்பாளர்
4. எச்சந்தர்ப்பத்திலும் பணத்திற்கோ பதவியிற்கோ விலை போகாதவர்.
5. தளராத மனவுறுதியும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்கவர்
6. அத்துடன் எம்மால் முன் வைக்கப்பட்ட பின்வரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டமை.
நிபந்தனைகள்:
1. அவர் பாராளுமன்றத்திற்க்குத் தெரிவு செய்யப்படும்; பட்ச்சத்தில் நமது முழு மாவட்டத்தையும் சமமாக பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மாவட்ட முஸ்லிம் மத்திய குழுவொன்று உருவாக்கப்படுதல்.
2. இக்குழு மார்க்க அறிவில் தேர்ச்சியும், மார்க்கப்பற்றும், சமூக உணர்வும், சேவை மணப் பாண்மையும், தியாக சிந்தனையும் கொண்ட மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோர்களைக் உள்ளடக்கியிருத்தல்;.
3. தேவைக்கேற்ப தொகுதி, பிரதேச, கிராமிய மட்டத்திலான கிழைகளும் ஸ்தாபிக்கப்பபடல்.
4. பிரதிநிதி எச்சந்தர்ப்பத்திலும் அவரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு கட்டுப்படாது இக்குழுவின் முடிவின்படியே செயல்படுதல்.
5. மத்திய குழு எச்சந்தர்ப்பத்திலும் அல்குர்ஆன், அல்-ஹதீஸ{க்கு மாற்றமில்லாத வகையில் நீதியானதும் நேர்மையானதுமான முடிவுகளை எடுத்தல்.
முக்கிய குறிப்பு:
நமது மாவட்டத்தில் மொத்தம் 636733 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுள் முஸ்லிம் வாக்காளர்கள் 8.4மூ விகிதம் ஆகும் இது சுமார் 53740; வாக்காளர்கள் என கொள்ளலாம். இந்த 53740 வாக்காளர்களில் நூற்றுக்கு 80 விகிதம் வாக்களிக்கப்பட்டாலும் சுமார் 42992 பேர் வாக்களிப்பார்கள் இந்த 42990 பேர்களும் பிரிந்து செல்லாது ஒன்றுபட்டு ஒட்டு மொத்தமாக தங்களது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்ச்சியின் யானைச் சின்னத்திற்கும் அதில் போட்டி இடும் எமது வேட்ப்பாளர் மாகானசபை உறுப்பினர் ஆசிரியர் பி. சுஹீது அவர்களின் இலக்கமாகிய இலக்கம் 10 ற்க்கும் வழங்குவதன் மூலம் நமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் பிரதிநித்துவத்தினை உறுதி செய்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.
தேர்தல் விழிப்பூட்டல் மற்றும் வழிகாட்டலுக்கான முஸ்லிம் ஒன்றியம்
அனுராதபுர மாவட்டம்.
தொடர்புகளுக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்- ஜே.பி
தொ.பே. 0767221243