சனி, 28 செப்டம்பர், 2013

உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்; (தொடர் : 01)

(தொடர் : 01)

முனாப் நுபார்தீன்- ஜே.பி. 
பணிப்பாளர். 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் அருட்பெயரால்.

புகழ் அனைத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும், அவனது ஸலாத்தும் ஸலாமும் அகிலத்தின் அரு்டகொடையாகிய இறுதித் தூதர் முகம்மது ஸல்லள்ளாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது அன்புக் குடும்பத்தினர்கள் ஆருயிர்த் தோழர்கள் மற்றும் மறுமை வரை அவரது வழியைத் தம் வாழ்வாக ஏற்று வாழ்கின்ற அனைவர் மீது உண்டாகட்டுமாக.

உலகுக்கு வழிகாட்டிகளாகத் திகழ வேண்டிய இன்றைய நம் சமூகம் நாதியற்ற, நலிவுற்ற ஒரு சமூகமாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழ்நிலையினை எதிர்நொக்கிக் கொண்டிருப்பதனை நாம் அறிவோம்.

இதற்கான பிரதான காரணங்கள் பல கூறப்பட்டாலும் அவற்றில் முதன்மைக் காரணமாக ”ஈமான்” இறைவிசுவாசத்தில் பலவீனம் ஏற்பட்டிருகின்றது எனபதுவே உண்மைக் காரணமாகும்.

”ஈமான்” இறைவிசுவாசத்தில் பலவீனம் ஏற்படுவற்கான முதல் முக்கிய காரணம்  இஸ்லாமிய கல்வியிலும்,  சமூக ஐக்கியத்திலும்,சகோதரத்துவத்திலும் காணப்படும் பலவீனங்களேயாகும்இ இந்த பலவீனங்கள் நம் சமூகத்திலிருந்து அகற்றப்படாத வரை நாம் நமது சமூகத்தினை இஸ்லாம் எதிர்பார்க்கின்ற இலட்சிய சமூகமாக கட்டியெழுப்ப முடியாது. எனவே அறிஞர்கள், புத்திஜீவிகள், சமூகசிந்தனையாளர்கள், செலவந்தர்கள் ஆகிய அனைவரும் தங்களது பங்களிப்புகளை இத்தகைய பலவீனங்களை நம் சமூகத்திலிருந்து துடைத்தெறியும் பணிக்கு வழங்குவதற்கு காலதாமதமின்றி முன்வருவது அவசியமாகும்.
எனவே எமது ஈமானில் ஏற்பட்டுள்ள பலவீனம்; பற்றியும், சமூக ஐக்கியம் மற்றும் சகோதரத்துவத்தில் ஏற்பட்டுள்ள பலவீனம் பற்றியும் சுருக்கமாக இக்கட்டுரையின்; வாயிலாக விளக்கலாம் என்று முனைகின்றேன் எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை ஏற்று நம் சமூகம் இதன் மூலம் பயன் பெற அருள் புரிவானாக

குறிப்பு: இக்கட்டுரை பல உபதலைப்புக்களைக் கொண்ட நீண்ட ஒரு உரையாக இருப்பதனால் வாசகர்களுக்கு இலகு கருதி பல பாகங்களாக வெளியிடப்படுகின்றது. எனவே வாசகர்கள் தொடர்ந்து அனைத்துப் பாகங்களையும் படிக்குமாறு தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்;.

நமது பலம்

அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும்ää திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்ää உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்ää (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)

இங்கு வல்ல அல்லாஹ் நாம் நமது பகைவர்களான இறை நிராகரிப்பாளர்களை அச்சமடையச் செய்யும் வகையில் நமது சக்திகளைத் தயார் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளைப் பிறப்பிக்கின்றான். அவ்வாறு நாம் தயார் படுத்த வேண்டிய முதல் சக்தி நமது ஈமானிய பலமும் சகோதத்துவமுமாகும் இவ்விரண்டும்; பலம் பெறாத வரை ஏனைய எந்த சக்திகளை நாம் தயார் படுத்திய போதிலும் நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி;.

இந்த இரண்டு சக்திகளும்தான் அன்று நம்முன்னோர்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது என்பது வரலாற்று உண்மை.
ஆனால் இன்று நாம் நமது ஈமானிலும், சகோதரத்துவத்திலும் மிகவும் பலம் குன்றியவர்களாகக் காணப்படுவது மிகவும் வேதனைக்குரியதே.

தொடர் 02 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்

SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
 உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர்: 02)
aslislamguide.blogspot.com



கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...