செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நம் தலைமைகள் எப்போது முன் வரப் போகின்றதோ?


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்...

நம் தலைமைகள் எப்போது முன் வரப் போகின்றதோ?

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

அவ்வப்போது பேரினவாத சக்திகளால் திட்டமிட்ட அடிப்படையில் ஆங்காங்கே இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதும் அவ்வேளைகளில் நமது சமூகம் கிளர்ந்தெழுந்து ஆளுக்காள் அறிக்கைகளை விடுவதும் போராட்டங்கள் நடாத்துவதும் அதன் பிறகு ஓரிரு வாரங்களிலேயே அத்தனையும் மறந்து போய் இனி எந்தப்பிரச்சினையும் இல்லை அவர்கள் அடங்கி விட்டார்கள் என்றென்னி நிம்மதி பெரு மூச்சு விடுவதும்தான் நமது 66 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வெட்க்ககேடான வரலாறாக இருந்து வருகின்றது.

இவ்வாறான முஸ்லிம் விரோத சக்திகளின் பின்னனி என்ன அது ஏன் அடிக்கடி தோற்றம் பெற்று மறைகின்றது என்பதனை சரியான கோணத்தில் இருந்து ஆராய்ந்து அறிந்து இனங்கண்டு அதற்கு உரிய முறையில் நிரந்தரமான தீர்வினை பெற்றாக வேண்டும் என்று யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

எனவே நம் சமூகத்தில் பொறுப்பு வாய்த அத்தனை பேரும் நாளைய நம் வருங்கால சந்ததியினர்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதனை நாம் மறந்து விடலாகாது.

நமது முன்னோர்களான போற்றத்தகு நம் தலைவர்கள் நமது தலைமைத்துவம் மற்றும் நமது தார்மீக உரிமைகளைப் பெரும் போராட்டம் நடாத்தியே பாதுகாத்து நம் கரங்களுக்குப் பெற்றுத்தந்தார்கள். 

தமிழ் தலைவர்கள் இலங்கையில் தமிழ் பேசும் இரண்டு இனங்கள் உண்டென்பதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தாங்கள் தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் ஏகபிரதிநிதிகளாக ஆகிவிட முற்பட்ட போதெல்லாம், இல்லை இலங்கையில் தமிழ் பேசும் இரண்டு இனங்கள் இருக்கின்றார்கள் என்பதனை காலனித்துவ ஆட்ச்சியாளர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை எதிர்த்துப் போராடி நம் தலைமைத்துவத்தினைப் பாதுகாத்துத் வந்திருக்கின்றார்கள் எனும் வைர வரிகள் வரலாற்று நூற்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. 

அவ்வாறே தொப்பி அனிதல் போன்ற சிறு விடயங்களைக் கூட நம் தலைவர்கள் விட்டுக் கொடுக்காது வழக்காடி பெற்றுத் தந்தார்கள் இவ்வாறான பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான வீரத்தியாகிகளின் வாரிசுகள் நாம். 

அப்படி இருக்க நாம் நமது வருங்கால நாளைய நம் சந்ததியினர்களுக்;கு என்ன வரலாற்றை விட்டுச் செல்லப் போகின்றோம். தலைமைத்துவம் முதற்கொண்டு தன்மானம் வரை அத்தனையையும் அடகு வைத்தார்கள் எனும் கோழைத் தனத்தைப் பறைசட்டி நிற்கும் கறை படிந்த வரலாற்றையா? அல்லது வீரப்பரம்பரையின் வாரிசுகள் என்பதனை நிலை நாட்டிச் சென்ற வீரப் புருசர்கள் எனும் வீர வரலாற்றையா?

எப்போதும் போல் இம்முறையும் நாம் அனைத்தையும் மறந்து விட்டு மீண்டும் ஒரு முறை பேரினவாத சக்திகள் துயில் எழுப்பும் வரை மீழா துயில் கொள்வோமாயின் அதுவே நமது முட்டாள் தனத்தின் அதிகபட்ச்ச உச்சகட்டாகும்.

ஒரு உண்மை இறை விசுவாசி ஒரு குளியில் இரண்டு முறைகள் விழ மாட்டான் என்பது நபி வாக்காகும். நாம் எத்தனை முறை எத்தனை குளியில் விழுந்து எழும்பி இருக்கின்றோம்.? இன்னும் எமது ஈமான் வலுப்பெறவில்லையா? ஆகவே இதன் பிறகாவது நாம் மீண்டும் மீண்டும் ஒரே குளியில் விழாதிருக்கும் வகையில் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருந்து கொள்ளுதல் வேண்டும். 

எனவே நாம் இந்த மிகவும் சாதகமான சந்தர்ப்பத்தை நழுவ விடாது  இன்றிலிருந்தே நமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஆளுக்காள் இயக்கங்கள் என்றும் கட்ச்சிகள் என்றும் ஆப்பிழுத்துக் கொண்டிருக்காது ஒரே அனியாக நின்று இடைவிடாது முன்னெடுத்துச் செல்வதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான செயற்திட்டங்களை உடனடியாக முன்னெடுத்தல் வேண்டும். இதற்க்கு நம் தலைமைகள் எப்போது முன் வரப் போகின்றதோ?

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோ, அவர்களைத்தான் அல்லாஹ் நிச்சயமாக நேசிக்கின்றான் (அல்-குர்ஆன்: 61:4)

அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட வெற்றி எமக்குக் கிடைக்காமைககான காரணம் நாம் பல அனிகளாக பிரிந்து தனித் தனிக் குழுவாகப் போராடுவதுதான். இந்தப் பிரிவினை அல்லாஹ்வின் அன்புக்குப் பதிலாக அவனின் கோபத்தையே எமக்குப் பெற்றுத்தந்திருக்கின்றது எனலாம்.

மீண்டும் அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கின்றது. (அல்-குர்ஆன்: 61:3)


இப்படிக்கு

முனாப் நுபார்தீன் 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

மின் அஞசல்: aslislamguide@yahoo.com
ஸ்கைப் : munabu2
வலைத் தளம்: www.aslislamguide.blogspot.com


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...