சனி, 17 மார்ச், 2018

ஊர் இரண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம்


ஊர் இரண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம் 


இன்றய நம் சமூகம் இவ்வாறான அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும்; உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கான பிரதான காரணம் நாம் இயக்க ரீதியாகவும் கட்ச்சி ரீதியாகவும் நமக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்திருப்பதுதான். இது இன்று படித்தவர்கள் முதல் பாமரர்கள் தலைவர்கள் முதல் தொண்டர்கள் அதிகாரிகள் முதல் சாமாண்யர்கள் முதலாளிகள் முதல் தொழிலாளிகள் செல்வந்தர்கள் முதல் ஏழைகள் போன்ற அனைவராலும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதனைத் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரிவினைக்கான காரணம் என்ன? அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி யாரும் பேசுவதாகவோ அல்லது சிந்திப்பதாகவோ  அதற்கான தங்களால் முடியுமான ஆக்கபூர்வமான முயற்ச்சிகளைச் செய்வதாகவோ தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு பிரிவை அல்லது கட்ச்சியைச் சார்ந்தவர்களும் இப்படியான கசப்பான நிகழ்வுகள் ஏற்படுகின்ற போதெல்லாம் எவ்வாறு இதனைத் தமக்கும் தமது பிரிவுக்கு அல்லது கடச்சியிக்கும் சாதகமாக அமைத்துக் கொள்வது அல்லது பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றுதான் சிந்திப்பதாக எண்னத் தோன்றுகின்றது.

ஆதலால்தான் சில அரிக்கைகளுடனும் ஆக்ரோசமான உரைகளுடனும் அனைத்தும் முற்றுப் பெற்று விடுகின்றன மீண்டும் அவர்களின் அரிக்கைகளையும் உரைகளையும் நாம் பாhக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இப்படியான விருப்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வேண்டும் அதுவரை அதனை எதிர்பாhத்திருப்பார்கள்.

காரணம் ஊர் இரண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம் என்பது போல் சமூகம் ஒன்று பட்டால் அவர்களின் இலக்கை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆதலால் அவர்கள் இந்தப் பிரிவினையைத் தங்களுக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ள முயற்ச்சி செய்வார்களே தவிர அதனை முடிவுக்குக் கொண்டுவர விரும்ப மாட்டார்கள்.

ஏனெனில் இன்று அனைவரிடமும் கட்ச்சி மோகமும் இயக்க வெறியும்தான் மேலோங்கிக் காணப்படுகின்றது. இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அவர்களின் சதா சிந்தனை எல்லாம் நமது கட்ச்சியின் இருப்பை எவ்வாறு பலப்படுத்துவது அல்லது தமது இயக்கத்தின் இருப்பபை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதாக்த்தான் இருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: ''இன்னும்ää நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும்ää நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சங்கள்"" (என்றும் கூறினோம்). ஆனால்ää அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டுää தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்துää ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். எனவேää அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டு விடும். (அல்-குர்ஆன்: 23: 52-54)

மேற்படி வசனம் நாம் எவ்வாறு ஒரே இறைவனை விசுவாசிக்கின்றோமோ அவ்வாறே ஒரே சமுதாயமாக இருந்து அல்லாஹ்வை அஞ்சியவர்களாக எமது செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எமக்கு வழிகாட்டுவதுடன் அதன் தொடரிலேயே பிரிவினை வாதிகள் தமது அறியாமையின் காரணமாக தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டுää தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்துää ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். என்று கூறுகின்றது.

அத்துடன் அப்படிப்பட்ட பிரிவனைவாதிகளான அவர்களை ஒரு காலம் வரை அவர்களது அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டு விட வேண்டும். என்றும் மேற்படி வசனத்தின் வாயிலாக வழிகாட்டப்ட்டுள்ளோம்.

எனவே மேற்படி வசனத்தின்படி சமூக ஒற்றுமையைப் பற்றிய எவ்வித கரிசனையும் அற்ற அனைத்துத் தரப்பினர்களையும் புறந்தள்ளி பொது மக்களாகிய நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸின்பால் ஒன்றுபடுதல் அவசியமாகும்.

இஸ்லாம் முழுமையானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு மார்க்கமாகும் அது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியானதும் மிகச்சிறந்ததுமான வழிகாட்டலினைத் தன்னகத்தே கொணடுள்ளது என்பதனை ஏற்றிருக்கும் நாம் இஸ்லாம் பற்றிய எமது அறியாமையின் காரணமாக இஸ்லாத்தை ஆண்மீகம் இலௌகீகம் என்று பிரித்துப் பாhக்கின்றோம். ஆதலால்தான் இஸ்லாத்தின் விரோதிகளால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்ககும் அச்சறுத்தல்கள் ஏற்படுத்தப்படுகின்ற போதெல்லாம் அல்குர்ஆனின் பக்கமும் அல்ஹதீஸின் பக்கமும் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவ்விரண்டையும் முற்று முழுதாகப் புறக்கனித்துவிட்டு வேறு வழிகளைத் தேடுவதன் மூலம் சமூகத்தை வேறு விதமாக திசை திருப்புகின்றோம்.

இந்நிலையில் யாராவது ஒருவர் அல்-குர்ஆனின் பக்கமும் அல்ஹதீஸின் பக்கமும் கவனம் செலுத்துங்கள் அதிலே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்று கூறினால் சில சமூகப் புல்லுரிவிகள் அரசியலுக்குள் இஸ்லாத்தைப் புகுத்த வேண்டாம் என்று கூறி அவர்களின் இஸ்லாம் பற்றிய ஞானசூன்யத்தினை வெளிப்படுத்துகிறார்கர்ள். இது அவர்களின் இஸ்லாம் பற்றிய அறியாமையின் அதி உச்சகட்டமாகும் என்றே கூற வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - அவர்கள்தான் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். (அல்-குர்ஆன்: 30: 7)

முனாப் நுபார்தீன்



Jaffna Muslim: ஞானசாரர் விடயத்தில் பொய் சொல்லும், ஜனாதிபதி ஊடகப் ...

Jaffna Muslim: ஞானசாரர் விடயத்தில் பொய் சொல்லும், ஜனாதிபதி ஊடகப் ...: ஜனாதிபதி மைத்திரிபால ஊடகப் பிரிவினால்  jaffna muslim இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபுர்வ ஊடக அறிக்கையில் ஞானசாரர் தேரர்  ஜப்ப...

இது ஒரு முடிவுரை அல்ல தொடர்கதை…


இது ஒரு முடிவுரை அல்ல தொடர்கதை…


இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறைகள் என்பது இன்று நேற்று தற்செயலாக உருவானதொன்றல்ல மாறாக இது அன்று முதல் இன்று வரை இந்த நாட்டை ஆட்சி செய்து வரக்கூடிய அத்தனை தலைவர்களாலும் கட்சிகளாலும் அவ்வப்போது அவர்களின் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அல்லது ஆடசியைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் காலா காலமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வரக்கூடிய ஒன்றாகும்.

எப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதற்கு அல்லது ஆட்சியை அடைந்து கொள்வதற் அல்லது தங்கள் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு தேவை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவர்கள் பயன்படுத்தும் ஒரே உபாயம் இனவாதமேயாகும் என்பதுதான் நமது இலங்கை அரசியலின் நீண்டகால அரசியல் வரலாற்று உண்மையாகும் 

முப்பதாண்டு காலம் இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததனால் அக்காலப்பகுதியில் மாத்திரம் அரசியல்வாதிகளால் தங்களது இனவாதத்தினை நம்பக்கம் செலுத்துவதற்கான எந்தவொரு தேவைப்பாடோ அல்லது அதற்குண்டான சந்தர்ப்ப சூழ்நிலைகளோ இருக்கவில்லை ஆதலால் அக்காலப்பகுதியில் அந்தப் பணியை ஆயுதம் தாங்கிய அரக்கர்களான புலி தீவிரவாதிகள் நம் மக்கள் மீது அரங்கேற்றினார்கள்.

அத்துடன் கண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய சில தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு விட்டதனாலும் இது பற்றி விசாரனை நடாத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப் படுவதனாலும் இத்துடன் நமக்கெதிரான இந்த இனவாதத்திற்கும் வண்முறைகளுக்கும் முடிவுரை எழுதப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதென்று நாம்  நினைத்து விடக் கூடாது இவைகள் அனைத்தும் வெறும் கண் துடைப்பு மாத்திரமே என்பதை நமது நீண்டகால அரசியல் வரலாறு தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

ஆகவே அரசுத் தலைமைகளுக்கு எப்பொழுதெல்லாம் இவ்வாறான தேவைகள் ஏற்படுகின்றனவோ அவ்வேளைகளில் மீண்டும் இவ்வாறான இனவாதம் அரங்கேற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் மீண்டும் மீண்டும் விழுந்த  குழியிலேயே விழாது மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் எந்நேரமும் விழிப்பாக இருப்பதுடன் இதற்கு முடிவுரை எழுதி முற்றுப் புள்ளி வைப்பதற்கும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்தல் மிகவும் அவசியமாகும்.


இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்

ஞாயிறு, 11 மார்ச், 2018

நமது சமூகம் பலமிக்கதொரு சக்தியாக கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம்



அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் ஏகன் அல்லாஹ்வின் திருப் பெயரால்

நமது சமூகம் பலமிக்கதொரு சக்தியாக கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம்


பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும்.

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு

இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் இன்றய 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம் முதல் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அண்மைக் காலமாக முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு, வணக்க வழிபாடுகள், மதக்கிரியைகள், மதக்கலாச்சாரம், மதஸ்தலங்கள் மொத்தத்தில் இஸ்லாமிய வரையறைக்குள் அதன் கலாச்சார விழிமியங்களுடன் வாழ்தல் என்பது போன்ற அத்தனைக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதைப் பார்க்கின்றோம்.

ஓவ்வொரு முறையும்  நம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் அராஜகங்களும் அரங்கேற்றப்படுகின்ற வேளைகளில் மாத்திரம் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஆளுக்காள் அரிக்கைகளை விடுவதும் அதன் பிறகு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பது போல் அது பற்றிய எவ்வித சிந்தனையுமின்றி அமைதி காப்பதுவுமே எமது வழமையாக  இருந்து கொண்டிருக்கின்றது. இதுவே நாம் அடிக்கடி தாக்கப்படுவதற்கான பிரதாண காரணியாகும்.   
          
எனவே இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம், எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் மற்றும் ஆண்மீகரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட வினாக்களுக்கு விடை காணாமல், முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்;.

இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 70 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றன, இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக  ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் எக்குறையுமின்றி திட்டமிட்ட அடிப்படையில் மிகவும் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன என்பதனை நாமனைவரும் நன்கு அறிவோம், இலங்கை முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இவ்வாறான இந்த நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச் சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது ஒவ்வொரு தனிமனிதனும் இதை தனக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

ஏனெனில்  நமது சமூகம் கமூக, சமய, அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை. 
இந்த வரலாற்றுத் தொடரில் முன்னய காலங்களில் நமது அரசியல் தலைமைகள் எப்படிப்பட்ட சவால்களையும் தனித்து நின்று எதிர்கொள்ளக் கூடிய வகையில்; அன்றய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் களநிலவரமும் ஓரளவேனும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இன்றைய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் களநிலவரமும்; தலைமை, நிறுவாகம், சட்டம், ஒழுங்கு போன்ற அனைத்துப் பகுதிகளிலும்; மிகவும் பாதகமான சூழ்நிலையையே தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் நமது கடந்தகால அரசியல் தலைமைகளை உதாரணம் காட்டி அவர்களால் சாதிக்க முடிந்ததை ஏன் இன்றய நமத அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியாதுள்ளது என்று கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பது ஒரு ஆரோக்யமான அனுகுமுறையாக அமையாது. 

ஏனெனில் இன்றைய இந்த சமூக மற்றும் அரசியல் சூழ்நிலை நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டியதாகவே உருவெடுத்துள்ளது என்பதுவே யதார்த்தமான களநிலவரமாகும்.

எனவே பல தசாப்த்தங்களாக நம் சமூகம் வேண்டி நிற்க்கும் மிக முக்கிய ஒரு விடயமான இந்த சகோதரத்துவம், சமூக ஒற்றுமை, மற்றும் தலைமைத்துவம் ஆகியவை வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இன்று மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினர்களது ஆதங்கமும் ஏக்கமும் எந்த வகையிலேனும்; இவற்றை அடைந்தே தீர வேண்டும் என்பதாகவே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இதன் பிறகும் அது வெறும் பேச்சுப் பொருளாக இருப்பதனை அனுமதிக்க முடியாது, என்ன வில கொடுத்தேனும் அதனை அடைந்தேத் தீர வேண்டும் என்பதுவே நம் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு முறண்பட்டுக கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103);

எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் 'நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து நம் சமூகத்தைப் பலமிக்க ஒரு சமூகமாக் கட்டியெழுப்பி நமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒரே அனியாக நின்று தொடராக முன்னெடுத்துச் செல்வதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கை கோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோ, அவர்களைத்தான் அல்லாஹ் நிச்சயமாக நேசிக்கின்றன். (அல்-குர்ஆன்: 61:4)

எமது போராட்டம் பிரிவினைவாதங்களைக் கடந்து நின்று ஒரே அணியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மேற்படி வசனம் தெளிவு படுத்துகின்றது.

ஆகவே நம் சமூகத்தின் சகோதரத்துவத்தினை மீழ்கட்டியெழுப்பி சமூக ஐக்கியத்தினை உறுதிப்படுத்தி அதன் அடித்தளத்தில் நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பலமிக்கதொரு சக்தியாக மாற்றுவதற்க்கு உங்கள் அனைவரதும் பங்களிப்புக்களும் பாரியளவில் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன் இது தொடர்பான கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் மாநாடுகளும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படல் வேண்டும்.

ஆதலால் அதன் முதற்கட்டமாக நமது அனைத்துத் தரப்பு அரசியல் தலைமைகளுடனான கலந்துரையாடலைக் காலதாமதமின்றி நடாத்துதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் அவசியமாகும்.

அதனடிப்படையில் எமது நோக்கம் அதனூடாக நாம் அடைந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் இலக்கு அந்த இலக்கை அடைவதற்க்கான எமது செயற்திட்டங்கள் ஆகியவை பின்வருமாறு அமையப் பெறுகின்றன. 

எமது நோக்கு: 


பக்கச் சார்பு இயக்கச் சார்பு மற்றும் கட்ச்சிச் சார்பற்றதும், நேர்மையானதும், தூய்மையானதுமான திறமையும் சுணிச்சலுமிக்கதும் எந்தவொரு சக்த்திக்கும் விலை போய் விடாததும் அல்லாஹ்வைத் தவிர வேறெந்தவொரு சக்த்திக்கும் அஞ்சாத அத்துடன் தூர நோக்குடன் கூடிய சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியதான பொதுவான நடுநிலையானதொரு தலைமையினை அடையாளம் கண்டு ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்துப் பொறுப்புக்களையும் பொறுப்பேற்க்கச் செய்தல்.

எமது இலக்கு : 


இலங்கை வாழ் நமது முஸ்லிம் சமூகத்தை;தை ஆண்மீகம், ஈமான், இறையச்சம், சகோதரத்துவம் ஐக்கியம் ஆண்மீக மற்றும் இலௌகீகக் கல்விப் பொருளாதாரம் அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் கூடிய பலமிக்கதொரு சக்தியாகக் கட்டியெழுப்பப்படுதல்.

எமது செயற்திட்டங்கள்; :


1. நாளுக்கு நாள் நலிவடைந்து சென்று கொண்டிருக்கும் நமது சகோதரத்துவத்தினை மீழ் கட்டியெழுப்பும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்

2. சகோதரத்தவத்தினைக் கட்டி எழுப்புவதற்க்குத்; தடையாக இருக்கும் காரணிகள் என்ன என்பது பற்றி இனங்கண்டு அவற்றை முற்றாகக் கழைவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

3. ஒவ்வொரு தனிமனிதன், இயக்கங்கள், அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் முடிந்த வரை நம் சகோதரத்துவத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் அரிக்கைகள் விமர்சனங்கள் போன்ற அத்தனை விதமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்ளும் வகையிலான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல். 

4. இப்பணி அரசியல் தலைவர்களுக்கு அல்லது சமயத் தலைவர்களுக்கு மாத்திரம் கடமையான ஒன்றல்ல. மாறாக  நம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களுக்கும் கடமையாகும் என்பதை அனைவருக்கும் உணரச் செய்தல்.

5. அனைத்து விதமான அரசியல் மற்றும் சமயப் பிரிவுகளுக்கு வெளியே நின்று என்றாலும் அவை அனைத்துத் தரப்பினர்களையும் உள்வாங்கிய வகையிலும் எவ்வித பக்கசார்பும் அற்ற நிலையிலும் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் மட்டும் அனைவர்களையும் ஒன்றிணைத்தல்

6. ஒவ்வொரு தனிமனிதன்;, இயக்கங்கள், அல்லது அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களையும் தங்களுக்குத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணித்து அனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் பொதுவான கொள்கையின் பால் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருதல்;.

7. அனைத்துத் தரப்பினர்களும் தரத்தினர்களும் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ளும் வகையிலான ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குதல்;.

இவை ஒரு இலகுவான கருமமன்று நம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரதும் உளப்பூர்வமான ஒத்துழைப்பின்றி இது அசாத்தியமே எனவே எமக்கு மத்தியில் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்டத் தலைமைத்துவமும் கட்டி எழுப்பப்பட்டாக வேண்டும் என்பதில் உண்மையாளர்களாக இருப்பவர்கள் மேற்படி எமது முன்னெடுப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குவீர்கள் என்றே நம்புகின்றோம். 

எனவே இது சம்மந்தமான தாங்களின் மேலானக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எமக்கு வழங்குமாறு உரிமையுடனும் அன்புடனும் மிகத்தாழ்மையுடனும் எதிர்பார்கின்றோம்.


முடியாது என்று முயற்ச்சியே செய்யாதிருப்பதைவிட, 
முயற்ச்சி செய்து முடியாமல் போவது சிறந்ததாகும் 
என்றே கருதுகின்றோம்


இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன் - ஜே. பி.
ஸ்தாபக் தலைவர், பணிப்பாளர்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொடர்புகளுக்கு : : 0715654580


சனி, 10 மார்ச், 2018

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்

ஜனாதிபதி ஆணைக்குழுவில்
முஸ்லிம் பிரதிநிதிகளும் 

இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்


அண்மைக் காலமாக நம் நாட்டில் அலுத்கம ஜின்தொட்ட அம்பாறை மற்றும் கண்டி உட்பட பல பாகங்களிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அவ்வப்பேர்து அரங்கேற்றப்படுகின்ற வண்முறைகளின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதற்காக சுவாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி இணைய ஊடகங்கள் வாயிலாக நாம் அரசைக் கேட்;டிருந்தோம். 

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய உட்பட இன்னும் பல பகுதிகளில் இடம்பெற்ற வண்செயல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மாணித்திருப்பதானது சிறந்ததொரு முன்மாதிரியாகும்.

;அத்துடன் மேற்படி ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவ்வாறே அலுத்கம ஜின்தொட்ட அம்பாறை போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற வண்செயல்கள் தொடர்பிலும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்களை கண்டறியும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அதிமேதகு ஜனாதபதி அவர்களை வலியுறுத்துமாறு நமது பாறாளுமன்ற உறுப்பினர்களை வேண்டிக்கொள்கின்றேன்.


இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்
பணிப்பாளர்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொ.பே. 0715654580


புதன், 7 மார்ச், 2018

குற்றவாளிகளை இணங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

குற்றவாளிகளை இணங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

 
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்தினையும் காடைத்தனத்தினையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
அத்துடன் அலுத்கம நிகழ்வு உட்பட  அப்போதைய மஹிந்த ஆட்சியின் போது எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான வண்செயல்கள் நடைபெற்றனவோ அவைகளுக்கு மஹிந்த அரசும் அவ்வாறே நல்லாட்சியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்டதான திகன தெல்தெனிய உட்பட அனைத்துத் தாக்குதல்களுக்கும் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இந்த அரசின் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரனில் ஆகியோர் பொறுப்புச் சொல்லி ஆகவேண்டும்.
 
மறைமுகமாக ஒருவரையொருவர் குறை சொல்லிக் குற்றச்சாட்டிக் கொண்டிருக்காது அனைத்திற்கும் சுவாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பக்கசார்பற்ற முறையில் விசாரனைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை இணங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.
 
இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்-ஜே.பி
பணிப்பாளர்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொ. பே. 0715654580, 0724589459

நமது வெற்றியின் இரகசியம் தேசிய ஒற்றுமை

بسم الله الرحمن الرحيم

நமது வெற்றியின் இரகசியம் தேசிய ஒற்றுமை


நமது தேசிய ஒற்றுமையின் அவசியம் பற்றி இதற்கு முன்னரும் நாம் பல ஆக்கங்களை பல இணையதள ஊடகங்களில் பதிவிட்டிருந்தோம் என்பதை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம். என்றாலும் தொடர்ந்தும் அது வலியுறுத்தப்பட வேண்டியத் தேவை இருப்பதனைத் தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் எனும் பெருந்தன்மையினாலே இதனையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

எமது இந்த ஆக்கத்தின் நோக்கம்; யாரையும் குறைகாண வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும் என்பதல்ல நாம் இதுகாலம் வரைக்கும் யாரையும் விமர்சித்ததும் கிடையாது அவ்வாறு விமர்சிப்பதை அங்கீகரித்ததும் கிடையாது என்றாலும் நம் சமூகத்தின் குறிப்பாக அப்பாவிகளான பொது மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையே இந்த ஆக்கத்தை எழுதத் தூண்டியது. எனவே இதன் மூலம் எவருடையயாவது உள்ளம் பாதிக்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக எம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு, வணக்க வழிபாடுகள், மதக்கிரியைகள், மதக்கலாச்சாரம், மதஸ்தலங்கள் மொத்தத்தில் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ்தல் என்பது போன்ற அத்தனைக்கும் எதிரான அச்சுறத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதைப் பார்க்கின்றோம். இதே நேரம் தற்பொழுது தற்போதைய நல்லாட்சியில் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத அளவு முஸ்லிம்களுக்கெதிரான வண்செயல்கள் நாடளாவிய ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இவைகளுக்கும் நாம் செய்யப் போகும் எதிர் நடவடிக்கை அறிந்ததே வழமை போல் ஒரு அறிக்கை, பத்துடன் பதினொன்றாக ஒரு முறைப்பாடு அவ்வளவுதான் அதற்க்கப்பால் ஒரு அடி கூட எடுத்து வைக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் நாதியற்ற ஒரு சமூகமாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இந்நிலையில் இப்படியான கோழைத் தனமான ஒரு கேடு கெட்ட வாழ்க்கை இப்புவியில் நாம் வாழத்தான் வேண்டுமா? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. ஆண்டாண்டு காலம் கோளைகளாக வாழ்வதை விட வீரனாக ஒரு வினாடி வாழ்ந்து மடிவது ஏற்புடையதே.

இவை இத்தனை நடந்தும் நம் சமூகம் இன்னும் தனது பிரிவினைவாத அரிசியல் மற்றும் இயக்கவாத வறட்டுப் பிடிவாதம் போன்ற ஜாஹிலிய்யா நிலையிலிருந்து ஒரு அங்குலமேனும் அசைந்ததாக, நகர்ந்ததாகத் தெரியவில்லை என்பதை நினைக்கும் போது நாம் உண்மையில் முஸலிம்கள்தானா? என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.

நாம் இங்கு ஜாஹிலியத் என்று குறிப்பிடுவது சிலருக்கு அஜீர்ணமாகக் கூட இருக்கலாம் என்றாலும் அதுதான் உண்மை என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்திருப்பான் என்றே நம்புகின்றோம் ஏனெனில் இயக்கவாதமும் பிரிவினைவாதமும் ஜாஹிலிய்யாக் கால செயல்களிள் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள் தங்களது தஃவா வழிமுறையில் ஈமானுக்கு அடுத்ததாகச் செய்த பணி இந்த இரண்டு ஜாஹிலிய்யத்தையும் சமூகத்திலிருந்து வேரறுத்ததுத் துடைத்தெறிந்ததுதான்.

எனவே நம் சமூகத்தின் அரசியல் மற்றும் சமயத் தலைமைகளிடம் ஒரு வேண்டுகோள், தயவு செய்து உங்களுடைய அரசியலையும் அதிகாரங்களையும் பட்டங்களையும் பதிவிகளையும் வறட்டு இயக்க கௌரவங்களையும் சொத்து சுகங்களையும் நீங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள் அதனை நாம் தடுக்கவில்லை என்றாலும் இன்று நம்மை சூழ்து கொண்டிருக்கும் இந்தப் பேரினவாத நச்சுப் புகை மண்டளத்திற்க்கு நாம் இப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்து முடிவு காணத் தவறின் அது நம் சமூகத்தின் வருங்கால சந்ததியினர்கள் அதன் கொடுரமானத் தாக்குதலிலிருந்து வெளியேற முடியாத ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வரலாற்றுத் தவறை நாம் செய்து விடக் கூடாது என்று உங்களைப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே தயை கூர்ந்து நம் வருங்கால சந்ததியினர்களைக் கருத்தில் கொள்ளுங்கள், ஆதலால் உங்களுடைய அரசியல் பிரிவினை மற்றும் சமயப் பிரிவினையிலிருந்து சற்று அல்லாஹ்வுக்காக வெளியேறுங்கள். வாருங்கள் நாமனைவரும் முஸ்லிம் என்ற ஒரே அடிப்படையின் கீழ் ஒன்று படுவோம்;;. காலத் தாமதமின்றி அவசரமாகக் ஒரு தேசிய தலைமையைக் கட்டியெழுப்புவோம் அந்தத் தலைமையை நமது ஒற்றுமையின் மூலம் பலப்படுத்துவோம். அதன் ஊடாக நமது உரிமைகளைப் பாதுகாப்போம் இழந்தவைகளை மீட்டெடுப்போம்.

நாம் இன்று சிறு சிறு இழப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதானது நம்மை மென்மேலும் பலவீனப்படுத்தி நாளை பெரும் இழப்புக்களைச் சந்திக்கச் செய்து விடும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே இன்றே தயாராகுங்கள் இந்த எமது உரிமைப் போராட்டத்திற்கு எம்மால் முடிந்தத் தியாகங்களைச் செய்வோம் அதில் ஏற்படுகின்ற அத்தனைத் தடைகளையும் உடைத்தெறிவோம். நாம் தயாரானால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி நம்மை நோக்கி விரைந்து வரக்காத்திருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.(அல்-குர்ஆன் : 47 : 7)
அவ்வாறு அல்லாஹ் நமக்கு உதவினால் நிச்சயமாக நம்மை எந்தவொரு சக்தியும் ஒன்றும் செய்து விட முடியாது


அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை யாரும் மிகைத்து விட முடியாது. (அல்-குர்ஆன் : 3: 160)


இந்த அறப் போராட்டத்தில் நாம் அடைய இருப்பது வெற்றி அல்லது வீர மரணமாகக்கூட இருக்கலாம் நாம் இன்று முஸ்லிம்களாக இருப்பதற்கும் இஸ்லாம் இப்பூமியில் வாழ்வதற்கும் நம் முன்னோர்களின் உதிரமும் உயிருந்தான் உரமாக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்ப்போம் நம் முன்னோர்கள் செய்யாத தியாகங்களையா நாம் செய்யப் போகின்றோம் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

நம் முன்னோர்கள் இஸ்லாம் இந்தப் பூமியில் வாழ வேண்டும் அது உலகை ஆள வேண்டும் என்பதற்காக உயிருடன் நெருப்பிலிடப்பட்டார்கள் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள். இரும்பு சீப்புக்களால் வாரப்பட்டார்கள் பாலைவணத்தில் நெருப்பாகக் கொதிக்கும் சுடு மணலில் படுக்க வைத்து பாறாங்கற்கள் ஏற்றப்பட்டார்கள் பெரும் கிடாரங்களில் கொதிக்கும் எண்ணையில் போடப்படார்கள் இத்தனை இத்தனைத் தியாகங்களைத் தாங்கிக் கொண்டு வந்ததுதான் இந்த இஸ்லாம் இதுதான் நமது வரலாறு.

இந்த வரலாற்றை நோக்கித்தான் இன்று இஸ்லாம் மீண்டு கொண்டிருக்கின்றது. இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவித்தல் செய்துள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக இஸ்லாத்தின்;; தோன்றம் விசித்திரமானதே அது எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே விசித்திரமான நிலைக்கு மீண்டு விடும்.
• அப்போது அந்த விசித்திரமானவர்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும்.
• அவர்கள் அதிகமான கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைவான நல்ல மனிதர்களாவார்கள்.
• அவர்கள் மனிதர்கள் வழிகேட்டில் செல்லும் போது அவர்களை நேர்வழிப் படுத்துபவர்களாவார்கள்'
(முஸ்லிம், அஹமத் அல்-இபானத்துல் குப்ரா)


ஆம் இன்றய உலகம் இந்த சிறுபாண்மையினர்களான நன்மக்களைத்தான் வேண்டி நிற்கின்றது அவர்களால்தான் இந்த சமூகத்தைச் சீர் பெறச் செய்ய முடியும். அவர்களால்தான் இந்த சமூகத்தை ஒன்று படுத்தி ஓரணித்திரட்ட முடியும். எங்கே அவர்கள்? ஏன் அவர்கள் களமிறங்கும் காலம் இன்னும் வரவில்லையா? அல்லது அத்தகய நன்மக்கள் எவருமே நமக்குமத்தியில் இல்லையா?

இல்லாமலில்லை அவர்கள் நம்மத்தியில் இல்லாமல் இதன் பிறகு பிறந்து வரக்கூடியவர்கள் அல்ல, மாறாக நமக்குள்ளேதான் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் அவர்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளத் தயங்குகின்றார்கள் நாம் தௌபா செய்து இதன் பிறகு அவ்வாறானப் பாவங்களில் ஈடுபடாது எம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நல்லறங்களில் எம்மை ஈடுபடுத்த மக்களை நல்வழிப் படுத்த உறுதி பூனுவோமாகவிருந்தால் நாம்தான் அந்த நன்மக்கள். இன்னும் ஏன் அந்த நன்மக்களில் எம்மை ஆக்கிக் கொள்ள நாம் தயக்கம் காட்ட வேண்டும்.

தயங்கியது போதும் இன்றேத் தயாராகுங்கள்; சகோதரர்களே நாம் அல்லாஹ்விடம் தௌபா செய்து நம்மை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்குவோம் சாலிஹான நல்லமற்களில் நம்மை ஈடுபடுத்துவோம் மக்களை நேர்வழிப்படுத்துவோம். அப்போது நமது கடந்த கால பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுவது மட்டுமின்றி அவைகள் நமக்கு நன்மைகளாகவும் மாற்றப்படும் என்று அருளாளன் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அப்போது நாமும் மேற்கூறப்பட்ட அந்த நன்மக்களாகி விடலாம்.


அல்லாஹ் கூறுகின்றான் : தௌபா செய்து (அல்லாஹ்வை) விசுவாசித்து நற்கருமங்கள் செய்யக்கூடிய அவர்களுக்கு அவர்களது பாவங்களை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிக் கொடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளனகவும் அருளாளனாகவும் இருக்கின்றான் (அல்-குர்ஆன் : 25 : 70)


எமது இந்த அழைப்பானது இஸ்லாத்தின் எதிரிகளை நிலை குலையச் செய்யும்; எமது வெற்றி என்பது நிச்சயமாக எண்ணிக்கையிலோ படைப் பலத்திலோ அல்லது ஆயுதப் பலத்திலோ கிடையாது மாறாக ஈமானிய பலத்திலும் ஒற்றுமையிலும்தான் நமது வெற்றியின் இரகசியம் அமையப் பெற்றிருக்கின்றது. இது இரண்டையும்தான் நாம் இன்று இழந்து விட்டு எதுவெதுவோ பேசிக் கொண்டிருக்கின்றோம். பேசிப்பேசி காலம் கடத்தியது போதும் வாருங்கள் நமது விரோதிகளுக்கெதிராக நம்மைத் தயார் படுத்திக் கொண்டு ஒரே அணியாய் களமிறங்குவோம்.


அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது. (அல்-குர்ஆன் : 9:41,42)


எனவே யாரெல்லாம் அரசியல் இலாபம் மற்றும் சமூகப் பிரபல்யம் போன்ற குறுகிய நோக்கங்களின்றி இதய சுத்தியுடன் அல்லாஹ்வுக்காக என்று மட்டும் நம் சமூகத்தைப் பற்றிக் கவலைப் படுகின்றார்களோ அவர்கள் அனைவரும் நம் சமூக வெற்றிக்குத் தடையாக விளங்கக் கூடிய அத்தனையையும் தனது முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு சமூகத்தைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.

அவ்வாறின்றேல் நமது சமூகம் பற்றியக் கவலை மற்றும் கரிசனை என்பது வெறும் சந்தர்ப்ப வாதமானதும் போலித்தனமானதும் மட்டுமின்றி கூடவே நயவஞ்சகத்தனமானதுமாகவே அமையும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ்வே அனைத்துக்கும் போதுமானவன். அவனுக்கே அனைத்துப் புகழும் الحمد لله


முனாப் நுபார்தீன்.

 
 

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...