அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்னாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறோம்.
சகோதரத்தும் + ஒற்றுமை = தலைமைத்துவம்.
அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தமாகும், அவனது ஸலாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் அன்புக் குடும்பத்தினர்கள், ஆருயிர்த் தோழர்கள், அவர் வழியில் தொடர்ந்தவர்கள் மற்றும் மறுமை வரை அவர் வழியில் வாழ்பவர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும் என்று வேண்டியவனாகத் தொடர்கிறேன்.
பல தசாப்த்தங்களாக நம் சமூகம் வேண்டி நிற்க்கும் மிக முக்கிய ஒரு விடயம், அதுதான் சகோதரத்துவம் சமூக ஒற்றுமை பக்க சார்பற்ற பொதுவான தலைமைத்துவம். இது வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இன்று மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினர்களது ஆதங்கமும் ஏக்கமும் எந்த வகையிலேனும்; இவற்றை அடைந்தே தீர வேண்டும் என்பதாகவே இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
என்றாலும் இன்றளவும் எம்மால் அதற்க்கு செயல் வடிவம் கொடுக்க முடியவில்லை என்பது மிகப்பெரும் துர்அதிஸ்டமேயாகும். எனவே இதன் பிறகும் அது வெறும் பேச்சுப் பொருளாக இருப்பதனை அனுமதிக்க முடியாது என்ன வில கொடுத்தேனும் அதனைக் கட்டியெழுப்பியேயாக வேண்டும்.
நமக்கு மத்தியில் தேசிய சகோதரத்தும் ஒற்றுமை மற்றும் பொதுத் தலைமைத்துவம் ஆகிய இந்த மூன்றையும் நாம் கட்டியெழுப்பியேயாக வேண்டும் என்பதில் நாமனைவரும் கருத்தொருமித்துள்ளோம் என்றே கருதுகின்றேன்.
அப்படியாயின் அவற்றை நாம் அடையப் பெறுவதற்கு மனிதர்களால் எவ்வித அடிப்படையும் இல்லாது முன்மொழியப்பட்டுள்ள கொள்கைகள் போட்ப்பாடுகள் சித்தாந்தங்கள் ஆகியவற்றைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்காது பின்வரும் அல்-குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ள செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்துதல் வேண்டும்;
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன்: 49: 10-13)
மேற்படி மறை வசனங்களில் நம் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் சகோதரத்துவத்தினைக் கட்டியெழுப்புவதற்க்கான வழிகாட்டல்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவ்வாறே சகோதரத்துவ சகவாழ்வுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயற்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன எனவே இந்த வாண்மறை வழிகாட்டலில் சகோதரத்தவத்தினைக் கட்டியெழுப்புவதன் ஊடாக மாத்திரமே நாம் சமூக ஐக்கியத்தினையும் தலைமையினையும் அடைய முடியும் ஆகவே மேற்படி வசனங்களுக்கு இசைவாக எமது செயற்திட்டங்களை நாம் பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
1. ஒற்றுமைக்கும் தலைமைத்துவத்திற்க்கும் முன்னதாக நமக்கு மத்தியில் அதிகளவில் நாளுக்கு நாள் சரிந்து சென்று கொண்டிருக்கும் நமது சகோதரத்தவம் கட்டி எழுப்பப்படுதல் அவசியமாகும் இது சாத்தியமானால் ஏனைய இரண்டும் தாமாகவே உருவாக்கம் பெற்று விடும்.
2. இந்த சகோதரத்தவத்தினைக் கட்டி எழுப்புவதற்க்குத்; தடையாக இருக்கும் காரணிகள் என்ன என்பது பற்றி இனங்கண்டு அவற்றை முற்றாகக் கழைதல் வேண்டும்.
3. ஒவ்வொரு தனிமனிதனும், இயக்கங்கள், அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் முடிந்த வரை நம் சகோதரத்துவத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் அரிக்கைகள் விமர்சனங்கள் போன்ற அத்தனை விதமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
4. இப்பணி அரசியல் தலைவர்களுக்கு அல்லது சமயத் தலைவர்களுக்கு மாத்திரம் கடமையான ஒன்றல்ல. மாறாக நம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களுக்கும் கடமையாகும் என்பதில் நாம் உடன்பாட்டுக்கு வருதல் வேண்டும்.
5. இப்பணிக்கு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வித வேறுபாடும் இன்றி தத்தமது சக்திக்குட்பட்ட வகையிலான தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதற்க்கு முன் வரல் வேண்டும்.
6. அனைத்து விதமான அரசியல் மற்றும் சமயப் பிரிவுகளுக்கு வெளியே நின்று என்றாலும் அவை அனைத்துத் தரப்பினர்களையும் உள்வாங்கிய வகையிலும் எவ்வித பக்கசார்பும் அற்ற நிலையிலும் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் மட்டும் செயல் படும் வகையிலான செயற்திட்டங்களை வகுத்துச் செயல் படுதல் வேண்டும் .
7. ஒவ்வொரு தனிமனிதனும், இயக்கங்கள், அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் தங்களுக்கு மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து நின்று இதனைத் தங்களது தார்மீகக் கடமையாக ஏற்று செயல் படுதல் வேண்டும்.
8. ஒவ்வொரு தனிமனிதனும், இயக்கங்கள், அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் தங்களுக்கு மத்தில் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணித்து அனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் பொதுவான கொள்கையின் பால் இணக்கப்பாட்டுக்கு வருதல் வேண்டும்.
9. அனைத்துத் தரப்பினர்களும் தரத்தினர்களும் ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ளும் வகையிலான ஒரு சமூக கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.
எனவே எமக்கு மத்தியில் சகோதரத்துவமும் ஒற்றுமையும் அத்துடன் பக்கசார்பற்றதும் பொறுப்புனர்வு மிக்கதுமான தலைமைத்தவமும் கட்டி எழுப்பப்பட்டாக வேண்டும் என்பதில் உண்மையாளர்களாக இருப்பவர்கள் மேற்படி இந்த செயற்திட்டங்களை உடனடியாக நடை முறைப் படுத்துவதற்க்கு தங்களால் முடிந்த பங்களிப்புகளைச் செய்ய முன் வரல் வேண்டும்.
والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين والحمد لله ربالعالمين
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
ஆகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக