நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 06
தீர்வு :
அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும் திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)
மேற்படி வசனத்தில் நாம் நமது பகைவர்களான இறை மறுப்பாளர்களை அச்சமடையச் செய்யும் வகையில் எமது சக்திகளை எந்நேரமும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த சக்திகளுள் நாம் முதலாவது ஆயத்தம் செய்ய வேண்டிய சக்திகள் முறையே علم எனும் மார்க்கக் கல்வி إيمان எனும் இறை விசுவாசம் تقوى எனும் இறையச்சம் أخوة எனும் சகோதரத்துவமாகும்.
இவற்றுள் முதலாவதாக நாம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய விடயம் மார்க்கக் கல்வியாகும். இன்று எமக்கு மத்தியில் காணப்படுகின்ற இந்த சீரற்ற சடவாதக் கல்விக் கொள்கை உடனடியாக மாற்றபடுதல், அல்லது திருத்தி அமைக்கப்படுதல் அவசியமாகும். இந்த முறையற்ற உலகாதாய நோக்கத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள கற்பித்தல் கலாச்சாரம்தான் இன்றைய கருத்து முறண்பாடுகளுக்கும் பிரிவினைவாதங்களுக்கும் வித்திட்ட முதற்காரணமாகும்.
நாம் கற்கின்ற மற்றும் கற்றக் கொடுக்கின்ற இந்த கல்வி ஒரு பலமிக்கதும் உறுதியானதுமான ஈமானிய சமூகக் கட்டமைப்பை உத்தரவாதப்படுத்தும் கல்வியாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்"" (அல-குர்ஆன் :19 : 2)
இதன் பொருள் வேதத்தைத் தெளிவாகக் கற்று அதில் உறுதியாக இருத்தல் வேண்டும் என்பதாகும்
மார்க்கக் கல்வி பின்வரும் நான்கு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பது அவசியமாகும்.
1. அல்லாஹ் அவனது தூதர் அவனது மார்க்கம் பற்றிய அறியாமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் ஊடாக அறிவார்த்தரீதியாக மற்றும் உறுதியாக விசுவாசித்தல்.
2. தான் கற்றதை முதலில் தனது வாழ்வில் நடைமுறைப்புடுத்துதல்
3. அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தல் அதாவது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல்
4. கல்வியைக் கற்றல் அதன்படி அமல் செய்தல் மற்றும் அதனைப் பிறருடன் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற முதல் மூன்று நோக்கங்களையும் நடைமுநைப் படுத்துவதில் பொறுமையைக் கடைப்பிடிப்பதோடு அதனை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பிரச்சாரம் செய்தல்.
இத்தகய கல்வியைத் தேடிக்கற்றுக் கொள்வது ஒவ்வொரு இஸ்லாமியன் மீதும் தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையாகும்
அல்லாஹ் கூறுகின்றான் : ஆகவே நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக (அல்-குர்ஆன் : 47: 19)
நபி (ஸல்) அவாகள் கூறினார்கள் : மார்க்கக் கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். (நூல்: அஹ்மத்)
மேற்கூறப்பட்ட நான்கு அடிப்படை கொள்கைகளை இலக்காகக் கொண்டுதான் இஸ்லாமிய கல்விக் கொள்கை நகர்த்தப்படல் வேண்டும். இவற்றைக் கருத்தில் கொள்ளப்படாதக் கல்வி நிச்சயமாக மனிதனை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ் கூறுகின்றான் : காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும்.
1. எவர்கள் ஈமான் கொண்டு
2. ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து.
3. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து.
4. மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) (அல்-குர்ஆன் : 103: 1- 3.)
கல்வியினுடைய முதலாவது நோக்கம் அல்லாஹ் அவனது தூதர் மற்றும் அவனது மார்க்கம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளுதல்.
அல்லாஹ்வைப் பற்றி அறிதல்
அல்லாஹ் கூறுகின்றான் : ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக (அல்-குர்ஆன் : 47: 19)
அவர் நெருப்பின் அருகே வந்த போது, பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து ''மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!"" என்று அழைக்கப்பட்டார். (அல்-குர்ஆன் : 28: 30)
''நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல்-குர்ஆன் : 28: 30)
மார்க்கம் பற்றிய அறிதல்
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. (அல்-குர்ஆன் : 3: 19)
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்-குர்ஆன் : 3: 85)
நபியைப் பற்றிய அறிதல்
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்-குர்ஆன் : 3: 44)
முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (அல்-குர்ஆன் : 33: 40)
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான். (அல்-குர்ஆன் : 48: 29)
கல்வியினுடைய முதலாவது நோக்கம் ஈமான் எனும் இறைவிசுவாசம் வலுப்பெறல்

வாண்மறையறிவு ஈமானை அதிகரிக்கச் செய்யும்.
அல்லாஹ் கூறுகின்றான் : உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்-குர்ஆன் : 8: 2)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், ''இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?"" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள். (அல்-குர்ஆன் : 9: 124)
வாண்மறையறிவு இறையச்சத்தை ஏற்படுத்தும்.
இன்னும. அல்லாஹ் கூறுகின்றான் : இவ்வாறே மனிதர்களிலும் ஊர்வனவற்றிலும் கால் நடைகளிலும் பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்-குர்ஆன் : 35: 28)
வாண்மறையறிவு சிந்தனையைத் தூண்டும்.
இன்னும. அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர்களாகிய அறிஞர்களைத் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் : 29:41 - 43. )
வாண்மறையறிவு கருத்துவேறுபாட்டைப் போக்கி விடும்.
இன்னும. அல்லாஹ் கூறுகின்றான் : அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (அல்-குர்ஆன் : 3: 7)
வாண்மறையறிவு நீதியை நிலைநாட்டச் செய்யும்.
இன்னும. அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் நீதியை நிலை நாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற் குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிஞர்களும்; (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல்-குர்ஆன் : 3: 18)
வாண்மறையறிவு பெற்றோர் ஈமாண்கொண்டோரில் பிரத்தியேகமானவர்களே
இன்னும. அல்லாஹ் கூறுகின்றான் : எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவோராகவும் ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (அல்-குர்ஆன்: 4: 162)
மேற்படி இந்த பண்புகள்தான் கல்விமான்களின் அனிகலனாக இருக்க வேண்டும். இந்த தன்மைகளை ஏற்படுத்தாத கல்வி கல்வியே அல்ல. அவ்வாறே இந்த பண்புகளுக்கு அப்பாற்பட்ட கல்வியியலாளர்களை இஸ்லாம் அறிஞர்களாக அங்கிகரிப்பதும் இல்லை.
அல்லாஹ் கூறுகின்றான் : (அதற்கு) அவர் ''என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால் நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்"" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். (அல்-குர்ஆன்: 12: 33)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
02-05-2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக