ஊவா மாகானசபைத் தேர்தலும் கற்றுக் கொண்ட பாடங்களும்.
கடந்த 20-09-14 ம் திகதி சனிக்கிழமை நடந்து முடிந்த ஊவா மாகானசபைத் தேர்தல் பற்றி நாம் தேர்தல் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன் படிப்பினை மிக்க ஊவா மாகானசபைத் தேர்தல் எனும் தலைப்பில் ஒரு ஆக்கத்தினை சமூக வலைத்தயங்களில் பதிவேற்றியிருந்தோம். அதற்கிணங்க மேற்படி மாகானசபைத் தேர்தல் முடிவுகள் நமக்குப் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுத் தந்திருப்பதுடன் பின்வரும் மிக முக்கியமான செய்திகள் சிலவற்றையும் அறிவிப்பதாகவுள்ளது.
1. மக்களுக்கு அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிரிப்த்தியை வெளிக்காட்டுகிறது.
2. மக்களுக்கு அரசின் மீது அதிரிப்த்தி ஏற்பட்டிருந்த போதிலும் அதற்கு எதிராக தங்களது தீர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான அதற்க்குச் சமமான மாற்று வழி ஒன்று இல்லை என்பதனையும் உணர்த்துகின்றது.
3. அனைத்தின மக்களும் ஒரு அரசியல் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.
4. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையிலும் ஒரு நம்பிக்கை இழந்த சமூகமாக மாறியுள்ளதைக் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
5. குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் பற்றிய நம்பிக்கை சமூகத்திலிருந்து முற்றாக நீங்கியுள்ளதைப் பிரதிபலிக்கின்றது.
6. அனைத்து முஸ்லிம் கட்சிகளும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதைப் பறைசாற்றுகின்றது.
7. இனவாதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.
8. சந்தர்ப்பவாதிகள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படியாக இன்னும் ஏராளமான படிப்பினைகளையும் செய்திகளையும் இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
எனவே மேற்படி படிப்பினைகளிலிருந்து பாடம் கற்று இதன் பிறகாவது மீண்டும் மீண்டும் ஒரே குழியில் விழாதிருக்கும் வகையில் எமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதத் தேவை பொருத்தமான தலைமையாகும். அந்தத் தலைமையை உருவாக்குவது பற்றி நம் சமூகம் இனியாவது சிந்தித்துக் கழம் இறங்குமா? என்பதுவே இன்றைய கேள்வியாகவுள்ளது.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக