அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்னாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்
துவங்குகிறோம்.
முஸ்லிம் தேசிய தலைமைத்துவம் எவ்வாறு அடையப் பெறும்;.
அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தமாகும் அவனது ஸலாத்தம் ஸலாமும் இறுதித்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள்
மீதும் அவர் அன்புக் குடும்பத்தினர்கள் ஆருயிர்த் தோழர்கள் அவரடியில் தொடர்ந்தவர்கள் மற்றும்
மறுமை வரை அவர் வழியில் வாழ்பவர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும் என்று வேண்டியவனாக
(அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி
வழிகாட்ட முன் வந்துள்ளார் எனும் செய்தியை சோனகர் . கொம் வெளியிட்டிருந்தது. எனவே அது
தொடர்பான எனது கருத்துக்கள் சிலவற்றை இங்கு பதிவு செய்து கொள் விரும்புகின்றேன். ஆதிகமான
வேலைப் பழுவுக்கு மத்தியில் கிடைக்கின்ற சில நிமிடங்களில்தான் இதனை எழுதுகின்றேன் எனவே
பிழைகள் ஈருப்பின் சுட்டிக் காட்டுமாறும் நடுநிலைகண் கொண்டு பார்க்குமாறும் வேண்டியவனாகத்
தொடர்கின்றேன்.)
இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 66 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும்ää பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றனää இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் எக்குறையுமின்றி மிகவும்
திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக தற்போது
ஆட்ச்சியில் இருக்கும் ஜனாதிபதி இந்த நாட்டில் நமது இருக்கையையே கேள்விக் குறியாக்கும்
விதத்தில் அதற்கென்றே தனிப்படையனி ஒன்றையே தோற்றுவித்து அதனைப் போசித்து வளர்த்து வருகின்றார்.
இதனை அவரின் நடவடிக்கைகள் மற்றும் உரைகள் எமக்கு உள்ளங் கை நெல்லிக்கனி போல் கோடிட்டுக்
காட்டிக் கொண்டிருக்கின்றன இந்நிலையில் இலங்கை முஸ்லிம்கள்
தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டேதான் வருகின்றது.
இவையனைத்திற்கும்;
முதல் முக்கிய காரணம்
முஸ்லிம்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியாகவும் ஆன்மீகரீதியாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து காணப்படுவதாகும்.
இந்நிலையில் இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் எதிர்காலத்தில்
அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும் இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும் அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான மற்றும் மத ரீதியிலான
முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம்தான் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு
விடை காணாமல் முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை
என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்;.
ஆண்டாண்டு காலமாக அரசியல்வாதிகளாலும் ஆண்மீக் குழுக்களாலும்
ஏமாற்றப்பட்டு அவையனைத்தையும் வெறுத்த நிலையில் பொதுவானதொரு தலைமைத்துவத்தினையும் வழிகாட்டலினையும்
வேண்டி தவித்து நிற்கும் நம் சமூகத்திற்கு அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி வழிகாட்ட முன்
வந்துள்ளார் எனும் செய்தி நொந்து போயிருந்த உள்ளங்களுக்கு ஓரளவேனும் ஒத்தனம் கொடுப்பதாகவுள்ளது.
சோனகர்.கொம்; வெளியிட்ட இந்த அறிவிப்பு உண்மையாகவிருந்து
அவரும் அவரின் கட்ச்சியை அடித்தளமாகக் கொண்டு இதனை செயல்படுத்த முனைந்தால் நிச்சயமாக
அதுவும் கைகூடாது பகற்கணவாகத்தான் ஆகிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.
எனவே அவர் உண்மையில் உளத்தூய்மையுடன் சமூக நலனை மட்டும் கருத்திற்
கொண்டு இப்பணிக்குத் தயாராகினார் என்றிருந்தால் அவர் முதலாவது தனது கட்ச்சியிலிருந்து
வெளியேறி (குறிப்பு: அமைச்சுப் பதவியிலிருந்தோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தோ
அல்ல) முஸ்லிம் என்ற அடைமொழிக்குள் வாழுகின்ற அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி
முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் பொதுவான தலைவராகத் தலைமை தாங்ககுதல் வேண்டும் அப்போதுதான்
நாம் நமது இலக்கை அடைய முடியும்.
ஓன்றை அடைய வேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும். அவ்வாறின்றி
கூளுக்கும் ஆசைப்பட்டு மீசைக்கும் ஆசைப்பட்டால் இரண்டையுமே பாதுகாத்துக் கொள்ள முடியாது
போய் விடும்.
அவ்வாறு அவர் தனது கட்ச்சியிலிருந்து வெளியேறத் தயார் எனில்
முஸ்லீம்களாகிய நாம் அவருடன் அணிதிரள்தல் நமது தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையாகும்.
வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்
- நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்;
(அவ்வாறு முறண்பட்டுக
கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(அல்-குர்ஆன்: 8: 46)
இங்கு வல்ல அல்லாஹ் மூன்று முக்கிய விடயங்கள் பற்றி வலியுறுத்துகின்றான்.
அவைகளாவன:
1.
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாக வழிப்பட்டு நடக்க வேண்டும்
2.
எந்நிலையிலும் கருத்து
வேறுபாடு காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ நாம் நமக்குள் பிரிந்து விடக்கூடாது
3.
அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் வழிப்படுவதிலும்ää கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற வேளைகளிலும் எக்காரணம் கொண்டும் பிரிந்து விடாதிருத்தல்
மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுமையைக் கைகொள்ளுதல்.
இவைகளுக்கு மாறு செய்யும் போது ஏற்படவுள்ள அபாயங்கள் இரண்டினையும்
வல்ல அல்லாஹ் அதன் தொடரில் கோடிட்டுக் காட்டுகின்றான்.
1. கோழைகளாகி விடுதல்.
2. பலம் குன்றி பலஹீனர்களாகி விடுதல்.
இதனைத்தானோ என்வோ இன்றைய நம் இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில்
அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
இன்னும் வல்ல அல்லாஹ் எமது ஒற்றுமையின் அவசியம் பற்றி கூறும்
போது:
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி
அஞ்சுங்கள்; மேலும்ää (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
இன்னும்ää நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த
நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102-103)
மேற்படி ஒரே வசனத்தில் ஒற்றுமையினை வலுப்படுத்திக் கொள்ளுமாறு
கட்டளையிட்ட வல்ல அல்லாஹ் அதன் தொடரிலேயே பிரிந்து விட வேண்டாம் என்று எச்சரிப்பதும்
நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அத்துடன் இந்த வசனங்களின் மூலம் வல்ல
அல்லாஹ் இன்னும் சில முக்கிய விடயங்களையும் எமக்குக் கட்டளையிடுகின்றான்.
அவைகளாவன.
1. ஒவ்வொரு தனிமனிதனும் தக்வா சார்ந்த வாழ்க்கையினை மேற்கொள்ளுதல்.
2. மரணமே வந்தாலும்;
இஸ்லாத்தை விட்டு வெளிச்செல்லாத
வகையில் முஸ்லிமாகவே செயல்படுதல்.
3. அல்-குர்ஆன்ää அல்-ஹதீஸின் நிழலில் ஒரே அணியாக இருத்தல்.
4. எந்நிலையிலும் எக்காரணம் கொண்டும் பிரிந்து விடாது ஐக்கியமாகவும்
ஒற்றுமையாகவும் இருந்து கொள்ளுதல்.
5. அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்பேறுகளை நினைவு கூர்தல்.
மேற்படி இறைவசனங்களிலிருந்து இன்றைய எமது பலஹீனத்திற்கான காரணங்களை
எம்மால் எழிதில் புரிந்து கொள்ள முடிகின்றது. அதுதான் எமக்குமத்தியில் காணப்படும் குறுகிய
மனப்பான்மை காரணமாக ஏற்பட்டுள்ள ஒற்றுமையிண்மைää மற்றும் கட்டுப்படாமையாகும்ää எனவே நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள்ää சுயகௌரவம்ää கட்ச்சிபேதம் போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம்
சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நம் சமூகம் நிம்மதியாக
வாழ வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில்; ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும் கட்டாய கடமையுமாகும்.
இந்தப் பாரிய பொறுப்பிலிருந்து நாம் யாரும் விடுபட முடியாது.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும்
என்பது நபி வாக்காகும். எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை
நிறைவேற்றும் வகையில் “அரசியல் தலைவர்கள் உலமாக்கள்
கல்விமான்கள் புத்திஜீவிகள் பள்ளி வாயிற்களின் நிருவாகிகள்
இமாம்கள் சமூக சேவை சங்கங்கள் சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் போன்றோர் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின்
கீழ் ஒன்றுபட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் எனது வழிகாட்டல் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபர்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.
தொடர்புகளுக்கு:
E-mail; aslislamguide@yahoo.com
Tel: 00966537146571
skype: munabu2
www.aslislamguide.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக