செவ்வாய், 30 செப்டம்பர், 2014

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஆரம்பம்.


சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஆரம்பம்.

உலகில் மனிதனது வரலாறு என்பது நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே ஆரம்பமாகின்றது அன்றிலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டமும் ஆரம்பமாகுகின்றது. முதலாவது ஏற்பட்ட போராட்டம் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான ஒரு போட்டியிலிருந்தே துவங்குகின்றது. இந்த போட்டி வாணவர்களுக்கும் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையில் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வால் அவனின் மத்தியஸ்த்தத்துடனயேயே அரங்கேறியது.

போட்டி தற்பொழுது ஆரம்பமாகின்றது வினாப்பத்திரம் முதலாவதாக வானவர்களுக்கே சமர்ப்பிக்கப்படுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும்ää (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டிää ''நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்"" என்றான்.
அதன் போது அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து கொண்டு தங்களது இயலாமையை ஏற்றுக் கொள்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் ''(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்"" எனக் கூறினார்கள்.
அதன் பிறகு வினா நபி ஆதம் (அலை) அவர்களுக்கு விடப்படுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : ''ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!"" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது ''நிச்சயமாக நான் வானங்களிலும்ää பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும்ää நீங்கள் வெளிப்படுத்துவதையும்ää நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?"" என்று (இறைவன்) கூறினான்.
உலகில் முதல் முதலில் அல்லாஹ்வின் கட்டளையை மீறியவன்
நபி ஆதம் (அலை) அவர்கள் மேற்படி போட்டியில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து வானவர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளை இடுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : பின்னர் நாம் மலக்குகளை நோக்கிää ''ஆதமுக்குப் பணி (ந்து ஸ{ஜூது செய்) யுங்கள்"" என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸ{) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல்-குர்ஆன்: 2: 31-34)
இதன் போது வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய மேற்படிக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிந்தார்கள். என்றாலும் வானவர்களுடன் சேர்ந்திருந்த ஜின் இனத்தைச் சார்ந்த இப்லீஸ் என்பவன் மாத்திரம் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கனித்துச் சிரம் பணிய மறுத்து விட்டான். இதுவே உலகில் முதல் முதலாவதாக மீறப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும்.
எப்பொழுது இந்த இப்லீஸ் என்பவன் அல்லாஹ்வுடைய கட்டளையைப் புறக்கணித்தானோ அன்றிலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இந்தப் போராட்டம் ஆரம்பித்து விடுகின்றது. இந்தப்போராட்டம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறுதி நாள் வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் தண்மையும் அதற்கான உத்தரவாதமும் கொண்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!"" என்று இப்லீஸ் கூறினான்.
''நிச்சயமாகää நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;"" ''குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்"" என்று அல்லாஹ் கூறினான்.
(அதற்கு இப்லீஸ்ää) ''என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால்ää நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
''அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர"" என்று கூறினான்.
(அதற்கு இறைவன் ''அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழிää என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர"" என்று கூறினான். நிச்சயமாக (உம்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும் (அல்- குர்ஆன்: 15 : 36-37)
இதுவே உலகில் முதல் முதலாக அல்லாஹ்வின் கட்டளை ஒன்று மீறப்பட்ட இடமாகும் அப்போது வல்ல அல்லாஹ் இப்லீசை நோக்கி தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்க்கான நியாயம் பற்றி வினவுகின்றான்
அல்லாஹ் கூறுகின்றான் : ''நான் உனக்குக் கட்டளையிட்ட போதுää நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?"" என்று அல்லாஹ் கேட்டான்.
அதற்க்கு இப்லீஸ் பின்வருமாறு பதில் கூறினான்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய்ää அவரை களிமண்ணால் படைத்தாய்"" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்- குர்ஆன்: 7 : 12
உலகில் முதல் முதலில் அல்லாஹ்வின் தடையை மீறியவர்கள்;
இவ்வாறு இப்லீஸ் தனது தவறை இறுதி வரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான் ஆதலால்தான் அவன் அல்லாஹ்வின் சாபத்திற்க்கு ஆளாக்கப்பட்டு அல்லாஹ்லின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டும் வீகின்றான். ஆதலால் நபி ஆதம் (அலை) அவர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களை வழிகெடுத்தும் விடுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : மேலும் நாம்ää ''ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்"" என்று சொன்னோம். இதன்பின்ää ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம்ää ''நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு"" என்று கூறினோம். (அல்- குர்ஆன்: 2 : 35-36) இதுவே உலகில் முதல் முதலாவதாக மீறப்பட்ட அல்லாஹ்வின் தடையாகும்.
இவ்வாறு சைத்தானால் வழி கெடுக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்கள் உடனடியாக தங்களது தவறை உணர்ந்து ஏற்றுக் கொள்கின்றார்கள் அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருகின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும்ää அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும்ää கருணையாளனும் ஆவான். (அல்- குர்ஆன்: 2 : 37)
இந்த இடத்தில் நாம் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதாவது உலகில் முதல் முதலில் இருவர் இரண்டு விடயங்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விடுகின்றார்கள்.
அதில் முதலாவதாக அல்லாஹ்வின் ஆதத்திற்கு சஜ்தா செய்யுங்கள் எனும் ஏவலைப் புறக்கனித்தவன் சைத்தான் ஆதலால் அவன் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு அவனது அருளிலிருந்தும் விரட்டப்பட்டு விடுகின்றான்
அதே நேரம் உலகில் முதல் முதலில் சுவர்க்கத்தில் குறித்த ஒரு மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் எனும் அல்லாஹ்வின் தடையை மீறியவர்கள் நபி ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகிய இருவருமாவார்கள்  என்றாலும் அவர்கள் அல்லாஹ்வால் சபிக்கப்படவுமில்லை அவனது அருளிலிருந்து தூரமாக்கப்படவுமில்லை.
சைத்தான் சபிக்கப்பட்டதற்கான காரணம் யாதெனில் அல்லாஹ் அவனது நிலைப்பாடு தவறானது என்று அறிவுறுத்தியும் அவன் கடைசி வரை தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான்.  தனது கருத்தினிலேயே பிடிவாதமாக இருந்து விடுகின்றான்.
இப்படியான கொள்கையுடைய எத்தனையோ மனிதர்கள் இன்றும் எமக்கு மத்தியில் இருந்து கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். அவர்களின் கூற்று தவறானது என்று அவர்களின் மனசாட்ச்சி அவர்களுக்கு உறுத்தும் என்றாலும் அவர்கள் எவ்வாறு சைத்தான் தனது மனோ இச்சைக்கு வழிப்பட்டானோ அவ்வாறே இவர்களும் தங்களது மனோ இச்சைக்கு வழிப்படுவதன் காரணமாக அவர்களால் இறங்கி வர இயலாது. உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத அவர்களின் இந்த நிலை சைத்தானுடைய வழிகெடுத்தலாகும்.
அதே நேரம் நபி ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகிய இருவரும்; தமது தவறை உணர்கின்றார்கள் கவலைப் படுகின்றார்கள் அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்புக் கேட்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: அதற்கு அவர்கள்; ''எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்ää நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"" என்று கூறினார்கள். (அல்- குர்ஆன்: 2 : 37)
இப்படியாக அவர்கள் இருவரும் தங்கள் தவறை ஏற்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதன் காரணமாக அல்லாஹ் அவர்களிருவருக்கும் மன்னிப்பு வழங்குகின்றான்.
அவ்வாறே சைத்தான் தனது தவறை ஏற்க்க மறுத்ததன் காரணமாக அவன் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான் என்பதனை மேற்படி வசனங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மானிப்பது?


ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மானிப்பது?

கடந்த 06 ம் மாதம் தலைப் பிறையும் நமது நிலைப்பாடும் எனும் தலைப்பில் ஒரு ஆய்வினை இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றி இருந்தோம். இது ரமழானுடையத் தலைப் பிறையினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த போதிலும் அது ரமழானுக்கு மாத்திரம் உரியதல்ல மாறாக இஸ்லாமிய மாதங்கள் 12 ற்கும் பொதுவானதே என்பதனை முதலில் வாசகர்களுக்கு ஞாபகமூட்டிக் கொள்கின்றோம்.

புனித ஹஜ் கடமை என்பது நோன்பைப் போன்று காலத்துடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு கடமைக் கிடையாது அது காலத்துடனும் நேரத்துடனும் இன்னும் குறிப்பிட்ட சில இடங்களுடனும் சம்பந்தப்பட்ட ஒரு கடமையாகும். என்றாலும் நம்மில் அநேகர் இதனை நோன்பைப் போன்று காலத்துடன் அதாவது பிறையுடன் மாத்திரமே சம்பந்தப்படுத்திப் பார்ப்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.இந்த அவர்களின் பார்வை முற்றிலும் தவறானது என்றே தோன்றுகிறது.

ஆகவே இது தொடர்பாக எமது பார்வை என்னவென்பதனை வாசகர்களின் கவனத்திற்குத் தருகின்றோம். என்றாலும் இது எமது ஆய்வே தவிர முடிவு கிடையாது என்பதனையும் வாசகர்களுக்கு அறிவித்துக் கொள்கின்றோம்.
புனித ஹஜ்ஜுக் கடமை காலத்துடனும் நேரத்துடனும் இன்னும் குறிப்பிட்ட சில இடங்களுடனும் சம்பந்தப்பட்ட ஒன்றாகும் என்று கூறியிருந்தோம் எனவே அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. காலம் (துல்-ஹஜ்)

ஹஜ் கடமையினைக் குறிப்பிட்ட சில காலங்களில் மாத்திரம்தான் நிறைவேற்ற முடியும்

அல்லாஹ் கூறுகின்றான் : 

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவேää அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால்ää ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம்ää கெட்ட வார்த்தைகள் பேசுதல்ää சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது)ää தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன் : 2:197)

பிறையின் நோக்கமும் அதன் தொழிற்பாடும். 

அல்லாஹ் கூறுகின்றான் : 

(நபியே! தேய்ந்துää வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; ''அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும்ää ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லைää ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வைää அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன் : 2:189)
மேற்படி வசனம் பிறையின் தொழிற்பாடு மற்றும் அது படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவென்பதனைச் சுட்டிக் காட்டுகின்றது.அதாவது அது பின்வரும் இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. 

1. பொதுவாக மக்களுக்குக் காலங்களைக் காட்டுகின்றது.
2. குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தை அறிவிக்கின்றது.

2. இடம் (மக்கா)

எவ்வாறு புனித ஹஜ்ஜுக் கடமை குறிப்பிடப்பட்ட சில காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டுமோ அவ்வாறே அது குறிப்பிட்ட இடத்திலும் நிகழுதல் கட்டாயமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : 

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும்ää உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாகää இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால்ää எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். (அல்-குர்ஆன் : 3:96-97) 

3. நேரம் (அரபா தினம்)

எவ்வாறு இது குறிப்பிடப்பட்ட சில காலங்களில் குpறிப்பிட்ட இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமோ அவ்வாறே அது குறிப்பிட்ட நேரத்திலும் நிகழ்தல் அவசியமாகும். அதாவது ஹஜ் உடைய கடமைகள் துவங்பப்படும்; நேரம் துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாம் நாளன்று சூரியன் உதித்ததற்குப் பின் ஆரம்பமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

ஹஜ் என்பது அரபாவாகும் . (நூல் : அபூ தாவுத்) 

பிரிதோர் அறிவிப்பில் ஹஜ் என்பது அரபாவாகும் யார் ஜம்உ (அரபாதினம்) இரவில் பஜ்ர் உதயமாவதற்கு முன் (அரபாவிற்கு) வருகின்றாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல் : ஹாக்கிம்)

மேற்படி மூன்று அடிப்படைகளையும் வைத்தே ஹஜ்ஜையும் ஹஜ்ஜுப் பெருநாளையும் நிர்ணயம் செய்தல் வேண்டும். இதற்கு மாற்றமாக இந்த மூன்று அடிப்படைகளில் ஒன்று புறக்கணிக்கப்பட்டாலும் அந்தக் கடமையைச் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

உதாரணமாக : இலங்கையில் இவ்வருடம் 06-10-2014 ம் திகதி திங்கட்கிழமை ஹஜ் பெருநாள் என அகில இலங்கை உலமா சபைத் அறிவித்துள்ளது. இந்நிலையில் புனித ஹஜ்ஜுக் கடமையினை நிறைவேற்ற விரும்பும் இலங்கைப் பிறஜை ஒருவர் ஹஜ்{டைய கிரியைகள் துல்-ஹஜ் மாதம் 09 ம் நாளிலிருந்தே ஆரம்பமாவதால் இலங்கையிலிருந்து அரபாவுடைய நாளன்று அரபவுக்குச் சென்றால் போதும் என்று நினைக்கின்றார். 

எனவே அவருக்கு அகில இலங்கை உலமா சபையின் அறிவிப்பின் படி இவ்வருடம் துல்-ஹஜ் மாதத்தின் 09 ம் நாள் 10ம் மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக் கிழமையாகும் எனவே அவர் அன்றய தினம் காலையில் புறப்படுகின்றார்  என்று வைத்துக் கொள்வோம் அப்படி என்றால் அவர் 10ம் மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபாவை வந்தடையும்; போது மக்காவிலுள்ள ஹாஜிகள் அனைவரும் அங்கு அரபா தினமாகிய துல்-ஹஜ் 09 நாளாகிய (03-10-2014) வெள்ளிக் கிழமையையும் பெருநாள் தினமாகிய துல்-ஹஜ் 10 ம் நாள்; (04-10-2014) சனிக்கிழமையையும் கடந்து அய்யாமுத் தஷ்ரீக்குடை முதலாம் நாளாகிய பிறை 11 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை மினாவில் இருப்பார்கள். 

இப்போது மேற்படி இலங்கைப் பிரஜையின் நிலை என்ன? அவர் தனியாக ஹஜ் செய்வாரா? மக்காவில் ஹாஜிகள் அனைவரும் மினாவில் தங்கி இருக்கும் அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்க்களில் அவ்வாறு செய்வது சாத்தியமா? என்று கேட்டால் நிச்சயமாக அனைவருடைய பதிலும் முடியாது என்பதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அப்படி என்றால் ஹாஜிகள் அரபாவையும் முடித்து பெருநாளையும் முடித்து விட்டு அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாளில் இருக்கும் போது நாம் பெருநாள் கொண்டாடுவது மட்டும் சரியானதாகுமா? இது தவறு கிடையாதா?

தொழிநுற்ப்பத்தில் முன்னேற்றம் அடையாத தொலைத் தொடர்பு சாதனங்களோ வசதிகளோ அற்ற முன்னயக்காலங்களில் போலன்றி இன்று உலகில் எங்கு என்ன நடந்தாலும் அவற்றை அனைத்துலக மக்களும் உடனுக்குடன் பகிர்ந்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு வல்ல அல்லாஹ் மனிதனது ஆற்றலில் விருத்தியைக் கொடு;துள்ளான்.

எனவே காலம் நேரம் இடம் ஆகிய மூன்று அடிப்படைகளை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஹஜ்ஜுப் பெருநாளை பிறையை மாத்திரம் வைத்துத் தீர்மானிப்பது எவ்வளவு தூரம் சரியானத் தீர்மானமாக இருக்க முடியும் என்பதனை சிந்தித்துப் பாருங்கள்.

எனவே எப்பொழுது ஹாஜிகள் மக்கா அரபாவில் ஒன்று கூடுகின்றார்களோ அதற்கு அடுத்த நாள்தான் முழு உலகுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் என்பதுவே சரியான தீர்மானமாக இருக்க முடியும். இதுவே மேற்படி காலம் இடம் நேரம் ஆகிய மூன்று அடிப்படைகளும் ஒருங்கே அமையப் பெற்ற அறிவுபூர்வமான முடிவாக இருக்கும் எனக்கருதுகின்றோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

முனாப் நுபார்தீன்.


திங்கள், 22 செப்டம்பர், 2014

ஊவா மாகானசபைத் தேர்தலும் கற்றுக் கொண்ட பாடங்களும்.


ஊவா மாகானசபைத் தேர்தலும் கற்றுக் கொண்ட பாடங்களும்.

கடந்த 20-09-14 ம் திகதி சனிக்கிழமை நடந்து முடிந்த ஊவா மாகானசபைத் தேர்தல் பற்றி நாம் தேர்தல் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன் படிப்பினை மிக்க ஊவா மாகானசபைத் தேர்தல் எனும் தலைப்பில் ஒரு ஆக்கத்தினை சமூக வலைத்தயங்களில் பதிவேற்றியிருந்தோம். அதற்கிணங்க மேற்படி மாகானசபைத் தேர்தல் முடிவுகள் நமக்குப் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுத் தந்திருப்பதுடன் பின்வரும் மிக முக்கியமான செய்திகள் சிலவற்றையும் அறிவிப்பதாகவுள்ளது.

1. மக்களுக்கு அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிரிப்த்தியை வெளிக்காட்டுகிறது.

2. மக்களுக்கு அரசின் மீது அதிரிப்த்தி ஏற்பட்டிருந்த போதிலும் அதற்கு எதிராக தங்களது தீர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான அதற்க்குச் சமமான மாற்று வழி ஒன்று இல்லை என்பதனையும் உணர்த்துகின்றது.

3. அனைத்தின மக்களும் ஒரு அரசியல் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.

4. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையிலும் ஒரு நம்பிக்கை இழந்த சமூகமாக மாறியுள்ளதைக் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

5. குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் பற்றிய நம்பிக்கை சமூகத்திலிருந்து முற்றாக நீங்கியுள்ளதைப் பிரதிபலிக்கின்றது.

6. அனைத்து முஸ்லிம் கட்சிகளும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதைப் பறைசாற்றுகின்றது. 

7. இனவாதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.

8. சந்தர்ப்பவாதிகள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படியாக இன்னும் ஏராளமான படிப்பினைகளையும் செய்திகளையும் இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே  மேற்படி படிப்பினைகளிலிருந்து பாடம் கற்று இதன் பிறகாவது மீண்டும் மீண்டும் ஒரே குழியில் விழாதிருக்கும் வகையில் எமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதத் தேவை பொருத்தமான தலைமையாகும். அந்தத் தலைமையை உருவாக்குவது பற்றி நம் சமூகம் இனியாவது சிந்தித்துக் கழம் இறங்குமா? என்பதுவே இன்றைய கேள்வியாகவுள்ளது.

முனாப் நுபார்தீன்

Minnal Shakthi TV 21st September 2014

Minnal Shakthi TV 21st September 2014

إذا رؤي الهلال في بلد وجب على جميع البلدان الصوم ولا عبرة بالمطالع - الش...

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மனிதர்கள் நல்லறம் செய்யும் நாட்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள்.

மனிதர்கள் நல்லறம் செய்யும் நாட்களில் 
அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள்.

மனிதர்களாகிய நாம் மறுமையில் அபரிமிதமான நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக அருளாளன் அல்லாஹ் அதற்க்கான சிறந்த பருவகாலங்களை ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி சுழலச் செய்து கொண்டிருக்கின்றான்.

அதன் வரிசையில் ரமழானைத் தொடர்ந்து வரக்கூடிய பருவகாலமாகிய புனிதமான ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களையும் நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அந்த பத்து நாட்களதும் சிறப்புப் பற்றி பார்ப்போம்.

துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும், இந்த நாட்கள்தான் மனிதர்கள் நல்லறம் செய்யும் நாட்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்களாக இருக்கின்றன.

நபி (sal)அவர்கள் கூறினார்கள்:
ஆதத்துடைய சந்ததியினர்கள் நல் அமற்கள் செய்யும் நாட்களிலெல்லாம் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள் துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்போது, அல்லாஹ்வின் திருதூதர் அவர்களே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான், என்றாலுல் யார் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும், உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தாரோ அவரைத்தவிர என்று நபி É அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

இன்னும் இந்த பத்து தினங்களின் பெருமை பற்றி நாம் புரிந்து கொள்ளும் வகையில் அல்லாஹ் அவைகளின் மீது சத்;தியம் செய்திருப்பதுவே போதுமானதாகும். 

அல்லாஹ் கூறுகின்றான் : அந்த பத்து இரவுகள் மீது ஆணையாக (அல்குர்ஆன்:89:2)

இங்கு பத்து இரவுகள் என்று கூறப்படுவது துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகள்தான் என்றே அணைத்து அறிஞர்களும் முடிவு செய்துள்ளார்கள். 

இந்த நாட்கள் ஏனைய நாட்களைவிட சிறப்புற்று விளங்குவதற்கு காரணம் ஏனைய காலங்களில் ஒன்று சேர முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளாகிய கலிமா (ஸஹாதத்)  தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற இஸ்லாத்தினுடைய அணைத்து அடிப்படைக் கடமைகளும் இந்த நாட்களில் ஒன்று சேர்ந்து காணப்படுகின்றன. ஏனைய காலங்களில் ஒரு மனிதன் அணைத்து கடமைகளையும் செய்த போதிலும் ஹஜ் கடமையை அதற்குரிய காலமாகிய இந்த நாட்களைத் தவிர வேறு நாட்களில் செய்ய முடியாது. எனவே இந்த நாட்களில்தான் மேற்கூறப்பட்ட அணைத்து அமற்களையும் செய்ய முடிகின்றது. ஆதலால்தான் ஏனைய காலங்களைவிட இந்த நாட்கள் சிறப்பு பெறுகின்றது. 


இந்த நாட்களில் செய்ய வேண்டிய  நல்  அமற்கள்.

ஹஜ்-உம்ரா செய்தல் 

நபி (sal)  அவர்கள் கூறினார்கள்: ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும், மேலும் ஏற்று க்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. நூல்: புகாரி,முஸ்லிம்

அதிகமதிகமாக நபிலான தொழுகைகளைத் தொழுதல்.

அதிகமதிகமாக நபிலான நோன்புகள் நோற்றல்,

குறிப்பாக அரபாவுடைய நாளன்று நோன்பு நோற்றல்.

நபி(sal) அவர்கள் கூறினார்கள்: 

அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பவருக்கு அந்த நாளுக்கு முந்திய ஒரு வருடத்தின் பாவங்களையும், அதற்கு பின் வரக்கூடிய ஒரு வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன். (நூல்:முஸ்லிம்)

அதிகமதிகமாக தாண தர்மங்கள் செய்தல்.

அதிகமதிமாக உறவினர்களுக்கு  உதவி  உபகாரம் செய்தல்.

அதிகமாக குர்ஆனை ஓதுதல்.

பாவமன்னிப்பு தேடுதல்.

நன்மையை ஏவுதலும். தீமையை தடுத்தலும் 

அதிகமதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்தல்  போன்ற நல் அமல்களில் ஈடுபடுதல் வேண்டும்.

நபி (sal) அவர்கள் கூறினார்கள: 

துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே அன்றைய தினம் லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ{ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள். நூல்; : அஹ்மத் 

அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்க்கக்கூடாது, ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் ஏற்றமானது.

அத்துடன் துல் ஹஜ் பிறை ஒன்றிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரை கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும்ää பள்ளிவாசல்ää வீடுää கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவதுää விஷேடமாக அரஃபா நாளின் ஸ{ப்ஹ{ தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல்;. 
இப்னு உமர் Ê அபூஹ{ரைரா Ê ஆகிய இரு நபித் தோழர்களும் துல்ஹஜ் மாதம் ஆரம்ப பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்குச் செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள்ää இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள் (நூல்:புகாரி)

ஹஜ் பெருநாள் தொழுகை, இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது. 

உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுப்பது 

கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (sal) அவர்கள் உழ்ஹிய்யா கொடுத்தார்கள், அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள். (நூல்: புகாரி)


தக்பீரின் முறை:

 الله أكبر الله أكبر الله أكبرلااله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد

அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ{ அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் வலில்லாஹில் ஹம்து

இதுவே அதிகமான ஹதீஸ்களில் வந்துள்ள தக்பீரின் முறையாகும். இது தவிர இன்று எமது வழக்கில் உள்ள தக்பீர் சொல்லும் முறை ஹதீஸில் இல்லா விட்டாலும் நபி É அவர்களின் துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே அன்றைய தினம் லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ{ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் எனும் ஹதீஸின் அடிப்படையில் அதனைச் சொல்வதில் தவறேதும் கிடையாது எனக் கருதுகின்றேன். அப்படி யாராவது அது தவறு என்று கண்டு தகுந்த ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னால் இன்ஷா அல்லாஹ் நன்றியுடன் ஏற்றுக் கொண்டு அதனை மக்களுக்கும் தெளிவு படுத்துவேன். 

குறிப்பு:-

உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுக்க விரும்புபவர்கள் துல் ஹஜ் தலைப்பிறை தென்பட்ட திலிருந்து தனது குர்பானியை அறுத்துப் பலியிடும் வரை தனது உடம்பிலுள்ள எந்தவொரு முடியையும் அகற்றுதல் நகம் வெட்டுதல் கூடாது. 


நபி (sal) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுக்க விரும்பினால் அவர் துல் ஹஜ் தலைப்பிறைக் கண்டதிலிருந்து உழ்கிய்யாவை நிறைவேற்றும் வரை தனது முடிகளையும் , நகங்களையும்  அகற்றுவதனைத் தவிர்;த்துக் கொள்ளுதல் வேண்டும். (நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: உம்மு ஸலமா )

முனாப் நுபார்தீன்

الدكتور فريد الانصاري:اختلاف المطالع وتوحيد الأمة

اختلاف المطالع لرؤية الهلال من دوله الى دوله (الحكمه بذالك )

முஸ்லிம் காங்கிரஸின், முக்கிய நினைவு நாள் இன்று

Jaffna Muslim: முஸ்லிம் காங்கிரஸின், முக்கிய நினைவு நாள் இன்று: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதல்முதலாக தோற்றுவிக்கப்பட்ட நினைவுநாள் இன்றுதான். ஆம், அதாவது 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி கா...

Election Result 2014 13

Election Result 2014 12

Election Result 2014 11- Monaragala District- Final Result

Election Result 2014 10

Election result 2014 09

Election result 2014 08

Election result 2014 07

Election result 2014 06

Election result 2014 05

Election result 2014 04

Election result 2014 03

Election result 2014 02

UVA Election Analysis Part 01

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

படிப்பினை மிக்க ஊவா மாகானசபைத் தேர்தல்

படிப்பினை மிக்க ஊவா மாகானசபைத் தேர்தல்

நாளை 20-09-2014 ம் திகதி சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற ஊவா மாகான சபைத் தேர்தல் 66 ஆண்டு கால சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக தேசிய சர்வதேச மட்டத்தில் பார்கப்படுகின்றது. 

1. இந்தத் தேர்தல் அதனைத் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவு எவ்வாறு அமையும் என்பதனை அறிவிப்பதாக உள்ளது.

2. இந்தத் தேர்தல் இந்த நாட்டு மக்களின் அறிவு நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டக் கூடியதாக அமைய உள்ளது.

3. இந்தத் தேர்தல் இந்த நாட்டின் சிறுபாண்மையினர்களின் அரசியல் ஞானத்தினைப் புலப்படுத்தக்கூடியதாக அமைய உள்ளது.

4. இந்தத் தேர்தல் இனவாதத்தின் சாதக பாதகங்களை வெளிக்கொணரக் கூடியதாக அமைய உள்ளது.

5. இந்தத் தேர்தல் சிறுபாண்மை சமூகங்கள் தங்களது எதிர்கால அரசியல் காய் நகர்த்தல்களை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் கற்றுத் தருவனவாக அமைய உள்ளது.

6. இந்தத் தேர்தல் நயவஞ்சகர்களை இனங்காட்டக்கூடியதாக அமைய உள்ளது.

7. இந்தத் தேர்தல் சமூகத் துரோகிகளின் முகத்திரையைக் கிழிக்கக்கூடியதாக அமைய உள்ளது.

மொத்தத்தில் நாட்டு மக்கள் அனைவரினதும் முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்கும் இந்தத் தேர்தலானது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றே பெரும்பாலும்; எதிர்பார்கப்படுகின்றது.

முனாப் நுபார்தீன்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

ஊவா மாகானசபைத் தேர்தல் சிறுபாண்மையினர்களுக்கான ஒரு இறுதிப் பரீட்சை

ஊவா மாகானசபைத் தேர்தல் 
சிறுபாண்மையினர்களுக்கான ஒரு இறுதிப் பரீட்சை

நடைபெறவிருக்கின்ற ஊவா மாகானசபைத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.நமது நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பழமை வாய்ந்த முதன்மைக் கட்சிகளாகிய ஐ.தே.கட்சியும் சிறீ.ல.சு.கட்சியும் தான் கடந்த 66 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செலுத்தி வந்து கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்தவரை சிறுபாண்மையினர்களின் உரிமைகளை நசுக்குவதிலும் அவர்களை அடக்கியாள்வதிலும் அவர்களுக்கெதிரான இனவாத்தினையும் வண்முறைகளையும் அரங்கேற்றுவதிலும் ஒருவரை ஒருவர் சலித்தவர்கள் அல்ல என்பதனை வரலாறு நெடுகிலும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த வரலாற்று பின்னனியிலிருந்து இந்த நாட்டு சிறுபாண்மை சமூகத்தினர்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஒரு இறுதிப் பரீட்சையாகவே நடைபெறவிருக்கின்ற ஊவா மாகான சபைத் தேர்தல் அமைய இருக்கின்றது.

எனவே நமது சிறுபாண்மை சமூகத்தின் அறிவின் அளவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

முனாப் நுபார்தீன்.

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள்















தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. 

விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.
விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.25தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்
சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 – 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.


1.முழு தாடியுடன்


2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்


3. மீசையுடன்


4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)


ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.


தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.


மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.


மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.


இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.


நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்.



இஸ்லாம் சொன்னால் செய்வதற்கு யோசிப்பவர்களே!!
உங்களுக்கு பிடித்திருக்கும் விஞ்ஞானம்......
நீங்கள் நேசிக்கும் விஞ்ஞானம் கூட தாடி வளர்ப்பதினால் நன்மைதான் உண்டு என்கிறது இப்போதாவாது சிந்தித்து முடிவெடுங்கள்

- See more at: http://www.sawthunnoor.com/reader/65#sthash.dEWwVFHN.dTDfnWXx.dpuf

திங்கள், 8 செப்டம்பர், 2014

தேர்தல்கள் ஆணையாளரின் ஞானசூண்யம்


தேர்தல்கள் ஆணையாளரின் ஞானசூண்யம்

முகம்மது நபிதான் வந்தாலும் இந்நாட்டில் 100 வீதம் நியாயமான தேர்தலை நடாத்த முடியாது

தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்கு புத்தபெருமானையோஇ இயோசு நாதரையோ அல்லது முஹம்மது நபியையோ கொண்டு வந்து உட்கார வைத்தாலும் தற்போதுள்ள தேர்தல் முறைமையின் ஊடாக நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானஇ நீதியானதொரு தேர்தலை நடாத்த முடியாதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த உண்மை ஊவாவுக்கும் விதிவிலக்கல்ல. இந்த நாட்டிலுள்ள அரசியல் கலாசாரம் மாறும் வரையில் இந்த வன்முறை அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. தேர்தல்கள் திணைக்களம் எடுக்க வேண்டிய உச்ச அளவு நடவடிக்கையை எடுத்தாலும் நலவு சொல்வோர் யாரும் இல்லை என்பதை கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளதாகவும் ஆணையாளர் இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.  (மு)

மேற்படி அறிக்கை நேற்று ( 07-09-2014 ) ஞாயிற்றுக் கிழமை டெய்லி சிலோன் எனும் இணையதளத்தில் பிரசுரமாகி இருந்தது. இது நமது நாட்டின் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாகிய தேர்தல்கள் ஆணையாளர் பதவி வகிப்பவரின் கருத்தாகும்ää இதிலிருந்து அவரின் ஞானசூண்யம் தெளிவாகத் தெரிகின்றது.

அவர் உதாரணம் காட்டியுள்ள மேற்படி மூன்று தீர்க்கதரிசிகளில் முகம்மது நபி (ஸல்) மற்றும் (இயேசு) ஈசா நபி (அலை) ஆகிய இருவரும் சந்தேகத்திற்கிடமின்றி இறைவனின் திருத்தூதர்கள் ஆவார்கள் என்பது முஸ்லிம்களாகிய எமது ஆணித்தரமான நம்பிக்கையாகும். அவ்வாறே புத்தபெருமானும் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகவே இருக்க வேண்டும் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம்.

ஆகவே தனது இயலாமையையும் பலவீனத்தினையும் மறைப்பதற்காக நீதி நழுவாது தூய வாழ்க்கை வாழ்ந்து காட்டி உலகை நீதியால் நிரப்பிச் சென்ற செம்மல்களான இறைத் தூதர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதென்பது மிகவும் கீழ்தரமான இழிச் செயலாகும் இவரின் இந்த அறிக்கையை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் அவரின் மேற்ப அறிக்கைக்கு தனது கவலையைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது என்றாலும் அதிலும் தீர்க்கத்தரிசிகளான இறைத்தூதர்களை சமயத்தலைவர்கள் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டிருப்பதும் கண்டணத்திற்குரியதே.

எனவே இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் தேர்தல்கள் ஆணையாளரின் இத்தகைய அறிவற்ற அறிக்கைகளுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

முனாப் நுபார்தீன்

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...