சனி, 26 ஏப்ரல், 2014

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 02

بسم الله الرحمن الرحيم

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 02

1. علم எனும் மார்க்கக் கல்வியில் காணப் படும் பலவீனம்

அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் உங்களில் ஈமான் கொண்டவர்களை உயர்வடையச் செய்வான். இன்னும் மார்க்கக்கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கு பல பதவிகள் உண்டு (அல்-குர்ஆன்: 58: 11)

இன்றைய இந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் சகோதரத்துவ வீழ்ச்சிக்கான பிரதான முதற்காரணம் علم எனும் மார்க்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனமேயாகும் என்று பார்த்தோம். இதன் பொருள் மார்க்க அறிஞர்கள் இல்லை என்றோ அல்லது மார்க்கக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்பதோ அல்ல. இன்று எமது நாட்டை எடுத்துக் கொண்டால் முன் எப்போதும் இல்லாத அளவு மார்க்க அறிஞர்களும் மார்க்கம் கற்பிக்கப்படுகின்ற கல்வியகங்களும் அதிகரித்தே காணப்படுகின்றன. 

என்றாலும்  இன்று மார்க்கக் கல்வி பயிலுகின்ற மாணவர்களும் சரி கற்கவைக்கின்ற பெற்றார்களும் சரி அல்லது கற்பிக்கின்ற ஆசிரியர்களும் சரி அனைவரிடமும் மார்க்கக் கல்வியின் மூலம் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற முழு மனித சமுதாயத்துக்குமான மறுமையின் வெற்றிக்கான வழி காட்டுதல் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மாறாக உலகாதாய நோக்கங்களே மேலோங்கி காணப்படுகின்றது. 

கல்வி கற்கின்ற மாணவர்களிடம் உங்களின் இலட்ச்சியம் என்னவென்று கேட்டால் பாலர் வகுப்பிலிருந்தே அவர்கள் ஒவ்வொருவரும் கூறும் பதில் நான் ஒரு டாக்டராக அல்லது பொறியியலாளராக அல்லது வழக்கறிஞராக அல்லது ஆசிரியராக வர வேண்டும் என்றுதான் கூறுவார்களே தவிர நான் ஒரு அறிஞனாக வரவேண்டும் என்று யாரும் கூறுவதாக இல்லை.

அவர்கள் யாரிடமும் இஸ்லாம் வலியுறுத்துகின்ற إخلاص  எனும் உளத்தூய்மை காணப்படுவதில்லை. உதாரணமாக ஏகத்துவம் அல்லது மார்க்கச் சட்டக் கலை அல்லது அல்-குர்ஆன் விரிவுரை அல்லது நபி மொழிகளைக் கற்கக்கூடிய இரண்டு நபர்களில் ஒருவன் சுவர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானவனாகவும்ää மற்றவன் சுவர்க்கத்திற்கு மிகவும் தூரமானவனாகவும் காணப்படலாம். இருவரும் ஒரே நூலையே படிக்கின்றார்கள்ää ஒரே ஆசிரியரிடமே கற்கின்றார்கள் அவர்களுள் ஒருவன் தான் ஒரு காழியாக (உயர் அதிகாரி) வேண்டும் ஒரு காழியிற்கு உயர்ந்த ஊதியமும் உயர் அந்தஸ்தும் கிடைக்கின்றன எனும் நோக்கத்தில் மார்க்கச்சட்டக் கலையைக் கற்கின்றான். மற்றவன் தான் கற்று ஒரு மார்க்க அறிஞனாகி முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் உளத்தூய்மையுடன் மார்க்கச்சட்டக் கலையைக் கற்கின்றான் ஆகவே அவர்கள் இருவருக்கும் இடையே அவர்களின் எண்ணத்தின் பிரகாரம் மிகப் பெரும் வேறுபாடு காணப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே. எனவே நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியது உண்டு. (நூல்: புகாரி-முஸ்லிம். அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப்(ரலி))

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : புத்திசாலி என்பவன் தனது ஆண்மாவைக் கட்டுப்படுத்தி தனது மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கைக்காகச் செயல்படுபவனாவான். (நூல் : முஸதத்ரக். அறிவிப்பவர் : சத்தாத் பின் அவுஸ்)

அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட அளப்பெரிய அந்தஸ்த்துக்களையும் வெகுமதிகளையும் நோக்காக கொள்வதற்குப் பதிலாக இந்த கல்வியின் மூலம் தான் எவ்வாறு மக்களுக்கு மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் உயர் பதவிகளையும் பெற்றுக் கொள்வது அதன் மூலம் எவ்வாறு பொருளீட்டுவது எவ்வாறு இந்த உலக இலாபங்களை அடைந்து கொள்வது என்பது பற்றியே அனைவரது சிந்தனைகளும் வழிகாட்டல்களும் அமையப் பெற்றிருப்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. மறுமை என்பது இரண்டாம் தரத்தில் வைத்தே பார்க்கப்படுகின்றது. இந்த நிலை கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனம் இல்லையா?

இதற்கான மிக முக்கிய காரணம் இன்றய உலகின் யூத கிருஸ்த்துவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்தக்  கல்வி கொள்கை எமது ஷரீஆ கல்வியகங்களிலும் அதன் செல்வாக்கினை செலுத்தியுள்ளது எனலாம்.

ஆதலால்தான் தனது பெயருக்குப் பின்னால் பல பட்டங்கள் இருக்க வேண்டும் அதன் மூலம் மக்களிடம் தான் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரன் என்று புகழப்பட வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு காணப்படுகின்றது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை தனது குடும்பம் தொழில் படிப்பு என்பதுடன் சுருங்கி விடுகின்றது. சுமூகம் தஃவா என்பதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைத்தால்தான் என்ற நிலைத் தோன்றியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுடைய திருப்தியை நோக்காக் கொண்டு கற்க வேண்டியக் கல்வியை யார் இந்த உலகத் தேவைகளை அடைந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்திற்கே அன்றி கற்க்கவில்லையோ அவன் நாளை மறுமையில் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைந்து கொள்ள மாட்டான். (நூல்: இபுனு ஹிப்பான். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரழி)

அடுத்ததாக கருத்து வேறுபாடு மற்றும் கருத்து முறண்பாடு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்து கொள்ள முடியாத அல்லது அதனை ஏற்று அங்கீகரிக்க முடியாத நிலைத் தோன்றிக் காணப்படுகின்றது அதாவது மார்க்கத்தின்  فقه  எனும் சட்ட நுனுக்கங்கள் விடயத்தில் கருத்து வேறுபாடு என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல அது வாணவர்களுக்கு மத்தியில் நபிமார்களுக்கு மத்தியில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் இமாம்களுக்கு மத்தியில் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த வந்து கொண்டிருக்கின்ற அத்தனை ஆய்வாளர்கள் அறிஞர்கள் அனைவருக்கு மத்தியிலும் இருந்து கொண்டேதான் வருகின்றது. என்றாலும் அந்த கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் கருத்து முறன்பாடாக உருப்பெறவில்லை. மாறாக அது அவர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவே வழிகாட்டி இருக்கின்றது என்பதனை இஸ்லாமிய வரலாற்றை அறிந்த அனைவரும் ஏற்றுக் கொள்வர். எனவே கருத்து வேறுபாடு என்பது வேறு. கருத்து முறன்பாடென்பது வேறு என்பதனை நாம் முதலில் புரிந்து ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.

கருத்து வேறுபாடு என்பது மாற்றுக் கருத்தையுடையவர்களைப் பற்றிய நல்லெண்ணத்தையும் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும்;. கருத்து முறண்பாடென்பது தான் கொண்டிருக்கும் கருத்தினை பிறர் மீது பலவந்தமாகத் தினிக்கத் தூண்டும். தனது கருத்திற்க்கு மாற்றமான கருத்தில் இருப்பவர்களைப் பற்றிய தவறான தரக்குறைவான சிந்தனைகளைத் தூண்டும். அவர்கள் மீது பொறாமை கொள்ளச் செய்யும். இந்த வித்தியாசத்தினைப் புரிந்து கொண்டால் எமக்கு மத்தியில் காணப்படும் மார்க்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனம் களையப்பட்டு கருத்து முறண்பாடுகள் அத்தனையும் விடைபெற்றுச் சென்று விடும் என்பது உறுதி.

இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான விடயத்தினை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டு. அதாவது சில கருத்து வேறுபாடுகளில் ஒன்றுக்கொன்று முறன்பட்ட இரண்டு கருத்துக்கள் காணப்படு அதில் ஒரு கருத்துதான் சரியான கருத்தாக இருக்க முடியும் அதனை நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் மூலம் இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் உதாரணமாக நூறு கொலைகளைச் செய்த ஒரு பாவி பாவ மன்னிப்புத் தேடி சென்ற போது பாதி வழியில் இறந்து விட்ட நிலையில் வாணவர்களுக்கு மத்தியில் அவன் சுவர்க்கவாதியா நரகவாதியா எனும் விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அது உரிய முறையில் தீர்க்கப்ட்ட போது இரு தரப்பினர்களும் அதனை உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

அவ்வாறே இன்னும் சில கருத்து வேறுபாடுகள் ஒன்றை விட்டு ஒன்றை சரிகான முடியாததாகக் காணப்படும். அப்படியான கருத்துக்கள் அல்-குர்ஆன் அல்-ஹதீஸிற்கு முறன் இல்லாத போது அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே உதாரணமாக நபி (ஸல) அவர்கள் பனீ குறைளாவிலே அன்றி நீங்கள் அஸர் தொழக்கூடாது என்று கூறி அனுப்பிய நபித்தோழர்கள் இடையில் அஸர் தொழுகையின் நேரம் வந்த போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு கருத்து வேறுபாடு. அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அந்த இரண்டு விதமான கருத்துக்களில் எந்தவொரு கருத்தையும் நபி (ஸல) அவர்கள் தவறாகக் காணவில்லை.மாறாக இரு தரப்பினர்களது இரு கருத்துக்களுக்கும் அங்கிகாரம் கொடுத்தார்கள்.

இன்று எமக்கு மத்தியில் குறிப்பாக தமிழ் இஸ்லாமிய உலகில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகளாக தொழுகையில் தக்பீர் கட்டுதல் அத்தஹ்யாத்தில் விரல் அசைத்தல் தராவீஹ் தொழுகையின் ரகஅத்துக்களின் என்னிக்கை போன்ற இன்னோரன்ன விடயங்களில் கருத்து வேறுபாடுகளும் முறண்பாடுகளும் மோதல்களும் நிலவி வருவதைப் பார்கின்றோம் இவை அனைத்தும் எமது மார்க்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தின் வெளிப்பாடுகளே.

அல்லாஹ் கூறுகின்றான் : (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும்-(தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்- தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும்- தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே- அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்-குர்ஆன்: 2: 113)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...