திங்கள், 21 ஏப்ரல், 2014

வானத்தைப் பார்த்து உமிழ்ந்தால் அது நம் முகத்தில்தானே

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்..

வானத்தைப் பார்த்து உமிழ்ந்தால் அது நம் முகத்தில்தானே

தெரு நாய்களுடன் விவாதிப்பது அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்கு நியாயமா? எனும் தலைப்பில் சில இணைய தளங்களில் வெளியாகிய எனது ஆக்கத்திற்கு கருத்து வழங்கியிருந்த சகோதரர் பறகஹதெனிய அக்கரம் அவர்களுக்கும் மற்றும் அவரின் கருத்தில் இருப்பவர்களுக்கும்.

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

முதலில் நீங்கள் நம் மார்க்கத்தின் மீதும் நம் சமூகத்தின் மீதும் கொண்டுள்ள அதீத பற்றிற்க்கும் அக்கறைக்கும் எனது நிறைவான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

உங்களுடைய ஆத்திரமும் ஆதங்கமும் எமக்குப் புரிகின்றது இன்றைய சூழ்நிலையில் நீங்கள் மட்டுமின்றி நம் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரதும் ஆதங்கமும் அதுவாகத்தான் இருக்கின்றது. 

பாராளு மன்றத்தில் நம் சமூகத்தைச் சார்ந்த இத்தனை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தும் இவர்கள் ஒருவரும் ஏன் இன்னும் பாராளுமன்றத்தில் அல்லது ஜனாபதியிடத்திலோ பாதுகாப்புச் செயலாளரிடத்திலோ இது பற்றி பேசாதிருக்கின்றாhகள் என்ற கேள்விதான் இன்று ஒட்டு மொத்த நம் முஸ்லிம் சமூகத்திடமும் எழுந்துள்ளது.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அதாவது பாராளு மன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நம் முஸ்லிம் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர் எந்தக் கட்ச்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி குறியகி மனம் படைத்த ஓரிருவரைத் தவிர ஏனையவர்களின் சேவைகளை நாம் ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது அவ்வாறு குறைத்து மதிப்பிடவும் கூடாது. 

அவர்களால் நம் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கேனும் நன்மைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

அத்துடன் அவர்கள் தகுந்த இடங்களில் நம் சமூகத்திற்காக குரல் கொடுக்குகின்றார்களா? இல்லையா? என்பது பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. ஏனெனில் அநேகமான ஊடகங்கள் அவர்களின் அவ்வாறான நல்ல செயற்பாடுகளைத் திட்டமிட்டு மறைக்கின்றன. 

அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ எந்த அக்கறையும் இல்லை எனும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நமக்கே இந்த அளவு ஆத்திரமும் ஆதங்கமும் ஏற்படுமாகவிருந்தால் அவர்களுக்கு ஏற்படாதிருக்க எவ்வகையிலும் நியாயமில்லை. 

அவர்களும் அவர்களால் முடிந்த பங்களிப்புகளைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். 

அண்மையில் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்க்குப் பதில் அளித்த போது அவர் கூறியதாவது “- பாதுகாப்புச் செயலாளரிடம் பொதுபள சேனாவின் அலுவலத் திறப்பு விழாவில் தாங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் அவருக்கு அழுத்தங்களைக் கொடுத்தோம் என்றாலும் அவர் சில காரணங்களைக் காட்டி எமது வேண்டுதலைப் புறக்கணித்தார் என்று குறிப்பிட்டார்.

அவ்வாறே கடந்த வாரம் ஒலிபரப்பான முஸ்லிம் குரலின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு விடையளித்த அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களும் இதே விதமான கேள்வியொன்றிற்குப் பதிலழிக்கும் போது அவரும் பாதுகாப்புச் செயலாளரின் இந்த செயலைக் கண்டித்ததாக் குறிப்பிட்டார்.

இவைகளிலிருந்து நம் அரசியல் தலைவர்கள் அனைவரும் நமக்காகக் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை எம்மால் எழிதில் புரிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறே எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தினை இந்த இடத்தில் நினைவூட்டுதல் நம் தலைவர்களைப் பற்றிய நல்லென்னத்தினை நமது உள்ளங்களில்; ஏற்படுத்தும் எனக்கருதுகின்றேன்.

கடந்த 2008 ம் ஆண்டு நடை பெற்ற வடமத்திய மாகானசபைத் தேர்தலின் போது எனது பக்கத்து ஊராகிய மிகிந்தiலையைச் சேர்ந்த நம் சகோதரர்கள் சிலர் அன்று மாகானசபை முதலமைச்சராகவிருந்த ”பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க” அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள் அப்போது குறித்த முதலமைச்சர் நம் சகோதரர்களைத் ”தம்பிலா தொப்பிய ஹெரின பத்தட்ட தானவா” எனக்கூறி தகாத வாhத்தைகளால் பேசியுள்ளார் இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தது.

மறு நாள் நான் எனது சொந்தத் தேவைக்காக கொழும்பு சென்ற போது மேல் மாகான ஆளுனர் அலவி மௌலானா அவர்களைச் சந்தித்து இது பற்றி அவரிடம் முறையிட்டேன் அப்போது அவருக்கு ஏற்பட்ட ஆத்திரம் எனக்கு கண்கலங்க வைத்து விட்டது. ஆன்றுதான் அவர் நம்மீது வைத்திருக்கும் அதீத பாசத்தினைப் புரிந்து கொண்டேன்.

உடனடியாகத் தனது பணியாளை அளைத்து பேர்ட்டிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தித் தாருங்கள் என்று பணித்தார் அப்போது அருகாமையில் அமர்ந்திருந்த அஸ்வர் அவர்கள் குறுக்கிட்டு ”நமது ஆட்கள் செய்கின்ற வேலைகளும் அப்படித்தானே” என்று கூறினார் அதற்க்கு ஆளுனர் அவர்கள் நமது மக்கள் தவறு செய்தால் அதற்கு ஏசுவதற்கு அவர்; யார்? அவர் எப்படி நம்மக்களுக்கு ஏச முடியும்? அவருக்கு நம்மக்கள் மீது என்ன உரிமை இருக்கின்றது என்று கூறிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் வடமத்திய மாகான முதலமைச்சரைத் தொலைபேசியில்; கண்டித்தார்.

அவர் தனது கண்டனத்தின் போது உங்கள் சிங்கள மக்கள் அனைவரையும் சிறிலங்கா சுதந்திரக் கட்ச்சிக்குள் சேர்த்து விட்டீர்களா? எமது மக்கள் மட்டு வேறு கட்ச்சிகளில் இருக்கக் கூடாதா? போன்ற கேள்விகளையும் கேட்டு விட்டு இதன் பிறகு எமது மக்களுக்கு எதுவும் சொல்லக் கூடாது அவர்களிடம் தவறு இருந்தால் அதனை கேட்பதற்கு நாம் இருக்கின்றோம் என்றும் கூறினார்.

இது ஒரு சாதாரன விடயம் இதற்கே அவர் இந்த அளவு ஆத்திப்பட்டார் என்றால் இன்றைய நிலையில் அவர் போன்றோர்கள் எந்த அளவு ஆத்திரத்துடனும் வெறுப்புடனும்; அரசுடன் சேர்ந்து பயனிப்பார்கள் என்பதனைச் கட்ச்சி பேதங்களை எல்லாம் ஒரு புறம் தூக்கி வைத்து விட்டு நடுநிலை கண் கொண்டு சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

நம்  தலைவர்களுடைய மட்டுமின்றி சம் சமூகத்தில் உள்ள சாதாரன ஒரு குடிமகனாக இருக்கும் நம் இஸ்லாமிய சகோதரன் ஒருவனுடைய மானத்துடன்கூட விளையாடுவது ஹராமாகும் அதே நேரம் தலைவர்மார்களுடைய விடயத்தில் அது பெருக் குற்றமும் கூட எனவே தயவு செய்து அவர்களைப் பற்றிய நல்லதை பேசுங்கள் அல்லது மௌனமாக இருயுங்கள். தவறு செய்யாத மனிதன் உலகில் யாரும் இல்லை. எனவே அவர்களிடம் தவறுகள் காணப்பட்டால்; அதனை ஊடகங்களின் வாயிலாகப் பகிரங்கப் படுத்தாது தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடுர்பு கொண்டு நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டுங்கள் அந்த உரிமை நமக்கு உண்டு என மிகவும் தயவாய் வேண்டிக் கொள்கின்றேன். வானத்தைப் பார்த்து உமிழ்ந்தால் அது நம் முகத்தில்தானே விழும்.

இப்படிக்கு 

மிகத் தாழ்மையுடன் 

முனாப் நுபார்தீன் 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

மின் அஞசல்: aslislamguide@yahoo.com

ஸ்கைப் : munabu2

வலைத் தளம்: www.aslislamguide.blogspot.com





கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...