சனி, 31 மே, 2014

பெற்றாரின் பெருமையறிந்து கடமை புரிவோம்.

பெற்றாரின் பெருமையறிந்து கடமை புரிவோம்.

பெற்றாரின் பெருமையறிந்து கடமை புரிவோம்.

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் …
பெற்றாரின் பெருமையறிந்து கடமை புரிவோம்.

அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்தம் அன்புக் குடும்பத்தினர்கள் தோழர்கள் தொடர்ந்தவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் இன்னும் மறுமை வரை அவர் வழியில் பயனிப்பவர்கள் அனைவர்கள் மீதும் அவனது ஸலாத்தும் ஸலாமம் என்றென்றும் நிலைப் பெறட்டும் என்று வேண்டியவனாக.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வ வ.

இரு பெற்றார்களுடைய பெருமை எந்த அளவு உயர்ந்தது மகத்தானது என்பதை மனிதன் சரியாகப் புறிந்து கொள்வானாக இருந்தால் தனது வாழ்நாள் பூராவும் அவர்களுக்குப் பணிவிடை செய்வான் காலம் முழுதும் அவர்களைக் கண்போல் பார்த்துக் கொள்வான் என்றாலும் துர்அதிஸ்டமாக மனிதன் தனது இரு பெற்றார்களதும் மதிப்புப் பற்றி அறியாதவனாக அல்லது அலட்ச்சியம் செய்பவனாகவே இருந்து கொண்டிருக்கின்றான்.

பெற்றாரின் மதிப்பும் மாண்பும் எத்தகையது என்பதை நாம் அறிந்து கொள்ள அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய கடமையுடன் நம்மிரு பெற்றார்களுக்கும்   செலுத்த வேண்டிய கடமையை அல்லாஹ்  இணைத்துக் கூறியிருப்பதிலிருந்தே நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகின்றான் : அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.(அல்-குர்ஆன் : 17 : 23-25)

மேற்ப்படி வசனங்களில்
1. எவ்வாறு நாம் அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் வணங்கக் கூடாதென்றுக் கட்டளையிடப்பட்டிருக்கின்றோமோ அவ்வாறே நம்மிரு பெற்றார்களுக்கும் உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

2. அவர்கள் முதுமையடைந்து விட்டால் அவர்களின் உள்ளம் நோகும் படியான எந்தவொரு சிறிய வார்த்தையைக் கூட நாம் எந்நிலையிலும் பிரயோகிக்கக் கூடாது.

3. அவர்களிருவரையும் எக்காரணம் கொண்டும் தமது பராமரிப்பிலிருந்துத் தூரமாக்கி விடக் கூடாது.

4. அவர்களிருவர்களதும் உள்ளம் உடையும் வகையிலான எந்தவொரு சிறிய வார்த்தையையும் நாம் எச்சந்தர்ப்பத்திலும் பிரயோகிக்கக் கூடாது.

5. அவர்களிருவரிடமும் கனிவானதும் கண்ணியமானதுமான வார்த்தைகளையே நாம் பேச வேண்டும்.

6. அவ்விருவர் மீதும் அதிகமதிகம் அன்பு காட்டுதல் வேண்டும்.

7. அவ்விருவரிடமும் மிகப் பணிவாகவும் தாழ்வாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

8. நாம் சிறுகுழந்தையாக இருக்கும் போது எவ்வாறு எம்மீது பரிவும் பாசமும் வைத்திருந்தார்களோ அவ்வாறே அவர்கள் முதுமையடைந்து விட்டால் நாம் அவர்கள் மீது அதைத் திருப்பிச் செலுத்ததல் வேண்டும்.

9. எமக்காக எவ்வாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்களோ அவ்வாறே நாம் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல் வேண்டும்.

10. பெற்றார்களுடைய விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக நடந்து கொள்ளுதல்.

இத்தனை அம்சங்கள் மேற்படி மூன்று வசனங்களில் பொதிந்துள்ளன என்றாலும் எனது குறுகிய சிந்தனைக்கு எட்டாத இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கலாம்.

இவற்றுள் ஓரிண்டு விடயங்களையாவது நாம் நிறைவேற்றுகின்றோமா என்று நாம் சற்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம் இவை வெறும் அறிவுரை மாத்திரமல்ல மாறாக எமக்கு இடப்பட்டக் கட்டளையாகும் எனவே அவற்றை முழுமையாக நாம் நடைமுறைப்படுத்துவது நமது தவிர்க்க முடியாத முக்கியக் கடமையாகும்.

இன்னும் வல்ல அல்லாஹ் பல இடங்களில் அவனுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடமைகளுடன் எம்மிரு பெற்றாருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளை இனைத்துக் கூறுவதைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான் : மேலும், அல்லாஹ்வையே வணங்கி வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும்,  தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்-குர்ஆன் : 4 : 36)

அல்லாஹ் கூறுகின்றான் : நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." (அல்-குர்ஆன் : 31 : 16)

மேற்படி முதல் வசனத்தில் அல்லாஹ்வுடைய வணக்கத்துடன் தன்னிரு பெற்றார்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

அதாவது அல்லாஹ்வை வணங்குவது எவ்வாறு நம்மீது கடமையாக இருக்கின்றதோ அவாவாறே நம்மிரு பெற்றாருக்கும் உபகாரம் புரிவதும் கடமையாகும்.

அவ்வாறே அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எவ்வாறு எமக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே நம்மிரு பெற்றாரையும் நோவினை செய்வதும் தடுக்கப்பட்டிருக்கின்றது. 

அவ்வாறே இரண்டாவது வசனத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவ  போன்றே நம்மிரு பெற்றாருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளோம்.

இந்த வசனத்திற்க்கு விரிலுரை வழங்க வந்த விரிவுரையாளர்களின் தலைவர் என்று அழைக்கப்படக்கூடிய அப்துள்ளாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் : 

அல்லாஹ் மூன்று இறைவசனங்களை மூன்று விடயங்களுடன் இணைத்ததாக இரட்டை வசனங்களாக அருளியுள்ளான் அவற்றுள் யார் ஒன்றை விட்டு விட்டு ஒன்றை மட்டும் பின்பற்றுகின்றானோ அது அவனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

1. அல்லாஹவின் கூற்று : அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; (அல்-குர்ஆன் : 4 : 59)

2. அல்லாஹவின் கூற்று : தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; (அல்-குர்ஆன் : 2 : 43)

3. அல்லாஹவின் கூற்று :''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக (அல்-குர்ஆன் : 31 : 16)

மேற்ப்படி மூன்று வசனங்களுள் முதல் வசனம் அல்லாஹ்வுக்கும் அவ்வாறே அவனதுத் தூதருக்கும் வழிப்பட வேண்டும் என்று கூறுகின்றது எனவே எந்தவொரு மனிதன் தூதருக்கு வழிப்படாது அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்படுகின்றான் அல்லது அல்லாஹ்வுக்கு வழிப்படாது தூதருக்கு மட்டும் வழிப்படுகின்றான் என்றால் அந்த அவனது வழிபாடு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அவ்வாறே இரண்டாவது வசனம் தொழுகையுடன் ஜக்காத்தையும் இணைத்துப் பேசுகின்றது எனவே எந்தவொரு மனிதன் தொழுகின்றான் என்றாலும் வசதி இருந்தும் ஜக்காத் கொடுக்கவில்லை அல்லது ஜக்காத் கொடுக்குகின்றான் தொழுவதில்லை என்றால் அவனுடைய அந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ப்படுவதில்லை.

இதே போன்று மூன்றாவது வசனம் அல்லாஹ்விற்க்கும் அத்துடன் நம்மிரு பெற்றார்களுக்கும் நன்றி செலுத்துமாறுக் கூறுகின்றது. எனவே எந்தவொரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தகின்றான் தன்னிரு பெற்றாருக்கும் நன்றி செலுத்துவதில்லை அல்லது தன்னிரு பெற்றாருக்கும் நன்றி செலுத்துகின்றான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை என்றால் அவனது இந்தச் செயலும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இன்னும் பெற்றாருக்கு உபகாரம் செய்வதை அல்லாஹ் எவ்வாறு அவனது வணக்கத்தடன் இனைத்துக் கூறுகின்றானோ அவ்வாறே பெற்றாரை நோவினை செய்வதை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுடன் இணைத்துக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: அளிவை ஏற்ப்படுத்தவல்ல பெரும்பாவங்களாவது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலும் அடுத்ததாக தம்மிரு பெற்றார்களையும் நோவினை செய்வதுவும் ஆகும்.

மேற்ப்படி நபி (ஸல்) அவர்களின் கூற்றிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயங்கள்:

1. பெற்றாரை நோவினை செய்வதென்பது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதைப் போன்ற கொடிய குற்றமாகும்.

2. அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை எவ்வாறு பயப்பட வேண்டுமோ அவ்வாறே பெற்றாரை நோவினைச் செய்வதையும் கருதுதல் வேண்டும்.

3. பெற்றாரை நோவினை செய்தல் அளிவை ஏற்ப்படுத்தும் செயலாகும். 

இப்பொழுது ஓரளவாவது பெற்றாரின் மதிப்பும் மாண்பும் எத்தகையது என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் எனவே முடிந்த வரை பெற்றாரை மதித்து கண்ணியப்படுத்தி அவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் உள்ளம் வேதனைப்படாதவாறு நடந்து சதா அவர்கள் உள்ளத்திற்க்கு மகிழ்ச்சியழிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்ள முயல்வோமாக அதற்க்கு வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய்வானாக.

முனாப் நுபார்தீன்.

வெள்ளி, 30 மே, 2014

பிரபல திரைப்பட நடிகை மோனிக்கா அவர்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அவர் தனது ரசிகர்களுக்கு அதனை தெளிவு படுத்துகின்றார்

பிரபல திரைப்பட நடிகை மோனிக்கா அவர்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அவர் தனது ரசிகர்களுக்கு அதனை தெளிவு படுத்துகின்றார்

பிரபல திரைப்பட நடிகை மோனிக்கா அவர்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அவர் தனது ரசிகர்களுக்கு அதனை தெளிவு படுத்துகின்றார்

நபித் தோழர்கள் வாழ்வினிலே. பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்

நபித் தோழர்கள் வாழ்வினிலே. பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்

வியாழன், 29 மே, 2014

நபித் தோழர்கள் வாழ்வினிலே. பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்

அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் அவல்லாஹ்வின் திருப் பெயரால்…

நபித் தோழர்கள் வாழ்வினிலே.
பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும்

பின்வரும் பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள் ஆகிய இரண்டு நபித் தோழர்களுடைய இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தை உளப்பூர்வமாகப் படித்துப் பாருங்கள் உங்கள் அனுமதியின்றியே உங்கள் கண்கள் கலங்குவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது போகும்.

ஒரு முறை நபித் தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் காலித் பின் வலீத் பிலால் இபுனு ரபாஹ் அபூதர் அல் கிப்பாரி (ரலி) போன்ற நபித் தோழர்கள் ஒரு சபையில் ஏதோ ஒரு விடயம் பற்றி வாதப்பிரதிவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்  அப்போது அபூதர் அல்-கிப்பாரி (ரலி) அவர்களைப்; பார்த்து  பிலார் (ரலி) அவர்கள் உமது கருத்துப் பிழையானது என்று கூறினார்கள் அதனைக் கேட்ட அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள் பிலார் (ரலி) அவர்களைப் பார்த்து கறுப்பியின் மகனே என்ன எனது கருத்துப் பிழையா? என்று கூறிவிடுகின்றார்கள். 

உடனே பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் உம்மைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன் என்று கூறியவாறே கோபம் மேலிடக் கவலைத் தோய்ந்தவர்களாக நபி (ஸல்) அவர்களிடம் சென்று சாலாம் கூறிவிட்டு அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அபூதர் எனக்கு என்ன சொன்னார் தெரியுமா என்று வேதனையுடன் கூறினார்;.

அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படி உனக்கு என்னதான் சொன்னார் என்று கேட்டார்கள். அதற்க்கு பிலால் (ரலி) அவர்கள் கறுப்பியின் மகனே என்று கூறி எனதுத் தாயைப் பளித்து விட்டார் என்றார்கள். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் மதிவதனத்தில் கோபத்தின் வெளிப்பாடு தோன்றியது.

அதற்க்கிடையில் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களும் அங்கு வந்து விடுகின்றார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களைப் பார்த்து நீர் கறுப்பியின் மகனே என்று கூறி அவரின் தாயைப் பளித்தீரா என்று வினவியவாறு நீர் அறியாமைக்காலத்து பண்பு கொண்ட ஒரு மனிதராவீர் இன்னும் உம்மிடம் அறியாமை எஞ்சியுள்ளது என்று கண்டித்துக் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள் தனது சகோதரின் தாயைப் பளித்து அவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டேனே எனும் கவலைத் தாங்காது உடனே அளத்தொடங்கி விட்டார்கள் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள் அல்லாஹ்விடம் தனக்காகப் பிழைபொறுக்கத் தேடுமாறு மன்றாடினார்கள் 

அதன் பிறகு பிலால் (ரலி) அவர்களின் வழியை மறித்துக் கொண்டு தனது தலையை பிலால் (ரலி) அவர்களின் பாதத்தடியில் வைத்துப் படுத்துக் கொண்டு பிலாலே அல்லாஹ்வின் மீதாணையாக உனது பாதத்தால் எனது கண்ணத்தை மிதிக்கும் வரை நான் எனது தலையை நிமிர்த்தவே மாட்டேன் நீயோ என்னிலும் கண்ணியமானவராவீர் நானோ மிகத்தாழ்தவனாகிவிட்டேன் என்றுக் கூறி அழுதார்கள்.

இதனைக் கேட்ட பிலால் (ரலி) அவர்களும் தன் சகோதரனின் உள்ளத்தை வேதனையடையச் செய்து விட்டேனே என்றுக் கவலைப் பட்டு அழத் தொடங்கி விட்டார்கள் பிறகு அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் கன்னத்தின் மீது முத்தமிட்டு அவர்களை மன்னித்து விடுகின்றார்கள்.

மேற்படி சம்பவம் புகாரி முஸ்லிம் உட்ப்பட இன்னும் பல நபி வழித் தொகுப்புக்களில் சிறு சிறு மாற்றங்களுடன் பதிவாகியுள்ளது. இது அவை அனைத்தினுடையவும் சுருக்கமானத் தொகுப்பேயாகும் 

மேற்படி சம்பவத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகளும் முன்மாதிரிகளும் அதிகமாக இருக்கின்றன.

1. அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் ஈமானின் வலிமையும் இறையச்சமும் பிரதிபலிக்கின்றன.

2. ஒரு ஈமானியனிடம் எந்நேரமும் தனது குறங்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலைக் காணப்படும்.

3. பிலால் (ரலி) அவர்களின் தன்னடக்கமும் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையும்

4. தனது சகோதரன் தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பட்ச்சத்தில் அவனை மன்னித்து விடும் மனோ நிலை.

5. பழித்துரைத்தல் என்பது அறியாமைக்காலச் செயலாகும்.

6. தன் சகோதரர்களால் தனக்கு ஏற்படும் அநியாயங்களுக்கெதிராக தான் செயல்படாது அவைகளைத் தiலைமைக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.

இந்த சம்பவத்தில் இது போன்ற இன்னும் பலப் படிப்பினைகளும் முன்மாதிரிகளும் நமக்குக் காணக்கிடக்கின்றன எனவே இப்படியானப் புணிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் இகபரமிரண்டிலும் வெற்றி பெறுவோமாக.


முனாப் நுபார்தீன்.

புதன், 28 மே, 2014

உலகளாவிய முஸ்லிம் தீவிரவாமும் யதார்த்தமும்

உலகளாவிய முஸ்லிம் தீவிரவாமும் யதார்த்தமும்

உலகளாவிய முஸ்லிம் தீவிரவாமும் யதார்த்தமும்

بسم الله الرمن الرحيم

உலகளாவிய முஸ்லிம் தீவிரவாமும் யதார்த்தமும்

الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد
قال الله تعالى : وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوف إليكم وأنتم لا تظلمون ( سورة الأنفال : آية 60)

இன்று உலக அளவில் பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற பாகுபாடின்றி இஸ்லாமிய உலகம் மிகப்பெரும் சவால்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அராஜகங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது நாமனைவரும் அறிந்ததே. சர்வாதிகாரம் கொண்ட மேற்க்கத்தேய வள்ளரசுகள் தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயல்பட மறுக்கும் இஸ்லாமிய நாடுகளின் மீது நியாம் அற்ற விதத்தில் நீதிக்குப் புறம்பாக பல்வேறு குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவற்றின் மீது போர் பிரகடனம் செய்து அந்த நாடுகளையே ஆக்கிரமிக்கின்ற காட்ச்சியினை நாம் நன்றாகவே  அறிந்திருக்கின்றோம். இது சர்வதேச மட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களாகும்.

அவ்வாறே தேசிய அளவில் நாம் பார்கின்ற போது குறிப்பாக இலங்கை போன்ற முஸ்லிம்கள்  சிறுபாண்மையாக வாழுகின்ற நாடுகளில் பெரும் பாண்மை சமூகம் தங்களது கட்டுபாட்டுக்குள் கட்டுண்டு வாழ மறுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களது அத்துமீறல்களையும் அராஜகத்தையும் பிரயோகித்து வருவதுடன் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அடையாளப் படுத்தி வருவதனையும் நாம் அறியாமல் இல்லை.

இந்நிலையில் ஏன் இவ்வாறு முஸ்லிம்கள் மீது உலக அளவில் தீவிரவாதிகள் எனும் பட்டம் சுமத்தப்படுகின்றது என்பதை ஆராய்கின்றபோது பின் வரும் முடிவுக்கு எம்மால் வர முடியும். 

அதாவது அவர்களின் இந்த அச்சத்திற்குப் பிரதானக் காரணம் அல்-குர்ஆனின் 8 ம் அத்தியாயத்தின்  60 வது இறை வசனமாகும்; என்று கூறலாம். 

அல்லாஹ் கூறுகின்றான் : அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும்ää திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்ää உங்களுடைய எதிரியையும் இன்னும் அவர்கள் தவிர்ந்த வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம்;. அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்ää (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)

மேற்படி வசனத்தில் அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும்ää திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்ää உங்களுடைய எதிரியையும் இன்னும் அவர்கள் தவிர்ந்த வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம்;. என்று கூறப்பட்டிருப்பதனால்தான் இன்று முழு உலகமும் முழு முஸ்லிம் சமூகத்தைத் தீவிரவாதிகளாகக் கற்பனை செய்து கொண்டு அச்சமுறுகின்றது.   

ஏனெனில் புனித அல்-குர்ஆனை முஸ்லிம்கள் கற்று விளங்குகின்றார்களோ இல்லையோ இஸ்லாத்தின் விரோதிகள் நன்றாகவே கற்று விளங்குகின்றார்கள். மேற்படி வசனம் ஒவ்வொரு இஸ்லாமியனும் தங்களுடையவும் இஸ்லாத்தினுடையவும் விரோதிகளை அச்சமுறச் செய்யும்  வகையில் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க சேவண்டும் என்றுக் கட்டளைப் பிறப்பிக்கின்றது.

அத்துடன் மேற்படி வசனத்தில் அச்சமுறச் செய்தல் என்பதைக் குறிக்க رهبة  எனும் மூலத்திலிருந்து பிறந்த ترهبون  எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது அவ்வாறே அரபு உலகில் பயங்கரவாதியைக் குறிக்க மேற்படி رهبة  எனும் மூலத்திலிருந்து பிறக்கும் إرهابي  எனும் சொல்தான் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது.

அதாவது பயங்கரவாதி என்றால் பிறரை அச்சமுறச் செய்பவன் பிறருக்கு அச்சுறுத்தலாக இருப்பவன் என்பதுவே பொருளாகும். எனவே முஸ்லிம்கள் பிறரை அச்சமுறச் செய்யும் வகையில் தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொர இஸ்லாமியனும் ஒவ்வொரு பயங்கரவாதியாகத்தான் இருப்பான் என்பதுவே அவர்களின் குறுகியப் பார்வையாகும்.

முஸ்லிம்களாகிய நாம் மேற்படி வசனத்திற்க்கு செயல்வடிவம் கொடுத்து எமது வாழ்வில் அமுல்படுத்தத் தவறிய  போதிலும் முஸ்லிம்கள் என்றால் அல்-குர்ஆனுடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் ஆதலால் அதன் போதனைப்படி வாழ்பவர்கள் எனவே அவர்கள் மேற்படி வசனத்தின் பணிப்புரையின் பிரகாரம்;தான் செயல்படுவார்கள் என்று அவர்கள் நினைப்பதில் தவறேதும் கிடையாது. இப்படியான அவர்களின் நம்பிக்கைதான் அவர்களை இஸ்லாத்தைக் கண்டு அச்சமுறச் செய்திருக்கின்றது எனலாம்

ஆதலால்தான் களபொட அத்த ஞானசாரர் அக்குறனையில் மாத்திரம் சுமார் 80 கும் மேற்ப்பட்ட பள்ளிகள் இருக்கின்றன அவைகள் அனைத்தம் இந்த நாட்டு சிங்களவர்களுக்கு எதிரான பதுங்கு குளிகளாகும் என்று கூறி பள்ளிவாயற்க்களுக்கு எதிரான தனதுப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றார்.

அந்த அச்ச உணர்வின் காரணமாகத்தான் நாட்டில் உள்ள பள்ளிவாயில்கள் மீது தங்களதுத் தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் நடாத்தி வருகின்றார்கள் அவர்களது பார்வையில் ஒவ்வொரு பள்ளிவாயலும் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு முஸ்லிம்களைத் தயார்படுத்தும் பதுங்கு குளிகளாகும்.

இந்த அவர்களது அச்ச உணர்வுக்கு அல்குர்னின் 9வது அத்தியாயத்தின் 5 வது வசனமும் மேலும் வலு சேர்பதாகவுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் : (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு,முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன்:9:5)

மேற்படி வசனத்தில் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதலால்த்தான் ஞானசாரர் அல்-குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை கானுகின்ற இடத்திலெல்லாம் வெட்டுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்

நாம் வெறுமனே நிராயுதபானிகளாக இருந்த போதிலும் மேற்படி இந்த இரு இறை வசனங்களும்தான் அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது இதுதான் யதார்த்தம்.

இஸ்லாம் என்ற இந்த பெயருக்கே அவர்கள் உள்ளத்தில் எம்மைப் பற்றி இந்த அளவு அச்சமும் பீதியும் இருக்கின்றது என்றால் முஸ்லிம்களாகிய நாம் உண்மையாகவே மேற்ப்படி  வசனங்களுக்கு நமது வாழ்வில் உயிர் கொடுத்து செயல் வடிவம் கொடுத்;திருந்தால் நிச்சயமாக இன்று எமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மிக மோசமான அவல நிலை தோன்றியிருக்காது. 

எவ்வாறு இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் அவர்களது உள்ளங்களில் இருக்கின்றதோ அவ்வாறே முஸ்லிம்களைப் பற்றிய அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இன்று அவர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றார்களேத் தவிர முஸ்லிம்களைக் கண்டு அல்ல மாறாக அவர்களது உள்ளங்களிலிருந்து எம்மைப் பற்றிய அச்சம் அகன்று விட்டது அதற்கான காரணத்தை நபி (ஸல்) பின்ருமாறு தெளிவு படுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கம் மிகைத்திருக்கும். அப்போது ஒரு நபித் தோழர் இறைத் தூதர் அவர்களே! நாம் அப்போது எண்ணிக்கை குறைந்து இருப்பதனால் அவ்வாறு நிகழுமோ? என்று கேட்டார் :
அதற்கு நபி (ஸல்) அவர்கள்;: நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் நுரையைப் போன்றும், நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் உள்ளங்களிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்! எனறு பதிலளித்தார்கள்
அப்போது வஹ்ன், என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும், இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : சௌபான் (ரலி) நூல் : அபூதாவூது)

நமது ஈமான் வலுவிழக்குகின்ற போதே தீய சக்திகள் நம்மீது அராஜகத்தினையும் அடக்குமுறைகளையும் பிரயோகிக்கும் என்பது மேற்படி நபிவழிச் செய்தியிலிருந்து நாம் புறிந்து கொள்ள முடிகின்றது.

முனாப் நுபார்தீன்.

செவ்வாய், 27 மே, 2014

அமைச்சர் ரிஷாட்; பதிய்யுத்தீன் அவர்களின் ஞானசாரருக்கு எதிரான வழக்கும் நமது நிலைப்பாடும்.

அமைச்சர்  ரிஷாட்; பதிய்யுத்தீன் அவர்களின் 
ஞானசாரருக்கு எதிரான வழக்கும் நமது நிலைப்பாடும்.

அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்கள் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றார் என்றத் தகவல் அறிந்தவுடன் நாம் இச்சந்தர்ப்பத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் ஏனெனில் இது அதற்க்குப் பொருத்தமான சந்தர்ப்பம் கிடையாது சந்தர்பம் சாதகமாக அமையும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தோம்.

இந்த எமது ஆலோசனையைப் பார்த்த அதிகமான ககோதரர்;கள் என்னிடம் அதற்கான காரணம் பற்றி விளக்குமாறுக் கேட்டிருந்தார்கள் ஆதலால் அவர்களுக்காக எமது இந்த விளக்கத்தினை இங்கு பதிவு செய்கின்றோம்..
நாம்;; தற்ச்சமயம் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஆலோசனைசனை வழங்கியதற்க்கான காரணம் பற்றி விழக்குவதற்க்கு முன் இன்றய நீதித் துறையின் பின்வரும் வரலாற்றைத் விளங்கிக் கொள்வது அவசியமாகும். 

முதல் முதலாக அனுராதபுர அட்டபொக்குன எனுமிடத்தில் பல நூற்றாண்டு பளமைவாய்ந்த முஸ்லிம்களின் பூர்வீகத்தினைப் பறைசாட்டிக் கொண்டிருந்த மண்ணறையுடன் கூடிய தக்கியா காவல் துறையினரின் பூரணப் பாதுகாப்புடன் பௌத்த பாசிச கும்பலால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
அது தொடர்பான வழக்கு இன்றுவரை எவ்வித தீர்ப்புமின்றி நீதி மன்றத்தில் தூங்கிக் கிடக்கின்றது .

அவ்வாறே அதனைத் தொடர்ந்து பல பள்ளிவாயில்கள் மத்ரஸாக்கள் வணக்கஸ்தலங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிருவனங்கள் வர்த்தக நிலையங்கள் வாகணங்கள் சொத்துக்கள் போனறவை தாக்கப்பட்ட அழிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளும் பொலிஸ் முறைப்பாடுகளும் எவ்வித விசாரனையும் தீர்ப்புமின்றி நீதி மன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன.

இவற்றுள் ஒரு சில வழக்குகளும் முறைப்பாடுகளும் பேரினவாத பாசிச கும்பல்களின் அச்சுறுத்தல் காரணமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கதாகும்.

இவ்வாறு வாபஸ் பெறப்பட்டவைகளுள் பெசன் பக் தாக்குதல் தொடர்பான வழக்கு மற்றும் மகியங்கன பள்ளிவாயல் தொடர்பான முறைப்பாட்டை உதாரணமாகக் கூறலாம்

பெசன் பக் தாக்குதல் தொடர்பான வழக்கு முதல் கட்ட விசாரனையிலேயே வாதியினால் வாபஸ் பெறப்பட்டது. அவ்வாறே மகியங்கன பள்ளிவாயல் தொடர்பான விடயம் இறுதிக்கட்டம் வரை பல தசாப்த்தங்களாக இந்த இடத்தில் பள்ளிவாயல் இருந்தது என்;று வாதிட்டு வந்த அதன் தலைவர் அவர்களே ஒரே இரவில் யார் சொன்னது இங்கு பள்ளி இருந்ததென்று இங்கு ஒரு  பள்ளி இருந்ததே கிடையாது என்று தலைகீழாக மாறி நின்றுப் பிரகடனப்படுத்தினார்.

மேற்ப்படி சம்பவங்களிலிருந்து நாம் இவ்வாறான வழக்குகளின் முடிவுகளை பின்வருமாறு வகுத்து நோக்கலாம்

1. வழக்குப் பதிவுடன் அது அப்படியே கைவிட்டு விடப் பட்ட நிலை

2. வழக்குத் தாக்கல் செய்தவரே அதனைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளும் நில

இந்த இரண்டு நிலைகளுள் ஒன்றிற்க்குள் அடைக்கலம் பெற மறுக்கும் பட்ச்சத்தில் அதன் மூன்றாம் நிலையாகிய

3. எதிர் தரப்பினரின் அச்சுறுத்தலுக்கும் அத்துமீறலுக்கும் உள்வாங்கப்படுதல் எனும் நிலைக்குத் தள்ளபபடும்

இந்த மூன்று நிலைகளைத் தாண்டி ஒரு போதும் நியாயம் எனும் நான்காவது நிலைக்குச் செல்லவும் முடியாது ஒரு போதும் நியாயம் பெறவும் முடியாது. இதுதான் இன்றைய நீதித் துறையின்  கசப்பான  வரலாற்றுண்மை.

இந்த மூன்று நிலைகளையும் தாண்டி நியாயம் எனும் நான்காவது நிலைக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால் அதற்க்கு இப்படியான சாதாரணத் துணிச்சல் மட்டும் இருந்து போதாது அதற்க்கென்று பிரத்தியேகமான அசாதாரணத் துணிச்சல் தேவைப்படும்.

அப்போதுதான் தொடர்ந்தும் போராடி நியாயம் பெற முடியும் இன்றேல் மேற்படி மூன்று நிலைகளில் மிக இலகுவான நிலைகளாகிய முதலிரண்டு நிலைகளுள் ஒன்றிற்க்குள் தமது முறைப்பாட்டை அடகு வைத்து விட்டு கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் இன்றைய நீதித் துறையின் யதார்த்தம்.

அமைச்சர் றிஷாட் அவர்களின் வழக்கின் நிலைப்பாடு. 

அமைச்சர் றிஷாட் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இரண்டு பிரதான கோரிக்கைகளைக் கொண்டதாகும்

1. தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்ப்படுதியதற்க்காக 500 மில்லியன் ரூபா மான நஷ்டஈடு வழங்கல் வேண்டும்

2. அல்லது பகிரங்கமாக மன்னிப்புக் கோரல் வேண்டும்.

இந்த இரண்டு நிலைப்பாடுகளைப் பொறுத்தவரை நிச்சயமாக களபொட அத்த ஞானசாரரை ஒரு போதும் இதற்க்குள் உட்ப்படுத்த முடியாது என்பது தௌ;ளத் தெளிவு.

ஆகவேதான் அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நான் மேலே கூறிய மூன்று நிலைகளாகிய

1. முதலாம் நிலைக்குள் புகுந்து பத்துடன் பதின் ஒன்றாகவே இருக்கும் 

2. அல்லது இரண்டாம் நிலைக்குள்ளாகி அதிலிருந்து அவர் வாபஸ் பெற வேண்டும் 

3. இல்லை என்றால் மூன்றாம் நிலையாகிய பாசிச பொதுபள சேனாவினர்களின் கடுமையானத் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும்  ஆளாக்கப்படக் கூடும்.

இந்த மூன்று நிலைகளைத் தாண்டி நியாயம் எனும் நான்காம் நிலையை அடைவதென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.

எனவே அவர் மேற்படி இந்த மூன்று நிலைகளுள் எந்த நிலைக்கு  முககொடுக்க வேண்டி ஏற்ப்பட்டாலும் அது அவருக்கும் மட்டும் பாதிப்பை ஏற்ப்படுத்தாது மாறாக அவர் சார்திருக்கும் சமூகத்திற்கும் சேர்த்தத்தான் அது பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற காரணத்தினால்தான் அவரை அவ்வாறானதொரு வழக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தொடரத் தேவை இல்லை என்று நாம்  அவருக்கு ஆலோசனை வழங்கி இருந்தோம்.

அத்துடள் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது முன்னோக்கிச் செல்ல வேண்டுமகவிருந்தால் அதற்க்கு நாம் மேலே கூறிய மூன்றாம் நிலையைச் சமாளிப்பதற்க்கு அவருக்கு அதிகபட்ச்சப் பாதுகாப்புத் தேவைப்படும் ஆதலால்தான் அவர் வழக்குத் தொடர்வதாக இருந்தால் முதலாவதாக அவரதுப் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி இருந்தோம்.

என்றாலும் அமைச்சர் அவர்களின் வழக்கு மேற்கூறப்பட்ட எந்த நிலைக்குள் செல்கின்றதென்றுப்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

முனாப் நுபார்தீன்.


நபித் தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்!

நபித் தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்!

திங்கள், 26 மே, 2014

நபித் தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்.

நபித் தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்.

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்-குர்ஆன் :9 :118)

மேற்படி இறைவசனம் தபூக் யுத்தத்தின் போது அதில் எவ்வித காரணமும் இன்றி கலந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக நபி (ஸல்)  அவர்களால் சமூகப் பகிஷ்கரிப்புச் செய்யப்பட்டு பிறகு அல்லாஹ்வால் மன்னிப்பழிக்கப்பட்ட உண்மையாளர்களான மூன்று நபித்தோழர்களைப் பற்றி அருளப்பட்ட வசனமாகும்.

தபூக் யுத்தத்தின் போது அதிகமான நபித் தோழர்கள் யுத்தத்திற்க்குச் செல்லாது இருந்து விட்டார்கள் அவர்களுள் நயவஞ்சகர்கள் அல்லாஹ்வால் சலுகை அளிக்கப்பட்ட பலவீனர்கள்; மற்றும் இயலாதவர்கள்; போன்றோர் அடங்குவர். 

அவ்வாறு யுத்தத்திற்க்குச் செல்லாது இருந்தவர்களுள் மேற்கூறப்பட்ட இந்த மூன்று நிலகளுக்கும் அப்பாற்ப்பட்ட தங்களது கவனக்குறைவால் போரில் கலந்து கொள்ள முடியாது போன  கஃப் இபுனு  மாலிக் முராரா பின் ரபீஆ அல்-ஆமிரிய்யீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாகிபீ ஆகிய மூன்று நபித்தோழர்களும்; இருந்தனர். 

நபி (ஸல்)  அவர்கள் யுத்தத்திலிருந்து திரும்பி வந்து வழமை போல் பள்ளிவாயிலுக்குச் சென்று முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பின்னர் மக்களைச் சந்திப்பதற்காக பள்ளிவாயலில் அமர்ந்தார்கள். அப்போது சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட நயவஞ்சகர்கள்; ஒவ்வொருவராக வந்து நபி (ஸல்)அவர்களிடம் தாங்கள் யுத்தத்திற்க்கு வர முடியாது போனதை நியாயப்படுத்திப் பொய்யான காரணங்களைச் சத்தியம் செய்து கூறி நபி (ஸல்) அவர்களைத் திருப்த்திப் படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வெளிப்படையில் அவர்கள் கூறிய அக்காரணங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய உண்மை நிலையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு அவர்களை மன்னித்து விட்டார்கள்.

கஃப் இபுனு மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் : 
இப்போது எனது முறை வந்தது நான் நபி (ஸல்)  அவர்கள்  முன் சென்று ஸலாம் கூறினேன். அப்போது நபி (ஸல்)  அவர்கள்; என்னை நோக்கி கோபம் கலந்தபடி புன்னகைத்து விட்டு உம்மைப் போரில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது எது என்று கேட்டார்கள்;. அதற்க்கு நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எவரேனும் ஒரு உலகாதாயவாதியின் முன்னால் இருந்திருந்தால  எனது வாதத்திறமையால் ஏதாவதொரு பொய்யைக் கூறி அவரைத் திருப்திப் படுத்தியிருப்பேன். என்றாலும் உங்களிடம் ஏதாவது பொய்யைக் கூறி உங்களைச் திருப்த்திப்படுத்தி விட்டாலும் அல்லாஹ் நிச்சயம்  என்னைப் பற்றி அதிருப்தி கொள்ளச் செய்து விடுவான்.

