அளவில்லா அருளாளனும் நிகரில்லா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்…
கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்குஒரு பணிவான ஆலோசனை
கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{
தாங்கள் பொது பளு சேனா அஞ்ஞான சேரவுடன் விவாதம் செய்வதற்குத் தயார் என்று ஒரு சிங்கள பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்ததாக ஜஃப்னா நியூஸ் இணைய தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள கிடைத்தது.
ஆதலால் இது தொடர்பாக எனது ஆலோசனையையும் தாங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.
தாங்கள் படிப்பில் ஒரு சட்டத்தரனி நம் சமூகத்திற்கு மத்தியில் போற்றத் தக்க ஒரு பெரும் தலைவர் அரசியல் மட்டத்தில் அமைச்சரவையின் ஒரு உயர் அமைச்சர் இவை அத்தனையையும் மறந்து விட்டு கண்ட கண்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? விவாதம் செய்வதற்கு ஒருதராதரம் வேண்டாமா?
இன்று நீங்கள் இந்த தரம் கெட்ட தெரு நாயுடன் விவாதிக்கச் சென்றால் உங்கள் அந்தஸ்த்து என்னாவது?
உங்கள் அறிவுக்கும் அந்தஸ்த்துக்கும் ஆளுமைக்கும் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான ஒருவர் அழைத்தால் கண்டிப்பாக நீங்கள் அந்த சவாலை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
அவ்வாறின்றி இப்படிப்பட்ட தரம் கெட்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது அறவே தேவையற்ற விடயமாகும் இதனால் உங்களுக்கோ நீங்கள் சார்ந்திருக்கும்; சமூகத்திற்கோ அல்லது உங்கள் கட்ச்சியிற்கோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை.
அவன் நம் சமூகத்தின் ஆக அடிமட்டத்தில் உள்ள அறவே படிப்பறிவற்ற ஒரு பாமர மகனுடன்கூட விவாதிப்பதற்குக் தகுதியற்றவன்.
குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் தாங்கள் பதில் சொல்லி கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்காது உங்கள் பணியைத் nதhடருங்கள்
அவன் உங்களுடன் விவாதித்தேயாக வேண்டும் என்றால் அவனை முதலில் உங்கள் தரத்திற்கு வந்து உங்கள் அந்தஸ்த்துடன் விவாதத்திற்கு வருமாறு நீங்கள் சவால் விடுங்கள் .இதுதான் உங்கள் அந்தஸ்த்துக்குப் பொருத்தமானதாக இருக்கும் என எண்னுகின்றேன். ஆவன் உரோஷம் உள்ளவனாக இருந்தால் உங்களுக்கு இருக்கின்ற தகுதியுடனும் அந்தஸ்த்துடனும் வரட்டும்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக