சனி, 3 மே, 2014

சாது மிரண்டால் காடு கொள்ளாது.


சாது மிரண்டால் காடு கொள்ளாது.

ஞானசார தேரர் அவர்களுக்கு

நேர் வழியில் இருப்பவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

பௌத்த மதத்தைப் பாதுகாக்குகின்றோம் எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு தாங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயப்படுவதற்கான காரணம் என்ன? என்றோ ஒரு நாள் நிச்சயமாக அனைத்து மக்களும் இஸ்லாத்தின் உண்மைத் தன்மையினை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் எனும் உங்கள் அடிமனதிலிருக்கும் உண்மையான நம்பிக்கையா? அல்லது வெகு விரைவிலேயே தங்களது சாயம் வெழுத்து வீடும் என்ற அச்சமா?

உண்மையைச் சொல்லப் போனால் இனவாத பெரும்பாண்மையினர்களாகிய உங்களுக்கு மத்தியில் மிகவும் சிறுபாண்மையாக வாழுகின்ற நாங்கள்தான் உங்களுடைய அராஜகங்களைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டும். நிலமை இவ்வாறிருக்க நீங்கள்தான் அந்தோ பௌத்தம் அளியப் போகின்றதே என்று நாளாந்தம் கூக்குரலிடுகின்றீர்கள். காரணமதான்; என்ன?

பௌத்த மதம் அளிந்து கொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு உங்களைப் போன்ற வேசதாரிகள்தான் காரணமே தவிர வேறு யாரும் அல்லர். பேளத்த துறவி எனும் வேசத்தைத் தரித்துக் கொண்டு கௌதம புத்தர் அவர்களின் போதனைகள் அத்தனையையும் ஒட்டு மொத்தமாகக் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்களா? நீங்களா? 

நாம் எவ்வாறு எமது உயிரிலும் மேலான எமது நபி (ஸல்) அவர்களை மதிக்கின்றோமோ அதில் எந்தக் குறையும் இல்லாது அதே அளவு கௌதம புத்தர் அவர்களையும் மதிக்கின்றோம் அவரின் அறநெறிப் போதனைகளை உங்களை விட நாம்தான் பாதுகாத்து வருகின்றோம். 

நாட்டில் எத்தனை ஆயிரம் சாராயக் கடைகள் சூதாட்ட நிலையங்கள் விபச்சார விடுதிகள் இன்னும் இது போன்ற எத்தனை எத்தனையோ அநாச்சார நிலையங்கள் இவை அனைத்தும் பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கதானே செய்கின்றார்கள் ஒரேயொரு சாராயக்கடையையாவது ஒரு இஸ்லாமியன் செய்கின்றான் என்று உங்களால் காட்ட முடியுமா. 

கௌதம புத்தர் அவர்கள் போதித்த பஞ்ச சீலங்களைப் பாதகாப்பது நாங்களா? நீங்களா? நீங்கள் செய்வதெல்லாம் அவருடைய புனித உடையைத் தரித்துக் கொண்டு முற்று முழுதாக அவரின் போதனைகளை மீறி நடப்பதுதான். இந்த உங்களது செயல் நயவஞ்சகத்தனம் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?.அந்தப் புனிதரின் உடையைத்தரித்துக் கொண்டு அந்தப்புனித உடையைக் கலங்கப்படுத்த வேண்டாம் என்று வேண்டுவதோடு நீர் அந்த உடையை உடுப்பதற்கு எந்த வகையிலும் தகுதி பெறமாட்டீர் என்பதனையும் ஞாபகப் படுத்திக் கொள்கின்றேன்.

அத்துடன் நீங்கள் அடிக்கடி நாங்கள் இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களக்கோ எதிரான எந்த செயலையும் செய்தது இல்லலை என்று புலம்முகின்ற அதே நேரம் வட்டரக்க விஜித்த தேரர் எங்களை முஸ்லிம்களிடம் காட்டிக் கொடுக்கின்றார் என்றும் கூறுகின்றீர். நீங்கள்  இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களக்கோ எதிரான எந்த செயலையும் செய்யவில்லை என்றால் வடரக்க விஜித்த தேரர் எதைக் காட்டிக் கொடுத்தார் என்று சொல்ல வருகின்றீர்கள்? உங்களுடைய இந்த புலம்பல் உங்கள் வடிகட்டிய முட்டாள் தனத்தின் வெளிப்பாடு என்பது இன்னுமா புறியவில்லை? 

அறிந்து கொள்ளுங்கள்  

சாது மிரண்டால் காடு கொள்ளாது. 

சோனி நினைத்தால் காவி  நிலைக்காது. 

இஸ்லாம் எமகக்கு சாந்தியையும் சமாதானத்தையும் பொறுமையையும் அமைதியையும்தான் போதிக்கின்றது. ஆதலால்தான் நாம் பொறுமை காக்குகின்றோம் எமது இந்தப் பொறுமையை கோளைத்தனம் என்று முடிவு செய்தால் அது உங்களின் முட்டாள் தனத்தின்; அதி உச்சகட்டமாகும் அதற்கு நாம் பொறுப்பல்ல.  

அடக்கமுடையார் அறிவிலார் என்றென்னி நடக்க வெண்டாம் மடை நடுவினிலே ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு.

இந்த அற்பமான உலகுக்கு முன்னால் மரணத்தையும் மறுமை வாழ்வையும் இறுதி இலக்காகக் கொண்டு வாழுகின்ற ஒரே சமூகமடா நாம். அந்த உயர் வாழ்வை அடைந்து கொள்ள வேண்டும் என்றால் அது  மரனித்தால் தான் முடியும் என்ற காரணத்தினால் எந்நேரமும் மணமுவந்து மரணத்தை வரவேற்று எதிர்பார்த்திருக்கும் ஒரேயொரு சமூகம் உலகிலேயே முஸ்லிம் சமூகம் ஒன்றுதான் என்பது அறிவுள்ள ஒவ்வொருவனுக்கும் தெரிந்திருக்கும். உங்களைப் போன்று மரணத்தைக் கண்டு வெருண்டோடும் கழுதைக் கூட்டம்; அல்ல நாம் என்பதை புறிந்து கொள்ளவும்.

மீண்டும் மீண்டும் எம்மைச் சீண்டிப்பார்க்க நினைத்தால் அது உங்கள் அஸ்தமன காலம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான அடையாளமேயாகும் என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

நாம் இருப்பது கண்ணாடி மாளிகையல்ல ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கோட்டையாகும் என்பதனை வெகு விரைவில் புறிந்து கொள்ள்வீர்கள்.

முனாப் நுபார்தீன்


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...