அந்த இரவு.. அக்குரணை - அம்பத்தன்ன மஸ்ஜித்துல் பலாஹ் மீது பெரும்பான்மை இன தீவிரவாதிகள் தாக்கிய கணம். (masjid)
(அஸ்லம் அலி - லங்கா முஸ்லிம்)
அக்குறனை - அம்பத்தன்ன -வெலிக்கட பகுதியில் பல சகாப்தங்களாக இயங்கி வரும் மஸ்ஜித்துல் பலாஹ் மீது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தீவிரவாத கும்பல் ஒன்றால் தாக்குதல் நடாத்தப் பட்டு மஸ்ஜித்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது அறிந்ததே. அவர்களுடன் நேரடி மோதலில் ஈடுபட்ட பாஹிம் என்ற வாலிபர் தெரிவித்த கருத்துகள் இவை.
நேற்று இரவு 9:30 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடாத்தினர்.
மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடாத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த குழுவினர் குறித்த மஸ்ஜிதின் இமாமை தாக்குவதக்கு மஸ்ஜிதுக்குள் நுழைந்து இமாமை தாக்க முற்பட்ட போது அவர் இரண்டாம் மாடிக்கு ஓடிச் சென்று அங்கு பாத்றூமுக்குள் ஒளிந்து கொண்டதாக மஸ்ஜித் இமாமே தெரிவித்தார் ,
மிக மோசமான முறையில் சிங்கள மொழியில் தூற்றுக் கொண்டு உள்நுழைந்த காடையர்கள் குழுமுதல் மாடி ,இரண்டாம் மாடி ஆகியவற்றுக்குள் நுழைந்த அங்கு தாக்குதல் நடாத்தியுள்ளனர் .
நேற்று இரவு சம்பவத்துக்கு முதல் நாள் இரவும் மஸ்ஜித் கற்களால் தாக்கப்பட்டுள்ளது . நேற்று இரவும் வாகனத்தில் வந்த காடையர்கள் மஸ்ஜிதுக்கு கற்களால் தாக்கிய போது சத்தம் கேட்டு சம்ப இடத்துக்கு வந்து அதை தட்டிக்கேட்ட பர்ஹான் என்ற வாலிபரையும் தாக்கியுள்ளனர் இதன்போது குறித்த வாலிபர் ,மற்றும் அவரின் இரு உறவினர்களும் தாக்கபட்டுள்ளனர் .
இது தொடர்பாக பர்ஹான் குறிப்பிடும்போது நேற்று இரவு 9:30 மணியளவில் வாகனத்தில் வந்த குழுவினர் மஸ்ஜிதை கற்களினால் தாக்கினர். அதை பார்த்த நான் அதை அங்கு சென்று தடுக்க முற்பட்டேன் இதன் போது அவ அர்கள் என்னை தாக்கினார்கள் நானும் திருப்பி தாக்கினேன் ஆனாலும் அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வந்தமையால் அவர்களுடன் என்னால் போராட முடியவில்லை.
அவர்கள் என்னை தாக்கினார்கள் .எனக்கு உதவிக்கு மற்ற முஸ்லிம்கள் எவரும் வரவில்லை . வீட்டினுள் இருந்து விட்டனர் .இதன் போது எனது வாப்பா மற்றும் மச்சான் சம்பவ இடத்துக்கு வந்தனர் அவர்களையும் வந்த குழுவினர் தாக்கினர் , இவர்கள் நிச்சயம் சிங்கள பெளத்த தீவிரவாத குழுவை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று பர்ஹான் தெரிவித்தார் .
சம்வம் நடை பெற்ற பின்னர் அங்கு பெரும்தொகையில் முஸ்லிம்கள் கூடினர் , பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது . இதன்போது தாக்கியவர்கள் வந்த லொறி ரக வாகனத்தில் இலக்கமும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்று இங்கு அங்கு கூடி நிற்பவர்கள் தெரிவித்தனர் . இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பில் மஸ்ஜித்தின் இமாம் மஸ்ஜிதை தாக்கிவிட்டு என்னையும் தாக்க துரத்தியவர்களின் முகம் எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. பொலிசார் அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும் . பொலிசார் நேற்று ஒருவரை பிடித்து வந்தார்கள் என்னிடம் அடையாளப் படுத்துமாறு கூறினார்கள் . நான் அவரை அவர் இதில் சமந்தப்படவில்லை என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்தார் .
சிங்கள , மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மஸ்ஜிதுக்கு வந்து சம்பவம் அடையாளங்களை பார்வியிட்துள்ளனர் . மத்திய மாகாண சபை உறுப்பினரும் இன்று அங்கு சென்று மஸ்ஜித்தை பார்வையிட்டுள்ளார் பாதுகாப்புக்கு பொலிசார் நிறுத்தப் பட்டுள்ளனர் .
Thans madawala news

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக