بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبيه محمد الأمين، وعلى آله وصحبه وسلم.
الحديث الثاني
عَنْ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَيضاً قَال: بَيْنَمَا نَحْنُ جُلُوْسٌ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيْدُ بَيَاضِ الثِّيَاب شَدِيْدُ سَوَادِ الشَّعْرِ لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النبي صلى الله عليه وسلم فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ: يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الإِسْلاَم، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: (الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَ أَنَّ مُحَمَّدَاً رَسُولُ الله،وَتُقِيْمَ الصَّلاَة، وَتُؤْتِيَ الزَّكَاةَ،وَتَصُوْمَ رَمَضَانَ، وَتَحُجَّ البيْتَ إِنِ اِسْتَطَعتَ إِليْهِ سَبِيْلاً قَالَ: صَدَقْتَ. فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ، قَالَ: فَأَخْبِرْنِيْ عَنِ الإِيْمَانِ، قَالَ: أَنْ تُؤْمِنَ بِالله،وَمَلائِكَتِه،وَكُتُبِهِ وَرُسُلِهِ،وَالْيَوْمِ الآَخِر،وَتُؤْمِنَ بِالقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ قَالَ: صَدَقْتَ، قَالَ: فَأَخْبِرْنِيْ عَنِ الإِحْسَانِ، قَالَ: أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ قَالَ: فَأَخْبِرْنِي عَنِ السَّاعَةِ، قَالَ: مَا الْمَسئُوُلُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ قَالَ: فَأَخْبِرْنِيْ عَنْ أَمَارَاتِها، قَالَ: أَنْ تَلِدَ الأَمَةُ رَبَّتَهَا،وَأَنْ تَرى الْحُفَاةَ العُرَاةَ العَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُوْنَ فِي البُنْيَانِ ثُمَّ انْطَلَقَ فَلَبِثَ مَلِيَّاً ثُمَّ قَالَ: يَا عُمَرُ أتَدْرِي مَنِ السَّائِلُ؟ قُلْتُ: اللهُ وَرَسُوله أَعْلَمُ، قَالَ: فَإِنَّهُ جِبْرِيْلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِيْنَكُمْ)
அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால். அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும். அல்லாஹ் நம்பிக்கையளராகிய அவனது நபி முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் இன்னும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லி அபிவிருத்தியளிப்பானாக.
நபிமொழி – 2
மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒருநாள் நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் எங்கள் முன் தோன்றினார். அவரது ஆடைகள் மிகவெண்மையானதாகவும் தலைமுடிகள் மிகக் கருமையானதாகவும் இருந்தது அவரிடம் பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரைத் தெரியந்தவராகவும் இல்லை. அவர் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் இனைத்தவராக தனது கைகளைத் தனது தொடைகளின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே! இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் அறிவிய்யுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்ää முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்னின் தூதர் என்றும் நீ சாட்சியம் கூறுதல்ää மற்றும் தொழுகையை நில நாட்டுதல். ஜகாத் கொடுத்தல்ää ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல்ää இன்னும் நீ வழியால் சக்திபெற்றால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது என்றார்கள். அதற்கு அவர் நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவி; அவரே உண்மைப்படுத்தியது பற்றி ஆச்சரியம் அடைந்தோம்;. மீண்டும் அவர் ஈமான் குறித்து எனக்குச் அறிவிய்யுங்கள் என்றார். ஆதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள்ää அவனது வேதங்கள்ää அவனது தூதர்கள்ää இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும்ää நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் உண்மையே சோன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் இஹ்ஸான் பற்றி எனக்;குச் அறிவிய்யுங்கள் என்றார்.
அல்லாஹ்வை நீர் பார்க்கா விட்டாலும் அவனை நேரில் பார்ப்பது போன்று வணங்குவது நீ; அவனைப் பார்க்காத போதிலும் அவன் உண்மையாகவே உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்" என்று கூறினார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத் தீர்ப்பு நாள்) பற்றி அறிவிய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதனைப் பற்றி அறிந்தவர் அல்லர்" என்றார்கள். பின்னர் அவர் அதன் அடையாளங்கள் பற்றி எனக்கு அறிவிய்யுங்கள் என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் : அடிமைப் பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாதää ஆடைகளற்றää ஆடு மேய்ப்பவர்களான ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர் என்றார்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்திருந்தேன். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவாகள்ää 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா" எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்" என்றேன் நான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்"" என்று கூறினார்கள். – (நூல்: முஸ்லிம்)
الشرح:
عظمة معاني هذا الحديث على غيره
إن هذا الحديث الشريف ليعتبر من أهم وأعظم وأجمع أحاديث رسول الله صلى الله عليه وسلم، حتى قال بعض العلماء: إنه مدار جميع طوائف علماء الإسلام: من فقهاء ووعاظ وزهاد وعباد، وهو مع طوله يضع منهجاً تعليمياً بجانب المنهج العلمي، فقد أرشد فيه صلى الله عليه وسلم أن جبريل عليه السلام جاء يعملهم أمر دينهم، فجمع الدين كله بتعليم من جبريل عليه السلام في هذا الحديث، ولهذا مهما عُني به الإنسان ومهما تناوله العلماء فلا أعتقد أن أحداً يوفيه حقه إلا إذا تكلّم على الدين كله.
விளக்கம்
ஏனைய ஹதீஸ்களை விட இந்த ஹதீஸின் பொருளின் மகத்துவம்.
சுங்கை மிகு இந்த நபிமொழியானது இறைத்தூதர் (ஸல்) அவர்களது அனைத்து நபிமொழிகளையும் உள்ளடக்கியதும்ää மிகவும் மகத்துவம் மிக்கதும் ää மிகவும் முக்கியத்துவம் வாய்ததுமாகக் கருதப்படுகின்றது.
சுpல அறிஞர்கள் கூறும் போது: நிச்சயமாக இந்த நபிமொழியானது சட்டக்கலைஞர்கள்ää போதகர்கள்ää உலகப்பற்றறவர்கள் மற்றும் வணக்கசாலிகள் போன்ற அனைத்து வகை இஸ்லாமிய அறிஞர்களின் மீதும் சுழல்கின்றது என்று கூறியுள்ளாகள். இன்னும் அது அதன் நீளத்துடன் கூடிய கல்வியியல் பாடத்திட்டத்தின்படி கற்பித்தலுக்கான ஒரு பாடத்திட்டத்தினையும் முன்வைக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் அதன் மூலம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அவர்களுக்கு அவர்கது மார்க்கத்தினைக் கற்றுக் கொடுபதற்காக வருகை தந்தார்கள் என்று வழிகாட்டியுள்ளார்கள். இந்த நபி மொழியின் மூலம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மார்க்கத்தின் அனைத்தையும் கற்றுக்கொடுத்துள்ளார்கள். ஆகவே மனிதர்கள் அதனை எந்த அளவு விரும்பிய போதிலும்ää அறிஞர்கள் எந்த அளவுக்கு அதனை பயன்படுத்தியபோதிலும். அவர்கள் மார்க்கத்தின் அத்தனை அம்சங்களிலும் பேசினாலேயன்றி அவர்கள் அதன் கடமையை நிறைவேற்றியவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
بَيْنَمَا نَحْنُ جُلُوْسٌ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيْدُ بَيَاضِ الثِّيَاب شَدِيْدُ سَوَادِ الشَّعْرِ لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النبي صلى الله عليه وسلم فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ
ஒருநாள் நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் எங்கள் முன் தோன்றினார். அவரது ஆடைகள் மிகவெண்மையானதாகவும் தலைமுடிகள் மிகக் கருமையானதாகவும் இருந்தது அவரிடம் பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரைத் தெரியந்தவராகவும் இல்லை. அவர் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் இனைத்தவராக தனது கைகளைத் தனது தொடைகளின் மீதும் வைத்து அமர்ந்தார்.
بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم(، وفي بعض الروايات: (في المسجد).وهو المسجد النبوي الشريف، يأتي جبريل عليه الصلاة والسلام معلماً في صورة المتعلم.
(إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ) الرجل هنا مبهم، وهو رجل في شكله لكن حقيقته أنه مَلَك.
(شَدِيْدُ بَيَاضِ الثِّيَابِ ) أي عليه ثياب .(شَدِيْدُ سَوَادِ الشَّعْرِ) أي أنه شاب.
(لايُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ) لأن ثيابه بيضاء وشعره أسود ليس فيه غبار ولا شعث السفر، ولهذا قال: لايُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ لأن المسافر في ذلك الوقت يُرى عليه أثر السفر، فيكون أشعث الرأس،مغبرّاً، ثيابه غير ثياب الحضر، لكن لايرى عليه أثر السفر.
(وَلايَعْرِفْهُ مِنَّا أَحَدٌ) أي وليس من أهل المدينة المعروفين، فهوغريب.
و يعطينا جبريل عليه السلام أيضاً صورة طالب العلم كيف يأتي إلى المسجد النبوي وإلى المعلم بهذه الصورة: (شديد بياض الثياب، شديد سواد الشعر) فطالب العلم وخاصة العلماء تكون لهم هيئتهم ونظافتهم ومظهرهم.
நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். (இன்னும் சில அறிவிப்புகளில் மஸ்ஜிதில் என்று கூறப்பட்டுள்ளது.) மஸ்ஜித் என்பது மஸ்ஜிதுன் நபவியைக் குறிக்கும் இங்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒரு மாணவனின் தோற்றத்தில் ஆசிரியராக வந்துள்ளார்கள்.
ஒரு மனிதர் எங்கள் முன் தோன்றினார் என்பதில் ஒரு மனிதர் என்பது தெளிவற்றதாகவுள்ளது அத்துடன் அவர் தோற்றத்தில் ஒரு மனிதராக காட்ச்சியளித்த போதும் யதார்த்தில் அவர் உண்மையிலேயே ஒரு வானவர் ஆவார்;.
மிகவெண்மையான ஆடைகள்ää என்பது அவர் மீது ஆடை இருந்தது என்பதனையும் மிகக் கடுமையான கருமைநிற முடிகளையுடையவர் என்பது அவர் வாலிபராவார் என்பதையும் சுட்டிகாட்டுகின்றன.
பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரைத் தெரியந்தவராகவும் இல்லை. ஏனெனில் அவர் புளுதிபடிந்தவராகவோää தலைவிரிகோல முடையவராகவோ இன்றி அவரது ஆடை வெண்மையானதாகவும் தலைமயிர் கருமையாகவும் இருந்தது. ஆதலால்தான் பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை என்று கூறினார். ஏனெனில் அக்காலத்தில் ஒரு பயனியிடம் புளுதிபடிந்திருத்தல் மற்றும் அவர் தலைவிரி கோலமாகியிருத்தல் போன்ற அடையாளங்கள் காணப்படும். ஊரில் பிரசன்னமாய் இpருப்பவரின் ஆடையிலிருந்து அவரின் ஆடை வேறுபட்டிருக்கும். என்றாலும் அவரிடமோ அப்படியான பயணம் செய்ததற்கான எந்த ஒரு அறிகுறிகளும் காணப்படவில்லை.
எங்களில் யாரும் அவரைத் தெரியந்தவராகவும் இல்லை. அதாவது மதீனாவாசிகள் யாருக்கும் அவர் அறிமுகமற்ற ஒரு பரதேசியாக இருந்தார்.
இன்னும் ஜிபரியீல் (அலை) அவர்கள் மிகவெண்மையான ஆடைகளையும்ää மிகக்கடுமையான கருமைநிற தலைமுடிகளையும் உடையவராக தோற்றமழித்ததன் மூலம் ஒரு மாணவன் எப்படி மஸ்ஜிதுன் நபவியிற்கு ஒரு ஆசிரியரிடம் சமூகமழிக்க வேண்டும் என்தற்கான தோற்றத்தினை எமக்கு வழங்கியுள்ளார்கள். கல்வியைத் தேடக்கூடிய மாணவர்கள் குறிப்பாக ஆலிம்கள் அவர்களுக்கென்று தனித்துவமும்ää ஓழுங்குமுறையும் பிரத்தியேகத் தோற்றமும் உண்டு.
هيئة طالب العلم أمام شيخه
ومن هنا أخذ العلماء كيفية حالة الطالب مع شيخه حين طلبه للعلم بين يديه، ومجيئه بكل وقارٍ واحترامٍ لأستاذه كما جاء جبريل إلى رسول الله صلى الله عليه وسلم.
(حَتَّى جَلَسَ إِلىَ النبي صلى الله عليه وسلم) ولم يقل عنده ليفيد الغاية،أي أن جلوسه كان ملاصقاً للنبي صلى الله عليه وسلم.
ولهذا قال: (فأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلىَ رُكْبَتَيْهِ، وَوَضَعَ كَفَّيْهِ )أي كفي هذا الرجل (عَلَىَ فَخِذَيْهِ) أي فخذي هذا الرجل، وليس على فخذي النبي صلى الله عليه وسلم ، وهذا من شدة الاحترام.
وقيل في وصف هيئة جلوسه، أنه أسند ركبتيه إلى ركبتي النبي صلى الله عليه وسلم، ووضع كفيه على فخذيه، أي فخذي النبي صلى الله عليه وسلم، كما يذكر بعض العلماء، وفي رواية عند النسائي فيها التصريح بأن جبريل وضع كفيه على فخذي رسول الله صلى الله عليه وسلم.
தனது ஆசானின் முன்நிலையில் கல்வியைத் தேடும் ஒருவனி நலை.
இங்கிருந்துதான் அறிஞர்கள் ஒரு மாணவன் தனது ஆசானுடன் நடந்து கொள்ளவேண்டிய முறை என்ன என்பது பற்றியும் அவரிடம் கல்வியைக்கற்கும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றிய முறைமையையும் பெறுகின்றார்கள்.
தனது ஆசானிடம் அவரது வருகை அனைத்துவிதமான கண்ணியத்துடனும் மதிப்புடனும் எப்படி ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்களோ அவ்வாறு அமைதல் வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்தார். அவர்களது இருக்கை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இனைந்ததாக இருந்தது. ஆதலால்தான் கூறினார்கள்: அவரது முழங்கால்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் இனைந்ததாகவும் கைகளைத் (அதாவது அம்மனிதரது கைகள்) தொடைகளின் (அதாவது அம்மனிதரது தொடைகள்) மீதும் வைத்து அமர்ந்தார். அல்லமல் நபி (ஸல்) அவர்களது தொடைகள் மீது அல்ல. இச்செயலானது மரியாதையின் மிகக் உச்ச நிலையாகும்.
இன்னும் அவரது இருக்கையின் தண்மைப் பற்றி சில அறிஞர்களின் கூற்றிலிருந்து கூறப்படுவதாவது: அவரது முழங்கால்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் இனைந்ததாகவும் கைகளைத் அவரது அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொடைகளின் மீதும் வைத்து அமர்ந்தார். நஸயியின் ஒரு அறிவிப்பில் ஜிபரீயில் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களது தொடைகளின் மீதே வைத்தார்கள் என்று விளக்கமாக வந்துள்ளது.
وَقَالَ: يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الإِسْلاَم، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: (الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَ أَنَّ مُحَمَّدَاً رَسُولُ الله،وَتُقِيْمَ الصَّلاَة، وَتُؤْتِيَ الزَّكَاةَ،وَتَصُوْمَ رَمَضَانَ، وَتَحُجَّ البيْتَ إِنِ اِسْتَطَعتَ إِليْهِ سَبِيْلاً قَالَ: صَدَقْتَ. فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ
'முஹம்மதே! இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் அறிவிய்யுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்ää முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்னின் தூதர் என்றும் நீ சாட்சியம் கூறுதல்ää மற்றும் தொழுகையை நில நாட்டுதல். ஜகாத் கொடுத்தல்ää ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல்ää இன்னும் நீ வழியால் சக்திபெற்றால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது என்றார்கள். அதற்கு அவர் நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவி; அவரே உண்மைப்படுத்தியது பற்றி ஆச்சரியம் அடைந்தோம்;.
وَقَالَ يَا مُحَمَّدُ) ولم يقل:يا رسول الله ليوهم أنه أعرابي، لأن الأعراب ينادون النبي صلى الله عليه وسلم باسمه العلم، وأما أهل الحضر فينادونه بوصف النبوة أو الرسالة عليه الصلاة والسلام .
أخْبِرْنيِ عَنِ الإِسْلامِ) أي ماهو الإسلام؟ أخبرني عنه.
فَقَالَ: الإسْلامُ أَنْ تَشْهَدَ أَنْ لا إِلَهَ إِلاَّ الله وَأَنَّ مُحَمَّدَاً رَسُولُ اللهِ تشهد أي تقرّ وتعترف بلسانك وقلبك، فلا يكفي اللسان، بل لابد من اللسان والقلب، قال الله عزّ وجل: (إِلاَّ مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ)(الزخرف: الآية86)
الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَ أَنَّ مُحَمَّدَاً رَسُولُ الله
معنى: أشهد أن لا إله إلا الله) قولك: ( أشهد أن لا إله إلا الله) أي: معتقداً بذلك جازماً بأنه لا مألوه بحقٍ إلا الله، ومألوه بمعنى: معبود، لا معبود بحق إلا الله.
وجيء كلمة (بحق) لأن هناك معبودات كثيرة، كما اتخذ العرب في الجاهلية أصناماً متعددة، وقال تعالى: { أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ } ஜالجاثية:23ஸ، وفي الحديث: ( تعس عبد الدرهم والدينار
فالناس لهم معبودات كثيرة، ولكن المعبود بحق هو الله سبحانه وتعالى، وأنت تعلن ذلك في الفاتحة: { الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ழூ الرَّحْمَنِ الرَّحِيمِ ழூ مَالِكِ يَوْمِ الدِّينِ ழூ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ } ஜالفاتحة:4-5ஸ.
فإذا قلت: لا إله إلا الله؛ فمعناها: لا مألوه ولا معبود بحق إلا الله، ولا ينبغي صرف شيء من العبادات لغير الله: { فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا } ஜالكهف:110
தான் ஒரு கிராமப்புறத்து அறபி எனும் மாயயைத் தோற்றுவிப்பதற்கா இறைத்தூதர் என்று கூறாது 'முஹம்மதேää என்று அழைத்தார் ஏனெனில் கிராமப்புரத்து அறபிகள் நபி (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று கூறாது அவர்கள் அறிந்த அவர்களது இயற்பெயரைக் கூறியே அழைப்பவர்களாக இருந்தார்கள்.
இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் அறிவிய்யுங்கள்" அதாவது இஸ்லாம் என்றால் என்ன? அது பற்றி எனக்கு தெரிவியுங்கள்.
'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்ää முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்ää என்றார்கள் ää சாட்சியம் கூறுதல் என்பது உள்ளத்தினாலும் நாவினாலும் ஏற்று உறுதி கொள்ளுதலாகும். நாவினால் மொழிதல் மாத்திரம் போதுமானதாகாது மாறாக உள்ளமும் நாவும் அதில் ஒருமித்ததாக இருத்தல் வேண்டும். அல்லாஹ் கூறுகின்ஙறான்: எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (அல்-குர்ஆன்: 43:86)
'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்ää முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் அளிப்பதாகும்ää
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று சாட்சியம் கூறுதல் என்பதன் கருத்து : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நான் சான்றளிக்கின்றேன் என்று நீ கூறுவதாகும். அதாவது நிச்சயமாக வனக்கத்திற்குரியவன் உண்மையாகவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று உறுதியளித்தலாகும் வணக்கத்திற்குரியவன் என்பதன் பொருள் உண்மையாகவே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும்.
உண்மையாக என்ற சொல் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் யாதெனில் அங்கே அதிகமான வணங்கப்படுபவைகள் காணப்படுகின்றன அறியாமைக்காலத்து அறபிகள் பலதரப்பட்ட சிலைகளை வழிப்பட்டதைப் போல் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எவன் தன்னுடைய (சரீரää மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோää அவனை நீர் பார்த்தீரா? (அல்-குர்ஆன்: 45:23) இன்னும் தீனாரினதும் திர்கத்தினதும் அடிமை நாசமடைந்தான் என்று நபிமொழியிலும்; வந்திருக்கின்றது.
மனிதர்களுக்கு அதிகமான வணக்கத்திற்குரியவைகள் இருக்கின்றன என்றாலும் உண்மையாகவே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் உயர்வான பரிசுத்தமான அல்லாஹ் ஒருவனேயாவான். அதனை நீ சூரத்துல் பாத்திஹாவில் வெளிப்படுத்துகின்றாய் ( அனைத்துப் புகழும்ää அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப் படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன்ää நிகரற்ற அன்புடையோன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்ää உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். அல்-குர்ஆன்: 1: 1-4)
வனக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நீ கூறினால் அதன் பொருள் உண்மையாகவே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும். எனவே வணக்கங்களில் எந்த ஒன்றும் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செலுத்தப்படக் கூடாது.
(எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்துää தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.) (அல்குர்ஆன்: 18:110)
معنى: (أشهد أن محمداً رسول الله)
إذا قلت: (أشهد أن محمداً رسول الله )، فمعنى الرسالة أن الله أرسله، والرسول لابد أن تكون معه رسالة، إذاً لا يوجد رسول بدون رسالة، ولا يسمى رسولاً إلا برسالة معه، فتؤمن بالرسول وبالرسالة التي جاءك بها من عند من أرسله.
ومن لوازم (لا إله إلا الله): أنك لا تعبد سواه، وتؤمن به وبكل ما جاء عنه، وإذا قلت: (محمد رسول الله)، كان يلزمك أن لا تعبد الله الذي ما آمنت به إلا عن طريق هذا الرسول وبمقتضى الرسالة التي جاءك بها، فإن عصيت رسول الله، فحقيقة المعصية معصية لمن أرسله إليك، { مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلاغُ } ஜالمائدة:99ஸ، وقد قال اللهم بلغت اللهم فاشهد، وانتهى من المهمة، وبقي التنفيذ عليك، وبقي تمام الالتزام منك.
ومن هنا يقول صلى الله عليه وسلم: ( كل أمر ليس عليه أمرنا فهو رد )، ويقول مرسله سبحانه: { وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا } ஜالحشر:7ஸ، ثم يقول أيضاً: { وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى ழூ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى } ஜالنجم:3-4ஸ.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன் என்பதன் பொருள் : முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன் என்று நீ கூறினால் அந்த தூதுத்துவத்தின் பொருள் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை தூதராக அனுப்பினான் என்பதாகும். எனவே ஒரு தூதருடன் தூதும் இருப்பது அவசியமாகும் அப்படியாயின் தூது இல்லாது எந்த தூதரும் இருக்க முடியாது எனவே எவருடன் தூது இல்லையோ அவர் தூதர் என்று அழைக்கப்பட மாட்டார். எனவே நீ தூதரையும் அவரை தூதராக அனுப்பியவனிடமிருந்து அவர் உனக்கு கொண்டு வந்த தூதுச் செய்தியையும் விசுவாசிக்கின்றாய்.
வனக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதன் கடமை நிச்சயமாக நீ அவனையன்றி யாரையும் வணங்காது அவனையும் இன்னும் அவனிடமிருந்து வந்த அனைத்தையும் முழுமையாக விசுவாசிக்க வேண்டும் என்பதாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நீ கூறினால் நீ விசுவாசங் கொண்டிருக்கும் இறைவனை அவர் உனக்கு கொண்டு வந்த தூது செய்திக்கு உட்பட்ட வகையில் அவர் காட்டிய வழியிலன்றி நீ வணங்கக் கூடாது. அவ்வாறு நீ அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தால் உண்மையிலேயே நீ உன்னிடம் அவரை அனுப்பியவனுக்கே மாறு செய்தாய். ((இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை.) (அல்-குர்ஆன்: 5:96) இன்னும் அவர்கள் யா அல்லாஹ் நான் அறிவித்து விட்டேன் யா அல்லாஹ் நீயே சாட்சி என்று கூறியுள்ளார்கள். இத்துடன் மிகமுக்கியமானவை முடிவுற்றது உன் மீது செயல்படுத்துதலும்ää முழுமையாகப் பின்பற்றுதலுமே எஞ்சியுள்ளன.
இங்கே நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: எமது கட்டளை இல்லாத அனைத்துக் கருமங்களும் நிராகரிக்கப்படும். ஏன்று அத்துடன் அவர்களை தூதராக அனுப்பிய தூயவன் குறுகின்றான் : மேலும்ää (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்ää இன்னும்ää எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்ää (அல்-குர்ஆன்: 59:7) பிறகு மீண்டும் கூறுகின்றான்: அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்-குர்ஆன்: 53:3-4)
شهادة أن محمداً رسول الله تستلزم أموراً منها:
الأول: تصديقه صلى الله عليه وسلم فيما أخبر، بحيث لايكون عند الإنسان تردد فيما أخبر به صلى الله عليه وسلم إذا صح الحديث عنه ، فإذا ثبت الحديث عن الرسول صلى الله عليه وسلم وجب علينا تصديقه،سواء علمنا الحكمة أم لم نعلمها.
الثاني: امتثال أمره صلى الله عليه وسلم ولانتردد فيه لقول الله تعالى: (وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْراً أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ )(الأحزاب: الآية36)
ثالثاً : أن يجتنب ما نهى رسول الله صلى الله عليه وسلم عنه بدون تردد، لايَقُلْ: هذا ليس في القرآن فيهلك، لأننا نقول: ما جاء في السنة فقد أمر القرآن باتباعه. لأن الله تعالى قال: ( وَاتَّبِعُوهُ ) (الأعراف: الآية158) وهو عام في كل ماقال.
رابعاً : أن لايقدم قول أحدٍ من البشر على قول النبي صلى الله عليه وسلم ، وعلى هذا لايجوز أن تقدم قول فلان - الإمام من أئمة المسلمين - على قول الرسول صلى الله عليه وسلم لأنك أنت والإمام يلزمكما اتباع الرسول صلى الله عليه وسلم .
ذُكِر عن عبد الله بن عباس رضي الله عنهما أنه قال: يُوْشكُ أَن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله وتقولون قال أبوبكر وعمر ஜ17ஸ ومن إمام هذا الرجل المجادل بالنسبة إلى أبي بكر وعمر رضي الله عنهما.
خامساً : أن لايبتدع في دين الله مالم يأتِ به الرسول صلى الله عليه وسلم، سواء عقيدة، أو قولاً، أو فعلاً، وعلى هذا فجميع المبتدعين لم يحققوا شهادة أن محمداً رسول الله، لأنهم زادوا في شرعه ماليس منه، ولم يتأدبوا مع الرسول صلى الله عليه وسلم
سادساً : أن لايبتدع في حقه ماليس منه، وعلى هذا فالذين يبتدعون الاحتفال بالمولد ناقصون في تحقيق شهادة أن محمداً رسول الله، لأن تحقيقها يستلزم أن لاتزيد في شريعته ماليس منه.
سابعاً :أن تعتقد بأن النبي صلى الله عليه وسلم ليس له شيء من الربوبية، أي أنه لايُدعى، ولايُستغاث به إلا في حياته فيما يقدر عليه، فهو عبد الله ورسوله : (قُلْ لا أَمْلِكُ لِنَفْسِي نَفْعاً وَلا ضَرّاً إِلاَّ مَا شَاءَ اللَّهُ )(الأعراف: الآية188ஸ
ثامناً: احترام أقواله، بمعنى أن يحترم أقوال النبي صلى الله عليه وسلم فلاتضع أحاديثه عليه الصلاة والسلام في أماكن غير لائقة، لأن هذا نوع من الامتهان.
முகம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனும் சாட்சியம் சில விடயங்களைக் கட்டாயமாக்கும் அவைகளாவன:
முதலாவது: ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தவைகளில் அவர்களைத் தொட்டும் வந்துள்ள செய்திகள் சரியாக இருக்கும் நிலையில் மனிதர்களிடம் அதிரிப்தி ஏற்படாதவாறு அவர்களை உண்மைப்படுத்ததல் எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நபிவழிச் செய்தி வந்திருந்தால் அதன் உற்கருத்து பற்றி நாம் அறிந்து கொண்டபோதிலும் சரி அறியாத போதிலும் சரி அதனை உண்மைப் படுத்துவது நம்மீது கடமையாகும்.
இரண்டாவது: ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைகள் “மேலும்ää அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்ää அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை (அல்-குர்ஆன்: 33: 36) எனும் அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப்ப பின்பற்றம்படுதல் வேண்டும்.
மூன்றாhவது: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தவைகளை எவ்வித அதிரிப்தியுமின்றி தவிர்த்துக் கொள்ளுதல் இங்கே இது குர்ஆனில் கூறப்படவில்லை என்று வாதிடக் கூடாது அவ்வாறு கூறுதல் அளிவை ஏற்படுத்தும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவில் வந்திருப்பவைகளைப் பின்பற்றுமாறு அல்குர்ஆன் ஆனையிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: அவரைப் (நபி (ஸல்) அவர்களை) பின்பற்றுங்கள் என்று (அல்-குர்ஆன்: 7: 158) இது அவர்கள் சொல்லிய அனைத்துக்கும் பொதுவானதாகும்
நான்காவது: மனிதர்கள் எவரதும் சொல்லை நபி (ஸல்) அவர்களது சொல்லை விட முற் படுத்தக்கூடாது. எனவே இதன்படி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு எதிராக முஸ்லிம்களுடைய இமாம்களில் இன்ன இமாம் சொன்னார் என்று சொல்வது கூடாது. ஏனெனில் நீயும் உனது அந்த இமாமும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் கட்டாயமாகும்.
அப்தல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்ககள் கூறினார்கள்: உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியுமோ என தோன்றுகிறது. ஏனெனில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறேன் ஆனால் நீங்களோ அபூபக்கர் மற்றும் உமர் கூறினார்கள் என்று கூறுகின்றீர்கள்.
ஐந்தாவது: அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கொள்கை அல்லது சொல் அல்லது செயல் போன்ற விடயங்களில் நபி (ஸல்) அவர்கள் கொண்டுவராத நூதன செயல்களை ஏற்படுத்தாதிருத்தல். இதன்படி அனைத்து நூதன செயல்களை ஏற்படுத்துபவர்களும் நிச்சயமாக முகம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனும் சாட்ச்சியத்தை உண்மைப்படுத்தவில்லை ஏனெனில் அவர்கள் அந்நாரின் ஷரீஆவில் அதில் இல்லாதவைகளை அதிகப்படுத்தியுள்ளார்கள். இன்னும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் நல்லொழுக்கத்தினைப் பேணவில்லை.
ஆறாவது: அவர்களது விடயத்தில் அவர்களிடம் இல்லாதிருந்தவைகளை புதிதாக உண்டாக்காதிருத்தல்: இதன் அடிப்படையில் எவர்களெல்லாம் மீலாத் விழாக்களை உருவாக்குகின்றார்களோ அவர்களெல்லாம் முகம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனும் சாட்ச்சியத்தில் குறை செய்தவர்களேயாவர் ஏனெனில் உண்மையான சாட்சியம் என்பது அந்நாரின் ஷரீஆவில் இல்லாதவைகளை அதிகரிக்கக்கூடாது என்பதேயாகும்.
ஏழாhவது: நபி (ஸல்) அவர்களுக்கு ருபூபியத்தில் எவ்வித பங்கும் இல்லை என்று உறுதி கொள்ளுதல் அதாவது அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களின் சக்திக்கு உட்பட்ட விடயங்களிலன்றி அவர்கள் அழைக்கப்படவோ உதவி கோரப்படவோ மாட்டாது அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள்.;; 'அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்." (அல்குர்ஆன்: 7: 188) என்று அந்நார் கூறியதாக அல்-குர்ஆன் கூறுகின்றது.
எட்டாவது: அவர்களது சொற்களை கண்ணியப்படுத்துதல் நபி (ஸல்) அவர்களது சொற்களை கண்ணியப்படுத்துதல் என்பதன் பொருள் நபி (ஸல்) அவர்களது நபிவழிச் செய்திகளை அதற்கு பொருத்தமில்லாத இடங்களில் வைக்காமலிருத்தலாகும் ஏனெனில் இச்செயலானது அதனை இழிவு படுத்துதலாகும்.
. وهنا مسألة: لماذا جُعِلَ هذان ركناً واحداً، ولم يجعلا ركنين؟.
والجواب:أن الشهادة بهذين تبنى عليها صحة الأعمال كلها، لأن شهادة ألا إله إلا الله تستلزم الإخلاص، وشهادة أن محمداً رسول الله تستلزم الاتباع، وكل عمل يتقرب به إلى الله لا يقبل إلا بهذين الشرطين: الإخلاص لله، والمتابعة لرسول الله .
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது: அதாவது (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைää முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்னின் தூதர் ஆவார்கள் எனும் ) இந்த இரண்டும் இரு கடமைகளாக இன்றி ஒரு கடமையாக ஆக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?
பதில்: இவ்விரண்டு சாட்சியங்களும் அவற்றின் மீதே அமட்களின் ஆரோக்கியத்தன்மை அமைக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை எனும் சாட்ச்சியம் கலப்பற்ற எண்ணத்தினை வலியுறுத்துகின்றது. ஆவ்வாறே முகம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனும் சாட்ச்சியம் அந்நாரைப் பின்பற்றுதலை வலியுறுத்துகின்றது. அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகை செயற்பாடுகளும் கலப்பற்ற எண்ணம் ää மற்றும் இறைத்தூதரைப் பின்பற்றியிருத்த ஆகிய இந்த இரண்டு நிபந்தனைகளுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
(و تُقِيْمَ الصَّلاةَ) أي تأتي بها قائمة تامة معتدلة. وتقيم الصلاة أي تأتي بها قويمة، ولاتكون قويمة إلا بفعل شروطها وأركانها وواجباتها - وهذا لابد منه - وبمكملاتها، فهذا يكون أكمل.
وقوله الصّلاةَ يشمل كل الصلاة:الفريضة والنافلة،
தொழுகையை நிலைநாட்டுதல்: அதாவது நேர்தியான முறையில் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுதல் தொழுகையை நிலைநாட்டுதல் என்பது அதிலே உறுதியாக இருத்தல் என்பதாகும் அதனுடைய நிபந்தனைகள் மற்றும் கடமைகள் கட்டாயக் கடமைகள் போன்றவைகள் நிறைவேற்றப்படாத பொது அதில் உறுதியாக இருந்ததாக ஆகாது. தொழுகை முழுமை பெற இவைகள் கட்டாயமாகும் இவைகளைக் கொண்டே தொழுகை முழுமை பெறுகின்றது.
இன்னும் தொழுகை எனும் அவரின் இச்சொல்லானது கடமையான மற்றும் நபிலான் அனைத்துத் தொழுகைகளையும் உள்ளடக்கும்.
(وَتُؤْتِي الزَّكَاةَ) تؤتي بمعنى تعطي، والزكاة هي المال الواجب بذله لمستحقه من الأموال الزكوية تعبداً لله، وهي الذهب والفضة والماشية والخارج من الأرض وعروض التجارة.
وقد بيّن الله عزّ وجل أهل الزكاة في سورة التوبة أنهم ثمانية أصناف فقال عزّ وجل: (إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ )(التوبة: الآية60) أي فرضها الله علينا أن نعطيها هؤلاء ولا نعطي غيرهم: (وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ)(التوبة: الآية60).
ஜக்காத்தைக் கொடுத்தல் : ஜக்காத் அதாவது கடமையான பொருளாதாரம் அல்லாஹ்விற்கு வணக்கம் செலுத்தும் வகையில் செல்வத்திலிருந்து வழங்குதல் அவைகளாவன தங்கம்ää வெள்ளிää கால்நடைகள்ää நிலத்திலிருந்து வெளியாகுபவைகள் மற்றும் வியாபார பொருட்கள் போன்றவைகளாகும்.
அத்துடன் அல்லாஹ் தௌபா அத்தியாயத்தில் ஜக்காத் பெற தகுதியானவர்களைப்பற்றி தெளிவு படுத்துகின்றான்ää அவர்கள் எட்டு வகையினர்களாவர்: “(ஜகாத் என்னும்) தானங்கள் வசதியற்றோர்களுக்கும்ää ஏழைகளுக்கும்ää அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்ää இஸ்லாத்தின் பால் உள்ளங்கள் ஈர்க்கப்படுபவர்களுக்கும்ää அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்ää கடன் பட்டிருப்பவர்களுக்கும்ää அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்)ää வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன்ää மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன்: 9:60)
(وَتَصُوْمَ رَمَضَانَ) أي تمسك عن المفطرات تعبداً لله تعالى من طلوع الفجر إلى غروب الشمس.
ورمضان هو الشهر المعروف مابين شعبان وشوال.
وننبه أن المفطرات لاتفطر الصائم إلا بثلاثة شروط: أن يكون عالماً، وأن يكون ذاكراً، وأن يكون مريداً.
• فضدّ العالم الجاهل، فلو أكل الصائم يظن أن الليل باقٍ ثم تبين أنه قد طلع الصبح وهو يأكل فحكم الصوم أنه صحيح.
• ولو أكل يظن غروب الشمس ثم تبين أنها لم تغرب فالصوم صحيح، ودليل ذلك: ما رواه البخاري عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت: أفطرنا في يوم غيم على عهد النبي صلى الله عليه وسلم ثم طلعت الشمس ஜ23ஸ ولم يأمرهم بالقضاء، فلو كان القضاء واجباً لكان يبينه النبي صلى الله عليه وسلم ولنُقِلَ إلينا، لأنه إذا كان واجباً لكان القضاء من شريعة الله، ولابد أن تنقل، وهو داخل في عموم قوله تعالى: (رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )(البقرة: الآية286) وقوله: ( وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ)(الأحزاب: الآية5).
• ولو أكل غير مريد للأكل أو شرب غير مريد للشرب بأن كان مكرهاً فصيامه صحيح.
هذه مهمة لأن كثيراً من الفقهاء يقولون: إن الإنسان إذا أكل جاهلاً بالوقت سواء من أول النهار أو آخره وجب عليه القضاء إذا تبيّن أنه قد أكل في النهار، ولكن يقال: إن الذي شرع الصوم للعباد هو الذي رفع عنهم الحرج بهذه الأعذار.
ரமழானில் நோன்பு வைத்தல்: அதாவது அல்லாஹ்வை வணங்கும் வகையில் நோன்பை முறிக்க்கூடியவைகளை பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை தவிர்த்திருத்தல்.
ரமழான் என்பது : ஷஃபான் மாதத்திற்க்கும் ஷவ்வால் மாதத்திற்க்கும் இடைப்பட்ட ஒரு அறியப்பட்ட மாதமாகும்
பின்வரும் மூன்று நிபந்தனைகளின்றி நோன்பை முறிக்க்கூடியவைகள் நோன்பை முறித்து விடாது
1. அறிந்தவனாக இருத்தல்
2. ஞாபகமுள்ளவனாக இருத்தல்
3. நாட்டமுள்ளவனாக இருத்தல்
• அறிந்தவன் என்பதன் எதிர்கருத்து அறியாதவன்ää நோன்பாளி இரவு என்று என்னி உணவு உண்டு அதன்பிறகு அவன் உண்டு கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை உதயமானது தெரிய வந்தால் அந்த நோன்பின் சட்டம் அது சரியானதே யாகும்.
• சூரியன் மறைந்து விட்டது என்றென்னி உண்டதன் பிறது சூரியன் மறையவில்லை என்பது தெரியவந்தாலும் அந்த நோன்பும் சரியானதே. இதற்கான ஆதாரம் இமாம் புகாரி அவர்கள் அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழீ) அன்ஹ{மா அவர்களைத் தொட்டும் அறிவிக்கும் செய்தியாகும்” நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மேகமூட்டம் சூழ்ந்திருந்த ஒரு நாள் நாம் நோன்பை திறந்து விட்டோம் பிறகு சூரியன் வெளியானது” இங்கு அவர்களுக்கு அதனைக் களா செய்யுமாறு கட்டயையிடப்படவில்லை அதனைக்களாச் செய்வது கட்டாயம் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் களாச் செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டு அவர்கள் அச்செய்தியை நமக்கு கிடைககும்படிச் செய்திருப்பார்கள். ஏனெனில் கட்டாயம் என்றிருந்தால் அல்லாஹ்வின் ஷரீஆவில் அது களாச் செய்யப்படும். என்றாலும் இது 'எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்ää அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எனும் அல்லாஹ்வுடைய பொதுவான கூற்றினுள் ஆகி விடும். (அல்-குர்ஆன்: 2: 186)
ஆத்துடன் “நீங்கள் தவறு செய்திருந்தால்ää உங்கள் மீது குற்றமில்லை ஆனால்ää உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும”;ää (அல்-குர்ஆன்: 33: 5)
• உண்பதன் மீதும் குடிப்பதன் மீதும் நாட்டமின்றி நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒருவன் உண்டால் அல்லது குடித்தால் அவனது நோன்பு சரியானதாகும்.
இது மிகவும் முக்கியமானதாகும் ஏனெனில் அதிகமான புகஹாக்கள் கூறுகின்றார்கள் பகலில் முற்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ ஒருவன் நேரத்தை அறியாமல் உண்டு அவன் உண்டது பகல் பொழுது என்று தெரிய வந்தால் அந்த நோன்பை களா செய்ய வேண்டும் என்று . என்றாலும் சொல்லப்படுகின்றது நோன்பை அடியார்கள் மீது ஷரீஆவாக ஆக்கியவன்தான் அவர்களது தங்கடங்களுக்காகவும் குற்றமில்லாமல் செய்துள்ளான்.
(وَتَحُجَّ البَيْتَ) أي تقصد البيت لأداء النسك في وقت مخصوص تعبداً لله تعالى.
وهل يدخل في ذلك العمرة أو لا ؟
فيه خلاف بين العلماء: فمنهم من قال: إن العمرة داخلة لقول النبي صلى الله عليه وسلم : "العُمْرَةُ حَجٌّ أَصْغَر" لأنه وردت روايات في نفس الحديث فيها ذكر العمرة.
والصحيح أن العمرة دون الحج، أي ليست من أركان الإسلام لكنها واجبة يأثم الإنسان بتركها إذا تمّت شروط الوجوب.
(إِنِ اسْتَطَعْتَ إِلِيْهِ سَبِيْلا) مأخوذ من قوله تعالى: ( وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً )(آل عمران: الآية97) قد يقول قائل: هذا الشرط في جميع العبادات لقول الله تعالى: (فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ )(التغابن: الآية16)
فلماذا خص الحج؟
نقول: خص الحج لأن الغالب فيه المشقة والتعب وعدم القدرة، فلذلك نص عليه وإلا فجميع العبادات لابد فيها من الاستطاعة.
ஹஜ் செய்தல்: அல்லாஹ்வை வணங்கும் வகையில் ஒரு குறிப்பட்ட காலத்தில் கஃபாவைத் தரிசித்தல்.
இதிலே உம்ரா உள்ளடங்குமா அல்லது உள்ளடங்காதா?
இது விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அவர்களுள் சிலர் நபி (ஸல்) அவர்களின் உம்ரா ஒரு சிறிய ஹஜ் என்ற கூற்றின்படி உள்ளடங்கும் என்று கூறுகின்றனர். ஏனெனில் இவாவாறான பல அறிவிப்புக்கள் வந்திருலுக்கின்றன அவற்றிலெல்லாம் உம்ரா நினைவூட்டபட்டுள்ளது.
சுரியான சொல் யாதெனில் அது ஹஜ்ஜை விட்டும் புறம்பான ஒன்றாகும் அதாவது அது இஸ்லாமிய அடிப்படை கடமைகளுள் இல்லை. என்றாலும் அது கடமையாகும் அது கடமையாவதற்குரிய நிபந்தனைகள் நிறைவுற்ற நிலையில் ஒருவன் அதை விட்டால் பாவியாவான்.
பாதையால் அதற்கு சக்தி பெற்றால் என்பது “இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்-குர்ஆன்: 3: 96) எனும் அல்லாஹ்வின் கூற்றிலிருந்து பெறப்பட்டதாகும். சிலர் சொல்வார்கள் இந்த நிபந்தனை “உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; “ (அல்குர்ஆன்: 64: 14) எனும் அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க அனைத்து வணக்கங்களுக்கும் பொதுவானதாகும் என்று.
ஹஜ் ஏன் பிரத்தியேகமாக்கப்ட்டுள்ளது?
ஹஜ் ஏன் பிரத்தியேகமாக்கப்பட்டுள்ளதெனில் பெரும்பாலும் அதை நிறைவேற்றுவதில் சிரமங்களும் கஷ்டமும் சக்தியிண்மையும் இருக்கின்றமையேயாகும். ஆகவேதான் அது பிரத்தியேகமாக்கப்பட்டுள்ளது இல்லையெனில் அனைத்து வணக்கங்களுக்கும் இயலுமாகவிருத்தல் என்பது கட்டாயமானதே.
( قَالَ: صَدَقْتَ) أي أخبرت بالحق، والقائل هو جبريل عليه السلام وهو السائل، فكيف يقول: صدقت وهو السائل؟
قَالَ عُمَرُ: (فَعَجِبْنَا لَهُ يَسْأَلهُ وَيُصَدِّقُه) ووجه العجب أن السائل عادة يكون جاهلاً، والمصدّق يكون عالماً فكيف يجتمع هذا وهذا، ومثاله: لوقال قائل: فلانٌ قدم من المدينة، فقال بعضهم:صدقت، فمقتضى ذلك أنه عالم، فكيف يسأل جبريل عليه السلام النبي صلى الله عليه وسلم ثم يقول صدقت؟ هذا محل عجب، وستأتي الحكمة في ذلك.
உண்மையே உரைத்தீர் என்றார்: அதாவது உண்மையையே அறிவித்Pர் என்பதாகும் உண்மைப்படுத்தியவர் கேள்வி கேட்டவரான ஜிபரியீல் (அலை) அவர்களாவார்கள். கேள்வி கேட்டவரான அவர் எவ்வாறு உண்மையே உரைத்தீர் என்று கூற முடியும?;.
உமர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் அவரே கேள்வி கேட்டு அவரே உண்மைப் படுத்தியமையினால் நாம் ஆச்சரியமடைந்தோம். ஆச்சரியத்திற்கான காரணம் யாதெனில் பொதுவாக கேள்வி கேட்க்கக்கூடியவர் அறியாதவராகவே இருப்பார் அவ்வாறே உண்மைப் படுத்துபவர் அறிந்தவராகவே இருப்பார் இதுதான் வளமை. இது இவ்வாறிருக்க இவை இரண்டும் எவ்வாறு ஒருவரிடம் ஒன்று சேர முடியும் என்பதுவேயாகும். உதாரணமாக சிலர் இன்னார் மதீனாவிலிருந்து வந்தார் என்று கூறினால் சிலர் உண்மை கூறினீர் என்று சொல்லக் கூடும் அது அவருக்கு அதுபற்றிய அறிவு உண்டு என்பதை பறைசாற்றும். எங்கனம் ஜிபரியீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை கேள்வி கேட்டு விட்டு பிறகு உண்மையே உரைத்தீர் என்று கூறமுடியும். இதுதான் ஆச்சரியமடைய வைத்த இடமாகும் இன்ஷா அல்லாஹ் அதன் அந்தரங்கம் என்ன என்பது பிறகு வரும்.
محاضرة لفضيلة دكتورة ريم بنت عبد المحسن
عبر الإنترنت موجها : لطالبات بمعهد سمية بسريلانكا
عنوان : شرح الأربعين النووية
بتاريخ: 17 ربيع الأول 1435يوم السبت الموافق : 1-18-2014
مترجم : مركز التوعية الإسلامية بسريلانكا
சொற்பொழிவு: கலாநிதி ரீம் பின்த் அப்துல் முஹ்சின்
இலங்கை சுமையா கலாபீட மாணவிகளுக்கு இணைய தளம் ஊடாக
தலைப்பு: அரபயீன நவவிய்யா விளக்கவுரை
காலம் : ஹிஜ்ரி 1435-03-17 (18-01-2014) சனிக்கிழமை
மொழியாக்கம்: அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.