திங்கள், 30 செப்டம்பர், 2013

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு


துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும்ää ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

அந்த பத்து இரவுகள் மீது ஆணையாக (அல்குர்ஆன்:89:2) என்று வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தியம் செய்கின்றான்

இங்கு பத்து இரவுகள் என்று கூறப்படுவது துல்ஹஜ் முதல் பத்து இரவுகள்தான் என்றே அணைத்து அறிஞர்களும் முடிவு செய்துள்ளார்கள்.

இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஏனைய அனைத்து நாட்களையும் விட அதிசிறப்பு வாய்ந்ததாகும். இது பற்றி நபி (sal) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

ஆதத்துடைய சந்ததியினர் நல் அமற்கள் செய்யும் நாட்களிலலெல்லாம் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று  நபி (sal) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான்,  என்றாலுல் யார் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும், உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தாரோ அவரைத் தவிர என்று நபி (sal) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி

இந்த நாட்கள் ஏனைய நாட்களைவிட சிறப்புறுவதற்கு காரணம் ஏனைய காலங்களில் ஒன்று சேர முடியாத நல் அமற்களாகிய இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை,  நோன்பு,  ஜக்காத்,  ஹஜ்,  போன்ற அணைத்து நல் அமற்களும் இந்த நாட்களில் ஒன்று சேர்ந்து காணப் படுகின்றன. மற்றகாலங்களில் ஒரு மனிதன் அணைத்து கடமைகளையும் செய்த போதிலும் ஹஜ் கடமை இந்த நாட்களைத்தவிர வேறு நாட்களில் செய்ய முடியாது. எனவே இந்த நாட்களில்தான் அணைத்து அமற்களையும் செய்ய முடியும்.

இந்த நாட்களில் செய்ய வேண்டிய நல் அமற்கள்.

ஹஜ்-உம்ரா செய்தல் 
ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும், மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என நபி(sal)  அவர்கள் கூறினார்கள்.    நூல்: புகாரி, முஸ்லிம்

அதிகமதிகமாக நபிலான தொழுகைகளைத் தொழுதல்;

அதிகமாக நபிலான நோன்புகள் நோற்றல்,

குறிப்பாக அரபாவுடைய நாளன்று நோன்பு நோற்றல்.
நபி (sal)  அவர்கள் கூறினார்கள்:
அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பவருக்கு அந்த நாளுக்கு முந்திய ஒரு வருடத்தின் பாவங்களையும், அதற்கு பின் வரக்கூடிய ஒரு வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன். நூல்:முஸ்லிம்

நன்மையை ஏவுதலும்,  தீமையை தடுத்தலும் 
அதிகமதிகமாக தர்மங்கள் செய்தல்ä,
அதிகமதிமாக உறவினர்களுக்கு உதவி உபகாரம் செய்தல்,
அதிகமாக குர்ஆனை ஓதுதல், 
பாவமன்னிப்பு தேடுதல், 
அதிகமதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்தல்  போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே அன்றைய தினம் லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (sal) அவர்கள் கூறினார்கள்.              
( நூல்; : அஹ்மத்)

அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்க்கக்கூடாது, ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் ஏற்றமானது.

துல் ஹஜ் பிறை ஒன்றிலிருந்த பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரை கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும், பள்ளிவாசல், வீடு, கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது, விஷேடமாக அரஃபா நாளின் ஸப்ஹ தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல்;.

இப்னு உமர்   அபூஹரைரா ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் மாதம் ஆரம்ப பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள், இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.        (நூல்:புகாரி)

தக்பீரின் முறை

الله أكبر الله أكبر الله أكبرلااله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد

அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ{ அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் வலில்லாஹில் ஹம்து.

இதுவே ஹதீஸில் வந்துள்ள சுன்னத்தான தக்பீராகும். இன்று எமது வழக்கில் உள்ள முறை ஹதீஸில் இல்லாத போதும் அது தவறில்லை எனக்கருதுகின்றேன்.

ஹஜ் பெருநாள் தொழுகை, இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.

உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுப்பது 

உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும்ää இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி(sal) அவர்கள் உழ்ஹிய்யா கொடுத்தார்கள், அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹ அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.  நூல்: புகாரி

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்;

ஆடு. மாடு, ஒட்டகம்     (புகாரி)

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும்  (திர்மிதி)
மாட்டிலும், ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம். (திர்மிதி)


உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது

கண் குறுடு, கடுமையான நோயானவை, மிகவும் மெலிந்தவை, நொண்டியானவை  அங்கங்கள் குறையுள்ளவை.

நேரம்

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்,

யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது, அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.

யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி(sal) அவர்கள் கூறினார்கள்.         ஆதாரம் - புகாரி, முஸ்லிம்

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி(sal) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி, முஸ்லிம்)

உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை

உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ, தோல்களையோ,மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி(sal) அவர்கள் நியமித்தார்கள், அவைகளின் மாமிசம், தோல், ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும், அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள், அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ral) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  ஆதாரம்:- புகாரிääமுஸ்லிம்

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்

துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (sal) அவர்கள் தடைசெய்தார்கள்.  ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- 
இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவர்களுக்கு மாத்திரம்தான், அவரின் குடும்பத்தினருக்கு அல்ல. 

அறுக்கும் முறை

ஆடு, மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும்,  (முஸ்லிம்)

ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)

அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹ அக்பர் என்று கூற வேண்டும்.  (புகாரி)


பெற்றாரைப் பேணி நடப்பதன் அவசியம்.

assalamu alaikum
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு உரை



தலைப்பு: பெற்றாரைப் பேணி நடப்பதன் அவசியம்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர் : 02)

முனாப் நுபார்தீன்- ஜே.பி. 
பணிப்பாளர். 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

நம் சமூகம் நாளுக்கு நாள் நலிவடைந்து செல்வதற்கான பிரதான காரணம் நமது ‘ஈமான்’ இறை விசுவாசத்தில் நாம் பலவீனர்களாகவுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தேன் எனவே அது எப்படி என்றுபார்ப்போம்.

ஈமானின் பலவீனங்கள் பற்றி பார்ப்பதற்கு முன் இஸ்லாத்தின் படித்தரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம் இஸ்லாத்தின் படித்தரங்கள் மூன்று 

1. இஹ்ஸான் (முஹ்ஸின்) இதுவே மிகவும் உயர்ந்த நிலையாகும்.
2. ஈமான் (முஃமின்) இது நடுநிலையானது.
3. இஸ்லாம் (முஸ்லிம்) இது கடைசிப் படித்தரம் இதற்கப்பால் ஒரு நிலை கிடையாது. 

இந்த மூன்று படித்தரங்களையும் பற்றி பின் வரும் நபிவழிச் செய்தி விளக்குகின்றது.

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஒரு நாள் நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தோம்ää அப்பொழுது ஒரு மனிதர் மிகத் தூய்மையான வெண்மை நிறம் கொண்ட ஆடை அணிந்தவராகவும்ää கருமை நிறம்கொண்ட தலை முடியைக் கொண்டவராகவும் எங்கள் முன் தோன்றினார். அவர் ஒரு பயணியைப் போன்றும் தோற்றமளிக்கவில்லை. இருந்த போதிலும்ää எங்களில் அவரை எவரும் புரிந்து கொள்ள இயலவில்லை. வந்த அந்த மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி உட்காந்தார். அவரது இரண்டு முழங்கால்களும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தனää மேலும்ää அவரது இரண்டு கைகளையும் அவரின்; தொடையின் மேல் வைத்துக் கொண்டு இவ்வாறு கேட்டார். முஹம்மது அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு சொல்லுங்கள் என்றார். இஸ்லாம் என்பதுää அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்ää முஹம்மது அவர்கள் அந்த அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்றும் சான்று பகர்ந்துää தொழுகைää ஜகாத்ää ரமளான் மாதத்தில் நோன்பு இருப்பதுää இயலுமானால் அல்லாஹ்வின் இல்லமான மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுச் செய்வது ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நீர் உண்மையையே கூறினீர் என்று அந்த மனிதர் கூறினார். அவர் அவ்வாறு வினவியது குறித்தும்ää அவரே உண்மைப்படுத்தியது குறித்தும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.

மேலும் அந்த மனிதர் கேட்டார் : ஈமான் என்றால் என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள். அதற்குää அல்லாஹ்வை (இறைவனாக) நம்பி ஏற்றுக் கொண்டுää மேலும்ää அவனது மலக்குமார்கள் (வானவர்கள்)ää அவனது வேதங்கள்ää அவனது தூதர்கள்ää மற்றும் மறுமை நாளையும் நம்பிää மற்றும்  நன்மையும்ää தீமையும் இறைவனின் நாட்டத்தின் பால் அமைந்தவை என்பதையும் (களா கத்ர்) நம்பி (அதில் உறுதியாக) இருப்பது என்று கூறியவுடன்ää கேள்வி கேட்ட அந்த மனிதர்ää (முகம்மதே) நீர் உண்மையையே சொன்னீர் என்று கூறினார். மேலும் அவர்ää இஹ்ஸான் என்றால் என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்குää நீ அள்ளாஹ்வைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இபாதத் (வணக்கம்;) செய்வது நீர் அல்லாஹ்வைப் பார்க்கா விட்டாலும் மெய்யாகவே அவன் உன்னை; பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறினார்கள்.

மேலும்ää அந்த மனிதர் இறுதி நாள் எப்பொழுது என்பது குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்று கூறினார். இதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர் என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) சொன்னதாவது: அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாதää ஆடைகளற்றää ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமான கட்டிடங்களை கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள்ää உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள் என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள்ää அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் தருவதற்காக வந்தார்கள் என்று கூறினார்கள். - முஸ்லிம்.

மேலே நாம் பார்த்த அந்த ஹதீஸானதுää இஸ்லாமிய மார்க்கத்தில் தீனில் மூன்று படித்தரங்கள் அல்லது நிலைகள் இருப்பதை நமக்கு அறிவிக்கின்றது. அவையாவன : இஸ்லாம்ää ஈமான்ää இஹ்ஸான் ஆகியவைகளாகும். ஒவ்வொரு நிலையும் அவற்றிற்கே உரிய தனித்தனி கொள்கைகள் அல்லது விதிமுறைகள் அல்லது பிரிவுகளைக் கொண்டுள்ளன.

இவற்றுள் முதலாவது படித்தரம் மிக உயர்ந்த நிலையான இஹ்ஸான் எனும் நிலையாகும் மனிதர்களுள் இந்நிலையை அடைபவர்கள் மிகவும் அரிதே இந்நிலையை அடைந்த மக்கள்தான முஹ்ஸின் என்று அழைக்கப்படுவார்கள் இவர்களுடன்தான் வல்ல அல்லாஹ் இருப்பதாகக் கூறுகின்றான்.
நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோää அவர்களுடனும் எவர்கள் முஹ்ஸின்களாக நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (அல்-குர்ஆன்: 16:128)

இந்த இஹ்ஸான் என்ற நிலையை ஒரு மனிதன் அடைந்து விட்டான் என்பதற்கான அடையாளம் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ஒரு மனிதனுடைய இஸ்லாத்தின் இஹ்ஸான் எனும் உயர் நிலையானது அவன் தனக்குத் தகாதவைகளைத் தவிர்ந்திருப்பதிலேயே இருக்கின்றது. (அறிவிப்பவர்: அபூ ஹ{ரைரா (ரழி) நூல்: ஸஹீஹ் இபுனு ஹிப்பான்)
  
எனவே இந்த உச்சகட்ட நிலையை அடைந்த ஒரு மனிதன் அவனுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத எந்த ஒரு சிறு விடயத்திலும் தனது காலத்தை வீனாகக் கழிக்க மாட்டான். இறைவன் தன்னை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எள்ற சிந்தனையுடனேயே சதா வாழ்பவானாக அவனைக் காண முடியும்.

இன்ஷா அல்லாஹ் இரண்டாம் நிலையாகிய ஈமான் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடர் 01 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்

SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE : 
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான..  
(தொடர் 01)
aslislamguide.blogspot.com

Jaffna Muslim: மனோ கணேசனிடம் மன்னிப்பு கேட்கிறேன்..!

Jaffna Muslim: மனோ கணேசனிடம் மன்னிப்பு கேட்கிறேன்..!: பிரபல   சிங்கள நிகழ்ச்சி  ஒன்றில்  நமது  சமூகத்துக்கு பாரிய  அளவில் அபகீர்த்தி    உண்டாகும்  வகையில்,  பொறுப்பான  பதவியில்  இருக்கும் அஸ...

மகளை கற்பழித்த காமவெறி பிடித்த தந்தை | importmirror.com

மகளை கற்பழித்த காமவெறி பிடித்த தந்தை | importmirror.com

சனி, 28 செப்டம்பர், 2013

உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்; (தொடர் : 01)

(தொடர் : 01)

முனாப் நுபார்தீன்- ஜே.பி. 
பணிப்பாளர். 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் அருட்பெயரால்.

புகழ் அனைத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும், அவனது ஸலாத்தும் ஸலாமும் அகிலத்தின் அரு்டகொடையாகிய இறுதித் தூதர் முகம்மது ஸல்லள்ளாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது அன்புக் குடும்பத்தினர்கள் ஆருயிர்த் தோழர்கள் மற்றும் மறுமை வரை அவரது வழியைத் தம் வாழ்வாக ஏற்று வாழ்கின்ற அனைவர் மீது உண்டாகட்டுமாக.

உலகுக்கு வழிகாட்டிகளாகத் திகழ வேண்டிய இன்றைய நம் சமூகம் நாதியற்ற, நலிவுற்ற ஒரு சமூகமாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழ்நிலையினை எதிர்நொக்கிக் கொண்டிருப்பதனை நாம் அறிவோம்.

இதற்கான பிரதான காரணங்கள் பல கூறப்பட்டாலும் அவற்றில் முதன்மைக் காரணமாக ”ஈமான்” இறைவிசுவாசத்தில் பலவீனம் ஏற்பட்டிருகின்றது எனபதுவே உண்மைக் காரணமாகும்.

”ஈமான்” இறைவிசுவாசத்தில் பலவீனம் ஏற்படுவற்கான முதல் முக்கிய காரணம்  இஸ்லாமிய கல்வியிலும்,  சமூக ஐக்கியத்திலும்,சகோதரத்துவத்திலும் காணப்படும் பலவீனங்களேயாகும்இ இந்த பலவீனங்கள் நம் சமூகத்திலிருந்து அகற்றப்படாத வரை நாம் நமது சமூகத்தினை இஸ்லாம் எதிர்பார்க்கின்ற இலட்சிய சமூகமாக கட்டியெழுப்ப முடியாது. எனவே அறிஞர்கள், புத்திஜீவிகள், சமூகசிந்தனையாளர்கள், செலவந்தர்கள் ஆகிய அனைவரும் தங்களது பங்களிப்புகளை இத்தகைய பலவீனங்களை நம் சமூகத்திலிருந்து துடைத்தெறியும் பணிக்கு வழங்குவதற்கு காலதாமதமின்றி முன்வருவது அவசியமாகும்.
எனவே எமது ஈமானில் ஏற்பட்டுள்ள பலவீனம்; பற்றியும், சமூக ஐக்கியம் மற்றும் சகோதரத்துவத்தில் ஏற்பட்டுள்ள பலவீனம் பற்றியும் சுருக்கமாக இக்கட்டுரையின்; வாயிலாக விளக்கலாம் என்று முனைகின்றேன் எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை ஏற்று நம் சமூகம் இதன் மூலம் பயன் பெற அருள் புரிவானாக

குறிப்பு: இக்கட்டுரை பல உபதலைப்புக்களைக் கொண்ட நீண்ட ஒரு உரையாக இருப்பதனால் வாசகர்களுக்கு இலகு கருதி பல பாகங்களாக வெளியிடப்படுகின்றது. எனவே வாசகர்கள் தொடர்ந்து அனைத்துப் பாகங்களையும் படிக்குமாறு தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்;.

நமது பலம்

அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும்ää திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்ää உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்ää (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)

இங்கு வல்ல அல்லாஹ் நாம் நமது பகைவர்களான இறை நிராகரிப்பாளர்களை அச்சமடையச் செய்யும் வகையில் நமது சக்திகளைத் தயார் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளைப் பிறப்பிக்கின்றான். அவ்வாறு நாம் தயார் படுத்த வேண்டிய முதல் சக்தி நமது ஈமானிய பலமும் சகோதத்துவமுமாகும் இவ்விரண்டும்; பலம் பெறாத வரை ஏனைய எந்த சக்திகளை நாம் தயார் படுத்திய போதிலும் நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி;.

இந்த இரண்டு சக்திகளும்தான் அன்று நம்முன்னோர்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது என்பது வரலாற்று உண்மை.
ஆனால் இன்று நாம் நமது ஈமானிலும், சகோதரத்துவத்திலும் மிகவும் பலம் குன்றியவர்களாகக் காணப்படுவது மிகவும் வேதனைக்குரியதே.

தொடர் 02 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்

SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
 உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர்: 02)
aslislamguide.blogspot.com



Jaffna Muslim: மாகானசபைத் தேர்தலும், முஸ்லிமகள் நடந்து கொள்ள வேண்...

Jaffna Muslim: மாகானசபைத் தேர்தலும், முஸ்லிமகள் நடந்து கொள்ள வேண்...: (மௌலவி முனாப் நுபார்தீன்) முப்பதாண்டுகால முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த நிமிடத்திலிருந்தே அரசு தனது அடக்குமுறைகளை முஸ்லிம்...
assalamu alaikkum
speach : Assaik maseehud deen Inaamulla
(consul genaral to jidda, Saudi Arabia)
17-03-2007 at al-cassem




புதன், 25 செப்டம்பர், 2013

Jaffna Muslim: மாகாண சபைத் தேர்தலில், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மு...

Jaffna Muslim: மாகாண சபைத் தேர்தலில், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மு...: (J.M.Hafeez) நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முஸ்லீம்கள் மத்தியில் பல்வேறு பட்ட அபிப்பிராயங்களைக் காணமுடிந்தது. அதில் முக்கியம...

Jaffna Muslim: புத்தளத்திற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ...

Jaffna Muslim: புத்தளத்திற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ...:   (Tm) வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்க...

மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லீம்களது நிலைப்பாடு சரியானதா?

https://www.facebook.com/photo.php?v=661229613902026

https://www.facebook.com/photo.php?v=661229613902026

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் SLMC Song

SLMC Song Sri Lanka Muslim Congress .wmv

Minister Ashraf & Hon. Soma Himi (TNL Disscussion)

Jaffna Muslim: களனி பல்கலைக்கழக தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கவலை

Jaffna Muslim: களனி பல்கலைக்கழக தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கவலை: களனி பல்கலைக்கழகத்தில் சமாதானமும் முரண்பாடுகளும் கற்கை நெறியினை தொடர்ந்த தமக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் எவரும் கவனம் செலுத்தாமை கவ...

நடந்து முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகள் முஸ்லீம்கள் முஸ்லீம்கள்தான் இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் என்பதனைப் படம் பிடுத்துக் காட்டுகின்றது.

நடந்து முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகள் முஸ்லீம்கள் முஸ்லீம்கள்தான் இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் என்பதனைப் படம் பிடுத்துக் காட்டுகின்றது.

நடந்து முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் முடிவுகள் முஸ்லீம்கள் இனவாதிகளோ-அடிப்படைவாதிகளோ- இல்லை என்பதையும் தேசப்பற்றுள்ள ஜனநாயகத்தை விரும்புகின்ற ஒரு சமூகம் என்பதனை துல்லியமாக நிறூபித்திருக்கின்றது. அவ்வாறின்றி முஸ்லிம்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் தங்கள் இனம்சார்ந்த கட்சிவை விடுத்து ஏனைய கட்சிகளுக்கு இந்த அளவு அதிகமான வாக்குகளை கொடுத்திருக்கமாட்டார்கள். மாறாக ஏனைய இரு சமூகங்களும் எடுத்த முடிவையே அவர்களும் எடுத்திருப்பார்கள்.

இதனை நாட்டின் தேசாபிமானிகள் புரிந்து செல்படல் வேண்டும்.

இனவாதத்திற்கு எதிராக முலிம்களின் பதிலடி

Jaffna Muslim: இனவாதத்திற்கு எதிராக முலிம்களின் பதிலடி

இனவாதத்திற்கு எதிராக முலிம்களின் பதிலடி


http://www.jaffnamuslim.com/2013/09/blog-post_9775.html?spref=fb

http://www.jaffnamuslim.com/2013/09/blog-post_9775.html?spref=fb

ஏன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் பின்பற்ற வேண்டும்?

Jaffna Muslim: தம்பியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர் வபாத் - அக்குறண...

Jaffna Muslim: தம்பியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர் வபாத் - அக்குறண...: தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் நீரில் மூழ்கி மரணம். அக்குறணை மல்கமந்தெனியவைச் சேர்ந்த அண்ணனும், தம்பியும் கலாவெவ குளத்தில் நீராடிக் கொண...

தம்பியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர் வபாத் -

தம்பியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர் வபாத் - அக்குறண...: தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் நீரில் மூழ்கி மரணம். அக்குறணை மல்கமந்தெனியவைச் சேர்ந்த அண்ணனும், தம்பியும் கலாவெவ குளத்தில் நீராடிக் கொண...

திங்கள், 23 செப்டம்பர், 2013

வடக்கிலிருந்த முஸ்லிம்களை புலிகளால் துரத்தி அனுப்பப்பட்ட சம்பவம் நேருக்கு நேர் பகுதி 03

வடக்கிலிருந்த முஸ்லிம்களை புலிகளால் துரத்தி அனுப்பப்பட்ட சம்பவம் நேருக்கு நேர் பகுதி 02

வடக்கிலிருந்த முஸ்லிம்களை புலிகளால் துரத்தி அனுப்பப்பட்ட சம்பவம் நேருக்கு நேர் பகுதி 01

அசாத் சாலி அவர்களின் வெற்றி

அசாத் சாலி அவர்களின் வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.அசாத் சாலி மாத்திரமின்றி அனைத்து முஸ்லிம்களும் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தருவதாகக் கூறித்தான் வெற்றி பெற்றார்கள். வேற்றி பெற்றதன் பிறகுதான் அவர்களால் அது முடியாத கருமம் என்பதனை உணர்ந்து கொள்ளக் கூடியாதாக இருந்தது. ஆவ்வாறு உணர்ந்து கொண்டவர்களில் சிலர் அரசியலைத் துறந்து வாழ்கின்ற அதே நேரம் இன்னும் பலர் புலி வாலைப் பிடத்தவனின் கதை போல் விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே நேரம் ஒருசிலர் போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதில் அசாத் சாலி எந்தவகையைச் சார்ந்தவர் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

assalamu alaikum

Petroraip penuthal


வடக்கிலிருந்த முஸ்லிம்களை விடுதலை புலிகளால் துரத்திய சம்பவத்தின் கலந்துரையாடல் (வீடியோ)

வடக்கிலிருந்த முஸ்லிம்களை விடுதலை புலிகளால் துரத்திய சம்பவத்தின் கலந்துரையாடல் (வீடியோ)


வடக்கிலிருந்த முஸ்லிம்களை விடுதலை புலிகளால் துரத்தி அனுப்பப்பட்ட சம்பவம் நிச்சயமாக யாராலும் மறக்கமுடியாத ஒன்று எனலாம். இது சம்பந்தமாக 2011ல் டான் தமிழ் ஒளியில் ஒளிபரப்பான நேர்கணல் இது.
இக்கலந்துரையாடலில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷர்தார் சந்தித்து பேசும் பிரமுகர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான அல்ஹாஜ் எம்.எம் அமீன் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பொதுச் செயலாளர் லுக்மான் ஸஹாப்தீன் ஆகியோர்களை.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் கடந் இரண்டு வருடத்திற்குள் (2007-2009) செய்த செயற்திட்டங்களில் சில

இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் கடந் இரண்டு வருடத்திற்குள் (2007-2009) செய்த செயற்திட்டங்களில் சிலஇலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் கடந் இரண்டு வருடத்திற்குள் (2007-2009) செய்த செயற்திட்டங்களில் சில

Department of Election

www.slelections.gov.lk/

வியாழன், 19 செப்டம்பர், 2013


ஆகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்ஆமுல் uloom அரபுக் கல்லூரிக்கு சுமார் 325000ää00 ருபா பெறுமதியான வேலைகள் செய்து கொடுக்கப்பட்டன.








மாகானசபைத் தேர்தலும் முஸ்லிமகள் நடந்து கொள்ள வேண்டிய விதமும்

மாகானசபைத் தேர்தலும் முஸ்லிமகள் நடந்து கொள்ள வேண்டிய விதமும்

முப்பதாண்டுகால முறன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த நிமிடத்திலிருந்தே அரசு தனது அடக்குமுறைகளை முஸ்லிம்களை நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளது என்பதனை நாம் நாளாந்தம் நன்கு அறிந்து வருகின்றோம். அரசுக்கு நேரடியாக இத்தகைய தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியாத காரணத்தினால் குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படவே என்று பொதுபளசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டுள்ளது இதனையும் நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம். இந்நிலையில் மூன்று மாகானங்களுக்கான் மாகானசபை த்தேர்தலை நடாத்துவதற்கு அரசு முன்வந்துள்ளது.
 இதே நேரம்; ஒவ்வொரு கட்;சியும் தாம் மட்டும்தான் யோக்கியர்கள் தங்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஊர் ஊராகக் கூக்குரலிடுவார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சில முஸ்லிம் கட்ச்சிகளும் தமக்கு பிச்சைப் போடும் பச்சைää நீலக் கட்ச்சிகளைக் கவ்விக் கொண்டு தாங்கள்தான் இலங்கை முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதிகள்;;;;; எனவே முஸ்லீம்கள் நாங்கள் சொல்கின்ற கட்ச்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் கூப்பாடு போடுவார்கள். இவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்துக்காக இஸ்லாத்தையும்ää முஸ்லீம்களையும் அடகு வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதனை நாம் நன்கு தெரிந்தே வைத்துள்ளோம்.
இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் ää எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும்ää இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும்ää அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டää இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும்ää துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை காணாமல்ää முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்;.
இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 65 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும்ää பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றனää இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக  ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன என்பதனை நாமனைவரும் நன்கு அறிவோம்ää இலங்கை முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
 இவையனைத்திற்கும்; முதல் முக்கிய காரணம் முஸ்லிம்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியாகவும்ää ஆன்மீகரீதியாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து காணப்படுவதாகும். அவர்கள்;. எப்பொழுது சுயநலமிக்கää மரம் விட்டு மரம் தாவும் இந்த அற்ப்ப அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லாது எக்காலத்திற்கும் பொருத்தமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அல்-குர்ஆன்ää அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபடுவார்களோ அன்றுதான் நம் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் நம்பிக்கைமிக்கää அச்சமில்லா எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்ற சமுதாயமாக மாறுவார்கள்ää
முஸ்லிம்களை எந்தவொரு அரசியல்வாதியோää கட்சியோää இயக்கமோää குழுவோ பாதுகாக்க முடியாது. மாறாக இஸ்லாமும் அதன் கொள்கைகளும்தான் இலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல உலக முஸ்லிம்களையே பாதுகாக்கவல்லது இதுதான் ஒரு உண்மை முஸ்லிமுடைய விசுவாசமுமாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் இனம்ää சமூகம்ää தேசியம்ää பிரதேசம்ää இயக்கம்ää கட்ச்சி என்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் செயல்;படும் எந்தவொரு தனிமனிதனோää குழுவோää இயக்கமோää அரசியல் கட்சியோää எம்மைப் பாதுகாக்கவோää எமது உரிமைகளை வென்று தரவோ போவதில்லை என்பதுதான் எமது நம்பிக்கை. என்றாலும் எந்நிலையிலும் எமது வாக்குகள் வீணடிக்கப்பட அனுமதிக்க முடியாது. அது எமக்கு ஆபத்துக்கு மேல் ஆபத்தாகவேதான் அமையும்.
எனவே நடைபெறவிருக்கின்ற மாகானசபைகளுக்கான தேர்தலில் குறித்த மாகானங்களில் வாழுகின்ற முஸ்லீம்கள் தங்களது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தாம் எந்த கட்சியை ஆதரித்தால் தங்கள் பிரதேச முஸ்லிம்களுக்கு ஆரோக்யமாக அமையும் என்பதைக் கவனித்து வாக்களிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த கட்சியைத்தான் ஆதரித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டடு சொல்ல முடியாது காரணம் அனைத்து கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
நீல கட்சியை விட பச்சை கட்சி சிறந்ததோ அல்லது இன்ன கட்சியை விட இன்ன சட்சி சிறந்ததோ என்று கூற முடியாது அப்படி யாராவது இன்ன கட்சியை விட இன்ன சட்சி சிறந்தது என்று கூறினால் அவர் பொய் சொல்கிறார் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இந்த அரசியலால் அல்லது இந்த அரசியல்வாதிகளால் நிச்சயமாக எம்மைப் பாதுகாக்கவோ அல்லது எமது உரிமைகளை வென்றடுக்கவோ முடியாது. நாம் எம்மையும் எமது உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் நாம் அரசியலுக்கு அப்பால் நின்று ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுதல் அவசியமாகும்.


இதன் பொருள் அரசிய வேண்டாம் என்பது அல்ல அரசியல்வாதிகளால் இதனை சாதிக்கும் நிலையில் இன்றைய அரசியல் இல்லை. அது முடியாத கருமம் நமது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்வார்கள் ஆனால் நிச்சயமாக அவர்களால் அவர்கள் சொல்வதை செய்ய முடியாது என்பதற்கு கடந்தகால அரசியல் வரலாறு சான்றாகவுள்ளது.

எனவே என்றும் போல் அரசியல்வாதிகள் அவர்களின் பனியை செய்து கொள்ளட்டும் அது அவர்களின் உரிமை அதை நாம் ஆட்சேபிக்க முடியாது என்றாலும் அரசியலுக்கு அப்பால் மாத்திரமின்றி இயக்கங்களுக்கு அப்பாலும் சென்று நாம் ஒன்றுபட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள்ää சுயகௌரவம்ää கட்ச்சிபேதம் இயக்க வேறுபாடு போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில்; ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும்ää கட்டாய கடமையுமாகும்.
கட்ச்சியா? சுமூகமா? அல்லது இயக்கமா? சமூகமா? ஏன்ற நிலை ஏற்பட்டால் நாம் எதனைத் தெரிவு செய்வது என்பதில் நாம் தெளிவு பெறவேண்டு.

வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)
இங்கு வல்ல அல்லாஹ் மூன்று முக்கிய விடயங்கள் பற்றி வலியுறுத்துகின்றான்.
அவைகளாவன:
1. அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாக வழிப்பட்டு நடக்க வேண்டும்
2. எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விடக்கூடாது
3. அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் வழிப்படுவதிலும்ää கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற வேளைகளில் பிரிந்து விடாதிருப்பதிலும் பொறுமையைக் கைகொள்ளுதல்.
இவைகளுக்கு மாறு செய்யும் போது ஏற்படவுள்ள அபாயங்கள் இரண்டினையும் வல்ல அல்லாஹ் அதன் தொடரில் அறிவுறுத்துகின்றான்.
1. கோழைகளாகி விடுதல்.
2. பலம் குன்றி பலஹீனர்களாகி விடுதல்.
இதனைத்தான் இன்றைய இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது
இன்னும் வல்ல அல்லாஹ் எமது ஒற்றுமையின் அவசியம் பற்றி கூறும் போது:
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும்ää (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும்ää நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102ää103)
மேற்படி ஒரே வசனத்தில் ஒற்றுமையினை வலுப்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிட்ட வல்ல அல்லாஹ் அதன் தொடரிலேயே பிரிந்து விட வேண்டாம் என்று எச்சரிப்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அத்துடன் இந்த வசனங்களின் மூலம் வல்ல அல்லாஹ் இன்னும் சில முக்கிய விடயங்களையும் எமக்குக் கட்டளையிடுகின்றான்.
அவைகளாவன.
1. ஒவ்வொரு தனிமனிதனும் தக்வா சார்ந்த வாழ்க்கையினை வாழ்தல்.
2. மரணம் வரைக்கும் முஸ்லிமாகவே செயல்படுதல்.
3. அல்-குர்ஆன்ää அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபட்டிருத்தல்.
4. எந்நிலையிலும் பிரிந்து விடாது ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து கொள்ளுதல்.
5. அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்பேறுகளை நினைவு கூர்தல்.
மேற்படி இறைவசனங்களிலிருந்து இன்றைய எமது பலஹீனத்திற்கான காரணங்களை எம்மால் எழிதில் புரிந்து கொள்ள முடிகின்றது. அதுதான் எமக்குமத்தியில் காணப்படும் குறுகிய மனப்பான்மை காரணமாக ஏற்பட்டுள்ள ஒற்றுமையிண்மைää மற்றும் கட்டுப்படாமையாகும்ää எனவே நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள்ää சுயகௌரவம்ää கட்ச்சிபேதம் போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில்; ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும்ää கட்டாய கடமையுமாகும்.

இப்படிக்கு

மௌலவி முனாப் நுபார்தீன்-ஜே.பி
ஸ்தாபக தலைவர்      
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...