புதன், 23 ஏப்ரல், 2014

சட்டம் யாருடைய கையில்... ?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்...

சட்டம் யாருடைய கையில்... ?

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

மஹிந்த ராஜபக்கஷவின் ஆட்ச்சியின் இறுதி நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது என்பது நலாளாந்தம் உறுதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நயவஞ்சக ஆட்ச்சிக்கு முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு நாடு போய்க்கொண்டிருக்கின்றது. அவர் ஆட்ச்சிக்  கதிரையில் அமர்ந்தலிருந்து சிறுபான்மை இன மக்கள் மீது அளவுக்கதிகமான அநியாயங்களையும் அத்து மீறல்களையும்தான் செய்து கொண்டிருக்கின்றார் என்பதை முழு உலகமும் அறியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தின் போது சர்வசேத யுத்த வரம்புகளை மீறி யுத்தம் எனும் போர்வையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொண்டு குவித்தார் எனும் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளார்.

என்னதான் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் அடக்கி அடிமைப் படுத்துவதாகவே அவரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இரண்டாம் நிலையில் உள்ள சிறுபான்மையாகிய முஸ்லிம்கள் மீதே தற்பொழுது அவரதும் அவரின் கொள்கையை ஒத்த அத்தனை அரசியல் கட்ச்சிகள் மற்றும் அமைப்புக்களுடைய கவனமும் வெகுவாக திரும்பியுள்ளது.

ஹலால் பிரச்சினை என்ற போர்வையில் உலமா சபையுடன் ஆரம்பித்து இன்று (23-04-2014) அமைச்சர் றிசாட் பதிய்யுத்தீன் அவர்களின் அலுவலக முற்றுகை வரை இஸலாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எத்தனையோ அத்து மீறலகளையும் அடாவடித்தனங்களையும் மானமிளந்த பாதுகாப்பு படையினரின் பூரண பாதுகாப்புடன் பொது பளு சேனா எனும் பாசிஸ கும்பல் அரங்கேற்றி வருகின்றது.

இவ்வளவு நடந்தும் ஜனாதிபதியோ பாதுகாப்புச் செயலாளரோ இது வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக ஜனாதிபதி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்: இந்த நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுவதாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அப்படி எந்தவொரு பள்ளியும் உடைக்கப்படவோ தாக்கப்படவோ இல்லலை. அனுமதியின்றி பள்ளிவாயல்கள் கட்டமுடியாது என்று அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எனவே அப்படி உடைக்கப்பட்டிருரூந்தால் அது அனுமதியின்றி கட்டப்பட்டவையாகும்.

அல்-குர்ஆனுக்கும் ஜனாதிபதியின் இந்தக் கூற்றுக்கம் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அவரின் மேற்படி உரை எமக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது, அதுதான் சிறுபான்மை குறிப்பாக முஸ்லிம்களை அடக்கியாள்வதற்காக அவரால் உருவாக்கப்பட்ட பாசிஸ கும்பலே பொது பளு சேனா என்பது. இல்லை எனின் ஒரு ஜனநாயக நாட்டில் நாட்டுச் சட்டத்திற்கு முறனாக ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும். கண்ட கண்ட நாய்கள் எல்லாம் அதற்கு குரைக்க முடியாது.

அவ்வாறிருக்கும் பொழுது பொதுபளு சேனாவுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனும் கேள்விக்கு ஜனாதிபதி பதில் சொல்லியாக வேண்டும்.

அவ்வாறின்றேல்; அனுமதியில்லாத பள்ளிவாயல்களை உடைப்பதற்காகத்தானா பொதுபளு சேனாவை போசித்துப் பாதுகாத்து வளர்த்து வருகின்றீர்கள் எனும் நியாயமான கேள்வி எழுகின்றது. 
அத்துடன் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது. சட்டம் யாருடைய கையில் இருக்கின்றது. சட்டத்தை நடைமுறைப் படுத்துபவர்கள் யார்? என்பதெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவைகளாகும்.

அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் பூர்வீகத்தினைப் பறைசாட்டிக் கொண்டிருந்த மன்னறையுடன் கூடிய தைக்யா தகர்ப்பு முதல் இன்று வரை தாக்கப்பட்ட அத்தனை பள்ளிவாயல்கள் தைகாகள் கடைகள் போன்ற அத்தனையும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடனேயே நடந்தேறியுள்ளதானது அனைத்தும் அரச அங்கீகாரத்துடனும் வழிகாட்டலுடனும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை சந்தேகத்திற்கிடமின்றி படம் பிடித்துக் காட்டுகின்றது.

அவ்வாறின்றேல் சில அமைப்புக்கள் மக்களுக்கிடையே இனவாத்தினைத் தோற்றுவிக்க முயற்சிகள் செய்கின்றன என்று அடிக்கடி ஊடகங்களில் மக்களுக்கு முன்னால் கூறி தான் ஒரு நல்லவன் என்பதனை நிரூபிக்க முயற்ச்சிக்கும் ஜனாதிபதியவர்கள் இத்தனை அடாவடித்தனங்களையும் பகிரங்கமாகச் செய்து கொண்டிருக்கும் பளு சேனா பற்றி வசனமேனும் பேசாதிருப்பதன் மர்மம்தான் என்ன? 

எனவே ஒரு உண்மை இறை விசுவாசி ஒரு குளியில் இரண்டு முறைகள் விழ மாட்டான் எனும் நபி மொழியினை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். 
நாம் எத்தனை முறை எத்தனை குளியில் விழுந்து எழும்பி இருக்கின்றோம்.? இன்னும் எமது ஈமான் வலுப்பெறவில்லையா? அல்லது ஈமானே இல்லையா? நிச்சயமாக ஒரு இறைவிசுவாசியுடைய அடி மனதிலேனும் ஒரு அனுவளவேனும் ஈமான் இருக்கத்தான் செய்யும். அப்படி அனுவளவேனும் ஈமான் இருக்கும் ஒரு விசுவாசி இனிமேலும் இப்படியான குளிகளில் விழுந்து விட மாட்டான் என்றே நம்புகின்றேன்.

ஆகவே இதன் பிறகாவது நாம் மீண்டும் மீண்டும் ஒரே குளியில் விழாதிருக்கும் வகையில் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருந்து எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில்; எமது வாக்குகளை இந்தப் பிர்அவ்னிய ஆடச்சியிலிருந்து நம்மையும் நமது உயிரிலும் மேலாக நாம் மதிக்கின்ற நமது மாhக்கத்தையும் பாதுகாத்து இந்த கொடுங்கோலனை குப்புர வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதுவே நாம் இவ்வேளையில் மேற்கொள்ளும் மிகப் பெரிய ஜிஹாதாகும். 

இப்படிக்கு


முனாப் நுபார்தீன் 

மின் அஞசல்: aslislamguide@yahoo.com

ஸ்கைப் : munabu2

வலைத் தளம்: srilanka islamic guidance centre

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...