நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 05
இதற்க்கு முந்திய தொடர்களில் நாம் பார்த்த கல்வி ஈமான் மற்றும் தக்வா போன்றவைகளில் ஏற்ப்பட்ட அந்த குறைபாடுகள்தான் இன்றைய எமது சகோதரத்துவத்தை சிதைவுறச் செய்திருக்கினறது.
அப்படி இல்லை என்றால் இஸ்லாம் என்ற இந்த வரையறைக்குள் இருந்து கொண்டு இன்னுமொரு முஸ்லிம் சகோதரனை அவன் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தைச் சாராதவன் அல்லது தான் சார்ந்திருக்கும் கட்ச்சியைச் சாராதவன் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித நியாயமும் இன்றி அவனைத் தரக்குறைவாகக் கருதுவதும் தமாழ்திப் பேசுவதும் பளிவாங்குவதும் காட்டிக் கொடுத்து அவனின் துன்பத்தில் இன்பம் கானுவதும் போன்ற இந்த இழிகுணங்கள் ஏற்பட்டிருக்காது. இவையனைத்தும் எமது சகோதரத்துவத்திலும் சமூக ஐக்கியத்திலும் மிகப்பெரியதோர் வெற்றிடத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறைவன்)வன் மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றைத் தமது சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் எவரும் இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். (அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்:புகாரிää முஸ்லிம்)
இன்னும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவர்க்கதினுள் நுழையமாட்டீர்கள்; அவ்வாறே நீங்கள் ஒருவரையொருவர் அன்பு கொள்ளாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள். (அறிவிப்பவர்: அப10ஹ{ரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
மேற்படி நபிமொழிகளுள் முதல் நபி மொழியில் தான் விரும்புவதை தன் சகோதர முஸ்லிமுக்கு விரும்பாதவன் முஃமினாக மாட்டான் என்பதனை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
இரண்டாம் நபி மொழி கூறுகின்றது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளாதவரை முஃமின்களாக முடியாது என்று. எனவே முதலில் நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவதும் அவ்வாறே நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு கொள்வதும் நாம் உண்மை விசுவாசியாக ஆவதற்கு மிகவும்; அவசியமானவைகளாகும். இந்த இருபண்புகளும் நம்மிடம் இல்லை என்றால் உண்மையில் நாம் முஃமீன்கள் ஆகமுடியாது.
இப்பொழுது நாம் சற்று நிதானமாக இயக்கம் மற்றும் கட்ச்சிகளுக்கு வெளியே இருந்து சிந்தித்துப் பார்ப்போம் மேற்படி நபி மொழியின் ஒளியில் நம்மை ஒரு முறை எடைபோட்டு பார்ப்போம். நாம் உண்மையில் இறை விசுவாசிள்தானா? அப்படி என்றால் எந்த அளவு நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கு விரும்புகின்றோம்? அப்படி விரும்பாதவரை நாம் உண்மையில் (முஃமின்கள்) இறைவிசுவாசிகள் ஆகமுடியுமா? எந்த அளவு நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றோம். என்று பார்க்கும் போது மனிதர்களில் அதிகமானோர் பெயரளவில் (முஃமீன்கள்) இறைவிசுவாசிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவர்கள் இறைவிசுவாசிகள் (முஃமின்கள்) அல்லர். இறைவிசுவாசிகள் (முஃமின்கள்) ஆகாத வரை நிச்சயமாக இம்மையில் வெற்றி பெறவோ அல்லது நாளை மறுமையில் சுவர்க்கம் செல்லவோ முடியாது என்ப உறுதி.
மேற்படி நபிமொழிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் நாம் உண்மையில் விசுவாசிகளாக இருந்தால் அந்த விசுவாசத்திற்கு கட்டியம் கூறும் சகோதரத்துவப் பிணைப்பு எங்களுக்கிடையில் ஏற்ப்பபட வேண்டும் என்பதேயாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறை நம்பிக்கையாளர் இன்னொரு இறை நம்பிக்கையாளருக்கு (கற்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்) கட்டிடத்தைப் போன்றாவார்'' (அறிவிப்பவர்: அப10மூஸா அபூதாவூத்)
ஒரு கட்டடம் பலம் மிக்கதாகவும் வலுவாகவும் இருப்பதற்கு ஒரு கல் இன்னொரு கல்லை எவ்வாறு தாங்கி நிற்கின்றதோ அவ்வாறே முஸ்லிம் சமூகம் பலம் பெறுவதற்கும்ää வலுப்பெறுவதற்கும் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனைத் தாங்கி நிற்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது இந்த நபிமொழி.
மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போன்று முஸ்லிம்களை நீ காண்பாய். ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புகளும் உறங்காமல் காய்ச்சலால் (வாடி அதன் துன்பத்தில் பங்குகொண்டு) துணை நிற்கின்றது. (அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் நூல்: புகாரி)
அவ்வாறே நம் கசேதரத்துவத்தினைத் தகர்க்கக்கூடிய எந்தவொரு செயலையும் ஒரு மஸ்லிம் எச்சந்தர்ப்பத்திலும் செய்யமாட்டான் அவ்வாறு செய்வது அவனுக்குத் தடுக்கப்பட்ட ஹராமான செயலாகும்
ஒரு கட்டடம் பலம் மிக்கதாகவும் வலுவாகவும் இருப்பதற்கு ஒரு கல் இன்னொரு கல்லை எவ்வாறு தாங்கி நிற்கின்றதோ அவ்வாறே முஸ்லிம் சமூகம் பலம் பெறுவதற்கும்ää வலுப்பெறுவதற்கும் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனைத் தாங்கி நிற்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது இந்த நபிமொழி.
மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போன்று முஸ்லிம்களை நீ காண்பாய். ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புகளும் உறங்காமல் காய்ச்சலால் (வாடி அதன் துன்பத்தில் பங்குகொண்டு) துணை நிற்கின்றது. (அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் நூல்: புகாரி)
அவ்வாறே நம் கசேதரத்துவத்தினைத் தகர்க்கக்கூடிய எந்தவொரு செயலையும் ஒரு மஸ்லிம் எச்சந்தர்ப்பத்திலும் செய்யமாட்டான் அவ்வாறு செய்வது அவனுக்குத் தடுக்கப்பட்ட ஹராமான செயலாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
1. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம்.
2. ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம்.
3. ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
4. ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம்.
5. உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம்.
அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான்.
6. எனவே அவன்; அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான்.
7. அவனைக் கை விட்டு விட மாட்டான்.
8. அவனிடம் பொய்யுரைக்க மாட்டான்.
9. அவனை இழிவாகக் கருத மாட்டான்.
''இறையச்சம் இங்கே உள்ளது"" என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்கு போதுமான செயலாகும்.
10. ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.(; நூல்:; முஸ்லிம் )
தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்ள விரும்பும் எந்தவொருவரும் மேற்கூறப்பட்டுள்ள இந்த இழி குணங்களிலிருந்து முழுமையாக விடுபடாத வரை அவன் உண்மையான முஸ்லிமாக முடியாது.
சிந்தித்துப்பாருங்கள் மேலே நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்ட இந்த பழிக்கத்தக்கதான பத்துப் பண்புகளில் எதுதான் எம்மிடம் இல்லை அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் அனைவரிடத்திலும் மிக சர்வசாதாரணமாகவே காணப்படுகின்றன.
1. பொறாமை : இங்கே தடுக்கப்பட்டுள்ள பண்புகளில் முதலாவது பொறாமையாகும் ஏனெனில் எந்தவொரு மனிதனுடைய உள்ளத்தில் பொறாமை உட்புகுந்து விடுகின்றதோ அந்த உள்ளத்திலிருந்து ஈமான் விடைபெற்றுச் சென்று விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானுடைய உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது (இபுனு ஹிப்பான்)
பொறாமை நல்லறங்களை அழித்து வீடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடுகின்றது.’
2. கொடுக்கல் வாங்கல் : அதாவது ஒருவர் ஒரு குறிப்பிட்ட விலைக்குக் கேட்ட பொருளை இன்னொருவர் முதலாமவர் கேட்ட விலையை விட விலையை உயர்த்திக் கேட்பது ஹராமாகும் ஏனெனில் அது அந்த இருவருடைய சகோரத்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
3. பகமை : ஒருவரையொருவர் எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்வது ஹராமாகும். மன்னித்து மறந்து வாழ வேண்டும்.
4. புறக்கணிப்பு: ஒருவரையொருவர் புறக்கணித்து நடப்பதும் ஹராமாகும் எல்லா நிலையிலும் ஒருவரையொருவர் அனுசரித்து அனைத்துக் கொள்ள வேண்டும்.
5. வியாபாரம் : ஒருவருடைய வியாபாரத்திற்கு எதிராக அவருக்குப் போட்டியாக வியாபாரம் செய்வது ஹராமாகும் ஏனெனில் அந்தச் செயலும் நமது சகோரத்துவத்தில் விரிசலை ஏற்ப்படுத்தி விடும்.
6. அநீதி : பிற முஸ்லிம் சகோரனுக்கு அநிதி இழைப்பதும் ஹராமாகும்.
7. கை விட்டு விடல் : பிற முஸ்லிம்களுக்கு கைகொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் கைகொடுத்து உதவாது விட்டு விடுவதும் ஹராமாகும்.
8. பொய் சொல்லுதல்: பிற முஸ்லிம் சகோதரனிடம் பொய்யுரைத்தலும் ஹராமாகும்.
9. தரக்குறைவாகக் கருதுதல்: பிற முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதும் ஹராமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்கு போதுமான செயலாகும்.
10. உயிர் உடமை மானம் : பிற முஸ்லிம் சகோரனுடைய இரத்தத்தை சிந்துதல் அவனை மானபங்கப்படுத்துதல் மற்றும் அவனின் உடமைகளை கையகப்படுத்துதல் போன்ற அத்தனையும் ஹராமாகும்.
மேற்படி பத்து வகையான ஹராம்களில் எந்த அளவு நாம் மூழ்கிப் போயுள்ளோம் என்பதனைச் சற்று சந்தித்துப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
29-04-2014