ஞாயிறு, 27 ஏப்ரல், 2014


بسم الله الرحمن الرحيم

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 03

إيمان எனும் இறை விசுவாசத்தில் ஏற்பட்டுள்ள பலவீனம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பலசாலியான இறை விசுவாசி பலவீனனான இறைவிசுவாசியை விட அல்லாஹ்விடத்தில் சிறந்தவனும் விருப்புக்குரியவனும் ஆவான். (நூல் : முஸ்லிம் )

நமது கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த பலவீனம் நமது ஈமானிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்தோம். கல்வியை இஸ்லாம் வலியுறுத்துவது போன்று வேறு எந்த சமயமும் வலியுறுத்துவதில்லை அல்குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் அவனிடம் அதிகப்படுத்துமாறு பிரார்த்தனை செய்யுமாறு கற்றுத் தருகின்ற ஒரேயொரு விடயம் இந்த கல்வி மட்டும்தான் ஏனெனில்; கல்வியின் மூலம்தான் மனிதனுடைய ஈமான் அதிகரிக்க முடியும். ஆனால் இன்று நாம் கற்றிருக்கின்ற இந்த மார்க்கல்வி எந்த அளவு எமது ஈமானை அதிகரிக்கச் செய்திருக்கின்றது என்பதனைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மறுவுலக வாழ்க்கைதனை மைய்யமாக் கொண்டு கற்கப்பட வேண்டிய இந்தக் கல்வி இவ்வுலகை மைய்யப்படுத்தி கற்கப்படுவதனால் மனித மனங்களில் மறுமை மீது ஏற்ப்பட வேண்டிய ஆசைக்குப் பதிலாக இவ்வுலக ஆசையே மேலோங்கிக் காணப்டுகின்றது.

நமது ஈமானை பலமிளக்கச் செய்கின்ற இது போன்ற பல விடயங்கள் இன்று நம் சமூகத்தில் உணரப்படாமல் மலிந்து காணப்படுகின்றன. அக்காரணிகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1. உலகத்தின் மீதான அதீத ஆசையும் மரணத்தின் மீதான இனம் புரியாத வெறுப்பும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள், ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்). 

ஆப்போது நாயகமே! நாமன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதனால் அவ்வாறு நிகழுமோ? என்று ஒரு நபித் தோழர் கேட்டார் :

அதற்கு நபி (ஸல்) அவர்கள்;:

நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும்,  நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப் படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்! எனறு பதிலளித்தார்கள்

அப்போது வஹ்ன்,  என்றால் என்ன? என்று வினவப்பட்டது.

அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும், இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர் : சௌபான் (ரலி) நூல் : அபூதாவூது)

நமது ஈமான் வலுவிழக்குகின்ற போதே தீய சக்திகள் நம்மீது அராஜகத்தினையும் அடக்குமுறைகளையும் பிரயோகிக்கும் என்பது மேற்படி நபிவழிச் செய்தி நமக்குக் கற்றுத்தருகின்ற பாடமாகும்.

2. பொருளாசையும் பதவி மோகமும்

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

ஒருவனது பொருளாசையும் பதவி மோகமும்ää இரண்டு பசி கொண்ட ஓநாகளிpடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். (திர்மிதி)

3. தலைமைத்துவ ஆசை

மனிதர்கள் அமர்ந்திருக்கக் கூடிய சபையில் தலைவராக உட்கார விரும்புவதும், அங்கு நடக்கும் ஆலோசனைகளில் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும், இன்னும் அதிகாரம் வகிக்க விரும்புவதும், இத்தகைய சபைகளைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றேன், இத்தகைய தலைமையைக் கொண்ட சபையானது ஆடுகளை அறுக்கும் பலிபீடங்கள் போன்றது. (புகாரி)

4. வரம்பு மீறுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளின் பொழுது சிலர் துஹாமா என்னும் மலையைப் போன்று மிக அதிகமான நன்மைகளுடன் வருவார்கள், ஆனால் அல்லாஹ் அதனை தூசி போல ஆக்கி காற்றில் பறக்க விட்டு விடுவான் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தவ்பான் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இத்தைகயவர்கள் பற்றி எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்,  அதன் மூலம் நாங்களும் அத்தகைய மனிதர்களாக ஆகி விடாமல் தவிர்ந்து கொள்ள இயலுமல்லவா? என்று கேட்டார்கள், 

அதற்கு, அவர்கள் உங்களது சகோதரர்களாகவே இருப்பார்கள்,  உங்களைப் போலவே இருப்பார்கள்,  நீங்கள் தொழுவது போல அவர்களும் இரவில் நின்று தொழுவார்கள், ஆனால் இறைவன் விதித்திருக்கும் வரம்புகளை மீறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால்,  அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மீறுவதற்குத் தயங்கவும் மாட்டார்கள்.  (இப்னு மாஜா)


இவ்வாறே போட்டி, பொறாமை, கருமித்தனம், முகஸ்த்ததி, தற்பெருமை, வீண்வாதம் போன்ற இன்னும் பல  காரணிகள் எமது ஈமானை பலமிழக்கச் செய்து விடக் கூடியது என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தள்ளார்கள். விரிவஞ்சி அவைகள் தவிர்க்கப்படுகின்றன.

எனவே தற்கால நம் சமூகத்தில் இந்த தீமைகள் அதிகரித்தே காணப்படுவது மாத்திரமின்றி அவைகள் சர்வசாராதன விடயங்களாகவும் ஆகிவிட்டிருப்பதனைப் பாhக்கின்றோம்.

இந்த நன்மை தீமைகளைப் பிரித்தறிந்து கொள்ள முடியாமைக்கான காரணம் மனித உள்ளங்கள் பாவங்களினால் இருண்டு விட்டதனால் ஈமன் வலுவிழந்து விட்டது ஆதலால் வலுவற்ற அந்த இறை விசுவாசிகளால் தாங்கள் செய்து கொண்டிருப்பது தீமை என்பதனைப் புரிந்து கொள்ள முடியாது உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

புற்பாய் போன்று உள்ளங்களில் தீமை கீற்று கீற்றாக வெளியாகும். எந்தவொரு உள்ளம் அதனை உள்வாங்க்கிக் கொள்கின்றதோ அதில் ஒரு கரும் புள்ளி விழுந்து விடுகின்றது. அவ்வாறே எந்தவொரு உள்ளம் அதனை புறக்கனித்து விடுகின்றதோ அதில் ஒரு வெண்புள்ளி விழுந்து விடுகின்றது. ஈற்றில் அது இரண்டு வகையான உள்ளங்களாக ஆகிவிடுகின்றன. ஓன்று தெளிவான வெண்மையாகும் அதில் வானம் பூமி நிலைகொண்டிருக்கும் காலம் எல்லாம் எந்தவொரு தீமையும் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. மற்றயது மனோ இச்சையை வழிப்படுவதைத் தவிர நன்மையை அறிந்து கொள்ளவோ தீமையை தவிர்த்துக் கொள்ளவோ முடியாதவாறு கடுமையான கருமையாக ஆகிவிடுகினறது.

அல்லாஹ் கூறுகின்றான் :

இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும் சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும் திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (அல்-குர்ஆன் :2: 74)


இன்ஷா அல்லாஹ் தொடரும்…

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...