بسم الله الرحمن الرحيم
அன்புடையீர்!
நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும், தீர்வும். - தொடர் - 01
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ்
முஸ்லிம்கள் மத்தியில் இன்று நாளாந்தப் பேச்சுப் பொருளாக மாறியுள்ள தேசிய தலைமைத்தவம் ஒற்றுமை சகோதரத்தவம் இதுதான் இன்று ஒவ்வொரு இஸ்லாமியனுடையவும் அவாவாகவும் தேவையாகவும் கருதப் படுகின்றது. இது ஆண்டாண்டுகாலமாக அவ்வப்போது முஸ்லிம்களக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சக்திகள் களம் இறங்கும் போது பேசப் பட்டு பிறகு மறந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அதன் அவசரத் தேவை அனைத்துத் தரப்பினர்களாலும் மிகவும் ஆழமாகவே உணரப்பட்டுள்ளது.
என்றாலும் இன்றளவும் அதனை அடையப் பெற முடியாமைக்கான காரணம் என்ன என்பதனை ஆராய்ந்து அறிந்து அதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவூபூர்வமானதுமான வழிதுமுறைகள் என்ன என்பதனை யாரும் முன் வைத்ததாகத் தெரியவில்லை.
1986-87 காலப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழுகின்ற கிழக்கு மாகானத்தில் விடுதலைப் புலிகளின் அராஜகங்களால் உந்தப்பட்ட அம்மாகான மக்கள் மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ் அரசியல் ரீதியாக அணி திரண்டாhகள். அதன் பின் அந்தத் தலைமைத்துவம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்தும் முயற்ச்சியில் கவனம் செலுத்தியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் கனிசமான மக்களின் அங்கிகாரத்தினைப் பெற்றது.
அப்படி அரசியலின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்த வேண்டும் எனும் இலச்சியத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் தலைமைத்துவம் அவரின் மறைவுக்குப் பின் ஏற்கனவே இரண்டு பிரிவாக இருந்த நம் சமூகத்தை இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரித்துள்ளது. ஆளுக்கு ஆள் கட்ச்சி என்றும் தலைவர் என்றும் வெளியாகத் தலைப்ட்டு விட்டார்கள்.
இந்நிலையில் மீண்டும் ஒரு முறை அரசியல் ரீதியில் ஒன்று படுத்துவதென்பது இதன் பிறகு சாத்தியமற்ற ஒன்றாகும் என்றே கருத வேண்டியுள்ளது.
அப்படியானால் அரசியலை முற்றாகத் தவிர்த்து ஆண்மீகத் தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தலாமா? என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மத்ஹபுகளின் பெயரால் பிரிந்திருந்த சமூகத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுத்தவென்று உதயமான இயக்கங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி இன்று எத்தனை எத்தனையோ எண்ணில் அடங்கா குழுக்களாகப் பிரிந்தே காணப்படுகின்றது. ஏற்கனவே நான்கு மத்ஹப்புகள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் மேலோங்கிக் காணப்பட்டன. இன்றோ நம் சமூகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது இயக்கங்களின் பெயரால் ஏற்படும் முறுகல் நிலையும் குழுச்சண்டைகளும் நாளாந்தம் ஊடகங்களில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அவர்களுக்குள்ளேயே புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் இல்லாத அவர்களால் எவ்வாறு முழு சமூகத்தையும் வழி நடாத்த முடியும் எனும் நியாயமான கேள்விகள் எழுகின்றன.
இப்படிப்பட்ட நம் தலைவர்களினதும்; சமயக் குழுக்களினதும் தூரப் பார்வையற்ற இத்தகைய குறுகிய சிந்தனைகளின் வெளிப்பாடே இன்றைய நம் சமூகத்தின் தலைவிதியாக பரினாமம் கொண்டுள்ளது எனலாம்.
இவற்றுக்கான காரணங்கள் :
இஸ்லாம் ஒவ்வொரு தனிமனிதன் குழுக்கள் சமூகம் போன்ற அத்தனையிலும் தலையிட்டு தனது செல்வாக்கைச் செலுத்தும். ஆதலால் அது ஒவ்வொரு தனிமனிதன் குழுக்கள் சமூகம் போன்ற அத்தனை பேரிடத்திலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் முன்னெடுப்புக்களுக்கும் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் ஆகியவற்றின் வழிகாட்டலினையே பின்பற்ற வேண்டும் என்று வலுவாக கட்டளை இட்டுள்ளது. அது எந்தவொரு சந்தாப்பத்திலும் பிரிவினையையோ முறண்பாட்டையோ அனுமதித்ததே கிடையாது.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; (அல்-குர்ஆன்: 8: 46)
மீண்டும் வல்ல அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102: 103)
அப்படியாயின் இன்றய இந்த இயக்கவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் முறண்பாட்டுக்கும் மிகமுக்கிய முதற்காரணம்; என்னதான் நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் கற்றிருந்த போதிலும் அந்தக் கல்வியில் எங்கோ ஓரிடத்தில் பலவீனம் ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.
அப்படி இல்லை என்றால் நமக்கு மத்தியில் காணப்படும் இஸ்லாமிய அகீதா எனும் அடிப்படை விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தாத மார்க்கச் சட்ட விவகாரங்களில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளெல்லாம் கருத்து முறன்பாடாக உருப்பெற்று கருத்து மோதலாக மாறி இயக்க வெறி பிரசவித்திருக்க நியாயம் கிடையாது.
நமது மார்க்கக் கல்வியில் ஏற்பட்ட இந்த பலவீனம் முறையே
علم எனும் மார்க்கக் கல்வி மற்றும் அதன் மூலம் அதிகரிக்கப்பட வேண்டியதான
إيمان எனும் இறை விசுவாசம். அதன் ஊடாக வலுப் பெற வேட்டியதான
تقوى எனும் இறையச்சம். அதன் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டிய
أخوة எனும் சகோதரத்துவம் ஆகியவற்றில் இன்று பாரியதோர் வீழ்ச்pயை ஏற்படுத்தியுள்ளதை உணரக் கூடியதாகவுள்ளது.
இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தலைப்புகளாக அடுத்தடுத்து வரவுள்ள பதிவுகளில் ஆராயப்படவுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக