Inamullah Masihudeen
இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பிரயோகங்களும் பிரச்சாரங்களும் சர்வதேச அரங்கிலும்,பிராந்திய அரங்கிலும்,தேசிய அரங்கிலும் கையாளப்படும் நவயுக காலனித்துவத்தின் அரசியல் இராஜதந்திர மூலோபாய நகர்வுகளுக்கான மிகப் பிரதானமான பிரச்சார யுத்தப் பிரகடனமாகும்.
யூத சியோனிஸ மேலைத்தேய மேலாதிக்க சக்திகளால் முடுக்கிவிடப்பட்டுள்ள முஸ்லிம் உம்மத்திற்கும் உலகிற்கும் எதிரான மேற்படி சர்வதேச பயங்கரவாதத்திற்கு இனம் மதம் மொழி நிறம் என்ற குறுகிய வட்டங்களுக்கு அப்பால் பெரும்பானமையான நேச சக்திகளுடன் இணைந்து மூலோபாய திட்டமிடல்களை வகுப்பதிலும் நகர்வுகளை மேற்கொள்வதிலும் முஸ்லிம் உம்மத் எல்லா மட்டங்களிலும் தவறியுள்ளது.
ஷைதானில் தங்கியிருக்கும் மிகச்சிறிய தீய சக்திகளுக்கு உலகில் இவ்வளவு துணிச்சலுடன் வீரத்துடன் அழிவுகளை அக்கிரமங்களை அட்டகாசங்களை அரங்கேற்ற முடியுமென்றால்...
அல்லாஹ்வையும் அவன் படைத்த பிரபஞ்ச நியதிகளிலும் தங்கியிருக்கும் நல்ல சக்திகளுக்கு உலகின் உம்மத்தின் தேசத்தின் போக்கையே மாற்றிவிட முடியாதா...?
துணிவும் வீரமும் சத்தியத்தின் வழி நடப்போருக்கு வேண்டும்... நிச்சயமாக சத்தியமே வெல்லும் அசத்தியம் அழிந்தே தீரும்....!
Thanks sak inamulla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக