சனி, 24 அக்டோபர், 2015

நரகில் பிரவேசிக்கச் செய்யும் ஒரு வார்த்தை

நரகில் பிரவேசிக்கச் செய்யும் ஒரு வார்த்தை
بسم الله الرحمن الرحيم 

قال النبي صلى الله عليه وسلم :

( إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لَا يَرَى بِهَا بَأْسًا يَهْوِي بِهَا سَبْعِينَ خَرِيفًا فِي النَّارِ (متفق عليه


அங்கும் இங்கும் இருந்து அறிவிலிகள் சிலரால் எமக்குக் கடத்தப்படும் தவறான சிலத் தகவல்களை நாம் சரியாக ஆராயாமல் பிறரைப்பற்றிய எத்தனை வகையான தவறான முடிவுகளுக்கு வந்து விடுகின்றோம்.
அவைகள் சமூகத்தில் எத்தனைவிதமான பாதிப்புக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பது பற்றி எல்லாம் அந்த அறிவிலிகள் சிந்திக்கத் தவறிவிடுகின்றார்கள்.

1. எத்தனையோ குடும்பங்களைப் பிரித்து விடுகின்றன.
2. எத்தனையோ நண்பர்களை பகைவர்களாக்கி விடுகின்றன.
3. எத்தனையோ உறவுகளைத் துண்டித்து விடுகின்றன.
4. எத்தனையோ நெருக்கமானவர்களைத் தூரமாக்கி விடுகின்றன.

இப்படியாக இன்னும் எத்தனை எத்தனையோ வேண்டாத விபரீதங்களை நம் சமூகத்தில் அரங்கேற்றி விடுகின்றன.

இத்தகையவர்களைப் பற்றித்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் :
“ஒரு மனிதன் ஒரு வார்த்தையைப் பேசி விடுகின்றான் அதனைப்பற்றி அவன் கணக்கில் கொள்வதில்லை அதன் மூலம் அவன் எழுபது ஆண்டுகள் நரகில் புரட்டப்படுவான்” (நூல் : புகாரி, முஸ்லிம்)

கவனயீனமாகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தைக்குத்ததான் எழுபது ஆண்டுகள் நரக வேதனை அப்படியாயின் சதா இதனையே திட்டம் போட்டுப் பேசித்திரிபவர்களின் நிலையைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

முனாப் நுபார்தீன்


வியாழன், 1 அக்டோபர், 2015

அசாத் சாலி விவகாரம் சமூகம் எடுக்க வேண்டிய முடிவும் அசாத் சாலி எடுக்க வேண்டிய முடிவும்


அசாத் சாலி விவகாரம்
சமூகம் எடுக்க வேண்டிய முடிவும் அசாத் சாலி எடுக்க வேண்டிய முடிவும்

சமூகம் எடுக்க வேண்டிய முடிவு

விபச்சாரம் போன்ற சமூகவிரோதச் செயலினைத் தடுத்து தூய்மையானதொரு சமுதாயத்தினைக் கட்டியெழுப்பும் வகையில் இஸ்லாம் எந்த அளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது என்பதனை இதற்கு முன்னய எமது கட்டுரையில் விளக்கியிருந்தோம்.

இத்துனை தடைகளையும் தாண்டி ஒரு ஆனோ பெண்னோ விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; என்றால் நிச்சயமாக அவர்கள்; மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதில் இருகருத்திருக்க முடியாது.

ஆதலால்தான் உவைஸ் ஹாஜியாரின் மனைவியை அபகரித்துச் சென்ற அசாத் சாலியிற்கும் தனது கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய உவைஸ் ஹாஜியாரின் மனைவியிற்க்கும் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள திருமணத்திற்குப்பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகிய மரண தண்டனையை அனைவர் முன்னாலும் பகிரங்கமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகின்றோம்.

இதனை நாம் கூறும் போது சில சகோதரர்கள் நமது நாட்டில் மரணதண்டனை விதிக்கமுடியாது என்றும் பிறர் குறைகளைப் பெரிதுப்படுத்தக் கூடாது என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் நமது நாட்டில் மரண தண்டனை வழங்க முடியாது என்பது எமக்குத் தெரியாமல் இல்லை எமக்கு நாட்டுச் சட்டமா இஸ்லாமிய சட்டமா என்று வந்தால் நாம் இஸ்லாமிய சட்டத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் 

நம் நாட்டில் ஏனைய எந்த மதத்தினர்களுக்கும் வழங்கப்படாத பலதார மணம் போன்ற பிரத்தியேகச் சட்டங்கள் நமக்கு வழங்கப்பட்டே இருக்கின்றன இவ்வாறு நமது இவ்வுலக வாழ்வுக்குச் சாதகமாகவுள்ள சட்டங்களை அரசிடமிருந்து வாதாடிப்பெற முடிந்த நமக்கு ஏன் நமத மறுவுலுக வாழ்வுக்குச் சாதகமான சட்டங்களைக் கேட்டுப் பெறமுடியவில்லை என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? 

இந்த நாட்டில் நிறைவேற்றப்பட முடியுமோ முடியாதோ திருமாணமானவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அதற்குரிய இஸ்லாமிய தண்டனை என்னவென்று ஒருவர் கேட்டால் அதற்கான நமது பதில் என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெண்களுக்கு தீர்ப்பளித்து வழி ஏற்படுத்தி விட்டான். திருமணமாகாதவன், திருமணமாகாதவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை நூறு கசையடியும் ஒரு வருட காலம் நாடு கடத்துவதுமாகும். மேலும், திருமணம் ஆணவன், திருமணம் ஆனவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனை நூறு கசையடியும், கல்லெறிந்து கொல்வதுமாகும்' (அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)

இது தவிர வேறு பதில் உண்டா?

முகீரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “எனது மனைவியுடன் ஒரு மனிதனைக் கண்டால் நான் அவனை எனது வாழுக்குப் பதமாக்கிவிடுவேன் என்று ஸஅது பின் உப்பாதா (ரழி) அவர்கள் கூறினார்கள் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ஸகாபாக்களைப் பார்த்து ஸஅது அவர்களின் உரோசத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றீர்களா? ஏன்று கேட்டு விட்டு நான் அவரைவிட உரோசக்காரன் அல்லாஹ்வோ என்னைவிட உரோசக்காரனாவான் என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

இந்த ஒரு நபிவழிச் செய்தியே போதுமானதாகும் அசாதையும் அவரது கள்ளக்காதலியையும் கொலை செய்வதற்க்கு. ஏனெனில் மார்க்கச் சட்டம் பற்றித் தெளிவுபடுத்தப்பட வேண்டி இடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸஅது (ரழி) அவர்களின் நிலைப்பாட்டை சரிகாணுகின்றார்கள்.

ஏனெனில் ஒருவனுடைய மனைவி இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதானது மிகப்பெரும் குற்றமாகும் அது தனக்கும் தனது மார்க்கத்திற்க்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் மிகப்பெரும் கலங்கத்தினை ஏற்ப்படுத்தி விடுவதுடன் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான மன்னிக்க முடியாத மன்னிக்கக் கூடாத குற்றமாகும். 

ஆதலால்தான் அல்லாஹ் “மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்;” (அல்-குர்ஆன் : 24:2) என்று கூறுகின்றான். 

இந்த இடத்தில் நாம் ஒரு தலைப்பட்ச்சமாக சிந்திக்காது பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து சிந்திப்போமாக இருந்தால் இதன் பாரதூரம் எத்தகையது என்பது எமக்கு விளங்கும். தன்னுடைய மனைவியுடன் ஒருவனைக் கண்டாலே இந்த அளவு ஆக்ரோசம் வர முடியும் என்றால் ஒருவனுடைய மனைவியைத் தனியாக ஒரு வீட்டில் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் எந்த அளவு ஆக்ரோசமும் கோபமும் ஏற்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 

இப்படிப்பட்ட அயோக்கியர்களைத் தண்டிப்பதற்கு நான்கு என்ன ஒரு சாட்சியும் தேவைப்படாது அவர்களின் இந்த கீழ்தரமான நடத்தையே போதிய சான்றாகும். எனவே இவர்களிருவருக்கும் மரண தண்டனையே சமூகம் எடுக்க வேண்டிய தீர்மானமாகும்.

அசாத் சாலி எடுக்க வேண்டிய முடிவு

உண்மையில் அவர்கள் இருவரிடமும் ஓரளவேனும் ஈமான் இருந்தால் எவ்வாறு மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் தாமாக முன் வந்து தண்டனையைப் பெற்றுக்கொண்டார்களோ அவ்வாறே இவர்களிருவரும் தாமாக முன்வந்து தாங்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை பெற்றக்கொள்வதன் மூலம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றக்கொள்வதுடன் பெரும்பாண்மை சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தவரான என்னங்களையும் களைய முடியும்.

படிப்பினைக்காக மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் சம்பவத்தினை இங்கு தருகின்றேன்.

மாயிஸ் பின் மாலிக் (ரழி) என்ற ஒரு நபித்தோழர் மதீனாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்க்கை நடாத்தி வந்தார்கள் அப்படியான காலகட்டத்தில் ஒரு நாள் அன்சாரி பெண்ணொருவருக்கும் அவருக்கும் இடையில் எதிர்பாராவிதமாக தனிமையில் ஒரு சந்திப்பு ஏற்ப்பட்டு விடுகின்றது அப்போது ஒரு அன்னிய ஆனும் பெண்ணும் தனிமையாக இருக்கும் போது அவர்களுடன் மூன்றாம் நபராக சைத்தான் சேர்ந்து விடுகின்றான் எனும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு அமைய அவர்களிருவருடனும் சைத்தான் மூன்றாவது நபராக இணைந்து அவர்கள் இருவரதும் உள்ளங்களில் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஆசையை ஏற்ப்படுத்தி விடுகின்றான். ஈற்றில் இருவரும் தடுக்கப்பட்ட பெரும் குற்றமாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுகின்றார்கள்.

இந்த நிலையில் சைத்தான் அவரிடம் குடிகொண்டிருந்ததன் காரணத்தினாலும் அத்துடன் ஒருவன் விபச்சாரம் செய்யும் போது அவனிடமிருந்து அவனுடைய ஈமான் எனும் விசுவாசம் அகன்று விடுகின்றது எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றின் படியும் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு தான் செய்வது பெரும் குற்றம் என்பது விளங்காமல் போய் விடுகின்றது.

அதன்பிறகு சைத்தான் தனது வேலையை முடித்து விட்டு அவர்களிருவரையும் விட்டுப் பிரியவே மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் இறைவிசுவாசமும் இறையச்சமும் விழித்துக் கொள்கின்றன அப்போதுதான் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் தான் மிகப்பெரும் தவறொன்றை கொடிய பாவமொன்றைச் செய்து விட்டதாக உணர்கின்றார்கள் தன்னால் தனக்கும் தனது மார்க்கத்திற்க்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் கலங்கம் ஏற்ப்பட்டு விட்டதாக எண்ணிக் கைசேதப்படுகின்றார்கள்.

அத்துடன் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீதும் கொண்டிருந்த அதீத அன்பு அவர்களை அந்தச் செயலை தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை ஆதலால் உடனடியாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஓடோடிச் செல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சந்நிதியில் சென்று தனது கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாது கதறியழுதபடி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே இந்த அடியான் விபச்சாரம் செய்து விட்டான் இவனைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாது இருந்து விடுகின்றார்கள் எனவே நபி (ஸல்) அவர்களிடம் அடுத்தப் பக்கமாக நெருங்கி வந்து மீண்டும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டினார். அப்போது  நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டினார். 

ஆதன் போதும் நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். அதன் பிறகும் சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று மூன்றாவது முறையாகவும் வேண்டினார்.

இவ்வாறே நான்காவது தடவையும் நபி (ஸல்) அவர்களிடம் மாயிஸ் (ரழி) அவர்கள் முறையிட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று முறையும் சொன்ன உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு எனும் பதிலையே சொன்னார்கள்.

மீண்டும் ஐந்தாவது முறையாகவும் மாயிஸ் (ரழி) அவர்கள்  நபி (ஸல்) அவர்களிடம் முறையிடவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு நாசம் உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கூறி விட்டு அங்கு வீற்றிருந்தவர்களிடம் இவருக்கு ஏதும் பித்துப்பிடித்திருக்கின்றதா என்று கேட்டார்கள். அதற்க்கு அங்கு வீற்றிருந்தவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அப்படியொன்றையும் நாம் அறியோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் இவர் மது அருந்தியிருக்கலாமோ என்று கேட்டார்கள் அப்போது ஒரு நபித் தோழர் அவரின் வாயை முகர்ந்து பார்த்து விட்டு அவ்வாறு மது அருந்தியதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை என்று கூறினார்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு கேடு உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கேட்குகின்றார்கள் அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் ஆம் எவ்வாறு ஒரு மனிதன் ஒரு பெண்ணிடம் ஹலாலான அனுமதிக்கப்பட்ட முறையில் செல்வானோ அவ்வாறே நான் ஹறாமான தடுக்கப்பட்ட முறையில் சென்று விட்டேன் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இப்போது உனது இந்த கூற்றின் மூலம் உனது எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள். அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் தாங்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு அவருக்குரிய கல் எறிந்து கொலை செய்தல் எனும் சட்டத்தை நிறைவேற்றுமாறுப் பணித்தார்கள் அதன் பிறகு அவர் கல் எறிந்து கொலை செய்யப்பட்டு விடுகின்றார்.

அவ்வாறு கல் எறிந்து கொலை செய்யப்பட்டு அவருக்குரிய தொழுகைiயும் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்படதன் பிறகு ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் சில நபித் தோழர்களுடன் மாயிஸ் (ரழி) அவர்களின் மண்ணறைப் பக்கமாக சென்று கொண்டிருந்தார்கள் அப்போது இரண்டு நபித் தோழர்கள் இதோ பார்த்தாயா இந்த மண்ணறை யாருடையது என்று இவர்தான் அவர் செய்தத் தவறை அல்லாஹ் மறைத்த போதும் அதனை அவரால் மறைத்துக் கொள்ள முடியாது நாயைப் போன்று கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இது நபி (ஸல்) அவர்களில் காதில் விழுந்து விடுகின்றது.

என்றாலும் நபி (ஸல்) அந்த இடத்தில் எதுவும் பேசாது மௌனமாகச் சென்று கொண்டிருந்தார்கள் சற்று தூரம் சென்றவுன் இறந்து உக்கிப்போன ஒரு கழுதையைக் கண்டார்கள் உடனே அந்த குறித்த இரண்டுத் தோழர்களையும் அழைத்தார்கள் அப்போது அவர்களிருவரும் இதோ இருக்கின்றோம் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கூறினார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் இறங்கி இந்தக் கழுதையைப் புசியுங்கள் என்று கூறினார்கள். 

அதற்க்கு அவர்களிருவரும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அல்லாஹ் உங்களுக்குப் பிழைப் பொறுப்பானாக இதனை யார் சாப்பிடுவார் என்று கூறினார்கள் அதன் போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் சற்று முன்னர் உங்கள் சகோதரனைப் பற்றி இழிவாகப் பேசியது இருக்கின்றதே அது இந்த செத்த பிணத்தைத் உண்பதிலும் பார்க்க மிக மோசமானதாகும் என்று கூறினார்கள். 

பிறகு நீங்கள் தவறாகப் பேசிய அவர் தனது தவறை நினைத்து வருந்தி கைசேதப்பட்டு அவர் செய்த தௌபா இருக்கின்றதே அதனை ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து நிற்க்கும் எனது உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவர் தற்பொழுது சுவனச் சோலையின் நீரருவிகளில் நீந்திக் கொண்டிருக்கின்றார் மாயிஸ் பின் மாலிக்கிற்க்கு சுபசோபனம் உண்டாட்டும். ஆம் அவர் விபச்சாரத்தில் வீழ்ந்தார் என்றாலும் அவர் செய்த தௌபா ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து விடும் அளவுக்கு இருக்கின்றது என்று கூறினார்கள்.

மேற்ப்படி சம்பவம் புஹாரி முஸ்லிம் உட்ப்பட இன்னும் பல நபி வழித் தொகுப்புகளில் சிற்ச்சில மாற்றங்களுடன் பதிவாகியுள்ளது.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



புதன், 30 செப்டம்பர், 2015

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அசாத்தையும்; அவரின் கள்ளக்காதலியையும் தண்டிக்குமா?


இஸ்லாமிய குற்றவியல் சட்டம் 
அசாத்தையும்; அவரின் கள்ளக்காதலியையும் தண்டிக்குமா?

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபகாதஹு

அண்மைக்காலமாக நமது நாட்டில் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றியத் தவறானச் செய்திகள் சமூக வலைத் தளங்களில் உலாவந்து கொண்டிருந்தனை நாம் அனைவரும் நன்கு அறிவோம் என்றாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் அதன் ஆளஅகலம் எத்தகையது என்பது பற்றித் தெரியாமல் நாம் அது பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.

என்றாலும் சிறீ லங்கா முஸ்லிம் இணைய தளம் இன்று (28-09-2015) வெளியிட்டிருந்த செய்தியினைப் பார்த்ததன் பிறகு அதன் உண்மைத் தண்மை மற்றும் ஆளஅகலம் நன்றாகப் புலப்படுகின்றன ஆதலால் இனிமேலும் அமைதிகாக்கக் கூடாது என்பதற்க்காக இங்கு எமது கருத்தினையும் பதிவு செய்கின்றோம்.

எமது கருத்தினைப் பதிவு செய்வதற்கு முன்னதாகப் பின்வரும் மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகின்றேன்.

தனது படைப்பாளனாகிய அல்லாஹ்வுடனான தொடர்பு மற்றும் தான் இரண்டறக்கலந்து வாழுகின்ற மனிதர்களுடனான தொடர்பாடல் ஆகியவற்றைப் சிறந்த முறையில் பேணும் வகையிலான ஐந்து அதிமுக்கியமான உரிமைகளின் பாதுகாப்புக் கருதி அவைகள் மீதான அத்துமீறல்களுக்கு இஸ்லாம் மிகக்கடுமையான தண்டனைகளை விதித்திருக்கின்றது. இத்தகைய குற்றச் செயல்கள் அல்லாஹ்வுடைய மற்றும் சக மனிதர்களுக்கிடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்ப்படுத்தவல்லதாகும்

அவைகளாவன :

1. மார்க்கம்
2. உயிர்
3. புத்தி
4. கற்பு
5. உடமை ஆகிய ஐந்துமாகும்

மார்க்கத்தினைப் பாதுகாத்தல் : 
ஒரு மனிதன் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

உயிரைப் பாதுகாத்தல் : 
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்தால் அம்மனிதனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

புத்தியைப் பாதுகாத்தல் : 
ஒரு மனிதன் அல்லாஹ் அவனுக்கு வழங்கிய புத்தியை மது அருந்துவதன் மூலம் பேதலிக்கச் செய்து கொண்டால் அவனுக்கு 80 கசையடிகள் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

கற்பைக் காத்தல் : 
எவர்கள் திருமணத்திற்கு முன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களோ அவர்களுக்கு 100 கசையடிகள் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறே எவர்கள் திருமணத்திற்கு பின் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுதல் வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகின்றது.

உடமைகளைப் பாதுகாத்தல் : 
யாராவது பிறரின் உடமைகளைத் திருடினால் அவனுடைய கரம் துண்டிக்கப்பட வேண்டு;ம் என்பது இஸ்லாத்தின் தீர்வாகும்.

மேற்படி குற்றவியல் தண்டனைகளுள் மிகக்கடுமையான தண்டனையாக இருப்பது திருமணமான பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகும். ஏனெனில் மேற்படி குற்றங்கள் அத்தனையிலும் மிகவும் கொடூரமான குற்றமாக அது காணப்படுகின்றது ஒரு மனிதன் திருமானதன் பிறகு இவ்வாறான இழிசெயலில் ஈடுபடுவதானது சமூகத்தில் மிகப்பெரும் பாதிப்பினை தோற்றுவித்து விடுகின்றது.

உதாரணமாக ஒருவன் இன்னொருவனுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் போது அது அவளது கணவன் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றார் போன்ற இன்னும் பலரைப்பாதிக்கின்றது அவர்களின் எதிர்காலத்தைக் கேழ்விக்குறியாக்கி விடுகின்றது ஆதலால்தான் அப்படிப்பட்ட பிறர் வாழ்கையிலும் களங்கத்தினை ஏற்படுத்தும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்ற திருமணமான ஆன் பெண் ஆகிய இருவரையும் எவ்வித பாகுபாடோ தயவுதாட்ச்சண்யமோ காட்டாது கல்லால் எறிந்து கொலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் விதித்திருக்கின்றது.

இப்படியான இழிசெயலிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாம் பல்வேறு வரையறைகளை எமக்கு வகுத்துத் தந்துள்ளது அவற்றுக்கு மாறு செய்யும் போது இப்படியான இழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்ப்படுவது தவிர்க்கமுடியாததே.

இஸ்லாத்தின் வரையறைகள்

1. நான்கு சாட்ச்சிகள் : 
அனைத்து விடயங்களுக்கும் அதிகபட்ச்சம் இரண்டு சாட்ச்சிகளைக் கோருகின்ற இஸ்லாம் விபச்சாரத்திற்கு மாத்திரம் நான்கு சாட்ச்சிகளைக் கோருகின்றது காரணம் விபச்சாரம் என்பது அந்த அளவு கடினமான ஒரு குற்றமாக உள்ளது. ஆகவே அது சர்வசாதாரணமாக மக்களுக்கு மத்தியில்; பேசப்படக்கூடாது என்பதற்காக இந்த அளவு வலுவான சட்டங்கள் இடப்பட்டுள்ளன.

2. திரைமறைவில் வாழுதல்
உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்ää திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல. (அல்-குர்ஆன் : 33-53)

இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விடயம்  உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; எனும் வாசகமாகும் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களுக்கும் அன்னாரின் அருமை ஸகாபாக்களுக்குமே உள்ளங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள திரை அவசியம் என்றால் நாமக்கு அது மிகவும் அவசியானதாகும்.

3. வீட்டைவிட்டு வெளிச்செல்லாமை
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசத்தங்களை நீக்கிää உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல்-குர்ஆன் : 33-33)

ஒரு பெண் தனது பரிசுத்தத்தண்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் அத்தியவசியத் தேவைகளுக்கே அல்லாது தனது வீட்டைவிட்டு வெளிச்செல்வதைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.

4. பார்வையைத் தாழ்த்துதல்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; 


5. தங்கள் அலஙங்காரங்களை மறைத்து வாழுதல்.

தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் : 24-30-31)

6. பேச்சில் நளினம் தவிர்த்தல்.

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள். (அல்-குர்ஆன் : 33-32)

7. அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்காமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அந்நிய ஆனும் பெண்ணும் அவர்களுடன் மூன்றாவது நபராக சைத்தான் இல்லாமல் தனித்திருக்கமாட்டார்கள் (நூல்: திர்மிதி)

அசாத்துக்கும் அவனது கள்ளக்காதலிக்குமான இஸ்லாத்தின் தண்டனை

இத்துனை தடைகளையும் தாண்டி ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றான் என்றால் நிச்சயமாக அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனேயாவான்.

இதன்படி உவைஸ் ஹாஜியாரின் மனைவியை அபகரித்துச் சென்ற அசாத் சாலியிற்கும் அவனுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட உவைஸ் ஹாஜியாரின் மனைவியிற்க்கும் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள திருமணத்திற்குப்பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகிய மரண தண்டனை அனைவர் முன்னாலும் பகிரங்கமாக நிறைவேற்றப்படல் வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : விபசாரியும், விபசாரனும் - இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்-குர்ஆன் : 24:2)

அவர்களிருவரும் இதிலிருந்து தப்பித்தால் நாமனைவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதனை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.

அடுத்த குற்றவாளி

அடுத்து நாம் இன்னுமொரு விடயத்தினையும் இந்த இடத்தில் கவனித்தல் அவசியமாகும் அதாவது இஸ்லாம் ஒரு போதும் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்புச் சொல்லும் மார்க்கம் கிடையாது அது நன்றாக ஆராய்ந்து நோய்க்கான காரணம் என்னவென்பதனைக் கண்டறிந்து அதற்க்கான வைத்தியத்தினையே முதலில் முற்படுத்தும். உதாரணமாக நுழம்பை இல்லாதொழிப்பதற்கு முன்னதாக நுழம்பு உருவாவதற்க்கான காரணிகளாகவுள்ள குப்பைக்கூளங்கள் கழிவுப் பொருட்க்கள் நீர்த்தேக்கங்கள் போன்றவைகள் அகற்றப்படல் வேண்டுமோ அவ்வாறே குற்றம் நிகழ்வதற்கு முன்னர் அதற்க்கானக் காரணிகள் களையப்பட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால் இஸ்லாமிய வரையறைகள் பேணப்பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் கைசேதப்படவேண்டி ஏற்படும்.

எனவே அசாத் சாலி விடயத்தில் முதல் குற்றவாளி உவைஸ் ஹாஜி அவர்களேயாவார்கள் ஏனெனில் இஸ்லாமிய வரையறைகளுக்கப்பால் அசாத் சாலியுடன் தனது மணைவியை அன்னியோண்யமாகப் பழக அனுமதித்தமை அவர் செய்த மிகப்பெரும் குற்றமாகும். 

நபி (ஸல்) அவர்களது மணைவிமார்களுக்கே அல்லாஹ் பின்வருமாறு கட்டளை இடுகின்றான் “நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்ää திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; (அல்-குர்ஆன் : 33-53)

இந்த இடத்தில் உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; என்று கூறப்பட்டுள்ளதனைப் பார்க்கின்றோம் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களுக்கும் அன்னாரின் அருமை ஸகாபாக்களுக்குமே உள்ளங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள திரை அவசியம் என்றால் நமக்கு அது எந்த அளவு அவசியமானதாகும் என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

எனவே இதனை அனைவரும் ஒரு பாடமாக எடுத்து தங்கள் மனைவிமார்களையும் பெண்மக்களையும் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ வைத்து நமது குடும்ப கௌரவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முன்வருவோமாக.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்



புதன், 23 செப்டம்பர், 2015

இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்


இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்

இஸ்லாத்தின் மிக முக்கிய சிறப்பம்சங்களுள்  ஒன்றுதான் இரு பெருநாள் தினங்களுமாகும் இது   இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் முக்கிய ஒன்றாகும்  இதை நாம் மதித்து கண்ணியப்படுத்துதல் தக்வா எனும் பயபக்தியைச் சார்ந்ததாகும்.  ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: 

“அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை யார் கண்ணியப் படுத்துகின்றாரோ நிச்சயமாக அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடேயாகும்”. (22:32) 

இப்புனித நாளைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.

''நபி (ஸல்)  அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு திருநாள்கள் இருந்தன. அவ்விரு நாட்களிலும் அவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி (ஸல்)  அவர்கள் ''இவ்விரு நாட்களை விடச்சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி தியாகத் திருநாள்,  மற்றும் ஃபிதர் ஈகைத் திருநாள் ஆகிய இரண்டுமாகும்'' எனறார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபதாவூத், நஸயீ

எனவே இப்புனித நாளை நாம்  நபி (ஸல்)  அவர்கள் காட்டித்தந்த வழியில் நின்று அனுஷ்ட்டிப்பது  அவசியமாகும்;. இதுவே ஏனைய சமூகத்தினர்களதும் நமதும் பெருநாளைக்குள்ள வேறுபாடாகும்.

முதலாவது தக்பீர் சொல்லுதல்

முதலில் மகிழ்ச்சிகரமான இவ்விருநாட்களை நாம் தக்பீர் முழக்கத்துடன் வரவேற்க வேண்டும்;. 

நோன்புப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்ய, உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)      (அல்குர்ஆன் -  2:185)

ஹஜ்ஜுப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனைச் சென்றடையும்;  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி  தக்பீர் செய்யும் பொருட்டு  இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்;   (அல்குர்ஆன் - 22:36-37)

அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்களுக்கும் இன்னும் இவ்வாறான புனிதத் தினங்களை வழங்கியதற்கும் நாம் நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வை பெருமைப் படுத்தும் விதமாக, அன்றைய தினங்களில் தக்பீர் சொல்லுதல் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அதிகமதிகம் தக்பீர் தஸ்பீஹ் போன்றவைகளை சொல்வதில் கழிக்கப்படல் வேண்டும்.

குளித்லும் தொழுதலும்

அடுத்ததாக நாம்  இந்நாளை ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் தொழுகையைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

''நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்து பலியிடுவோம் யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழி முறையைப் பேணியவராவார்'' என்று நபி (ஸல்)  அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ரா  நூல்: புகாரி

நபி (ஸல்)  அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு (மைதானத்திற்கு) செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்த பின்னர் மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள், (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள்,  ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப நாடியிருந்தால் அனுப்புவார்கள். ஏதேனும் (கட்டளையிட வேண்டியிருந்தால் கட்டளையிடுவார்கள் பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். 
அறிவிப்பவர்: அப ஸயீத் அல் குத்தி நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னதாகக் குளித்து சுத்தம் செய்து கொள்வது சுன்னத்தாகும் அத்துடன் தன்னிடம் இருக்கக்கூடிய ஆடைகளில் சிறந்ததை அணிவதுடன் தம்மிடம் இருக்கக்கூடிய வாசனைத் திரவியங்களிலும் பூசிக்கொள்ளுதல்; நபி வழியாகும். ஆனால் பெண்கள் தங்களின் அலங்காரங்களை வெளிக்காட்டாத வகையில் ஆடையணிவதுடன் வாசனை எதுவும் பூசிக்கொள்ளாமல் தொழுகைக்குச்; செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளில் அந்நிய ஆண்கள் இல்லாத போது தங்களை அலங்கரித்து வாசனைகளை பூசிக்கொள்வதில் தவறேதும் கிடையாது. பெருநாள் தொழுகை நடை பெறுவது பள்ளிவாயிலாக இருந்தால் மாதவிடாய், மற்றும் பிரசவத்தீட்டையுடைய  பெண்கள் செல்லக்கூடாது ஆனால் தொழுகை பள்ளி வாயிலுக்கு வெளியே மைதானத்தில் நடைபெறுமாகவிருந்தால் அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாது பயான் மற்றும் தக்பீர் சொல்லுதல் போன்ற ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லலாம். 

பெருநாள் தொழுகையைக் கழாச் செய்தலும் அதற்குரிய நேரமும்.

ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்)  அவர்களிடம் வருகை தந்து தாங்கள் நேற்று பிறையைப் பார்த்தாக சாட்சி அளித்தனர். நபி É அவர்கள் நோன்பை விடுமாறும், காலை விடிந்ததும் தொழும் திடலுக்கு செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். 
அறிவிப்பவர்: அப உமைர்  நூல்கள்: அபதா வூத் நஸயீ

மேற்படி அறிவிப்பு பெருநாள் தொழுகை ழுஹருடைய நேரத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும், அவ்வாறு அதற்கு உரிய நேரத்தில் அதனை நிறைவேற்ற முடியாது போனால் மறுநாள் அதன் நேரத்தில்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும் சான்றாகும்
.
இரு பெருநாளைக்கும் இடையிலான வேறுபாடுகள்.

நோன்புப் பெருநாளைக்குரிய தக்பீர் சவ்வால் பிறை தெரிபட்டால் அன்று மஃரிபிலிருந்து  மறு நாள் பெருநாள் தொழுகை வரை சொல்லப்படும். 

ஹஜ் பெருநாளைக்குரிய தக்பீர் இரு விதமாக சொல்லப்படும். 

1. துல்ஹஜ் பிறை 01 ஆம் நாள் மஃரிபிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை பள்ளி வாயில்கள், கடைத்தெருக்கள், வீடுகள் போன்ற அனைத்து இடங்களிலும் தக்பீர் சொல்லுதல்  ஆண்கள் சப்தமாக கூறுவது விரும்பத்தக்கது பெண்கள் சத்தமாகச் சொல்லக் கூடாது. 

2. இரண்டாம் வகை அரஃபாவுடைய தினம் அதாவது துல்ஹஜ் 9ம் நாள் சுபஹிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் தக்பீர்  சொல்லுதலாகும்.

நோன்புப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் ஒற்றைப்பட ஈத்தம்பழங்களை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சுன்னத்தாகும் ஈத்தம் பழம் கிடைக்கவில்லையாயின் ஏதாவது தன்னிடம் இருக்கக்கூடிய உணவை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சிறந்ததாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் எதுவும் சாப்பிடாமல் செல்வது சுன்னத்தாகும் அவ்வாறே தான் குர்பான் கொடுப்பவராக இருந்தால் அவர் குர்பான் இறைச்சியையே அன்றைய தினம் தொழுதுவிட்டு வந்து சாப்பிட வேண்டும் இதுவே அவருக்கு சுன்னத்தாகும் அவர் குர்பான் கொடுக்கவில்லையாயின் தன்னிடம் இருக்கக்கூடிய உணவைச் சாப்பிடலாம்.

நோன்புப் பெருநாளைக்குத் தொழுவதற்கு முன் ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது கடமையாகும். தொழுகை முடியும் வரை பிற்ப்படுத்துதல் கூடாது.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கு தொழுகை முடிந்த பிறகு உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்தாகும். தொழுகைக்கு முன் கொடுக்கக் கூடாது.

ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது ரமழானின் இறுதி நாளிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்லும் வரையிலாகும். ஓரிரு தினங்கள் முன்னதாகக் கொடுத்து விடுவதில் தவறில்லை.

உழ்ஹிய்யா கொடுப்பது பெருநாள் தினத்திலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று தினங்களுடன்  துல்ஹஜ் 10, 11, 12, 13  ஆகிய நான்கு நாட்க்களுமாகும். பெருநாளன்று கொடுப்பது மிகவும் ஏற்றமுடையதே.

குர்பானியை நிறைவேற்றுபவர் தனது உழ்ஹிய்யாவின் இறைச்சியை உண்பது நபிவழியாக இருப்பதுடன் அல்லாஹ்வின் கட்டளையாகவும் உள்ளது.

“அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்”( அல்குர்ஆன், 22:28) 

தொழுகைக்குச் செல்லும் போது ஒரு வழியாலும்  திரும்பி வரும்  போது வேறு வழியாலும் செல்லுதல் நபிவழியாகும்.


தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகள்.

இசையுடன் கூடிய பாடல்களை கேட்டல்,  
திரைப்படங்கள் பார்த்தல்
ஆண்கள் பெண்கள் கலந்து கலியாட்டங்களில் ஈடுபடுதல்
பட்டாசு கொழுத்துதல் 
மற்றும் ஏனைய அணைத்துவிதமான வெறுக்கத்தக்க காரியங்களிலும் ஈடுபடுதல் போன்றவைகளை அந்தப் புனித நாட்களில் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் வந்தால்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் ஏற்படுமேயானால் இரண்டு தொழுகையையும் வவ்வேறாக தொழுதாக வேண்டுமா அல்லது இரண்டில் ஒன்றை மட்டும் தொழுதால் போதுமா? என்ற கேள்வி எழலாம். 

இது பற்றி நபி (ஸல்)  அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
''இன்றைய தினம் இரு பெருநாள்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்கும் போதுமானதாகும். ஆனால் நாம் ஜும்ஆ நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபஹரைர  நூல்கள்: அபூதாவூத் இப்னுமாஜா

மேற்படி அறிவிப்பின் மூலம் பெருநாள் தொழுகை தொழுதால் ஜும்ஆ தொழுகை விரும்பினால் தொழலாம் இல்லையெனில் விட்டுவிடலாம் என்று நபி(ஸல்)  அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழுலாமா?

பெருநாள் தொழுகைக்கு முன்பாக லுஹர் தொழுகை உட்பட எத்தொழுகையும் தொழக்கூடாது.

நபி (ஸல்)  அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ  நூல்கள்: புகாரி முஸ்லிம்


நபி (ஸல்)  அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு எத்தொழுகையும் தொழமாட்டார்கள் வீட்டிற்கு நபி (ஸல்)  அவர்கள் திரும்பினார்கள். இரண்டு ரக்அத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபஸயீத   நூல்: இப்னுமாஜா

பெருநாள் தொழுகை பள்ளிவாயலுக்கு வெளியில் மைதானத்தில் நிறைவேற்றப்படுமானால் அத்தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தவொரு தொழுகையும் தொழக்கூடாது. ஏன்றாலும் வீட்டில் தொழுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே பெருநாள் தொழுகை பள்ளிவாயலில் நடாத்தப்பட்டால் பள்ளிவாயலுக்குச் செல்பவர் பள்ளிக் கானிக்கை இரண்டு ரகஅத்து தொழுவது அவசியமாகும்.

நன்றி : அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம 



செவ்வாய், 15 செப்டம்பர், 2015

ஹஜ் - உம்றா செய்யும் முறை சுருக்கம்

كيفية الحج والعمرة باختصار

ஹஜ் - உம்றா செய்யும் முறை

ஹஜ்ஜின் வகைகள் 

அவரவர் வசதிக்கு ஏற்ப்ப மூன்று விதமாக ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும்.

1. இஃப்ராத் : ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுதல்.

இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் வைக்க வேண்டும் இவர் உம்ரா செய்யாது ஹஜ்ஜை மட்டும் செய்வார் இவர் குர்பான் பொடுப்பது கடமை இல்லை.

2. கிறான் : ஹஜ்ஜையும் உம்றாவையும் ஒன்றாக சேர்த்து  நிறைவேற்றுதல்.

இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் வஹஜ்ஜன் என்று நிய்யத் வைக்க வேண்டும். 

இவர் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமை களையக் கூடாது அதே இஹ்ராத்துடன் ஹஜ்ஜையும்  நிறைவேற்றிய பிறகே இஹ்ராமை களைதல் வேண்டும். ஹஜ் கிரான் செய்பவர்  ஓரு ஆடு குர்பானி கொடுப்பது கடமையாகும்.

3. தமத்துஉ : உம்றாவையும் ஹஜ்ஜையும் வௌ;வேறாக நிறைவேற்றுதல்.

இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் என நிய்யத் வைத்து இஹ்ராம் தரித்து உம்றாவை நிறைவேற்றியதன் பிறகு இஹ்ராமைக் களைந்திட வேண்டும். பிறகு. துல்ஹஜ் பிறை 8ல் தான் இருக்கும் இடத்திலேயே அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் என நிய்யத் வைத்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இவரும் ஓரு ஆடு குர்பானி கொடுப்பது கடமையாகும்.

ஹஜ்ஜின் (பர்ளு )கடமைகள் -4

இஹ்ராம் தரித்தல்
அரஃபாவில் தங்குதல்
தவாப் செய்தல்
ஸயி செய்தல்

ஹஜ்ஜின் (வாஜிப்) கடமைகள் 

மீகாத்தில் இஹ்ராம் கட்டுதல்
அரபாவில் சூரியன் மறையும் வரை தங்குதல்
முஸ்தலிபாவில் தங்குதல்
பிறை 11,  12,  13 இரவுகளில் மினாவில் தங்குதல்
அகபா ஜம்ராத் தூண்களில் வரிசைப்படி கல் எறிதல்
தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
விடை பெறும் தவாப் அல் -வதாஉ செய்தல்

ஹஜ்ஜின் ஸ{ன்னத்கள் 

இஹ்ராம் தரிக்கும் பொழுது குளித்தல்
ஆண்கள் வெள்ளை ஆடைகளில்; இஹ்ராம் தரித்தல் 
தல்பியா சொல்லுதல்
அரஃபா நாளின் இரவு (பிறை 8 மாலையில்) மினாவில் தங்குதல்
மக்கா நகருக்குச் சென்றவுடன் செய்யும் தவாபில் ஆண்கள் மட்டும் முதல்         மூன்று சுற்றுகளில் சற்று வேகமாக நடக்குதல்.
வலது புஜம் திறந்த நிலையில் மேலங்கி அணிதல் 
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல்

ஹஜ் - உம்றா செய்யும் முறை

உம்றாவின் கடமைகள் -4

1. இஹ்ராம்
2. தவாப்
3. ஸயி
4. தலைமுடி மழித்தல் - குறைத்தல்

உம்றா செய்யும் முறை

இஹ்ராம்

உம்றா நிறைவேற்றப் புனிதப் பய ணம் மேற்கொள்பவர் தமக்குரிய (எல்லை) மீகாத் வந்ததும் குளித்து இஹ்ராம் கட்டி அல்லா ஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். நிய்யத் வைத்தலிலிருந்து புனித கஃபாவை அடையும் வரை தொடர்ந்து தல்பிய்யாவைச் சொல்லிக் கொண் டிருக்க வேண்டும். 

தல்பிய்யா

لَبَّيْكَ الَّلهُمَّ لَبَّيْكَ  لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ  اِنَّ الْحَمْدَ وَ النِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشّرِيْكَ لَكَ

லப்பை(க்)க அல்லாஹ{ம்ம லப்பைக்ää லப்பை(க்)க லா சரீக்க ல(க்)க லப்பைக்ää இன்னல் ஹம்த வன்நிஃ;மத்த லக்க வல் முல்க்க லா சரீக்க லக் 
மக்கா சென்றதும் கஃபாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு வலது காலை வைத்து 

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَي رَسٌوْلِ اللهِ اَلَّلهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸ_லுல்லாஹி அல்லாஹ{ம்மப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக்க என்று ஓதியவாறு உள்ளே நுழைய வேண்டும்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்! ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்மீது உண்டாவதாக யா அல்லாஹ் எனக்கு உன் அருள் வாயில்களைத் திறந்து விடுவாயாக. என்ற துஆவை ஓத வேண்டும் அத்துடன் தல்பியா ஓதுவதை நிறுத்தி விட்டு உடனடியாகத் தவாபை ஆரம்பிக்க வேண்டும்.

தவாப்

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல் அல்லது வலது கையால் தொட்டு கையை முத்தமிட்டு விட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறி சுற்றைத் தொடங்க வேண்டும். முத்தமிட அல்லது தொட முடியவில்லையெனில் அதை நோக்கி கையால் சைக்கினை செய்ய வேண்டும். சைகை செய்த கையை முத்தமிடக் கூடாது.

இவ்வாறு ஹஜருல் அஸ்வத் கல்லில் ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வத் கல்லை வந்தடையும் போது தவாபின் ஒரு சுற்று முடிவடையும் இவ்வாறு ஏழுமுறைகள் சுற்றி வர வேண்டும். 

முதல் மூன்று சுற்றுக்களில் ரமல் அதாவது ஓரளவு வேகமாக நடக்க வேண்டும்.

இஹ்ராமின் மேலங்கியை வலது அக்குளின் கீழ் சுற்றி அதன் இரு முனைகளையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டும். 
ருக்னுல் யமானியில் இருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரும் வரை ரப்பனா ஆத்தினா பித்துன்யா  எனும் துஆவை முழுமையாக ஓத வேண்டும்ää

தவாப் முடிந்த பிறகு ம(க்)காமே இப்ராஹீமுக்கு எதிரில் வந்து இரு ரக்அத் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் பாத்திஹா சூராவுக்குப் பிறகு குல் யா அய்யுஹல் காகுபிரூன் சூராவையும் இரண்டாம் ரக்அத்தில் பாத்திஹா சூராவுக்குப் பிறகு குல் ஹ{ வல்லாஹ{ அஹத் சூராவையும் ஓத வேண்டும்.

ஸயி

பிறகு ஸபா- மர்வாவிற்கு இடையில்  ஸயி (தொங்கோட்டம்) செய்ய வேண்டும். முதலாவது ஸபா மலை மீது ஏறி நின்று கஃ;பாவை முன்னோக்கியவாறு

 اِنَّ الصَّفاَ وَ الْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ  فِمَنْ حَجَّ الْبَيْتَ أوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أن يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ  خَيْرًا فَاِنَّ اللهَ شَاكِرٌ عَلِيْمٌ 

எனும் அல்-குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதனைத் தொடர்ந்து ஸபா வில் பின் வரும் துஆவையும் ஓத வேண்டும்.

اللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ  لا اله اِلاَّ اِللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَي كُلَِ شَيْءٍ قَدِيْرٌ  لا َالهَ اِللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ أنْجَزَ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ  

அல்லாஹ{ அக்பர்ää அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{அக்பர் ää லா இ லாஹ இல்லல்லாஹ{ வஹ் தஹ{ லா ஷரீக லஹ{ லஹ{ல் முல்கு வலஹ{ல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹ{வ அலா குல்லி ஷை யின் கஸீர்ää லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷ ரீக்கலஹ்ää அன் ஜஸ வஅ;த ஹ{ வ நஸர அப்தஹ{ வ ஹஸ மல் அஹ்ஸாப வஹ்தஹ் 

பிறகு கைகளை உயர்த்தி தமது தேவைகளை வேண்டி துஆ செய்ய வேண்டும். இவ்வாறு மூன்றுமுறை ஓத வேண்டும் பிறகு ஸபாவிலிருந்து மர்வா மலைக்குச் செல்ல வேண்டும். 

அவ்வாறு செல்லும் வழியில் பச்சை விளக்குகளால் அடையாளமிடப்பட்ட பகுதியில் வேகமாக நடக்க வேண்டும். பிறகு மர்வாவை அடைந்ததும்; ஸபாவில் செய்தது போன்று செய்ய வேண்டும். அல்-குர்ஆன் வசனத்தை ஓதக்கூடாது. இப்போது ஸயியின் ஒரு சுற்று முடிந்து விடும் பிறகு மர்வாவிலிருந்து ஸபாவுக்கு செல்லும் போது ஸயியின் இரண்டு சுற்றுக்கள் முடிந்து விடும். இவ்வாறு ஏழு முறைகள் செய்ய வேண்டும்.

தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
ஸயி முடிந்ததும் தலைமுடியை மழித்த்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். குறைப்பதாயின் தலை முழுவதிலிருந்தும்; குறைத்தல் வேண்டும். 

ஹஜ் செய்முறை 

மீக்காத்தில் இஹ்ராம் கட்டுதல்
தவாப் செய்தல்
ஸயி செய்தல் 
ஹஜ்ஜு தமத்துவு செய்பவர் தலைமுடியைக் கத்தரித்து இஹ்ராம்                           களைதல் வேண்டும்.

பிறை 8 ல்

மினாவுக்குச் செல்லுதல்
ஹஜ்ஜு தமத்துஉ    செய்பவர் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து                   கொண்டே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைக்க வேண்டும்.

பிறை 9 ல்

அரபா மைதானத்திற்குச் செல்ல வேண்டும்.
அரபாவில் சூரியன் மறையும் வரை    தங்கியிருக்க வேண்டும். 
பிறகு முஸ்தலிபாவில் அன்றய இரவு தங்க வேண்டும்.

பிறை 10 ல் 

ஸ{ப்ஹ{ தொழுததன் பிறகு முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குச் செல்ல          வேண்டும். 
அகபா தூண்களில்; கல் எறிய வேண்டும்ää 
குர்பானி கொடுக்க வேண்டும்ää 
தலை முடியை மழிக்க அல்லது குறைக்க வேண்டும்ää 
தவாப் அல்-இபாழா செய்ய வேண்டும்; 
ஸயி  செய்ய வேண்டும்; 

பிறை: 11, 12, 13 

மினாவில் இரவு தங்கி ஜம்றா தூண்களில் நன்பகலுக்குப் பிறகிலிருந்து               கல் எறிய வேண்டும்.  இவ்வாறு இரவு முழுதும் எறியலாம். பிறை 12 ல்              மஃக்ரிப்புக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறினால் அந்த இரவு மினாவில்      தங்குவது கடமை இல்லை.

இறுதியாகப் பிரியாவிடைத் தவாப்; செய்தல் இந்த தவாபிற்க்குப் பிறகு                 தாமதிக்காமல் மக்காவை விட்டு வௌியேறிவிட வேண்டும்.




திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்தவம் தவறும் பட்ச்சத்தில் அதற்கு முழுமையாகப் பொறுப்பக் கூற வேண்டியவர் றிசாட் பதியுத்தீன் ஆவார்

அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்தவம் தவறும் பட்ச்சத்தில் அதற்கு முழுமையாகப் பொறுப்பக் கூற வேண்டியவர் றிசாட் பதியுத்தீன் ஆவார் 


அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ்
அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்தவம் தவறும் பட்ச்சத்தில் அதற்கு முழுமையாகப் பொறுப்பக் கூற வேண்டியவர் றிசாட் பதியுத்தீன் ஆவார் 

ஏனெனில் 

முதலாவது காரணம் அனுராதபுர மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் மிகவும் பொருத்தமான தலைசிறந்த வேட்ப்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கும் போது அவருக்கு எதிராக இன்னுமொரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் றிசாட் அவர்களுக்குக் கிடையாது. அவர் செய்த இந்த வேலை சமூகத் துரோகச் செயலாகும்.

இரண்டாவது காரணம் அவ்வாறு இரண்டு வேட்ப்பாளர்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக இன்று அவர்களின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் விருப்பு வாக்குப் போட்டி ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதற்க்கு முழுப்பொறுப்பும் கூறவேண்டியவர் இசாக் ஹாஜியார் அவர்களே ஏனெனில் இரு வேட்பாளர்களுக்கும் பொதுவாக ஆதரவு திரட்டும் வகையிலான பொதுக்குழு ஒன்றை அமைக்கமாறு நாம் பலமுறை இரண்டு வேட்பாளர்களையும் கோரிய போதும் சஹீட் ஆசிரியர் அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தார் என்றாலும் இசாக் ஹாஜியார் அவர்கள் வெறுமனே காலத்தைக் கடத்தினாரே தவிர ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை. ஆதலால்தான் இன்று அவரின் ஆதரவாளர்கள் தனி விருப்ப வாக்குக் கேட்கின்றார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலை எங்கே நமது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கச் செய்து விடுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு நமது மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் பட்ச்சத்தில் அதற்கு 

முதல் பொறுப்புதாரி றிசாட் அவர்களும் 

இரண்டாவது பொறுப்புக் கூறவேண்டியவர் இசாக் ஹாஜியாரும் 

அடுத்து அவரின் எந்தவொரு தூய கொள்கையும் அற்ற ஆதரவாளர்களுமே ஆவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிக்கு 
முனாப் நுபார்தீன் 

வியாழன், 23 ஜூலை, 2015

எமது மாவட்ட முஸ்லீம்களும், பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

எமது மாவட்ட முஸ்லீம்களும், 
பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபகாத்ஹ்

இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 67 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும்ää பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றனää அண்மைக்காலமாக இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமூகமாக  ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இந்த நாட்டை ஆட்சி செய்த சிறிலங்கா சுதந்திர கட்;ச்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்தது. இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் அந்த நாட்க்கள் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வந்ததனை நாம் அனைவரும் மறந்நிருக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறைகள் நாளுக்கு நாள் மிகவும் தீவிரம் அடைந்து சென்று கொண்டிருந்த  அந்த நாட்கள் நமது அரசியல் மற்றும் சமயத் தலைமகளின் அதி தீவிர பலவீனத்தையே பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. இந்த மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு ஆட்ச்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் அரியதொரு வாய்ப்பினை நமக்கு வழங்கியிருந்தான். அதன் பயனாக நாம் கடந்த சுமார் 5-6 மாத காலங்கள் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது.

இதற்கிடையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு பொதுத் தேர்தலின் ஊடாக முஸ்லீம்களின் பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்யும் வாய்ப்பினை நமக்கு வழங்கியுள்ளான். எனவே இவ்வாறான இந்த அசாதாரண சூழ் நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரை  ஒருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச் சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும்; இதை தமக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகும்.

ஏனெனில்  நமது சமூகம் கமூக, சமய, அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை.

எனவே நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நாம் ஏதோ ஒரு அடிப்படையில் எமது கருத்து முறன்பாடுகளை புறந்தள்ளி எமது மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல் காலத்தின் தேவையாகும். அதற்கான அரியதோர் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தினை நாம் தவற விட்டு விடுவோமானால் இனிமேலும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.

இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம்,  எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டுமாகவிருந்தால் நமது முஸ்லிம் அரசியல் கட்ச்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓரணியில் தனிச்சின்னத்தில் போட்டி இட்டிருக்க வேண்டும் அதை நமது தலைமைகள் தவறி விட்டன. 

இந்நிலையில் நாம் இம்முறையாவது நமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அது எந்தக் கட்ச்சியின் எந்த வேட்ப்பாளரின் மூலம் சாத்தியமோ அதனை சரியான முறையில் ஆராய்ந்து இனங்கண்டு அதன் மூலம் இதனை நாம் சாதித்தேயாக வேண்டும். இந்தப் பாரிய பொறுப்பிலிருந்து நாம் யாரும் விடுபட முடியாது. “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும்” என்பது நபி வாக்காகும். எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் “எமது மாவட்ட முஸ்லீம்களும் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்” எனும் இத்தலைப்பினை அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பள்ளி வாயிற்களின் நிருவாகிகள், இமாம்கள், சமூக சேவை சங்கங்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஆராய்ந்து நமது மாவட்டத்தின் அனைத்து முஸ்லீம்களுக்கும் அறிவுறுத்துவது கடமையாகும்.

அந்த வகையில் இந்த நாட்டை ஆண்டாண்டு காலமாக மாறிமாறி ஆட்ச்சி செய்து வரும் இரு பெரும் கட்ச்சிகளிலும் நமது விடயத்தில் ஓரளவேனும் கரிசனைக் காட்டக்கூடிய நன்மை பயக்கும் ஒரே கட்ச்சி ஐ.தே.கட்ச்சிதான் எனவே அனுராதபுர மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதற்கும் மிகவும் பொருத்தமான கட்ச்சி; ஐ.தே.க.என்பதனையும் பொருத்தமான வேட்ப்பாளர் நமது மாகானசபை உறுப்பினர் ஆசிரியர் பி. சுஹீது அவர்கள் என்பதனையும் நாம் இணங்கண்டுள்ளோம்.

ஆசிரியர் பி. சுஹீது அவர்கள் எந்த அடிப்படையில் பொருத்தமானவராகக் கருதப்படுகின்றார்.

1. சுமார் 23 வருடகால நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.
2. கட்ச்சி தோல்வியுற்ற போதும் மக்களின் அபிமானம் காரணமாக தொடர்ந்து வெற்றி பெற்றமை.
3. நமது மாவட்ட நீண்டகால அரசியல் வரலாற்றில் ஒரேயொரு முதல் முஸ்லிம் தொகுதி அமைப்பாளர்
4. எச்சந்தர்ப்பத்திலும் பணத்திற்கோ பதவியிற்கோ விலை போகாதவர்.
5. தளராத மனவுறுதியும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்கவர்
6. அத்துடன் எம்மால் முன் வைக்கப்பட்ட பின்வரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டமை.

நிபந்தனைகள்:
1. அவர் பாராளுமன்றத்திற்க்குத் தெரிவு செய்யப்படும்; பட்ச்சத்தில் நமது முழு மாவட்டத்தையும் சமமாக பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மாவட்ட முஸ்லிம் மத்திய குழுவொன்று உருவாக்கப்படுதல்.
2. இக்குழு மார்க்க அறிவில் தேர்ச்சியும், மார்க்கப்பற்றும், சமூக உணர்வும், சேவை மணப் பாண்மையும், தியாக சிந்தனையும் கொண்ட மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோர்களைக் உள்ளடக்கியிருத்தல்;.
3. தேவைக்கேற்ப தொகுதி, பிரதேச, கிராமிய மட்டத்திலான கிழைகளும் ஸ்தாபிக்கப்பபடல்.
4. பிரதிநிதி எச்சந்தர்ப்பத்திலும் அவரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு கட்டுப்படாது இக்குழுவின் முடிவின்படியே செயல்படுதல்.
5. மத்திய குழு எச்சந்தர்ப்பத்திலும் அல்குர்ஆன், அல்-ஹதீஸ{க்கு மாற்றமில்லாத வகையில் நீதியானதும் நேர்மையானதுமான முடிவுகளை எடுத்தல்.

முக்கிய குறிப்பு:
நமது மாவட்டத்தில் மொத்தம் 636733 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுள் முஸ்லிம் வாக்காளர்கள் 8.4மூ விகிதம் ஆகும் இது சுமார் 53740; வாக்காளர்கள் என கொள்ளலாம். இந்த 53740 வாக்காளர்களில் நூற்றுக்கு 80 விகிதம் வாக்களிக்கப்பட்டாலும் சுமார் 42992 பேர் வாக்களிப்பார்கள் இந்த 42990 பேர்களும் பிரிந்து செல்லாது ஒன்றுபட்டு ஒட்டு மொத்தமாக தங்களது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்ச்சியின் யானைச் சின்னத்திற்கும் அதில் போட்டி இடும் எமது வேட்ப்பாளர்   மாகானசபை உறுப்பினர் ஆசிரியர் பி. சுஹீது அவர்களின் இலக்கமாகிய இலக்கம் 10 ற்க்கும் வழங்குவதன் மூலம் நமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் பிரதிநித்துவத்தினை உறுதி செய்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.


தேர்தல் விழிப்பூட்டல் மற்றும் வழிகாட்டலுக்கான முஸ்லிம் ஒன்றியம்
அனுராதபுர மாவட்டம்.
தொடர்புகளுக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்- ஜே.பி
தொ.பே. 0767221243



சனி, 4 ஜூலை, 2015

தூங்கியது போது துள்ளி எழுவோம்


தூங்கியது போது துள்ளி எழுவோம்

அன்பின் சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் ஒரே குழியில் இரு தடவைகள் விழ மாட்டான். (புஹாரி)

சுதந்திர இலங்கையின் கடந்த 67 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்ச்சி செய்து வருகின்ற இரு பேரினதவாத கடச்சிகளாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்ட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதுவே நமது கசப்பான வரலாற்றுண்மையாகும்.

இவ்வாறான நீண்ட ஏமாற்றம் நிறைந்த வரலாற்றைக் கொண்ட நம் சமூகத் தலைமைகள் தொடர்ந்தும் பேரினவாதக் கட்ச்சிகளுக்குப் பின்னால் நானா நீயா? என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வதில் ஆவர்வம் காட்டி வருவதன் மர்மம்தான் என்ன? என்பது பற்றி நாம் ஆழமாக சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் ஒரே குழியில் இரு தடவைகள் விழ மாட்டான். (புஹாரி)

இந்த நபி மொழியின் அடிப்படையில் பார்கின்றபோது யார் ஒருவரிடம் பல முறைகள் ஏமாற்றப்டுகின்றாரோ அவர் உண்மையில் ஒரு உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது என்பதனையே எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஒருவர் ஒருவரிடம் ஒரு முறை ஏமாற்றமடையலாம் ஆனால் தொடர்ந்தும் துணைபோவதும் இடையில் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிக் கொண்டு  வெளியில் வருவதும் பிறகு மீண்டும் அவர்களுடனையே கூட்டு சேர்வதும் மீண்டும் ஐய்யோ ஏமாற்றி விட்டார்களே என்று கூறுவதையுமே தனது வழமையாக ஆக்கிக் கொண்டவர்கள் எவ்வாறு உண்மை விசுவாகிகளாக இருக்க முடியும்.

எனவே இப்படியான பெயர்தாங்கிகளை நம்பி பயன் ஏதும் இல்லை ஆகவே தூங்கியது போதும் தாமதமின்றி துயில் எழுவோம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளத் தயாராகுவோம். அதற்க்கான ஒரு சிறந்த களமாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துவோம்.

யாரெல்லாம் நமதுத் தனித்துவத்துடன் நமது உரிமைகளுக்காக நாடளாவிய ரீதியில் களமிறங்குகின்றார்களோ அத்தகையவர்களுடன் கை கோர்த்து அவர்களின் பாதங்களை பாறாளுமன்றத்தில் தடம் பதிக்கச் செய்து நமது உரிமைகளைப் பாதுகாப்போம்.

அவ்வாறே யாரெல்லாம் பேரினவாத கட்ச்சிகளிடம் தங்களது சின்னங்களை அடமானம் வைத்துவிட்டு வீராப்பு பேசுகின்றார்களோ அத்தகையோர்களை நிராகரித்து அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட ஒன்றுபடுவோம். 


இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



வியாழன், 2 ஜூலை, 2015

சமயம் பார்த்து சதி செய்யும் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து நம் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம்


சமயம் பார்த்து  சதி செய்யும்  சந்தர்ப்பவாதிகளிடமிருந்து 
நம் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம்

நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்ச்சிகளும் தமது கடச்சியை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது தமது சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் எவ்வபறு உறுதி செய்து கொள்வது என்பது பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நமது முஸ்லிம் தலைமைகளோ ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று நம் சமூகத்தைப் பாதுகாக்கும் சிந்தனையை விட்டு விட்டு பேரினவாதக் கட்ச்சிகளிடம் வேட்ப்புமனுப் பிச்சைக் கேட்டு மூக்குடைப்பட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் நாளாந்தம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கும் போது வெட்க்கித் தலை குனிய வேண்டியுள்ளது.

எமக்கு மத்தியில் ஆயிரம் கருத்துமுறண்பாடுகளும் பிரச்சினைகளும் இருக்கலாம் என்றாலும் அவைகள் நம்மை பலவீனப்படுத்தி நமது பொது எதிரிகளை பலப்படுத்திவிட நாம் இடம் கொடுத்து விடக்கூடாது.

உண்மையில் மைத்திபாள சிறிசேன அவர்கள் ஐக்கிய தேசிய கட்ச்சியின் தலைமையில் எதிர்கட்ச்சிகளின் கூட்டணி சார்பில் புதிய ஜனநாயக முன்னனி சின்னத்தில் போட்டி இட்டுத்தான் வெற்றி பெற்றார் என்றாலும் அவரின் வெற்றியைத் தொடர்ந்து அவரை வெற்றிபெறச் செய்த எந்தவொரு கட்ச்சியிலும் அவர் இல்லை மாறாக அவரின் பளைய கட்ச்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியையே பிரதிநிதித்துவம் செய்து கொண்டு வருகின்றார் என்பது நாம் நன்றாக சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். 

எனவே இவரையும் நாம் எழிதில் நம்பிவிட முடியாது அவரும் அவரின் நண்பர் மஹிந்த அவர்கள் எவ்வாறு 18 வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் வரை நல்லவராக நடித்து அதன் பின்னர்

“இந்த நாட்டில் இதன் பிறகும் தமிழர் முஸ்லிம்களை நினைத்தவாறு ஆட இடம் கொடுக்க முடியாது அவர்கள் ஆடியது போதும்’ 

என்று கூறி இனவாதத் தீயை மூட்டினாரோ அவ்வாறே இவரும் காலம் கனியும் வரையே காத்திருப்பார் அதன் பிறகு இவரின் சுயரூபத்தையும் நாம் வெகு விரைவில் கண்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

எனவே சகோதரர்களே சமயம் பார்த்து சானக்கியமாக சதி செய்யும் இந்த சந்தர்ப்பவாத இனவாதிகளிடமிருந்து நம் சமூகத்தைப் பாதுகாப்பதற்க்கு அல்லாஹ் நமக்கு வழங்கிய அரியதோர் வாய்ப்பே இந்தத் தேர்தல் ஆகவே நாமனைவரும் ஓரணியாக நின்று நமது பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய ஒன்று படுவோமாக. 

இப்படிக்கு
முனாப் நபார்தீன்


எங்கே நமது அரசியல் தலைமைகள்?


எங்கே நமது அரசியல் தலைமைகள்?

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ்

சுதந்திர இலங்கையின் 67 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமயம் பார்த்து ஏமாற்றப்பட்ட நமது முஸ்லிம் தலைமைகள் இன்னும் புத்தி தெளியவில்லை போல் தெரிகின்றது. ஆதலால்தான் தீர்மானகரமான இந்தச் சந்தர்ப்பத்திலும் பேரினவாதக் கட்ச்சிகளிடமே தங்களது அரசியலை அடமானம் வைப்பது தொடர்பாகவே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

கடந்த 2015 ஜுன் மாதம் 26ம் திகதி பாராளுமன்றம்  கலைக்கப்பட்டதிலிருந்து இன்றளவும் எந்தவொரு முஸ்லிம் தலைமையும் தங்களுக்குள் இருக்கின்ற கட்ச்சி மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் குரோத மனப்பாண்மைகளையும் புறந்தள்ளி சமூகத்திற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் அது பற்றி எவ்வித கவலையும் கரிசனையும் காட்டுவதாகத் தெரியவில்லை.

இதே நேரம் நாடு தழுவிய மட்டத்தில் ஒரு சில குறிப்பிடத்தக்க சமூக சிந்தனையற்ற சுயநலமிகளைத் தவிர அனைத்து முஸ்லிம்களும் எங்கே நமது தலைமைகள் ஓரணியில் ஒன்று சேராதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள் . 

தேசிய மட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடவே விரும்புகின்றோம் அதற்க்காக என்ன விலை கொடுக்கவேண்டி வந்தாலும் என்ன தியாகங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டாலும்  சரி எமக்கு வேண்டியது தனித்துவமான ஒரே தலைமையே தவிர மீண்டும் மீண்டும் ஒரே குழியில் பல தடவைகள் விழுகின்ற சோரம் போன தலைமை அல்ல.

எனவே நம் சமூக ஆண்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக சிந்தனையாளர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் படித்த வர்க்கத்தினர்கள் பாமரர்கள் சாதாரண தொழிலாளிகள் விவசாயிகள் போன்ற அனைத்து வர்க்கத்தினர்களும் அனைத்து விதமான வேறுபாடுகளையும் மறந்து ஒரே சகோதரர்களாக அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுவதன் மூலம் மாத்திரமே எமக்கு எதிரான சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க முடியும் என்பதில் முதலில் உடன்பாட்டுக்கு வருதல் வேண்டும். 

அவ்வாறு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் உதவியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எம்மை வந்தடையும் என்பதில் ஒரு ஈமானியனுக்க அனுப்பிரமானமேனும் சந்தேகம் ஏற்ப்படக் கூடாது.

ஆல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (அல்-குர்ஆன்: 47: 7)

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கை விட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.  (அல்-குர்ஆன்: 3: 160)

அவ்வாறு நாம் ஒன்று படாது வழக்கம் போல் இதிலும் அரசியலுக்குள் இஸ்லாத்தைப் புகுத்த வேண்டாம் என்று கூறி இதிலும் கருத்து வேறுபாட்டையே மூலதனமாக்கி நமது இஸ்லாம் பற்றிய ஞானசூண்யத்தை நம் வரலாற்றில் மீண்டும் ஒரு முறைப் பதிவு செய்து விடுவோமாக இருந்தால் நிச்சயமாக அது நம் வருங்கால சந்ததினர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் சமூகத்துரோகச் செயலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே ஏமக்கு மத்தியில் காணப்படும் சகலவிதமான பிரிவினைவாதத்திற்கும் நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் நாம் இந்நாட்டில் நம்மை முஸ்லிம் என்று சொல்வதற்கே அச்சப்பட வேண்டிய ஒரு நிலையை அது தோற்றுவித்து விடும்; என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.

எனவே நாம்  இந்த தீர்மானகரமான நேரத்தில் வழமை போல் சடவாதக் கொள்கைகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்காது எல்லாக் காலத்திற்கும் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் சரியானதும் முழுமையானதுமான வழி காட்டலினைத் தன்னகத்தே கொண்டுள்ள புனித அல்-குர்ஆன் அல்-ஹதீஸின் வழிகாட்டுதலில் அறிவார்த்த மற்றும் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை வகுத்து ஜனநாயக ரீதியில் எதிரிகளை எதிர் கொள்வதற்கான சிறந்ததொரு களமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகுதல்  மிக மிக அவசியமாகும்.

எணவே நாமனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் ஒரே கொள்கையின் கீழ் களமிறங்கி நமது உரிமைகளை வென்றெடுக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் முன்வருமாறு வேண்டுகின்றேன்.

இப்படிக்கு 
முனாப் நுபார்தீன்


புதன், 1 ஜூலை, 2015

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே இது உனது கடமை


சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே இது உனது கடமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{

முஸ்லிம்கள் மத்தியில் கடந்த 5-6 மாதங்களுக்கு முன் நாளாந்தப் பேச்சுப் பொருளாக இருந்து வந்த தேசிய தலைமைத்தவம் ஒற்றுமை சகோதரத்தவம் அனைத்தும் கடந்த 2015-01-08- ம் திகதியுடன் முற்றுப் பெற்று விட்டதைப் பார்கின்றோம். இது ஒன்றும் எமக்குப் புதிதல்ல இது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் அவ்வப்போது முஸ்லிம்களக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சக்திகள் களம் இறங்கும் போது பேசப் பட்டு பிறகு வெகு விரைவிலேயே மறந்து விடுவதுதான் நமது வழக்கம்.

ஆதலால்தான் இன்றளவும் அதனை நம்மால் அடையப் பெற முடியாது போய் உள்ளது அவ்வாறே அதனை எவ்வாறு அடைந்து கொள்வது என்பதனை ஆராய்ந்து அறிந்து அதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவூபூர்வமானதுமான வழிதுமுறைகள்  என்ன என்பதனையும் யாரும் முன் வைத்ததாகவும் தெரியவில்லை.

1986-87 காலப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழுகின்ற கிழக்கு மாகானத்தில் விடுதலைப் புலிகளின் அராஜகங்களால் உந்தப்பட்ட அம்மாகான மக்கள் மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ் அரசியல் ரீதியாக அணி திரண்டாhகள். அதன் பின் அந்தத் தலைமைத்துவம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்தும் முயற்ச்சியில் கவனம் செலுத்தியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் கனிசமான மக்களின் அங்கிகாரத்தினைப் பெற்றது.

அப்படி அரசியலின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்த வேண்டும் எனும் இலச்சியத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் தலைமைத்துவம் அவரின் மறைவுக்குப் பின் ஏற்கனவே இரண்டு பிரிவாக இருந்த நம் சமூகத்தை இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரித்துள்ளது. ஆளுக்கு ஆள் கட்ச்சி என்றும் தலைவர் என்றும் வெளியாகத் தலைப்ட்டு விட்டார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை அரசியல் ரீதியில் ஒன்றுபடுத்துவதென்பது இதன் பிறகு சாத்தியமற்ற ஒன்றாகும் என்றே கருத வேண்டியுள்ளது.

அப்படியானால் அரசியலை முற்றாகத் தவிர்த்து ஆண்மீகத் தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தலாமா? என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மத்ஹபுகளின் பெயரால் பிரிந்திருந்த சமூகத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுத்தவென்று உதயமான இயக்கங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி இன்று எத்தனை எத்தனையோ எண்ணில் அடங்கா குழுக்களாகப் பிரிந்தே காணப்படுகின்றது.  ஏற்கனவே அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவினர்களாகவும் ஆண்மீகரீதிPல் நான்கு மத்ஹப்புகளை உடையவர்களாகமு; இருந்த போதிலும் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் மேலோங்கிக் காணப்பட்டன. இன்றோ நம் சமூகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது  இயக்கங்கள் மற்றும் கட்ச்சிகளின் பெயரால் ஏற்படும் முறுகல் நிலையும் குழுச் சண்டைகளும் நாளாந்தம் ஊடகங்களில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்களுக்குள்ளேயே புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் இல்லாத அவர்களால் எவ்வாறு முழு சமூகத்தையும் வழி நடாத்த முடியும் எனும் நியாயமான கேள்விகள் எழுகின்றன.

இப்படிப்பட்ட நம் தலைவர்களினதும்; சமயக் குழுக்களினதும் தூரப்பார்வையற்ற இத்தகைய குருட்டுத்தனமான குறுகிய சிந்தனைகளின் வெளிப்பாடே இன்றைய நம் சமூகத்தின் தலைவிதியாக பரினாமம் கொண்டுள்ளது எனலாம்.

எது எப்படி இருந்தாலும் இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை நமது பெறுமதியினைப் பதிவு செய்து கொள்வதற்கான அரியதோர் சந்தர்ப்பத்தினை வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான் எனவே அவற்றின் மீது மண்ணை வாரி விடாது இவ்வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள முன் வருமாறு நம் தலைமைகளை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதிலும் குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்களை முதற்தடவையாக நாடளாவிய ரீதியில் விழிப் ப10ட்டி அரசியல்மயப்படுத்திய சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கடமையிலிருந்து எந்நிலையிலும விடுபட முடியாது எனவே மீண்டும் ஒரு முறை அது முழு முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முன்வர வேண்டும் இல்லையேல் பொறுப்புதாரிகள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



பிரதமரை தீர்மானிக்கும் சக்தி நாமே


பிரதமரை தீர்மானிக்கும் சக்தி நாமே

அன்புடையிர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ

நடைபெற இருக்கின்ற நடாளுமன்றத் தேர்தல் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக நோக்கப்பட வேண்டியூள்ளது. ஏனெனில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்ச்p செய்து வரக்கூடிய இரு பேரினவாதக் கட்ச்சிகளும் வரலாறு நெடுகிலும் சந்தர்ப்பம் பார்த்து முஸ்லீம்களுக்குத் துரோகம் செய்தே வந்திருக்கின்றது என்பது கசப்பான உண்மையாகும்.

எனவே தொடர்ந்தும் அந்தத் துரோகிகளுக்கே எமது வாக்குகளைத் தாரவார்த்துக் கொடுத்து விட்டு கைசேதப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் மிகவூம் அவதாணமாகவூம் கவனமாகவூம் இருந்து கொள்வது மிகவூம் அவசியமாகும். 

இன்றைய இந்த சூழ்நிலையில் நம்மில் சுயநலமிகளைத் தவிர வேறு யாரும் பேரினவாதக் கட்சிகளில் போட்டி இடவோ அல்லது அவற்றிற்கு வாக்களிக்கவோ மாட்டான். ஏனெனில் கடந்த பல தசாப்த்தங்களாக நாம் கற்றுக் கொண்ட படிப்பினைகள் ஏராளம் ஏராளம்.

எனவே நமது அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று தனித்துப் போட்டீ இடுவதே சாலவூம் பொருத்தமான மிகவூம் ஆரோக்கியமான ஒரு முடிவாக இருக்க முடியூம் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு அவர்களால் ஒன்றுபட முடியாது எனில் நிச்சயமாக அவர்களுக்கு நம்மை அரசியல் ரீதியாக வழி நடாத்தும் தகுதியூம் தகமையூம் இல்லை என்றே அர்த்தமாகும்.

அப்படியாயின் நாடளாவிய ரீதியில் பேரினவாதிகளுக்கு நமது வாக்குகளைத் தாரவாத்துக் கொடுத்து விட்டுத் தொடர்ந்தம் கைசேதப்படுவதை விட நாமனைவரும் ஒன்று சேர்ந்து நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் சுயேற்ச்சையாகவேனும் களமிறங்குவது சாலவூம் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

இவ்வாறு நாம் களமிறங்குவதால் நமக்கு எந்தப் பிரச்சினையூ நஸ்டமும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை அவ்வாறின்றி நாம் பேரினவாதிகளுடன் இணைந்திருப்பதனால் எவ்வித நன்மையூம் நமக்குக் கிடைக்கப் போவதும் இல்லை. 

மாறாக நாமனைவரும் நாடளாவிய ரீதியில் ஒன்று பட்டு ஒரே அணியாகப் போட்டி இட்டால் நிச்சயமாக இந்த நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சக்தி நாமேயாவோம் 

இவ்வாறான ஒரு தீர்மானகரமான நேரத்தில் நாம் கடச்சி மற்றும் இயக்கப் பேதங்களையூம் குரோத மாணப்பாண்மையையூம் கை விட்டு விட்டு நம் சமூகத்திற்க்காக ஓன்றுபடுதல் மிகவூம் அவசரமும் அவசியமும் ஆகும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...