சனி, 19 ஏப்ரல், 2014

முஸ்லிம் இணைய ஊடகத்தினர்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.


முஸ்லிம் இணைய ஊடகத்தினர்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.

அன்புடையீர்

           அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்லீம்களுடைய பிரச்சினைகள் மனக்குமுறல்களை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டி எமது ஊடகங்களில் சிலர் தங்களை பெரிய புத்திஜீவிகள் என்று எண்னிக் கொண்டு ஏனைய பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் சகோதரர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பதன் மூலம் நம் சமூகத்திற்கு பெரும் அபகீhத்தியை ஏற்படுத்தி வருவதனைப் பார்க்கும் போது இஸ்லாமிய உணர்வுள்ள உள்ளத்தில் அனுவளவேனும் ஈமான் இருக்கும்  எந்தவொருவராலும் இதனைக் கண்டிக்காது இருக்க முடியாது. எனவே தயவு செய்து பிறரை விமாசித்து பிறர் துண்பத்தில் குளிர்காய விரும்பும் இத்தகைய சமூகத் துரோகிகளின் ஆக்கங்களுக்கு உங்கள் தளங்களில் இடம் கொடுப்பதன் மூலம் நீங்களும் அவர்னகளுக்கு உடந்தையாகி அல்லாஹ்வின் விசாரனைக்கு உடபட்டு விட வேண்டாம் என அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

அத்துடன் நம் சமூகத்திற்கு மத்தியில் பரஸ்பரம் அன்பையும் சகோதரத்துவத்தினையும் சமூக ஐக்கியத்தினையும் கட்டி எழுப்பும் வகையிலான ஆக்கங்களுக்கு முதலிடம் தரவும் ஏனெனில் அதுவே ஈமானின் அடிப்படையாகும் பரஸ்பரம் அன்பு கொண்டு சகோதரத்துவத்தைப் பேனாத யாரும் உண்மை விசுவாகியாக முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் உள்ளதாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் நம்பிக்கைளாராக ஆகாதவரை சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. உங்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை நீங்கள் முழுமையான (பூரணமான) நம்பிக்கையாளராக ஆக முடியாது. உங்களுக்கு ஒன்றை நான் ஏவுவதாக இருந்தால்ää உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்பவும்ää இன்னும் அன்பு செலுத்தும்படியும் தான் நான் கூறுவேன். ஸலாத்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் கூறுங்கள்ää நீங்கள் ஸலாம் உரைக்கக் கூடிய நபர் அறிந்தவராகவோ அல்லது அறியாதவராகவே இருப்பினும் சரியே! (அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) அவர்கள்) 

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

1. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். 

2. ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம்.

3. ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம். 

4. ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். 

5. உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம்.

6. அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். 

7. ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான். 

8. எனவே அம்முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான். 

9. அவனைக் கைவிட மாட்டான். 

10. அவனிடம் பொய்யுரைக்க மாட்டான். 

அவனை இழிவாகக் கருத மாட்டான். ''இறையச்சம் இங்கே உள்ளது"" என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.

11. ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே அவன் தண்டனை பெறுவதற்கு போதுமான தீய செயலாகும். 

12. ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.

(அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் நூல்:; முஸ்லிம் )
எனவே ஒரு உண்மையான இறை விசுவாசி தனது ஏனைய சகோதரர்களை அவர்களின் குறைகளைக் கூறி வீதிக்கு அழைக்கமாட்டான்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

ஆகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...