திங்கள், 30 ஏப்ரல், 2018

அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள்


நம் சகோதரத்துவத்தினைத் தகர்க்கக்கூடிய எந்தவொரு செயலையும் ஒரு முஸ்லிம் எச்சந்தர்ப்பத்திலும் செய்யமாட்டான் அவ்வாறு செய்வது அவனுக்குத் தடுக்கப்பட்ட ஹராமான செயலாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

1. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம்.
2. ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம்.
3. ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
4. ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம்.
5. உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம்.

அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான்.
6. எனவே அவன்; அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான்.
7. அவனைக் கை விட்டு விட மாட்டான்.
8. அவனிடம் பொய்யுரைக்க மாட்டான்.
9. அவனை இழிவாகக் கருத மாட்டான்.

''இறையச்சம் இங்கே உள்ளது" என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்கு போதுமான செயலாகும்.

10. ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.(; நூல்:; முஸ்லிம் )

தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்ள விரும்பும் எந்தவொருவரும் மேற்கூறப்பட்டுள்ள இந்த இழி குணங்களிலிருந்து முழுமையாக விடுபடாத வரை அவன் உண்மையான முஸ்லிமாக முடியாது.

சிந்தித்துப்பாருங்கள் மேலே நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்ட இந்த பழிக்கத்தக்கதான பத்துப் பண்புகளில் எதுதான் எம்மிடம் இல்லை அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் அனைவரிடத்திலும் மிக சர்வசாதாரணமாகவே காணப்படுகின்றன.
இத்தகைய இழிவான குணங்களிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் உள்ளங்களைப் பரி

ஹதீஸ் விளக்கவுரை



عن أبي مالك الأشعري قال : قال رسول الله صلى الله عليه وسلم : ((الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - أو تملأ - ما بين السماوات والأرض ، والصلاة نور ، والصدقة برهان والصبر ضياء ، والقرآن حجة لك أو عليك ، كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها )) (رواه صحيح المسلم)
ஹதீஸ் விளக்கவுரை
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி அறிவிக்கின்றார்கள்: “
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும்.
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும்.
தொழுகை என்பது ஒளியாகும்.
(ஸதகா) தர்மம் செய்வது ஆதாரமாகும்.
பொறுமை பிரகாசமாகும்.
குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும்.
ஒவ்வொரு மனிதனும் தினமும் காலையில் தனது ஆத்மாவை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடிய பயனியாக இருக்கின்றான்.
(ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
ஹதீஸின் நிலை
இந்த நபிமொழி பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது:
அது தூய்மையின் பால் ஆர்வமூட்டி கட்டளையிடுகிறது.
உள்ளங்கள் அமைதியடையக்கூடிய இறை தியானத்தின் பால் ஆர்வமூட்டுகிறது.
பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் தர்மத்தின் பால் தூண்டுகிறது.
தௌஹீத் அதாவது ஏகத்துவத்திற்கு அடுத்ததாக மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகிய தொழுகையின் பால் ஆர்வமூட்டுகிறது.
பொறுமையின் உயர்வு பற்றி போதிக்கின்றது.
அல்லாஹ்வின் வேதத்தின் பால் கவனம் செலுத்துமாறும் அதன் படி செயற்படுமாறும் தூண்டுதலளிக்கிறது.
அதே போல் இறைவழிகாட்டலின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் ஆத்மாவை பாதுகாத்துக் கொள்ள பிரயத்தனம் எடுக்குமாறு தூண்டுகிறது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஒரு வார்த்தையின் விபரீதம்




ஒரு வார்த்தையின் விபரீதம் 

قال النبي صلى الله عليه وسلم : إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لَا يَرَى بِهَا بَأْسًا يَهْوِي بِهَا سَبْعِينَ خَرِيفًا فِي النَّارِ (متفق عليه)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒரு மனிதன் ஒரு வார்த்தையைப் பேசி விடுகின்றான் அதனைப்பற்றி அவன் கணக்கில் கொள்வதில்லை அதன் மூலம் அவன் எழுபது ஆண்டுகள் நரகில் புரட்டப்படுவான் (நூல் : புகாரி-முஸ்லிம்)
ஆம் அங்கும் இங்கும் இருந்து அறிவிலிகள் சிலரால் எமக்குக் கடத்தப்படும் தவறான சிலத் தகவல்களை நாம் சரியாக ஆராயாமல் பிறரைப்பற்றிய எத்தனை வகையான தவறான முடிவுகளுக்கு வந்து விடுகின்றோம்.
அவைகள் சமூகத்தில் எத்தனைவிதமான பாதிப்புக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பது பற்றி எல்லாம் அந்த அறிவிலிகள் சிந்திக்கத் தவறிவிடுகின்றார்கள்.

1.        எத்தனையோ குடும்பங்களைப் பிரித்து விடுகின்றன.
2.        எத்தனையோ நண்பர்களை பகைவர்களாக்கி விடுகின்றன.
3.        எத்தனையோ உறவுகளைத் துண்டித்து விடுகின்றன.
4.        எத்தனையோ நெருக்கமானவர்களைத் தூரமாக்கி விடுகின்றன.
இப்படியாக இன்னும் எத்தனை எத்தனையோ வேண்டாத விபரீதங்களை நம் சமூகத்தில் அரங்கேற்றி விடுகின்றன.
கவனயீனமாகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தைக்குத்ததான் எழுபது ஆண்டுகள் நரக வேதனை அப்படியாயின் சதா இதனையே திட்டம் போட்டுப் பேசித்திரிபவர்களின் நிலையைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.


சனி, 7 ஏப்ரல், 2018

அன்பான அழைப்பு



அன்பான அழைப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்...

பல தசாப்த்தங்களாக நம் சமூகத்தின் மத்தியிலே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மிக முக்கிய விடயம்

அதுதான் 

சமூக ஒற்றுமையின் அவசியமும் அதன் அவசரத் தேவையும்.

இது வரலாற்றில் என்றும் இல்லாத அளவு அண்மைக்காலமாக மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. என்றாலும் இன்றளவும் அது செயல் வடிவம் பெற முடியாத வெறும் பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய கசப்பான உண்மையே. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பின்வரு காரணிகளை மிக முக்கியமானவைகளாகக் குறிப்பிடலாம்.

1. அவ்வப்போது கால சூழ்நிலைகளுக்கேற்ப அரசியல்வாதிகளும் ஆண்மீகப் பிரிவுகளும் தங்கள் கொள்கைகளைப் பலப்படித்திக் கொள்ளும் குறுகிய நோக்கத்திற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தி வருகின்றமை.

2. அவ்வப்போது எங்காவது முஸ்லீம்களுக்குப் பிரச்சினைகள் வரும் போது மட்டும் பேசப்பட்டு அதன் பிறகு வெகு விரைவிலேயே அது மறக்கப்பட்டு விடுவது.

3. நமது சிவில் சமுகம் இது அரசியல்வாதிகள் அல்லது சமூக இயக்கங்களின் வேலை என்றெண்னி சமூகப் பொறுப்பிலிருந்து விலகி இருத்தல்.

இந்நிலையில் நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசியல் மற்றும் ஆண்மீகப் பிரிவுகளுக்கப்பால் சென்று அவை அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் ஒரு சிவில் தலைமையை உருவாக்கி அனைத்துத் தரப்பினர்களும் அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே தவிர முஸலீம்களின் தேசிய ஒருமைää தலைமை மற்றும் பாதுகாப்பு என்பது அத்தனையும் அசாத்தியமானதே.

இதன் பொருள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்ச்சியின் கீழ் வரவேண்டும் என்பதோ அல்லது அரசியலைத் துறக்க வேண்டும் என்பதோää இயக்கங்களை இல்லாது செய்ய வேண்டும் என்பதோ அல்லää மாறாக அவர்கள் எப்போதும் போல் அவரவர் விரும்பிய கட்ச்சிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கு தன்னால் ஆன பணிகளை செய்வார்கள்.

அவ்வாறே இஸ்லாமிய இயக்கங்களும்; அவரவர் விரும்பிய இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறும் வகையிலான இஸ்லாமிய அகீதா எனும் அடிப்படைக் கொள்கைக்கு முறன்படாத எந்தவொரு பிரிவையும் சார்ந்திருந்து தேசிய முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்படாதவாறு சமூகத்திற்குத் தங்களது பணிகளைச் செய்வார்கள்.

அவ்வாறின்றி ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கும் கட்ச்சி ல்லது இயக்கம்தான் சிறந்தது அனைவரும் அதனைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  வாதித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக உலகம் அளியும் வரை நம் சமூகத்தை ஒன்றினைக்க முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக ஆகிவிடுவோம்;. 

எனவே ஒவ்வொரு தனிமனிதனும்ää இயக்கங்கள்ää அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் இதனைத் தங்களது தார்மீகக் கடமை என்பதனைப் புறிந்து ஏற்று செயல்பட முன் வருதல் இன்றைய காலத்தின் கட்டாயக் கடமையாகும்.

ஆகவே எம்மாhல் முடியுமான எமது சக்திக்குட்பட்டக் கடமையைச் செய்து அல்லாஹ்விடம் எமது பொறுப்பிலிருந்து விடுபடும் வகையில் நம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இஸ்லாமிய இயக்கங்கள்ää தொண்டு நிறுவணங்கள்ää அறிஞர்கள்ää சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் போன்றோர்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்றினைக்கப்படல்  வேண்டும்.

எனவே எம்முடன் இணைந்து உளத்தூய்மையுடன் பணியாற்றி தங்கள் கடமையையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இதனை சீரனித்துக் கொள்ள சக்தியற்ற சகோதரர்கள் தயவு செய்து ஆர்வமுள்ளவர்களையும் அதைரியப்படுத்தி விடாதவாறு நடந்து கொள்ளுமாறும் இத்தால் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நமது இந்த சிறு முயற்ச்சியை ஏற்று அதனை நிறைவேற்றி வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துனை செய்வானாக.  - ஆமீன் 

முனாப் நுபார்தீன்.


குறிப்பு: முடியாது என்று முயற்சியே செய்யாதிருப்பதைவிட முயற்சி செய்து முடியாமல் போவது சிறந்ததே





அன்பான அ​ைழப்பு




මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...