بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் எனும் எமது அமைப்பு இயக்கசார்பின்றி நடுநிலையான ஒரு சமுதாயத்தினைக் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்க மற்று கட்ச்சி வேறுபாடுகளுக்கு வெளியே நின்று நடுநிலயாக செயல்பட ஆர்வமுள்ள சகோதரர்களிடமிருந்து ஆக்கபூர்வமான அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேர்க்கின்றோம்.
சனி, 28 ஜூன், 2014
வியாழன், 26 ஜூன், 2014
சனி, 21 ஜூன், 2014
பத்ர் களம்: அஜித் ரோஹன - பொதுபலசேனாவின் ஊடகப் பேச்சாளா்?
பத்ர் களம்: அஜித் ரோஹன - பொதுபலசேனாவின் ஊடகப் பேச்சாளா்?: பொலிஸாருக்கும் அதன் கூட்டாளியான பொதுபலசேனாவுக்கும் கொழும்பு ஹா்த்தால் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது! பொய் வதந்திகளைப் பரப்பி ம...
வியாழன், 19 ஜூன், 2014
கெபித்திகொள்ளாவையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகள் உடைப்பு
கெபித்திகொள்ளாவையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகள் உடைப்பு
இன்று இரவு (19-06-2014) அனுராதபுர கெப்பித்திகொள்ளாவ நகரில் நமது முஸ்லிம் சகோதரர்கள் இருவருக்குச் சொந்தமான லங்கா ஹார்ட்வெயார் மற்றும் சென்றல் பொயின்ட் ஆகிய இரண்டு கடைகள் இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நகரில் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சிலர் இது முஸ்லிம் விரோத சக்கிகளின் செயலாகவே இருக்கும் என்றும் இன்னும் சிலர் அவ்வாறில்லை இது கள்வர்களின் செயல் என்றும் மற்றும் சிலர் இது முஸ்லிம்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல் என்றும் கருத்துக்கள் தெரிவித்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
கிரிபாவையில் கவன ஈர்ப்க் கூட்டம்
கிரிபாவையில் கவன ஈர்ப்க் கூட்டம்
அண்மைக் காலமாக பொது பள சேனா எனும் இனவாதப் பாசிசக் கும்பலினது தொடர்ச்சியான அராஜகத்திற்க்கும் தாக்குதல்களக்கும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல்முணையிலும் முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றோம். அதன் அதி உச்சகட்டமாக கடந்த 2014- 06-15; திகதி நான்கு உயிர்களையும் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும் பலி கொடுத்துள்ளோம்.
இந்நிலையில் உலகயாவிய அளவில் நமது சகோதரர்கள் பல்வேறுபட்ட கவன ஈர்ப்புப் பேரணிகளையும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து இதனை உலகமயப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் நாமும் எமது சக்திக்குட்பட்ட அளவில் எமது கிராமத்தை மைய்யப்படுத்தி சிறிய அளவிலான ஒரு கவன ஈர்ப்புக் கூட்டம் ஒன்றினை நேற்றய முன்தினமான 17-06-2014 ம் திகதி ஏற்பாடு செய்திருந்தோம்.
இக்கூட்டத்தை எமது பள்ளிவாயலுக்கு அருகாமையில் நடாத்துவதற்கு நாம் முற்பட்ட போது எமது கிராமத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் அதனைத் தடுத்துத் தற்பொழுது குறித்தப் பிரதேசத்தில் எவ்விதப்பிரச்சினையும் கிடையாது அங்கு பூரண அமைதி நிலவுகின்றது எனவே இவ்வாறானதொரு கூட்டம் தேவையற்ற ஒன்று என்று வாதித்தார்கள்.
இறுதியில் நாம் எமது தீர்மாணத்தில் உறுதியாக இருப்பதனை அறிந்த அவர்கள் எம்மை குறிப்பிட்டக் கூட்டத்தினைப் பாதையில் நடாத்த வேண்டாம் என்றும் அப்படி நடாத்தியே ஆக வேண்டும் என்றிருந்தால் அதனைப் பள்ளிவாயலில் ஒலிபெருக்கியின்றி நடாத்துமாறும் ப.ப.சபைத் தலைவர் ஊடாக வேண்டிக் கொண்டார்கள்.
அந்த வேண்டுகோலுக்கு இணங்க நாம் எமது கவன ஈர்ப்புக் கூட்டத்தினை அல்லாஹ்வின் அருளால்; பள்ளி வாயலில் நடாத்தி முடித்தோம். மேற்படி கூட்டத்திற்கு அதிகமான இழைஞர்களும் சாதாரண பாமரர்களும் பங்கேற்றனர் என்றாலும் படித்தவர்களும் நாம் புத்திஜீவிகள் என எவர்களை எண்ணி இருந்தோமோ அவர்கள் எவரையும் குறித்தக் கூட்டத்தில் பார்க்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதே.
இப்படியான பல்லுருவிகளான நமது பிரமுகர்களே நமது தொடர் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாகும் என்றால் அது மிகையாகாது.
என்றாலும் நம்மவர்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இக்கூட்டத்தினை நடாத்தி முடிக்க அருள் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
முனாப் நபார்தீன்.
செவ்வாய், 17 ஜூன், 2014
இனவாதத்திற்க்கெதிரான கவன ஈர்ப்புப் போராட்டம்.
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
இலங்கையில் அனுராதபுர அட்டப் பொக்குன ஸியாரத் தகர்புடன் ஆரம்பமான இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான அத்து மீறல்கள் இன்று அலுத்கமயில் இனக்கலவரமாகப் பரினாமம் பெற்று மூன்று முஸ்லிம் உயிர்களையும் பல மில்லியன் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களையும் பலி கொண்டுள்ளதுடன் நூற்றுக்கனக்கான நம் சகோதரர்களை பாசிச கும்பல்களின் அடிதடிகளுக்கும் ஆளாக்கியுள்ளதானது இந்த நாட்டின் முஸ்லிம் விரோத போக்குடையக் காவிக் காடையர்களின் அராஜகத்தின் அதி உச்ச கட்ட வளர்ச்சியினைப் பறைசாட்டுவதாகவுள்ளது.
இந்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியவர்கள் வழமை போன்று சட்டத்தை யாரும் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அவரின் வழமையான பளய பல்லவியையே இம்முறையும் பாடிக் கொண்டிருக்கின்றார்.
அவ்வாறே ஏனைய அரசத் தலைவர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பௌத்த பிக்குகள் அரசத் தலைவர்கள் அதிகாரிகள் புத்திஜீவிகள் போன்றோரை உள்ளடக்கிய அமைப்பொன்றை ஏற்ப்படுத்தி குறித்தப் பிரதேசத்தில் இதன் பிறகு இவ்வாறான இனக்கலவரங்கள் ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவும் அவர்களின் பளய பல்லவிதான்.
உண்மையில் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டில் இனவாதம், இனக்கலவரம் போன்றவைகளை விரும்பவில்லை என்பது உண்மையாகவிருந்தால் அவர் செய்ய வேண்டிய முதற்பணி இவ்வாறான இனவாதங்களை அதிகாரபூர்வமாக அரங்கேற்றிக் கொண்டிருக்க்கக் கூடிய பொது பள சேனா என்ற அமைப்பைத் தடை செய்து அதன் செயலாளர் அதி பயங்கரவாதி ஞானசாராவைக் கைது செய்ய வேண்டும். அவ்வாறின்றேல் ஜனாதிபதி ஒரு நயவஞ்சகர் என்றே கூற வேண்டியுள்ளது.
எனவே மேற்படி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு கூட்டம் ஒன்று இன்ஷா அல்லாஹ் இன்று 17 -06 -2014 ம் திகதி பி.ப. 5.00 மணிக்கு கிரிபாவை ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு அருகாமையில் நடாத்துவதற்க்குத் தீர்மாணித்துள்ளோம். எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
திங்கள், 16 ஜூன், 2014
காவிக் காடையர்களுக்ெகதிராக அணிதிரள்வோம்
காவிக் காடையர்களுக்ெகதிராக அணிதிரள்வோம்
அன்டையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
அலுத்கம நமது சகோதரர்களுக்கு எதிரான இரத்த வெறி பிடித்தக் காவிக் காடையர்களின் அராஜகம் மிகவும் தீவிரமாக அரங்கேறிக் கொண்டிருப்பதாக உடகங்கள் தொடர்ந்து செய்தி வௌியிட்டுக் கொண்டிருக்குன்றன
எனவே இந்த அரக்கர்களின் வெறியாட்டத்திற்க்கு எதிராக முஸ்லிம் அரசுயல் மற்றும் சமயத் தலைமைகள் இயக்கங்கள் தனித்தனியாகப் பிரிந்து செயல்படாது ஒன்றுபட்டு செயல்பட முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்,
والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا : "
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக'' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
4:76 .நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
எங்கே அந்த உதவியாளர்கள்? எங்கே அந்த பாதுகாவலர்கள்
எங்கே அந்த நம்பிக்ைகயாளர்கள்?
எங்கே அந்த அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள்.
அணிதிரளுங்கள் அல்லாஃ்வின் உதவி வெகு தொலைவில் இல்லை
முனாப் நுபார்தீன்,
ஞாயிறு, 15 ஜூன், 2014
வியாழன், 12 ஜூன், 2014
செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே.
بسم الله الرمن الرحيم
அல்-ஹதீஸ் விளக்கவுரை
அரபி மூலம் : கலாநிதி ரீம் அப்துல் முஹ்சின் அஸ்-சுவைலம்
தமிழாக்கம் : முனாப் நுபார்தீன்
செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே.
ஹப்ஸாவின் தந்தை விசுவாசிகளின் தலைவர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் : செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே. எனவே நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியது உண்டு. எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தேயாகும். இன்னும் எவன் ஒருவனுடைய ஹிஜ்ரத் உலக நன்மையை அடைவதற்காகவோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ என்றிருந்தால் அவனது ஹிஜ்ரத்தானது – அவன் எதற்காக ஹிஜ்ரத் செய்தானோ அதற்காகவே ஆகும்! (நூல்: புகாரி, முஸ்லிம்)
விளக்கவுரை:
அஃமால் (செயல்கள்) எனும் அரபுச் சொல் அமல் (செயல்) எனும் சொல்லின் பன்மைச் சொல்லாகும். அது உள்ளத்தின் செயல்கள் நாவின் செயற்பாடுகள் மற்றும் அனைத்து அவயவங்களதும் செயல்களை உள்ளடக்கும். அவ்வாறே இவ்வாக்கியமானது செயல்களையும் அவற்றின் வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.
உள்ளத்திற்கும் சில செயற்பாடுகள் இருக்கின்றன. அதாவது அல்லாஹ்மீது பொறுப்பு சாற்றுதல், அவன்பால் மீழுதல் மற்றும் அவனுக்கு அஞ்சி நடத்தல் போன்ற செயல்கள் உள்ளத்தின் செயல்களாகும்
.
நாவின் செயற்களாவன : நாவினால் மொழிதலைக் குறிக்கும் நாவின் வார்த்தைகள்தான் மிக அதிகமானவையாகும்
அவ்வாறே அவயங்களது செயற்கள் : இரு கை, இரு கால்கள் மற்றும் அவை போன்ற ஏனைய அவையவங்களின் செயல்களைக் குறிக்கும்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்பதன் பொருள்:
நிய்யாத் (எண்ணங்கள்) என்ற அரபுப்பதம் நிய்யத் (எண்ணம்) என்ற அரபுச் சொல்லின் பண்மைச் சொல்லாகும். அதாவது நோக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
ஷரீஆவின் (மார்க்கத்தின்) பார்வையில் எண்ணம் என்பது : அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையும் வகையிலான ஒரு செயலை செய்வதற்கு உறுதி கொள்ளுதலாகும். அதன் இடம் உள்ளமாகும் இது உள்ளம் சார்ந்த செயலாகும் அவையவங்களை இதனுடன் சம்மந்தப்படுத்த முடியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதை எண்ணினானோ அதுவே கிடைக்கும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த எண்ணத்தின் நோக்கம் வழமையான நடவடிக்கைகளிலிருந்து வணக்கங்களைப் பிரித்தறிதலும் வணக்கங்களிலும் சிலதிலிருந்து மற்றும் சிலதைப் பிரித்தறிதலுமாகும்.
வணக்கங்களிலிருந்து வழமையான நடைமுறைகளைப் பிரித்தறிதலானது :
உதாரணம்:
1. ஒரு மனிதன் உணவை தன் விருப்பத்திற்காக மட்டும் உட்கொள்கின்றான் இன்னொரு மனிதன் ''உண்ணுங்கள், குடியுங்கள்' (அல்-அஃராப் :31) எனும் வல்லாஹ்வின் கட்டளைக்காக என்று உண்ணுகின்றான்இ எனவே இரண்டாவது நபரின் உண்ணல் வணக்கமாகவும் முதலாவது நபரின் உண்ணல் வழமையான நடைமுறையாகவும் அமைந்து விடுகிறது.
2. ஒரு மனிதன் உஷ்ணத்தைக் குறைப்பதற்காகக் குளிக்கின்றான் இரண்டாம் நபர் பெருந்தொடக்கை நீக்குவதற்காகக் குளிக்கின்றான் முதலவது வழமையான நடைமுறையாகவும் இரண்டாவது வணக்கமாகவும் அமையும். ஆகவே மனிதன் பெருந் தொடக்குடையவனாக இருக்கும் நிலையில் அவன் உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக என்று கடலில் மூழ்கிக் குளித்து விட்டு பிறகு தொழுதால் அவனின் தொழுகை செல்லாது, ஏனெனில் எண்ணம் மிக முக்கியமானதாகும் அவன் வணக்கத்தை எண்ணவில்லை உஷ்ணத்தைத் தவிர்ப்பதைத்தான் அவன் எண்ணியிருந்தான்.
வணக்கங்களில் சிலதிலிருந்து மற்றும் சிலதைப் பிரித்தறிதலானது :
உதாரணம்:
ஒரு மனிதன் அபரிமித வணக்கம் எனும் எண்ணத்தில் இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுகின்றான். அடுத்தவன் கடமையான வணக்கத்தை எண்ணியவனாக இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுகின்றான். இந்த இரு வணக்கங்களும் எண்ணத்தின் அடிப்படையிலேயே பிரித்தறியப்படும் அதாவது ஒன்று நபிலாகவும் மற்றயது கடமையானதாகவும் உள்ளன.
நிச்சயமாக எண்ணத்தின் இடம் உள்ளமாகும் அது மொழியப்படவே கூடாது. ஏனெனில் நீ கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் நன்கு அறிந்தவனையே வணங்குகிறாய். அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாவான். ஆதலால்தான் நபி (ஸல்) அவர்களிடமிருந்தோ அல்லது அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அன்னாரின் தோழர்களிடமிருந்தோ அவர்கள் நிய்யத்தை (எண்ணம்) வாயால் மொழிந்தார்கள் என்ற செய்திகள் எதுவும் பதிவாகவில்லை. ஆகவே நிய்யத்தை (எண்ணம்) மொழிதல் பித்அத் ஆகும் அது சப்தமாகவிருந்தாலும் சரி அல்லது சப்தமில்லாமல் இருந்தாலும் சரி அது தடுக்கப்பட்டதேயாகும்.
'உண்மையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே உண்டு' இதுதான் செயற்களுக்குரிய (நிய்யத்) எண்ணமாகும். இதில்தான் அநேகமான மனிதர்கள் பெரும் அளவில் தவறிவிடுகின்றார்கள். தொழுகின்ற இரண்டு மனிதர்களைப் போன்று அவர்களின் தொழுகைக்கு மத்தியில் நன்மையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் போன்ற அல்லது வானத்திற்கும் பூமியிற்கும் போன்ற இடைவெளி காணப்படும். ஏனெனில் அவர்களிருவரில் ஒருவனின் எண்ணம் கலப்பற்றதாக இருந்தது மற்றவவனுடைய எண்ணம் கலப்பற்றதாக இருக்கவில்லை.
ஆவ்வாறே ஏகத்துவம் அல்லது மார்க்கச் சட்டக் கலை அல்லது அல்-குர்ஆன் விரிவுரை அல்லது நபி மொழிகளைக் கற்கக் கூடிய இரண்டு நபர்களில் ஒருவன் சுவர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானவனாகவும், மற்றயவன் சுவர்க்கத்திற்கு மிகவும் தூரமானவனாகவும் காணப்படலாம். இருவரும் ஒரே நூலையே படிக்கின்றார்கள், ஒரே ஆசிரியரிடமே கற்கின்றார்கள் அவர்களுள் ஒருவன் தான் ஒரு காழியாக (உயர் அதிகாரி) வேண்டும் ஒரு காழியிற்கு உயர்ந்த ஊதியமும் உயர் அந்தஸ்தும் கிடைக்கின்றன எனும் நோக்கத்தில் மார்க்கச் சட்டக் கலையைக் கற்கின்றான் மற்றவன் தான் கற்று ஒரு மார்க்க அறிஞனாகி முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் மார்க்கச் சட்டக் கலையைக் கற்கின்றான் ஆகவே அவர்கள் இருவருக்கும் இடையே மிகப் பெரும் வேறுபாடு காணப்படுகின்றன.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் திருப்திக்காக கற்கப்பட வேண்டி கல்வியை எவன் ஒருவன் இந்த அற்ப உலகை அடைந்து கொள்ள வேண்டும் என்று கற்கின்றானோ அவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்' (நூற்கள்: அஹ்மத், இபுனு மாஜா, அபூதாவூத்)
அடுத்ததாக நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹிஜ்ரத் செய்பவனை உதாரணம் சுட்டிக் காட்டியுள்ளார்கள்: அதாவது எவரது ஹிஜ்ரத் 'அமைகின்றதோ' என்ற வார்த்தையின் மூலம். ஹிஜ்ரத் என்ற வார்த்தை ஹஜர என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும் அரபு மொழியில் ஹஜர என்ற சொல்லின் பொருள் விட்டு விடுதல் என்பதாகும். சரீஆவின் அடிப்படையில் காபிரான ஒரு நாட்டை விட்டு விட்டு இஸ்லாமிய நாட்டுக்குக் குடிபெயர்தலைக் குறிக்கும்.
இந்த இடத்தில் ஒரு வினா எழுகின்றது அதாவது ஹிஜ்ரத் செய்தல் கட்டாயமான ஒரு கடமையா? அல்லது சுன்னத்தா ஒரு வழி முறையா?
இதற்க்கான பதில்: காபிரான நாட்டில் தனது இஸ்லாத்தினை பகிரங்கப்படுத்த முடியாத போது ஹிஜ்ரத் செய்வது ஒவ்வொரு விசுவாசியின் மீதும் கட்டாயமான கடமையாகும் ஏனெனில் ஹிஜ்ரத் செய்தாலேயன்றி அதனை பகிரங்கப்படுத்த முடியாது எனும் போது அவனது இஸ்லாம் முழுமை பெற முடியாது. எந்தவொன்று இல்லாது ஒரு கடமை முழுமை பெற முடியாதோ அந்தவொன்றும் கடமையாகும். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து ஹபஷாவிற்கு அல்லது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததைப் போன்று.
எனவே யாருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் என்றிருக்கின்றதோ அது அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவுமே இருக்கும். அதாவது ஒரு மனிதன் மக்கா வெற்றிக்கு முன்னர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நாடியவனாக மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்ததைப் போன்று அதாவது அல்லாஹ்வின் வெகுமதியை நாடி : ''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், 33:29. என்று அல்லாஹ் சொல்வதைப் போன்று.
இங்கு அல்லாஹ்வை விரும்புதல் என்பது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுதலையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினையும் விரும்புதலாகும். இத்தகைய விருப்பம் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதரை விரும்புதல் என்பது : அவரது நட்பின் மூலம் வெற்றியடைதலாகும் அதாவது நபிவழியில் செயல்படல், அவர்களது சுன்னாவைப் பாதுகாத்தல் அதன்பால் மக்களை அழைத்தல் அவரது மார்க்கத்தினைப் பரப்புதல் போன்றவைகளாகும். எனவே இவைகள் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் செய்கின்ற ஹிஜ்ரத்தாகும்.
இங்கு ஒரு கேள்வி :நபி (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பிறகு நாம் நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் செய்யலாமா?
பதில் : அவர் ஒரு நபர் என்றவகையில் இன்று மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய கூடாது. ஏனெனில் அவர் (உயிருடன் இல்லை) மண்ணுக்கடியில் உள்ளார். என்றாலும் அவர்களது சுன்னத்திற்காகவும் சரீஆவுக்காகவும் ஹிஜ்ரத் செய்யலாம் அதன் மீது ஆசையும் காட்டப் பட்டுள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் சரீஆவிற்கு உதவுவதற்காகவும் அதனைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு ஊருக்குச் செல்வதைப் போன்றதாகும். அவ்வாறே அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தல் எப்பொழுதும் எவ்வேளையிலும் உண்டு. ஆனால் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது சரீஆவையும் நோக்கிய ஹிஜ்ரத் அவர்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமேயாகும். அவர்கள் வபாத்தானதன் பின் அன்னாரது சரீஆவின் பால் மாத்திரமே ஹிஜ்ரத் செய்யலாம்.
எவன் ஒருவனுடைய ஹிஜ்ரத் உலகத்திற்காகவும் அதன் நன்மையை அடைவதற்காகவும் என்றிருந்தால் என்பதன் பொருள் :
அதாவது ஒருவன் ஒரு குறிப்பிட்ட ஊரில் இலாபகரமான ஒரு வியாபாரம் இருப்பதாக அறிந்து இலாபம் பெற வேண்டும் எனும் நோக்கில் அங்கு செல்கின்றான் இந்த அவனது ஹிஜ்ரத்தானது உலக நன்மையை அடைவதையே நோக்காகக் கொண்டதாகும். அவன் நாடியதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் கிடைக்கப் போவதில்லை. இன்னும் அல்லாஹ் அவனுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென்று நாடினால் அப்போது அவனுக்கு எதுவும் கிடைக்காது.
அல்லது ஒருப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக' (என்பதன் பொருள்) ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்குச் செய்யும் ஹிஜ்ரத்தாகும், உதாரணமாக ஒருவனுக்குத் திருமணம் பேசப்பட்டப் ஒரு பெண் அவனை அவனது ஊரை விட்டு விட்டு தனது ஊருக்கு குடிபெயர்ந்தால்தான் தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாகக் கூறியமைக்காக ஒருவன் மேற்கொள்ளும் ஹிஜ்ரத் இந்த ஹிஜ்ரத் அவன் எதற்காக மேற்கொண்டானோ அதற்காகவே ஆகும்.
இந்த நபிமொழயானது இஸ்லாத்தின்; சுழற்ச்சி அமையப் பெற்றிருக்கும் நபி மொழிகளுள் ஒன்றாகும். எனவேதான் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்: இரண்டு நபி மொழிகள் மீதே இஸ்லாத்தின் சுழற்ச்சி அமைந்துள்ளது. அவ்விரண்டில் ஒன்று இந்த நபி மொழியாகும், மற்றயது அன்னை ஆயிஷா (ரழி) அன்ஹா அவர்கள் அறிவிக்கும் '' யார் ஒரு செயலைச் செய்து அதில் எமது கட்டளை இல்லையோ? அது நிராகரிக்கப்படும்' என்ற நபி மொழியாகும்.
இந்த நாம் விளக்கத்திற்க்கு எடுத்துக் கொண்ட நபி மொழி உள்ளங்களின் செயற்பாடுகளின் அடிப்படையாகும், எனவே இது மறைவான செயற்பாடுகளின் அளவுகோலாகக் கொள்ளப்படும்.
ஆன்னை ஆயிஷா (ரழி) அன்ஹா அவர்களின் அறிவிப்பு அவயவங்களின் செயற்பாடுகளின் அடிப்படை பற்றியதாகும். எனவே அது வெளிப்படையான செயற்பாடுகளின் அளவு கோலாகக் கொள்ளப்படும்.
உதாரணமாக :
மிகவும் தூய எண்ணம்; கொண்ட ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நற்கூலியையும் சங்கைமிகு சுவர்க்கத்தையும் எதிர்பார்க்கின்றான், என்றாலும் அதிகமான நூதன செயல்களில் வீழ்ந்து விடுகின்றான் அவனது எண்ணத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அது சிறந்த எண்ணமாக இருக்கின்றது, என்றாலும் அவனது செயற்பாட்டின் அடிப்படையில் பார்க்குகின்ற போது அது மிக மோசமான நிராகரிக்கப்படத்தக்கதாக காணப்படுகின்றது காரணம் அது ஷரீஆவுடன் உடன்பட்டதாக இல்லை.
இந்த நபி மொழியின் சில நற்பயன்கள்:
1. நபி (ஸல்) அவர்களின் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே எனும் கூற்றிற்கிணங்க வணக்கவழிபாடுகளில் சிலதில் இருந்து சிலதைப் பிரித்தறிதல் கட்டாயமாகும். இன்னும் நடைமுறைகளிலிருந்து வழிபாடுகளையும் பிரித்தறிதல் அவசியமாகும் இதற்கு நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அதாவது ஒரு மனிதன் ழுஹர் தொழ விரும்புகின்றான் என்றால் அவன் ஏனையத் தொழுகைகளிலிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ழுஹர் தொழுவதாக எண்ணுதல் கட்டாயமாகும்.
2. அல்லாஹ்வுக்காக என்று மட்டும் கலப்பற்ற எண்ணம் பற்றி தூண்டப்பட்டுள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இங்கு மனிதர்களை இரு பிரிவாகப் பிரிக்குகின்றார்கள்:
முதற்பிரிவு : தனது கல்வியின் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமையின் வீட்டையும் விரும்புபவர்கள்.
மற்;றையப் பிரிவு : அதற்கு நேர் மாற்றமானதாகும். இங்குதான் அல்லாஹ்வுக்காக என்று கலப்பற்ற தூய எண்ணம் வலியுறுத்தப் படும்.
கலப்பற்ற தூய எண்ணம் பற்றி தூண்டப் படுதலும் அதனைக் கவத்தில் கொள்ளுதலும் கட்டாயமாகும். ஏனெனில் மனிதன் படைக்கப்பட்டதன் மிக முக்கிய நோக்கம் அதுவாகும் அல்லாஹ் கூறுகின்றான்: நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல்-குர்ஆன் : 51: 56)
3. நிச்சயமாக ஹிஜ்ரத் நற்செயற்களில் நின்றும் உள்ளதாகும், ஏனெனில் அதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கமாகக் கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நிச்சயமாக நற்செயற்களில் நின்றும் உள்ளதாகும் நிச்சயமாக நீ அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாடினால் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குதலே வணக்கமாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் நம் நபியும் தூதருமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அமைதியும் கருனையும் அருள்வானானகவும்.
அனைத்துப் புகழும் அகிலத்தாரின் அதிபதி அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.
தமிழாக்கம் : முனாப் நுபார்தீன் (சமாதான நீதவான்)
பணிப்பாளர் : அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
புதன், 11 ஜூன், 2014
நமது வெற்றியின் இரகசியம் தேசிய ஒற்றுமை
بسم الله الرحمن الرحيم
நமது வெற்றியின் இரகசியம் தேசிய ஒற்றுமை
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
நமது தேசிய ஒற்றுமையின் அவசியம் பற்றி இதற்கு முன்னரும் நாம் பல ஆக்கங்களை பல இணையதள ஊடகங்களில் பதிவிட்டிருந்தோம் என்பதை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம். என்றாலும் தொடர்ந்தும் அது வலியுறுத்தப்பட வேண்டியத் தேவை இருப்பதனைத் தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் எனும் பெருந்தன்மையினாலே இதனையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
எமது இந்த ஆக்கத்தின் நோக்கம்; யாரையும் குறைகாண வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும் என்பதல்ல நாம் இதுகாலம் வரைக்கும் யாரையும் விமர்சித்ததும் கிடையாது அவ்வாறு விமர்சிப்பதை அங்கீகரித்ததும் கிடையாது என்றாலும் நம் சமூகத்தின் குறிப்பாக அப்பாவிகளான பொது மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையே இந்த ஆக்கத்தை எழுதத் தூண்டியது. எனவே இதன் மூலம் எவருடையயாவது உள்ளம் பாதிக்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக எம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்.
இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு, வணக்க வழிபாடுகள், மதக்கிரியைகள், மதக்கலாச்சாரம், மதஸ்தலங்கள் மொத்தத்தில் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ்தல் என்பது போன்ற அத்தனைக்கும் எதிரான அச்சுறத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதைப் பார்க்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களுக்குள் சுமார் 280 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்று அவை தொடர்பான முறைப்பாடுகள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் தேங்கிக்கிடக்கும் இதே நேரம் தற்பொழுது ஜெய்லானி பள்ளிவாயலின் மீது பெரினவாதம் அதன் கோரப் பார்வையைச் செலுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது இவ்வாறு இருக்க ஒரு சில தினங்களுக்கு முன் பதுள்ளையில் 14 வயதே ஆன பள்ளிச் சிறுவன் ஒருவன்; தொப்பி அணிந்து கொண்டு பாதையில்; சென்றான் என்ற ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று கூட பாராது இனவாத பாசிசப் பேய்களால் தாக்கப்பட்டான் என்பதுவும் நாம் அறிந்ததே அத்துடனாவது அவர்களின் அடாவடித்தனம் அங்கு முடிவுற்றதா என்றால் அதுவும் இல்லை இந்த ஆக்கத்தினை எழுதிக் கொண்டிருக்கும் போதே (2014-06-10) பதுள்ளையில் முஸ்லிம் ஒருவரின் கடை ஊழியர்; காவிக் காடையர்கள் உள்ளிட்ட கயவர்களால் தாக்கப்பட்டதாகவும் கடை முற்றுகையிடப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவைகளுக்கும் நாம் செய்யப் போகும் எதிர் நடவடிக்கை அறிந்ததே வழமை போல் ஒரு அறிக்கை, பத்துடன் பதினொன்றாக ஒரு முறைப்பாடு அவ்வளவுதான் அதற்க்கப்பால் ஒரு அடி கூட எடுத்து வைக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் நாதியற்ற ஒரு சமூகமாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இந்நிலையில் இப்படியான கோழைத் தனமான ஒரு கேடு கெட்ட வாழ்க்கை இப்புவியில் நாம் வாழத்தான் வேண்டுமா? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. ஆண்டாண்டு காலம் கோளைகளாக வாழ்வதை விட வீரனாக ஒரு வினாடி வாழ்ந்து மடிவது ஏற்புடையதே.
இவை இத்தனை நடந்தும் நம் சமூகம் இன்னும் தனது பிரிவினைவாத அரிசியல் மற்றும் இயக்கவாத வறட்டுப் பிடிவாதம் போன்ற ஜாஹிலிய்யா நிலையிலிருந்து ஒரு அங்குலமேனும் அசைந்ததாக, நகர்ந்ததாகத் தெரியவில்லை என்பதை நினைக்கும் போது நாம் உண்மையில் முஸலிம்கள்தானா? என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.
நாம் இங்கு ஜாஹிலியத் என்று குறிப்பிடுவது சிலருக்கு அஜீர்ணமாகக் கூட இருக்கலாம் என்றாலும் அதுதான் உண்மை என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்திருப்பான் என்றே நம்புகின்றோம் ஏனெனில் இயக்கவாதமும் பிரிவினைவாதமும் ஜாஹிலிய்யாக் கால செயல்களிள் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள் தங்களது தஃவா வழிமுறையில் ஈமானுக்கு அடுத்ததாகச் செய்த பணி இந்த இரண்டு ஜாஹிலிய்யத்தையும் சமூகத்திலிருந்து வேரறுத்ததுத் துடைத்தெறிந்ததுதான்.
எனவே நம் சமூகத்தின் அரசியல் மற்றும் சமயத் தலைமைகளிடம் ஒரு வேண்டுகோள், தயவு செய்து உங்களுடைய அரசியலையும் அதிகாரங்களையும் பட்டங்களையும் பதிவிகளையும் வறட்டு இயக்க கௌரவங்களையும் சொத்து சுகங்களையும் நீங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள் அதனை நாம் தடுக்கவில்லை என்றாலும் இன்று நம்மை சூழ்து கொண்டிருக்கும் இந்தப் பேரினவாத நச்சுப் புகை மண்டளத்திற்க்கு நாம் இப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்து முடிவு காணத் தவறின் அது நம் சமூகத்தின் வருங்கால சந்ததியினர்கள் அதன் கொடுரமானத் தாக்குதலிலிருந்து வெளியேற முடியாத ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வரலாற்றுத் தவறை நாம் செய்து விடக் கூடாது என்று உங்களைப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
எனவே தயை கூர்ந்து நம் வருங்கால சந்ததியினர்களைக் கருத்தில் கொள்ளுங்கள், ஆதலால் உங்களுடைய அரசியல் பிரிவினை மற்றும் சமயப் பிரிவினையிலிருந்து சற்று அல்லாஹ்வுக்காக வெளியேறுங்கள். வாருங்கள் நாமனைவரும் முஸ்லிம் என்ற ஒரே அடிப்படையின் கீழ் ஒன்று படுவோம்;;. காலத் தாமதமின்றி அவசரமாகக் ஒரு தேசிய தலைமையைக் கட்டியெழுப்புவோம் அந்தத் தலைமையை நமது ஒற்றுமையின் மூலம் பலப்படுத்துவோம். அதன் ஊடாக நமது உரிமைகளைப் பாதுகாப்போம் இழந்தவைகளை மீட்டெடுப்போம்.
நாம் இன்று சிறு சிறு இழப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதானது நம்மை மென்மேலும் பலவீனப்படுத்தி நாளை பெரும் இழப்புக்களைச் சந்திக்கச் செய்து விடும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே இன்றே தயாராகுங்கள் இந்த எமது உரிமைப் போராட்டத்திற்கு எம்மால் முடிந்தத் தியாகங்களைச் செய்வோம் அதில் ஏற்படுகின்ற அத்தனைத் தடைகளையும் உடைத்தெறிவோம். நாம் தயாரானால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி நம்மை நோக்கி விரைந்து வரக்காத்திருக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.(அல்-குர்ஆன் : 47 : 7)
அவ்வாறு அல்லாஹ் நமக்கு உதவினால் நிச்சயமாக நம்மை எந்தவொரு சக்தியும் ஒன்றும் செய்து விட முடியாது
அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை யாரும் மிகைத்து விட முடியாது. (அல்-குர்ஆன் : 3: 160)
இந்த அறப் போராட்டத்தில் நாம் அடைய இருப்பது வெற்றி அல்லது வீர மரணமாகக்கூட இருக்கலாம் நாம் இன்று முஸ்லிம்களாக இருப்பதற்கும் இஸ்லாம் இப்பூமியில் வாழ்வதற்கும் நம் முன்னோர்களின் உதிரமும் உயிருந்தான் உரமாக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்ப்போம் நம் முன்னோர்கள் செய்யாத தியாகங்களையா நாம் செய்யப் போகின்றோம் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
நம் முன்னோர்கள் இஸ்லாம் இந்தப் பூமியில் வாழ வேண்டும் அது உலகை ஆள வேண்டும் என்பதற்காக உயிருடன் நெருப்பிலிடப்பட்டார்கள் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள். இரும்பு சீப்புக்களால் வாரப்பட்டார்கள் பாலைவணத்தில் நெருப்பாகக் கொதிக்கும் சுடு மணலில் படுக்க வைத்து பாறாங்கற்கள் ஏற்றப்பட்டார்கள் பெரும் கிடாரங்களில் கொதிக்கும் எண்ணையில் போடப்படார்கள் இத்தனை இத்தனைத் தியாகங்களைத் தாங்கிக் கொண்டு வந்ததுதான் இந்த இஸ்லாம் இதுதான் நமது வரலாறு.
இந்த வரலாற்றை நோக்கித்தான் இன்று இஸ்லாம் மீண்டு கொண்டிருக்கின்றது. இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவித்தல் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக இஸ்லாத்தின்;; தோன்றம் விசித்திரமானதே அது எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே விசித்திரமான நிலைக்கு மீண்டு விடும்.
• அப்போது அந்த விசித்திரமானவர்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும்.
• அவர்கள் அதிகமான கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைவான நல்ல மனிதர்களாவார்கள்.
• அவர்கள் மனிதர்கள் வழிகேட்டில் செல்லும் போது அவர்களை நேர்வழிப் படுத்துபவர்களாவார்கள்' (முஸ்லிம், அஹமத் அல்-இபானத்துல் குப்ரா)
ஆம் இன்றய நம் சமூகம் இந்த சிறுபாண்மையினர்களான நன்மக்களைத்தான் வேண்டி நிற்கின்றது அவர்களால்தான் இந்த சமூகத்தைச் சீர் பெறச் செய்ய முடியும். அவர்களால்தான் இந்த சமூகத்தை ஒன்று படுத்தி ஓரணித்திரட்ட முடியும். எங்கே அவர்கள்? ஏன் அவர்கள் களமிறங்கும் காலம் இன்னும் வரவில்லையா? அல்லது அத்தகய நன்மக்கள் எவருமே நமக்குமத்தியில் இல்லையா?
இல்லாமலில்லை அவர்கள் நம்மத்தியில் இல்லாமல் இதன் பிறகு பிறந்து வரக்கூடியவர்கள் அல்ல, மாறாக நமக்குள்ளேதான் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் அவர்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளத் தயங்குகின்றார்கள் நாம் தௌபா செய்து இதன் பிறகு அவ்வாறானப் பாவங்களில் ஈடுபடாது எம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நல்லறங்களில் எம்மை ஈடுபடுத்த மக்களை நல்வழிப் படுத்த உறுதி பூனுவோமாகவிருந்தால் நாம்தான் அந்த நன்மக்கள். இன்னும் ஏன் நாம் அந்த நன்மக்களில் எம்மை ஆக்கிக் கொள்ள தயக்கம் காட்ட வேண்டும்.
தயங்கியது போதும் சகோதரர்களே இன்றேத் தயாராகுங்கள்; நாம் அல்லாஹ்விடம் தௌபா செய்து நம்மை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்குவோம், சாலிஹான நல்லமற்களில் நம்மை ஈடுபடுத்துவோம் மக்களை நேர்வழிப்படுத்துவோம். அப்போது நமது கடந்த கால பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுவது மட்டுமின்றி அவைகள் நமக்கு நன்மைகளாகவும் மாற்றப்படும் என்று அருளாளன் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அப்போது நாமும் மேற்கூறப்பட்ட அந்த நன்மக்களாகி விடலாம்.
அல்லாஹ் கூறுகின்றான் : தௌபா செய்து (அல்லாஹ்வை) விசுவாசித்து நற்கருமங்கள் செய்யக்கூடிய அவர்களுக்கு அவர்களது பாவங்களை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிக் கொடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளனகவும் அருளாளனாகவும் இருக்கின்றான் (அல்-குர்ஆன் : 25 : 70)
எமது இந்த அழைப்பானது இஸ்லாத்தின் எதிரிகளை நிலை குலையச் செய்யும்; எமது வெற்றி என்பது நிச்சயமாக எண்ணிக்கையிலோ படைப் பலத்திலோ அல்லது ஆயுதப் பலத்திலோ கிடையாது மாறாக ஈமானிய பலத்திலும் ஒற்றுமையிலும்தான் நமது வெற்றியின் இரகசியம் அமையப் பெற்றிருக்கின்றது. இது இரண்டையும்தான் நாம் இன்று இழந்து விட்டு எதுவெதுவோ பேசிக் கொண்டிருக்கின்றோம்.
பேசிப்பேசி காலம் கடத்தியது போதும் வாருங்கள் நமது விரோதிகளுக்கெதிராக நம்மைத் தயார் படுத்திக் கொண்டு ஒரே அணியாய் களமிறங்குவோம்.
அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது. (அல்-குர்ஆன் : 9:41,42)
எனவே யாரெல்லாம் அரசியல் இலாபம் மற்றும் சமூகப் பிரபல்யம் போன்ற குறுகிய நோக்கங்களின்றி இதய சுத்தியுடன் அல்லாஹ்வுக்காக என்று மட்டும் நம் சமூகத்தைப் பற்றிக் கவலைப் படுகின்றார்களோ அவர்கள் அனைவரும் நம் சமூக வெற்றிக்குத் தடையாக விளங்கக் கூடிய அத்தனையையும் தனது முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு சமூகத்தைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.
அவ்வாறின்றேல் நமது சமூகம் பற்றியக் கவலை மற்றும் கரிசனை என்பதுவெல்லாம் வெறும் சந்தர்ப்ப வாதமானதும் போலித்தனமானதும் மட்டுமின்றி கூடவே நயவஞ்சகத்தனமானதுமாகவே அமையும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.
அல்லாஹ்வே அனைத்துக்கும் போதுமானவன். அவனுக்கே அனைத்துப் புகழும்
الحمد لله
முனாப் நுபார்தீன்.
செவ்வாய், 10 ஜூன், 2014
அல்-குர்ஆன் விளக்கவுரை - அல்-அஸ்ர் அத்தியாயம்
بسم الله الرمن الرحيم
அல்-குர்ஆன் விளக்கவுரை - அல்-அஸ்ர் அத்தியாயம்
وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும், எவர்கள்
1. ஈமான் கொண்டு
2. ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,
3. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து,
4. மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர . (அல்-குர்ஆன் : 103 : 1-3)
மேற்படி அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள நான்கு செயல்களில் தனது காலத்தையும் நேரத்தையும் கழிக்கத் தவறும் ஒருவன் நிச்சயமாக மிகப்பெரும் நஷ்டவாளி என்பதனை வல்ல அல்லாஹ் இங்கு உணர்த்துகின்றான்.
இங்கு வல்ல அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து இருப்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் பல்வேறு படைப்புக்கள் மீது வல்ல அல்லாஹ் சத்தியம் செய்வதனைப் பார்கின்றோம்.
உதாரணமாக : والفجر வைகறையின் மீது சத்தியமாக والضحى காலைப் பொழுதின் மீது சத்தியமாக والنهار பகல் பொழுதின் மீது சத்தியயமாக والليل இரவின் மீது சதிதியமாக والشمس சூரினின் மீது சத்தியமாக والقمر சந்தினின் மீது சத்தியமாக والسماء வானத்தின் மீது சத்தியமாக والأرض பூமியின் மீது சத்தியமாக என்று இது போன்ற இன்னும் அதிகமான படைப்புக்கள் மீது சத்தியமிட்டு விட்டு அதன் பிறகு சில குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி பேசுகின்றான்.
என்றாலும் இங்கு நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த அத்தியாயத்தில் காலத்தின் மீது சத்தியமிட்ட வல்ல அல்லாஹ் மனிதனுடைய வாழ்க்கையின் மிக முக்கிய மூலப் பொருளாக இருக்கக் கூடிய முழு காலத்தைப் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.
ஏனெனில் நிச்சயமாக மனிதனுடைய வாழ்க்கையின் மூலப் பொருள் இந்தக் காலமேயாகும் எனவே இந்தக் காலத்தை மேற்படி அல்-குர்ஆன் கோடிட்டுக் காட்டுகின்ற அந்த நான்கு விடயங்களில் பயன்படுத்தத் தவறும் மனிதர்கள் உண்மையில் நஷ்டவாளிகளே என்று தீர்ப்பளிக்கின்றான்.
காரணம் ஒரு மனிதனின் வாழ்கையில் மிகவும் முக்கியமான விலை மதிக்க முடியாத ஒரு அருளாக இருப்பது இந்த காலம்தான், ஏனெனில் ஒருமனிதன் நன்மை செய்து சுவர்க்கம் அடைவதாயினும் சரி அல்லது உழைத்து மிகப்பெரும் ஒரு செல்வந்தனாவதாயினும் சரி அல்லது படித்து பட்டங்கள் பெறுவதாயினும் சரி அவனுக்கு மிகவும் இன்றியமையாத தேவையாக இருப்பது இந்த காலம்தான் கால அவகாசமின்றி யாராலும் எதுவும் செய்ய முடியாது. எனவே இத்தகைய பெறுமதி மிக்க காலத்தை அதன் பெறுமதியை உணராது வீணில் கழிக்கும் ஒருவன் நிச்சயமாக மிகப்பெரும் நஷ்டவாழியேயாவான் என்பதில் சந்தேகம் கிடையாது.
மேற்படி அத்தியாயத்தில் எமது காலங்கள் முழுவதும் பின்வரும் நான்கு விடயங்களில் கழிக்கப்படுகின்ற போதே நாம் நம்மை நஷ்ட்டத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உணர்த்துகின்றதைப் பார்கின்றோம்.
1. விசுவாசம் கொள்ளுதல்
வெற்றியாளனிடம் இருக்க வேண்டிய முதல் பண்பு விசுவாசமாகும் அதாவது அல்லாஹ்வை அறிந்து அவனை விசுவாசம்; கொள்வதாகும். அல்லாஹ்வைப் பற்றி அறியாத ஒருவன் நிச்சயமாக அவனை விசுவாசிக்க மாட்டான் ஆகவே விசுவாசம் என்பது 'இல்மு' மார்க்கக்கல்வி, 'தக்வா' இறையச்சம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்
ஒரு மனிதன் அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற போது அவனைப் பயப்படுவான். அப்படிப் பயப்படுகின்ற போது அல்லாஹ்வையும் அவனது ஏவல் விலகள்களையும் அறிந்து கொள்ள முட்படுவான். அப்படி முற்படுகின்ற போது அல்லாஹ் அவனுக்கு மார்க்கக் கல்வியை வழங்குகின்றான். எனவே வெற்றியாளனின் முதல் பண்பு அல்லாஹ்வைப் பற்றிய அறிவைத் தேடுவதும், அவனை விசுவாசிப்பதும் எனலாம்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக (அல்-குர்ஆன்: 47:19)
2. சாலிஹான நல் அமல்கள் செய்தல்
அல்லாஹ்வை ஈமான் (விசுவாசம்) கொண்டு அல்லாஹ்வையும் அவனது ஏவல் விலகல்களையும் அறிந்து கொண்ட ஒருவன் அவற்றை தனது வாழ்கையில் கடைப்பிடுத்தொழுகுவதுவே ஸாலிஹான நல்லமல் எனப்படும், எனவே முதல் பண்பு ஈமானும் அதனைக் கற்றலும் என்றால் இரண்டாம் பண்பாக தான் கற்றதை தனது வாழ்வில் செயல் படுத்துதல் எனலாம். இவ்வாறு அல்லாஹ்வை விசுவாசித்து நல்லமற்க்கள் செய்வோருக்கு அவர்களின் பாவங்கள் நன்மைகளாக மாற்றப்டும் என்று வல்ல அல்லாஹ் வாக்கழிக்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.(அல்-குர்ஆன் : 25 : 70, 71)
3. ஒருவருக்கொருவர் சத்தியத்தி (நன்மை யி)னை உபதேசம் செய்தல்
எனவே முதல் பண்பு ஈமானும் அதனைக் கற்றலும் , இரண்டாம் பண்பு தான் கற்றதை தனது வாழ்வில் நடைமுறைப்; படுத்துதல் மூன்றாம் பண்பு தான் படித்து தனது வாழ்கையில் கடைப்பிடித்தொழுகும் வாழ்கையினை பிறர்களுக்கும் பிரச்சாரம் செய்தல் எனலாம். இது அனைவரதும் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்). (அல்-குர்ஆன்: 49 : 33)
4. ஒருவருக்கொருவர் பொறுமை உபதேசித்தல்
எனவே முதல் பண்பு ஈமானும் அதனைக் கற்றலும் , இரண்டாம் பண்பு தான் கற்றதை தனது வாழ்வில் செயல் படுத்துதல் மூன்றாம் பண்பு தான் படித்து தனது வாழ்கையில் கடைப்பிடித்தொழுகும் வாழ்கையினை பிறர்களுக்கும் பிரச்சாரம் செய்தல் எனவே நான்காம் பண்பு தான் அறிந்து விசுவாசித்து அதனை தன் வாழ்விலும் கடைப்பிடித்துப் பிறருக்கும் பிரச்சாரம் செய்தல் போன்ற விடயங்களில் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கைகொள்ளுதல் எனலாம்.
ஒருவன் அல்லாஹ்வை விசுவாசித்து இஸ்லாத்தைப் படிப்பதற்கும், தான் படித்ததை தனது வாழ்கையில் செயல் படுத்துவதற்கும், தான் படித்து தனது வாழ்கையில் செயல் படுதியதைப் பிறருக்குப் பிரச்சாரம் செய்வதற்கும் அவனிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்றுதான் பொறுமை எனும் பிரகாசம். இந்த பிரகாசத்தில்தான் அனைத்து நல்லறங்களும் ஒளி பெறுகின்றன. ஆதலால்தான் தொழுகையையை ஒளி என்று வர்ணித்த நபி (ஸல்) அவர்கள் பொறுமை அந்தத் தொழுகையைப் பிரகாசிக்கச் செய்யும் பிரகாசமாகும் என்ற கருத்தில் விளக்கியுள்ளார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் : சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா) தர்மம் ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (நூல் :ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
எனவே நிச்சயமாக பொறுமை எனும் பிரகாசமற்ற ஒருவனால் இஸ்லாத்தைப் படிக்கவோ, அதனை விசுவாசிக்கவோ, தனது வாழ்வில் செயல்படுத்தவோ, அல்லது பிறருக்குப் பிரச்சாரம் செய்யவோ முடியாது.
பொறுமை பிரகாசமாகும்
பிரகாசம் என்பதற்க்கு அறிஞர்கள் பல்வேறு விழக்கங்களைக் கொடுக்கின்றனர் அவற்றுள் ஒருசிலதை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
இப்னு ரஜப் அவர்கள் கூறுகின்றார்கள் :
பிரகாசம் என்பது சூரியனின் பிரகாசத்தையொத்த வெப்பம், எரிதன்மை கொண்ட ஒரு வகையான ஒளிச் சுடராகும். அது சந்திரனின் ஒளிக்கு மாற்றமானது. ஏனெனில் சந்திரனின் ஒளி எரியும் தன்மையற்ற வெப்பமற்ற வெறும் பிரகாசமேயாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: 'அவன் தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். (அல்-குர்ஆன்: 10 : 5)
மேலும் அவர் கூறுகிறார் :
பொறுமை உள்ளங்களுக்கு கஷ்;டமாகவும் அது உளப்போராட்டத்தை அதன் கட்டுப்பாட்டை ஆசைகளிலிருந்து அதனை தடுப்பதை வேண்டி நிற்கும் காலமெல்லாம் பிரகாசமாக இருக்கும். (ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)
பொறுமை என்பது பிரகாசமாகும் என்பதன் அர்த்தம் பற்றி இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறும் போது :
பொறுமை புகழப்படக்கூடியது அதனைக் கொண்டுள்ளவன் எப்போதும் பிரகாசமுடையவனாக நேர்வழி பெற்றவனாக சரியானதில் இருப்பவனாகக் காணப்படுவான் (முஸ்லிமின் விளக்கம், தூய்மை என்ற பாடம்)
அத்துடன் இங்கு கீழ்வரும் இந்த விடயங்களிலும் தெளிவு பெறுவது அவசியமாகும்:
1. அல்லாஹ் பொறுமையின் பால் கட்டளையிட்டுள்ளான்
அல்லாஹ் கூறுகின்றான்: (விசுவாசிகளே நீங்கள் பொறுமையாக இருங்கள், பரஸ்பரம் பொறுமை கொள்ளுங்கள் ஒன்றிணைந்திருங்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்) (அல்-குர்ஆன்: 3 : 200)
அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்களின் தீங்குகளிலிருந்து பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான் : (அவர்கள் கூறும் விடயங்களில் பொறுமையாக இருப்பீராக, காலையிலும் மாலையிலும் அவனது புகழை துதி செய்வீராக) (அல்-குர்ஆன்: 18: 40)
2. பொறுமையின் சிறப்பு:
பொறுமைக்கான கூலி நிலையான அருள்கள் நிறைந்த சுவர்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : அவர்கள் பொறுமையாக இருந்தமைக்காக சுவர்க்கத்தில் அறைகள் வழங்கப்படும் அங்கு அவர்கள் பாதுகாப்பு, ஸலாம், வாழ்த்துக்களைப் பெறுவார்கள். இன்னும் அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது நிலையான சிறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கிறது (அல்-குர்ஆன்: 25 :76)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களின் பொறுமைக்குக் கூலி சுவர்க்கமும் பட்டாடைகளுமாகும் (அல்-குர்ஆன்: அல்இன்சான் : 12)
பொறுமையின்றி அதனை அடைந்து கொள் முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான் : பொறுமையாளர்களைத் தவிர வேறு எவரும் அதனை அடைந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் மகத்தான அதிரஷ்டசாலிகளைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்hர்கள். (அல்-குர்ஆன்:40 : 35)
பொறுமையாளர்களுக்குரிய கூலி எல்லையற்றது.
அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமையாளர்களின் கூலிகள் கணக்கின்றி நிரப்பமாக வழங்கப்படும் (அல்-குர்ஆன்: 39 : 10)
3. பொறுமையின் வகைகள்:
பொறுமை என்பது மூன்று வகைப்படும்
1. அல்லாஹ்வினுடையவும், அவன் தூதருடையவும் கட்டளைகளைச் செயல் படுத்துவதில் கைக் கொள்ளும் பொறுமை. பொறுமையற்ற ஒருவனால் இவற்றை செயல்படுத்த முடியாது
2. அல்லாஹ்வாலும் அவன் தூதராலும் தடுக்கப்பட்டவைகளைத் தவிர்த்திருப்பதில் பொறுமை. இது விடயத்திலும் பொறுமையற்ற ஒருவன் வெற்றிபெற முடியாது
3. அல்லாஹ்வால் அவனுக்கு விதிக்கப்பட்ட விதியில் (கழாகத்ர்) பொறுமை கொள்ளுதல்
இந்த மூன்று வகைப் பொறுமைகளையும் தனித்தனியாக வளங்கிக் கொள்வது அவசியமாகும்.
அ. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்ளல்:
ஒரு அடியான் கடமைகளை நிறைவேற்ற தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். கட்டுப்படுதலை தடுக்கும் தடைகள் நிறைய காணப்படுகின்றன. அவற்றுள் ஷைத்தான், ஆத்மா, மனோ இச்சை, உலக ஆசாபாசங்களளும் அதன் மோகங்களும் முக்கியமானவைகளாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கொண்டு உமது குடும்பத்தை ஏவுவீராக, அதில் நீர் பொறுமையாக நிலைத்திருப்பீராக. (அல்-குர்ஆன : 20: 132)
அல்லாஹ் கூறுகின்றான்: உமக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுவீராக, அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமை கொள்வீராக. (அல்-குர்ஆன் : 10 :109)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவர்களாக தமது இரட்சகனை காலையிலும் மாலையிலும் அழைப்பவர்களோடு உமது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவீராக (அல்-குர்ஆன் : 18 : 28)
அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் பூமி அவற்றுக்கிடைப்பட்டவற்றின் இரட்சகனை வழிபட்டு அவனை வழிப்படுவதில் பொறுமை கொள்வீராக (அல்-குர்ஆன் : 19 : 65)
ஆ. பாவங்களை விட்டு விடுவதில் பொறுமை கொள்ளல்:
பாவங்களை ஷைத்தான் அலங்கரித்து மக்களுக்கு நல்லதாகக் காண்பிக்கிறான். அவற்றின் பால் பிழையான வழிகளில் அழைக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சியமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை நீங்கள் எதிரியாகக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தை அழைப்பதெல்லாம் நரகத்திற்குரியவர்களாக இருப்பதற்காகும். (35 : 6)
இ. சோதனைகளை தாங்கிக் கொள்ள பொறுமை கொள்ளல்:
சோதனைகள் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் களாகத்ரு எனும் நியதிகளில் உள்ளவையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: அலிப் லாம் மீம் - மனிதர்கள் சோதனைகளைச் சந்திக்காது நாம் ஈமான் கொண்டு விட்டோம் எனக் கூறினால் விட்டுவிடப்படுவார்கள் என நினைக்கின்றார்களா?. அவர்களுக்கு முன்சென்றோரையும் நாம் சோதித்திருக்கிறோம். உண்மைபடுத்தியோரையும் பொய்யர்களையும் அல்லாஹ் நன்கறிவான் (அல்-குர்ஆன் : 29 : 1-2)
ஒருவன் தனது உடம்பு, சொத்து, பிள்ளைகள், குடும்பத்தால் சோதனைக்குட்படுத்தப்படுவான். அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்படும் இந்த சோதனை மீதும் அவன் பொறுமை கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: 'நாம் உங்களை அச்சம், பசி, சொத்துக்கள், உயிர்கள், பயிர்களின் நஷ்டம் என்பவற்றால் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாறயாம் கூறுவீராக. அவர்களுக்கு ஏதாவது சோதனை துன்பம் நேரிட்டால், நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள், அவன் பக்கமே மீள்கிறோம் என்று கூறுவார்கள். அவர்கள் மீது அவர்களது இரட்சகனின் கிருபையும் அருளும் உண்டு. அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் : 2 : 157.)
மனிதன் இம்மையிலும் மறுமையிலும் சுபீட்ச்சம் பெறத் தேவையான ஈமானிய அறிவு சாலிஹான நல்லமல் ஒருவருக்கொருவர் உண்மையை உபதேசித்தல். மற்றும் ஒருவருக்கொருவர் பொறுமையைப் போதித்துக் கொள்ளுதல் போன்ற நான்கு பண்புகளையும் தன்னகத்தே கொண்ட, இந்நான்கு விடயங்களிலும் தனது நேரத்தைப் பயன்படுத்தக் கூடியவர்களே நிச்சயமாக வெற்றியாளர்கள் ஆவர்.
முனாப் நுபார்தீன்
திங்கள், 9 ஜூன், 2014
சவூதி ஈத்தம் பழமும் ஷரீஆவின் நிலைப்பாடும்.
بسم الله الرحمن الرحيم
சவூதி ஈத்தம் பழமும் ஷரீஆவின் நிலைப்பாடும்.
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்புத் திறப்பதற்கு விநியோகிப்பதற்க்காக சவூதி அரசால் அனுப்பி வைக்கப்பப்பட்ட ஈத்தம் பழங்கள் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சிங்க சமுகங்களுக்கு பகிர்ந்தழிக்கப்பட்டதாகவும் மற்றும் அமைச்சர்களுக்குப் பகிர்ந்தழிக்கப்பட்டு சந்தையில் விற்க்கப்படுவதாகவும் பல் வேறு தரப்பினர்களும் பல்வேறு கருத்துக்களைக் கடந்த சில வாரங்களாக அல்லது மாதங்களாக இணைய ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருவதனைப் பார்கின்றோம்.
இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை இன்னும் சில சகோதரர்கள் இதனை ஒரு சாதாரண விடயமாகவும் நோன்புக் கஞ்சி மற்றும் பெருநாள் விருந்து போன்ற ஒரு செயலாகவும் ஊடகங்களில் எழுதி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் குறித்தப் பிரச்சினைத் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அது எந்த அளவு பாரதூரமான ஒரு குற்றம் என்று நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்;. அவ்வாறு நாம் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அதன் நிலை பற்றி அறிந்து கொள்ள முற்படுகின்ற போது முதலில் பின் வரும் சில முக்கிய விடயங்கள் பற்றி எமது கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்.
1. குறித்த அன்பழிப்பின் நோக்கம் புரியப்படுதல் வேண்டும்.
சவூதி அரசு அல்லது வேறு ஒரு அரசு எமக்கு ஈத்தம் பழம் அன்பளிப்புச் செய்கின்றதென்றால் வெறுமனே நாமனைவரும் ஏழைகள் வெறும் 250 கிராம் ஈத்தம் பழம் வாங்கி நோன்பு திறந்து கொள்ளும் அளவுக்குக் கூடத் தகுதியற்றவர்கள் எனும் நோக்கில் அவ்வாறு வழங்குவதில்லை.
ஒரு நோன்பாளிக்கு நோன்புத் திறக்கச் செய்வதால் குறித்த நோன்பாளியின் கூலியில் எவ்வித குறையுமின்றி நோன்புத் திறக்கச் செய்தவருக்கும் முழுமையாகக் கூலி அதாவது நன்மை வழங்கப்படும் எனும் நபி (ஸல்) அவர்களின் ஆர்வமூட்டலுக்கிணங்க நன்மைகள் பன்மடங்காக கிடைக்கப் பெறுகின்ற புனித மாதமாகிய ரமழானில் அபரிமிதமான நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் எனும் உயர் நோக்கத்தின் அடிப்படையில்தான் அந்த ஈத்தம் பழங்கள் எமக்கு அன்பழிப்புச் செய்யப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளிக்கு நோன்புத் திறக்கச் செய்கின்றானோ அவனுக்கு குறித்த நோன்பாளியின் கூலியைப் போன்ற கூலி வழங்கப்படும் இதனால் அந்த நோன்பாளியின் கூலியில் எவ்வித குறையும் ஏற்ப்படாது. (நூல் : இபுனு மாஜா)
எனவே முஸ்லிம்களுக்கு நோன்பு திறப்பதற்காக வழங்கப்படுகின்ற ஒரு உணவு அல்லது பாணம் என்பது ஏனைய தானதர்மங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வணக்கமாகும் ஆகவே அதனை நோன்பாளிகல் அல்லாத வேறு யாருக்கும் அன்பழிப்பு செய்வதென்பது அவர்கள் முஸலிம்களாக இருந்தாலும் நமது ஷரீஆவின் பார்வையில் மிகப்பெரும் குற்றமாகும் என்றிருக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுப்பதென்பது எந்த அளவு பாரதூரமான குற்றமாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அத்துடன் குறித்த ஈத்தம் பழங்கள் சவூதி அரசு அல்லது ஏனைய அரசுகள் ஈத்தம் பழ விவசாயம் செய்து தனது விவசாய நிலத்திலிருந்தோ அல்லது தனது அரச கழஞ்சியத்திலிருந்தோ அல்லது அரச நிதியிலிருந்து கொள்வனவு செய்தோ அனுப்புவதுமில்லை. மாறாக அங்குள்ள தனவந்தர்களிடம் வசூல் செய்துததான் அனுப்புகின்றது என்பதும் இந்த இடத்தில் கவனத்தில் கெகாள்ளப்படல் வேண்டும்.
2. குறித்தத் குற்றத்தின் தண்மை.
இந்தப் புணிதமான மாதத்தில் ஒரு மனிதனுக்கு நோன்புத் திறக்கச் செய்ய வேண்டும் அதன் மூலம் அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்படுகின்ற ஒரு உணவு அல்லது பாணத்தை மோசடி செய்வதென்பது நமது ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மிகப் பெரும் குற்றமாகும். ஆத்துடன் இந்தச் செயல்; அதிகார துஸ்பிரயோகம் நிருவாக மோசடி போன்ற கடுமையானக் குற்றத்தைச் சாரும்.
எனவே இதற்க்கு நம் சமூகத்தைச் சார்ந்த ஒருசிலரின் ஒப்புதல் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் எனும் கருத்தோட்டம் பரவலாகக் காணப்படுகின்றது ஆகவே அவ்வாறு எவரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவ்வாறு சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்புதாரிகள் அதிகாரிகள் போன்ற அனைவரும் நிச்சயமாக நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எந்தவொரு அடியானுக்கு அல்லாஹ் ஒரு நிருவாகப் பொறுப்பைக் கொடுத்து அவன் தனது நிருவாகத்தில் மோசடி செய்தவனாக மரனித்தால் அல்லாஹ் அவனுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுவான். (நூல் : புஹாரி)
பிரிதோர் அறிவிப்பில் : தனது நிருவாகத்தில் மோசடி செய்த நிலையில் தூக்கத்திற்க்குச் செல்லுகின்ற ஒவ்வொரு பொறுப்புதாரிக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தின் வாடையையே ஹராமாக்கி விடுகின்றான்.(நூல் : தபகாத்துல் குப்ரா) என்று பதிவாகி உள்ளது
மேற்படி இரு நபி வழிச் செய்திகளுள் முதல் நபி வழிச் செய்தி தனது பொறுப்பில் மோசடி செய்த ஒருவன் தனக்கு மரணம் வருமுன் அதற்கான பரிகாரத்தினைத் தேடிக்கொள்ள வேண்டும் அவ்வாறின்றேல் மறுமையில் சுவர்க்கம் பிரவேசிப்பது கேள்விக் குறியாகி விடும் என்று கூறுகின்றது.
அவ்வாறே இரண்டாவது நபி மொழி தனது பொறுப்பில் மோசடி செய்த ஒருவன் உடனடியாக தான் தூக்கத்திற்குச் செல்லும் அன்றய நாளின் கடைசி நேரத்திற்க்குள் அதற்க்கானப் பரிகாரத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் இன்றேல் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று கூறுகின்றது.
மேற்படி நபி மொழிகளின் அடிப்படையில் பார்குகின்ற போது நம்மில் அநேகரின் நிலை கவலைக்கிடமானதாகவே தெரிகின்றது.
எனவே இந்த மாபெரும் குற்றத்துடன் தொடர்புடைய நம் சமூகத்தைச் சார்ந்த பொறுப்புதாரிகள் அதிகாரிகள் போன்ற அனைவரும் இதற்க்கு மாற்றீடாக எந்த அளவு ஈத்தம் பழத் தொகை தமிழ் சிங்கள சமூகங்களுக்குப் பகிர்ந்தழிக்கப்பட்டதோ அதே அளவு ஈத்தம் பழங்களைக் கொள்வனவு செய்து நோன்பாளிகளுக்கு விநியோகித்தல் கட்டாயமாகும். அப்போதுதான் அவர்கள் அல்லாஹ்வின் விசாரனையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
3. குறித்தத் தவறு தடுக்கப்படல் வேண்டும்.
குறித்தப் பிரச்சினையுடன் சும்மந்தப்பட்டவன் தனது சகோதர முஸ்லிமாகவிருந்தால் அவனை அதிலிருந்துத் தடுத்து நிறுத்தி நேர்வழிக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உனது சகோதரன் அநியாயம் இழைக்கப்படக்கூடியவனாக இருந்தாலும் அல்லது அநியாயம் இழைப்பவனாக இருந்தாலும் அவனுக்கு உதவிடு. அதன் போது அல்லாஹ்வின் திருத் தூதர் அவர்களே ஒருவன் அநியாயம் இழைக்கப்படக்கூடியவனாக இருந்தால் அவனுக்கு உதவலாம் என்றாலும் அநியாயம் செய்யக்கூடியவனாக இருந்தால் அவனுக்கு எவ்வாறு உதவுவது என்று கேட்க்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவனை அதிலிருந்து நிறுத்த அல்லது தடுக்க வேண்டும்.( நூல் : புஹாரி )
முனாப் நுபார்தீன்.
ஞாயிறு, 8 ஜூன், 2014
தராவிஹ் தொழகையின் ரக்கஅத்துக்கள் எத்தனை?
அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்ட
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தராவிஹ் தொழகையின் ரக்கஅத்துக்கள் எத்தனை?
தராவிஹ் தொழுகை பற்றி முன்னய எமது ரமழான் கால ,ரவு வணக்கம்
எனும் லைபில் விழக்கி இருநதோம் எனவே எமது இந்த ஆக்கத்தில் அதன் ரக்கஅத்துக்களின்
எண்ணிக்கை பற்றி பார்ப்போம்.
தராவிஹ் தொழுகையின் ரகாஅத்துக்கள் பற்றி முன்னோர்கள்
பின்னோர்கள் அகிய அனைவர்களிடமும் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன சிலர் 8 என்றும் இன்னும் சிலர் 20 மற்றும் சிலர் 36 என்றும் கறுதுகின்றனர். என்றாலும் எத்தனைதான் என்று ஒர் குறிப்பிட்ட எண்ணிக்கை
கிடையாது என்பதுவே மிகச் சரியான கருத்தாகும். எனினும் நபி É அவர்கள் அத்தொழுகைக்கு ஒரு அளவினை நிர்னயிக்காது 'யார் ரமழானில் நிண்டு வணங்குகின்றாரோ' என்றுதான்
கூறியுள்ளார்கள் அத்துடன் இராத் தொழுகை பற்றி கேட்கப்பட்ட போது நபி É இரண்டு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழ வேண்டு அப்போது சுபஹ் உடைய நேரம் வந்து
விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டால் தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ள
வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
நபி É அவர்கள் கூறினார்கள் - இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரகஅத்தாக தொழப்படும் உங்களில்
ஒருவர் சுபஹ் உடைய நேரம் வந்து விடுவதைப் பயந்தால் அவர் ஒரு ரகஅத்துத் தொழுது தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கிக் கொள்ளட்டும் (நூல்:-புஹாரி- முஸ்லிம் )
மேற்படி அறிவிப்பில் சுபஹ் வந்துவிட்டதோ என்று அஞ்சினால்
தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுமாறு நபி É அவர்கள் கூறினார்களே தவிர இத்தனை ரகஅத் தொழுது முடித்தால் ஒற்றையாக்கி
முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை இதிலிருந்தே தராவீஹ் தொழுகையின் ரகஅத்துகக்களுக்கு
ஒரு எல்லை கிடையாது என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு ஒரு
குறிப்பிடப்பட்ட அளவுடையதாக இருந்திருந்தால் அது பற்றி விளங்கப்படுத்துவதற்கு
மிகவும் பொருத்தமான அவசியமான இடம் இதுவேயாகும்.
என்றாலும் நபி É அப்படி எந்தவொரு
எல்லையையும் நிர்ணயித்துக் குறிப்பிடாது சுபஹ் வந்து விட்டதோ என்று பயந்தால்
என்றுதான் கூறினார்கள் இதுவே இரவுத் தொழுகை எத்தனை ரக்கஅத்களும் தொழலாம் என்பதற்கு
போதிய சான்றாகும்.
தொழுகையில் நிலைகள் நீளமாகின்ற போது ரக்கஅத்துக்களின்
என்னிக்கை குறைவதற்க்கும் நிலைகள் சிறிதாகின்ற போது ரக்கஅத்துக்களின் எண்ணிக்கைகள்
கூடுவதற்கும் வாய்புக்கள் இருக்கின்றன ஆகவே தான் நபி É ரக்கஅத்துக்களின் என்னிக்கைகளை நிர்னயிக்காது சுபஹ் வந்துவிட்டதோ என்று
பயந்தால் ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்
தொழுகையில் மிகற் சிறந்த நிலைகள் இரண்டு
1. 1. . நீண்ட நிலை
நபி É அவர்கள் கூறினார்கள். : தொழுகைகளில் சிறந்தது நீண்ட நிலைகளைக் கொண்ட தொழுகையாகும் (நூல்:- முஸ்லிம்)
2. 2. சுஜுதடைய நிலை
நபி É அவர்கள் கூறினார்கள். : சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்வாயாக ஏனெனில் நீ ஒருவன்
சுஜுது செய்யும் போது அல்லாஹ் உனக்குஅதன் மூலம் ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகின்றான்
அவ்வறே அதன் மூலம் உன்னடைய ஒரு பாவத்தை மன்னிக்கின்றான். ( நூல் முஸ்லிம்)
நபி É அவர்கள் றபீயா Ë அவர்களிடம் றபியாவே என்னிடம் கேள் என்று கூறினார்கள் அதற்கு றபியா Ë அவர்கள் நான் சுவர்க்கத்தில் உங்களுடன் இருப்பதைக் கேட்கிறேன் என்று
கூறினார்கள். பிறகு நபி É அவர்கள் அதுவல்லாத வேறு ஏதாகிலும் என்று கூறினார்கள் அதற்கு
றபியா Ë அவர்கள் அதுதான் எனக்கு வேண்டும் என்று கூறினார்கள் அதற்கு
நபி É அவர்கள் அப்படியாயின் நீ சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்
என்று கூறினார்கள். ( நூல் முஸ்லிம்)
மேற்படி இரண்டு நபிமொழிகளும் சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றன எனவே ஒருவன் சுஜுதுகளைக் கூட்டிக் கொள்ள
வேண்டுமாயின் அவன் நிச்சயமாக ரக்கஅத்துக்களை கூட்டித்தான் ஆகவேண்டும். ஏனெனில் ஒரு
ரக்கஅத்தில் இரண்டு சுஜுதுகளுக்கு மேல் சுஜுதுகள் இல்லை என்பதை நாம் அறிவோம்.
அவ்வாறே ரக்கஅத்துக்களைக் கூட்டுவதும் கடமையான
தொழுகைகளிலும் ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள பெருநாள் மற்றும்
கிரகணம் போன்ற சுன்னத்தான தொழுகைகளிலும் செய்ய முடியாது என்பதையும் நாம்
அறிந்திருக்கிறோம். அப்படி என்றால் ரக்கஅத்துக்களை
அதிகப்படுத்த முடியுமான ஒரே தொழுகை ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படாத இராவணக்கம்
(கியாமுல்லைல்) மற்றும் ரமழானுடைய இராவணக்கம் (தராவிஹ்) போன்ற தொழுகைகளில்தான் சாத்தியமாகும்.
தராவிஹ் தொழுகை 11 ரகாஅத்துக்கள்தான்
என்று கூறுபவர்களின் ஆதாரம்.
அன்னை ஆயிஷா Ë அவர்கள் அறிவிக்கின்றார்கள்
- நபி É அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும்
(இரவுத் தொழுகை) 11 ரக்கஅத்துக்களுக்கு மேல் தொழுதது கிடையாது. நான்கு
ரகஅத்துக்கள் தொழுவார்கள் அதன் நீளத்தையோ அழகையோ பற்றி கேட்காதீர்கள், பிறகு நான்கு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அதன் நீளத்தையோ
அழகையோ பற்றி கேட்காதீர்கள் பிறகு மூன்று ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அப்போது நான்
இறைத் தூதர் அவர்களே வித்று தொழுவதற்கு முன்னர் நீங்கள் தூங்குவீர்களா என
வினவீனேன். அதற்கு அயிஷாவே எனது கண்கள் இரண்டும் உறங்கும் என்றாலும் எனது உள்ளம்
உறங்குவதில்லை என்று நபி É அவர்கள் பதில் கூறினார்கள். (நூல்:-புஹாரி )
அண்ணை ஆயிஷா Ì அவர்களின்
மேற்படி அறிவிப்பு நபி É அவர்கள் 11 ரக்கஅத்துக்கள் தான் தொழுதார்கள்
என்பதற்கு ஆதாரமாக அமையாது மாறாக நபி É அவர்கள் 11 ரகஅத்துக்களுக்கு அதிகமாக தொழுததில்லை என்பதற்குத்தான் அதனை நாம் ஆதாரமாகக்
கொள்ள வேண்டும். ஏனெனில் நபி É அவர்கள் சில இரவுகளில் இஷாவிலிருந்து
சுபஹ் வரை வெறும் இரண்டு ரக்கஅத்கள் மட்டுமே தொழுதுள்ளார்கள். என்று சில
அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
நாம் ரமழான் கால இரவு வணக்கம் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிட்டது
போன்று தராவிஹ் தொழுகை என்பது ரமழானுக்கு மாத்திரம் உள்ள விஷேட தொழுகையாகும்.
ஆயிஷா Ì அறிவிக்கும் செய்தி நபி É அவர்களின்
ரமழானிலும் ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் உள்ள வழமையான தொமுகை பற்றியதாகும்.
அவ்வாறு ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் வழமையாக 11 ரக்கஅத்கள் தொழுது வரக் கூடியவர்கள் விடயத்தில் அதுவே சிறந்த்தாகும். நாம்
அவ்வாறில்லை நாம் ரமழானில் மாத்திரமே விஷேடமாக இரவில் தொழக் கூடிவர்களாக உள்ளோம். ஆதலால்
எமது தொழுகைக்கு இது பொருந்தாது.
அவ்வாறே ஆயிஷா Ì அவர்கள் நபி É அவர்களின் இரவுத் தொழுகையினையும் வித்று தொழுகையினையும் பற்றி விளக்குகின்ற
அறிவிப்பில் நபி É அவர்கள் 11 ரகஅத்கள் தொழுதார்கள் என்றும் வயது
முதிர்ந்த போது 9 ரகஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் இன்னும் 7 ரக்கஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
எனவே 11 ரக்கஅத்கள்தான் இரவுத் தொழுகை என்பது
பிழையாகும் என்றாலும் நபி É அவர்கள் 11 ரக்கஅத்துக்களுக்கு கூடுதலாக தொழுகின்ற
அளவுக்கு அவர்களுக்கு நேரம் இடம் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். அந்த அளவு
நீண்ட நிலைகளைக் கொண்ட தொழுகைகளாக நபி É அவர்களின் தொழகைகள்
அமைந்திருந்த்ன.
என்றாலும் சிலபோது நிலைகளின் நீளம் குறைகின்ற போது 13 ரகஅத்துக்களும் நிலைகளின் நீளம் கூடுகின்றபோது 4 அல்லது 2 ரக்கஅத்துக்களும் தொழுதுள்ளார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்னு அப்பாஸ் Ê அவர்கள் ஒரு
நாள் மைமூனா Ë அன்ஹா அவர்களின் வீட்டில் தங்கி இருந்த போது நபி É அவர்கள் 13 ரகஅத்துக்கள் தொழுததாக அறிவிக்கின்றார்கள்.
இப்னு அப்பாஸ் Ê அவர்கள்
கூறுகின்றார்கள்: நான் ஒரு இரவு அண்ணை மைமூனா Ë அன்ஹா அவர்களின் வீட்டில் நபி É அவர்களுடன்
தங்கி.ருந்தேன் அப்போது இரவில் அரைவாசி அல்லது அரைவாசியிற்கு சற்று முன்னர் வரை
நபி É அவர்கள் தூங்கினார்கள் பிறகு தூக்கத்திலிருந்து விழித்து
முகத்திலிருந்து தூக்கத்தைக் கலைத்தவர்களாக ஆல இம்ரான் அத்தியாயத்தின் 10 வசனங்களை ஓதினார்கள்.பிறகு தண்ணீரை எடுத்து நல்லமுறையில் வுழு செய்தார்கள்
பிறகு தொழுகைக்கு எழுந்து நின்றார்கள் நானும் அவர்களுடன் இனைந்து தொழுதேன் அவர்கள்
இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள்
பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள்
தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு
ரகஅத்துக்கள் தொழுதார்கள் பிறகு வித்று தொழுதார்கள். (நூல்: புஹாரி)
அத்துடன் நாம் இங்குபேசுவது வழமையான ,ரவு வணக்கம் கடையாது இது
ரமழான் காலத்தில் மட்டும் தொழப்படுகின்ற பிரத்தியேகமானத் தொழகையாகும்.
எனவே ரமழான் அல்லாத காலங்களில் யாரெல்லாம் இரவில் 11 ரக்கஅத்கள் வழமையாகத் தொழுது வரக்கூடியவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள்
ரமழானிலும் 11 ரகஅத்துக்கள் தொழுவதே சிறந்தது. அவ்வாறே ரமழான் அல்லாத
காலத்தில் ஒருவர் வழமையாக எத்தனை ரகஅத்துக்கள் தொழுது வருகின்றாரோ அதனையே
ரமழானிலும் அவர் தொழுவது சிறந்ததாகும். ஏனெனில் நபி É அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதனைத் தொடராகத் தொழுவதை விரும்பக்
கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
என்றாலும் ரமழானில் மட்டும் யார் இரவுத் தொழுகைக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்கள்; விடயத்தில்
மேற்படி அறிவிப்பு பொருந்தாது என்பதே சரியான கருத்தாகும்.
ஏனெனில் ரமழான் அல்லாத காலங்களில் தொழாமல் இருந்து விட்டு
ஒருவர் ரமழானில் மட்டும் விஷேடமாகத் தொழுகின்றார் என்றால் அது ரமழானுக்குரிய விஷேடத்
தொழுகை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எனவே தராவிஹ் தொழுகை இத்தனை ரக்கஅத்துதான் என்பதற்கு
எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லாததனால் அது ஒருவருக்கு எத்தனை ரக்கஅத்துக்கள் தொழ
முடியுமோ அத்தனை தொழலாம்.
என்றாலும் இரவு முழுவதும் தொழுத நன்மையினை அடைந்து கொள்ளும்
வகையில் ஜமாஅத்துடன் இமாம் தொழுது முடியும் வரை தொழுவது சிறந்ததாகும்.
அபூதர் Ê அவர்கள் கூறுகின்றார்கள் நாம் நபி É அவர்களுடன் ரமழான் மாதம் நோன்பு நோற்றோம்
நபி É அவர்கள் ரமழான் மாதத்தில் ஏழு நாட்கள் மீதம் ஆகும் வரை
எமக்கு இரவில் எந்தவொரு தொழுகையையும் நடாத்தவில்லை ஏழு நாட்களே மீதமான போது இரவில்
மூன்றில் ஒரு பகுதி எமக்கு தொழுகை நடாத்தினார்கள்.
பிறகு ஆறு நாட்கள் மீதமான போது எமக்கு இரவில் தொழுகை
நடாத்தவில்லை மாதத்தில் ஐந்து நாட்கள் மீதமான போது இரவில் அரைவாசிப்பகுதி எமக்கு
தொழுகை நடாத்தினார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே இவ்விரவின் எஞ்சிய
பகுதியையும் எமக்கு தொழுவித்தால் என்று கூறினேன் அதற்கு நபி É அவர்கள் ஒரு மனிதன் இமாமைத் தொடர்ந்து இமாம் தொழுகையை முடிக்கும் வரை தொழுதால்
அவர் இரவு முழுவதும் தொழுதவராக கனிக்கப்படுவார் என்று கூறினார்கள். (நூல்:- அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத்)
மேற்படி அறிவிப்பில் ஒரு மனிதன் இமாமைத் தொடர்ந்து இமாம்
தொழுகையை முடிக்கும் வரை தொழுதால் அவர் இரவு முழுவதும் தொழுதவராக கனிக்கப்படுவார்; என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இமாம் ஜமாஅத்தாக ஜமாஅத் முடியும் வரை நாம்
தொழுவதே சிறந்ததாகும்.
முனாப் நுபார்தீன்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා
මව්ලවි මුනාබු නුබාර්දීන්. (සාම විනිසුරු) සංවිධායක ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ ...
-
சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஞானசார தேரர் அவர்களுக்கு நேர் வழியில் இருப்பவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் பௌத்த மதத...
-
මිනිසාට ඇඳුමක්! කතුවරයා/දේශකයා: ඉබ්නු මන්සූර් on 22nd October 2011 සකස්කිරීම: ඉබ්නු මන්සූර් ඇඳුම සංස්කෘතියෙන් සංස්කෘතියට වෙනස්විය හ...
-
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்pன் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும...

