திங்கள், 3 ஜூன், 2019

முஸ்லிம் தேசிய ஒற்றுமை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்னாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறோம்.

முஸ்லிம் தேசிய ஒற்றுமை

இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக்  கொள்ளாதீர்கள்; ஏனெனில் (அவ்வாறு முறண்பட்டுக்  கொண்டால்) நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; எனவே (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல்-குர்ஆன்: 8: 46)

சமூக ஒற்றுமையின் அவசியமும் அதன் அவசரத் தேவையும்.

பல தசாப்த்தங்களாக நம் சமூகத்தின் மத்தியிலே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மிக முக்கிய விடயம்ää அதுதான் சமூக ஒற்றுமையின் அவசியமும் அதன் அவசரத் தேவையும்.

இது வரலாற்றில் என்றும் இல்லாத அளவு அண்மைக்காலமாக மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டு வருகின்றது. என்றாலும் இன்றளவும் செயல் வடிவம் பெற முடியாத வெறும் பேசுபொருளாகவே அது இருந்து கொண்டிருக்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய கசப்பான உண்மையே. இதற்கான பல முக்கிய காரணங்கள் கூறப்பட்டாலும் பின்வரு காரணிகளை மிக முக்கியமான காரணிகளாகக் குறிப்பிடலாம்

1. அவ்வப்போது கால சூழ்நிலைகளுக்கேற்ப அரசியல்வாதிகளும் ஆண்மீகப் பிரிவுகளும் தங்கள் கொள்கைகளைப் பலப்படித்திக் கொள்ளும் குறுகிய நோக்கத்திற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தி வந்தமை

2. அவ்வப்போது எங்காவது முஸ்லீம்களுக்குப் பிரச்சினைகள் வரும் போது மட்டும் பேசப்பட்டு அதன் பிறகு வெகு விரைவில் அதனை மறந்து விடுவது

3. நமது சிவில் சமூகம் இது அரசியல்வாதிகள் அல்லது சமூக இயக்கங்களின் வேலை என்றெண்னி சமூகப் பொறுப்பிலிருந்து விலகி இருத்தல்.

இந்நிலையில் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசியல் மற்றும் ஆண்மீகப் பிரிவுகளுக்கப்பால் சென்று அவை அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் ஒரு சிவில் தலைமையை உருவாக்கி அனைத்துத் தரப்பினர்களும் அதன் அடிப்படையில் செயல் பட்டால் மட்டுமே தவிர முஸலீம்களின் தேசிய ஒருமைää தலைமை என்பது அத்தனையும் அசாத்தியமானதே.

இதன் பொருள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்ச்சியின் கீழ் வர வேண்டும் என்பதோ அல்லது அரசியலைத் துறக்க வேண்டும் என்பதோää இயக்கங்களை இல்லாது போகச் செய்ய வேண்டும் என்பதோ அல்லää மாறாக அவர்கள் எப்போதும் போல் அவரவர் விரும்பிய கட்ச்சிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கு தன்னால் ஆன பணிகளை செய்வார்கள்.

அவ்வாறே இஸ்லாமிய இயக்கங்களும்; அவரவர் விரும்பிய இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறும் வகையிலான இஸ்லாமிய அகீதா எனும் அடிப்படைக் கொள்கைக்கு முறன்படாத எந்தவொரு பிரிவையும் சார்ந்திருந்து தேசிய முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்படாதவாறு தங்களது பணிகளை சமூகத்திற்குச் செலுத்துவார்கள்.

அவ்வாறின்றி ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கும் கட்ச்சிதான் சிறந்தது அனைவரும் அதனைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது தான் சார்ந்திருக்கும் இயக்கம்தான் சரியானது ஏனைய அனைத்தும் வழிகேடு எனவே அனைவரும் எம்மோடுதான் ஒன்றிpனைய வேண்டும் என்றோ வாதித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக உலகம் அளியும் வரை நம் சமூகத்தை ஒன்றினைக்க முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக ஆகிவிடுவோம்;. 

எனவே ஒவ்வொரு தனிமனிதனும்ää இயக்கங்கள்ää அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் இதனைத் தங்களது தார்மீகக் கடமை என்பதனைப் புறிந்து ஏற்று செயல்பட அல்லாஹ்விக்காக முன் வருதல் இன்றைய காலத்தின் கட்டாயக் கடமையாகும்.

ஆகவே எம்மாhல் முடியுமான எமது சக்திக்குட்பட்டக் கடமையைச் செய்து அல்லாஹ்விடம் எமது பொறுப்பிலிருந்து விடுபடும் வகையில் நம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இஸ்லாமிய இயக்கங்கள்ää தொண்டு நிறுவணங்கள்ää அறிஞர்கள்ää சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் போன்றோர்கள் ஒன்றிணைந்து உளத்தூய்மையுடன் பணியாற்றி தங்கள் கடமையையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதமின்றி உடனடியாக செயல்பட முன்வருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் தாங்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்களையும்ää அறிவுரை ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

முனாப் நுபார்தீன்.
தொடர்புகளுக்கு வட்சப் : 0715654580

சனி, 1 ஜூன், 2019

முஸ்லிம்களின் முன்னுதாரணம்

முஸ்லிம்களின் முன்னுதாரணம்
இலங்கையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கொல்லப்பட்ட அல்லது தற்கொலைத் தாக்குதல் நடாத்தி உயிர் நீத்த ஒரு இனரீதியான தீவிரவாதக் குழுவின் தலைவன் மற்று அதன் உறுப்பினர்கள் குறித்த இனத்தவர்களால் காலாகலமாக மாவீரர்களாக மதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனை பார்கின்றோம்
உதாரணம் மக்கள் விடுதலை முன்னனியின் இஸ்தாபகர் ரோகன ரோகன விஜேவீர அவர்களும் அதன் உறுப்பினர்களும்
தமிழீள விடுதலை; புலி தலைவர் பிரபாகரன் அவர்களும் அதன் உறுபப்பினர்களும்
இதே வேளை; பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கொல்லப்பட்ட மற்றும் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி உயிர் நீத்த தீவிரவாதக் குழுவின் தலைவன் சஹ்ரான் மற்று அதன் உறுப்பினர்கள் அனைவiரையும் முற்று முழுதாக நிராகரித்த ஒரே சமுகம் முஸ்லிம்கள்தான் இதுவே முஸ்லிம்கள் இனவாதம்ää தீpவிரவாதம் மற்றும் யங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதற்கான சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

வியாழன், 25 ஏப்ரல், 2019

கறைபடிந்த வரலாறு


அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


கறைபடிந்த வரலாறு
இலங்கை முஸ்லிம்களின் வைர வரிகளால் வரையப்பட்டிருந்த நீண்டகால வரலாற்றில் கடந்த 21.04.2019 ம் திகதி உயிர்த்த ஞாயிரன்று முஸ்லிம் பெயர்தாங்கிகளால் அரங்கேற்றப்பட்ட ஒரு மிருகத்தனமான கொடூரச் செயலின் காரணமாக மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ மன்னிக்கவோ முடியாத மிகவும் மோசமான கறைபடிந்ததொரு வரலாறு பதியப்படுகின்றது.
இந்த பெயர்தாங்கிகளின் மிலேச்சத்தனமான பாசிச செயலுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதனைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த ஈனச்செயலினை வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
இப்படியான தீவிரவாத> பயங்கரவாதச் செயலினை ஒரு போதும் இஸ்லாம் அனுமதித்தது கிடையாது. இப்படியான செயல்களில் ஈடுபடுவோரை இஸ்லாம் ஒருபோதும் ஒரு முஸ்லிமாக ஏற்றுக் கொள்வதுமில்லை. முஸ்லிம் பெற்றார்களுக்கு அல்லது முஸ்லிம் சமுகத்தில் பிறந்ததனாலோ அல்லது இஸ்லாமிய பெயரை வைப்பதனாலோ ஒருவன் முஸ்லிமாக முடியாது. முஸ்லிம் அல்லாத பெற்றார்களுக்கு அல்லது முஸ்லிம் அல்லாத சமுகத்தில் பிறந்த போதிலும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட பெயரை வைத்துக் கொண்ட போதிலும் ஒருவன் இஸ்லாமிய கொள்கையினை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வரையறைக்குள் தனது வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றானோ அவன் ஒரு முஸ்லிம் ஆவான் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைபாடு.
இத்தகைய மனிதாபிமானமற்ற மிருகத்தனமான அரக்கர்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மிகக்கடுமையான தண்டனையினை வழங்குதல் வேண்டும். இப்படியான அயோக்கியர்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற தண்டனை பின்வருமாறு அமையும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல் அல்லது தூக்கிலிடப்படுதல் அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் : 5:33)
இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய அரசால் நடாத்தப்படுகின்ற புனிதப் போராகிய யுத்த நேரத்தில்கூட மதஸ்தலங்கள் மதத்தலைவர்கள் வயோதிபர்கள் பெண்கள் சிறுவர்கள் விளை நிலங்கள் கனி மற்றும் நிழல் தரும் மரங்கள் ஆகியவற்றுக்குக்கூட ஒரு சிறு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று வழிகாட்டுகின்ற மகத்தான மார்க்கம்தான் இஸ்லாம்.
அத்துடன் இவ்வாறன புனிதப் போரைக்கூட ஒரு தனிமனிதனோää குழுவோ அல்லது இயக்கமோ தனது கையில் எடுத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதியழிப்பது கிடையாது அது ஒரு இஸ்லாமிய அரசின் பொறுப்பாகும். இஸ்லாமிய அரசொன்று இல்லாத போது யார் மீதும் புனிதப் போர் புரிய இஸ்லாம் அனுமதியழிப்பது கிடையாது. 
இந்நிலையில் இப்படியான மிக கீழ்தரமான செயல்களை இவர்கள் இயக்கரீதியாக செய்வதற்கான பிரதான காரணம் நம் சமூகத்தின் ஆண்மீக மற்றும் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமேயாகும் என்றால் அது மிகையாகாது. மேற்படி நமது தலைமைகள் இரண்டும் நம் சமுகத்தை சரியான முறையில் வழிநடாத்தி இருந்தால் இப்படியான இழிநிலைக்கு நம் சமுகம் தள்ளப்பட்டிருக்காது.
எனவே நமது ஆண்மீக மற்றும் அரசியல் தலைமைகள் நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தல் மிகவும் அவசியமாகும். அத்துடன் நமது தஃவா இயக்கங்கள் தங்களது பணியை தஃவாவுடனும் சமுகப்பணிகளுடனும் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதும் மிகவும் அவசியமாகும்.
அடுத்ததாக இஸ்லாத்தின் பெயரை வைத்துக் கொண்டு யாரெல்லாம் இப்படியான தீவிரவாத செயலில் ஈடுபடுகின்றார்களோ அப்படிப்பட்வர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு நம்மைச் சாரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
இப்படிப்பட்ட அயோக்கியர்களின் அரக்கத்தனமான செயல்களின் காரணமாக நம் வருங்கால சந்ததியினர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது யாரும் அறிந்ததே.
ஆகவே நம் வருங்கால சந்ததியினர்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இயக்கவெறிபிடித்த இனவெறியர்களை இனங்கண்டு அவர்களை நம் சமூகத்திலிருந்து வெயியேற்றுவதன் மூலம் நம் சமூகக்கட்டமைப்பை தூய்மைப்படுத்திக் கொள்ள முன்வருவோமாக.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்-ஜே.பி.
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.

திங்கள், 25 மார்ச், 2019

குழப்பம் மகிழ்ச்சியை வேட்டையாடுகிறது.


குழப்பம் மகிழ்ச்சியை வேட்டையாடுகிறது.

குழப்பம் எந்தப் பயனையும் தருவதில்லை. ஆனால் அது உனது ஆன்மாவில் சோகத்தை உருவாக்குகிறது. உனது உடம்பில் நோயைப் பதிக்கிறது. உனது ஆன்மாவுக்கு தொடர்ந்து கவலையைக் கொண்டு வருகிறது. எவன் ஒருவன் இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பவை யாவும் அல்லாஹ்வின் நியதிக்குட்பட்டது, அது நிகழுமுன் அதனை அல்லாஹ் எழுதி விட்டான் என அறிந்து கொள்கிறானோ அவன் அவநம்பிக்கை, கைசேதத்தைக் கொண்டுவரும் பிரதிகூலமான குழப்பத்தைக் காண்பதில்லை.
அதே நேரம் மனிதன் விளைவுகளை அடைந்து கொள்ள இட்டுச் செல்லும் காரணிகளை மேற்கொள்ள கட்டளை இடப்பட்டுள்ளான். அவன் நேரடித் தொடர்பாளன். இம்மை மறுமை செயல்களுக்கும், இம்மை மறுமையில் கிடைக்கும் பயன்களுக்கும் பொறுப்பாளனாவான். நடவடிக்கையை விட்டு விட்டு இறை நியதியை காரணங்காட்டுவது சரியானதல்ல. எனினும் திருப்தி கொண்டு நியதிகளை வகுத்தவனிடம் கூலியை எதிர்பார்க்கலாம். இந்த நம்பிக்கை மனிதனை சமநிலை உடையவனாகவும் மன அமைதி பெற்றவனாகவும் மகிழ்சியுடையவனாகவும் வினைத்திறன் உடையவனாகவும் ஆக்குகிறது.

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...