எனவே உண்மையைக் கூறி விட்டால் நீங்கள் கோபமடைந்தாலும் சரி அல்லாஹ் எனக்கு மன்னிப்பு பெறுவதற்கான வழி எதனையாவது தோற்றுவித்து விடுவான் என்று நான் நம்புகிறேன். உண்மையில் என்னிடம் உங்கள் முன் சொல்வதற்க்குரிய காரணம் எதுவுமில்லை. நான் போருக்குச் செல்ல சக்தியனைத்தையும் பெற்றிருந்தேன் என்று கூறினேன். 

அப்போது நபி (ஸல்)  அவர்கள்;; இவர் உண்மையைச் சொன்னார் என்று கூறிவிட்டு என்னை நோக்கி எழுந்திருப்பீராக அல்லாஹ் உமது விடயத்தில் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவும்; என்று கூறினார்கள். நான் எழுந்து என் கோத்திரத்தாரிடம் சென்று அமர்ந்தேன். என்னைப் போன்றே இன்னும் முராரா பின் ரபீஆ அல்-ஆமிரிய்யீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாகிபீ ஆகிய இருவரும் நான் கூறியது போன்றே உண்மையான பதிலைக் கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்)  அவர்கள் எங்கள் மூவருடனும் யாரும் பேசக் கூடாது என்று மக்களுக்குக்  கட்டளையிட்டார்கள். மற்ற இருவரும் வீட்டிலேயே அமர்ந்து விட்டார்கள். ஆனால் நான் வெளியே சென்று வந்தேன். ஜமாத்துடன் தொழுகையை நிறைவேற்றி வந்தேன். கடைவீதிகளில்; சுற்றித் திரிந்து வந்தேன். ஆனால் எவரும் என்னுடன் பேசுவதில்லை. இந்த பூமியே சுருங்கி விட்டது போன்றும் இங்கு நான் அந்நியனாய் இருப்பது போன்றும் இங்கு என்னை அறிந்தவர் எவருமேயில்லை என்பது போன்றும் உணர்ந்தேன்.

தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று நபி (ஸல்)  அவர்களுககு ஸலாம் கூறுவேன் பிறகு நபி (ஸல்)  அவர்களின் உதடுகள் பதில் சொல்ல அசைகின்றனவா? என்று பார்த்துக் கொண்டு இருப்பேன்;. நான் தனியாகத் தொழுகையை நிறைவேற்றும் போது நபி (ஸல்)  அவர்கள் என்னை எப்படிப் பார்க்கின்றார்கள் என்று அறிய தொழுகையில் மறைமுகமாக கண்ணை உயர்த்தி நபி (ஸல்)  அவர்களைப் பார்ப்பேன். ஆனால் நபி (ஸல்)  அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது என்னைப் பார்ப்பார்கள். நான் ஸலாம் சொல்லி முடித்தவுடன் என்னை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்வார்கள்.

ஓரு நாள் நான் மிகவும் பயந்து போய் என் ஒன்று விட்ட சகோதரரும் என் பால்ய நண்பருமான அபூகதாதா  அவர்களிடம் சென்றேன். அவர்களுடைய தோட்டச் சுவரின் மீது ஏறி நின்று கொண்டு அவர்களுக்குச் ஸலாம் கூறினேன். ஆனால் அவரோ ஸலாமுக்குப் பதில் கூறவில்லை.

நான் மனவேதனையுடன் கேட்டேன்: அபூகதாதாவே! இறைவன் மீது ஆணையிட்டு நான் கேட்கின்றேன். நான் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பு வைத்திருக்கவில்லையா? அவர் மௌனமாயிருந்து விட்டார். நான் மீண்டும் வினவினேன். அவர் மீண்டும் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது முறை கேட்ட போது அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே நன்கறிவார்கள் என்று மட்டுமே கூறினார். இதனைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. நான் சுவரிலிருந்து கீழிறங்கி விட்டேன்.

இந்த நாட்களில் நான் ஒரு முறை கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது சிரியா நாட்டு பிறஜை ஒருவன் மன்னர் கஸான் எழுதியனுப்பிய கடிதம் ஒன்றை என்னிடத்தில் கொடுத்தான். நான் அதனைத் திறந்து படித்தேன். அதில்  உமது தலைவர் உம்மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன். நீர் இழிவான மனிதரல்லர். நீர் வீணாக்கப்பட வேண்டியவரல்லர். என்னிடம் வந்து விடுங்கள். நான் உங்களைக் கண்ணியப்படுத்துவேன் என்று எழுதப்பட்டிருந்தது. நான் இதுவும் ஒரு சோதனைதான் என்று கூறி அப்பொழுதே அந்தக் கடிதத்தை அடுப்பில் எரித்து விட்டேன்.

இவ்வாறு நாற்பது நாட்கள் நகர்ந்தன. அதற்குள் நபி (ஸல்)  அவர்கள் உமது மனைவியை விட்டு விலகியிருங்கள் என்று ஆணையிட்டார்கள். நான் அவளைத் தலாக் தந்து விடவா? என்று வினவினேன். அதற்குää இல்லைää நீர் உமது மனைவியை விட்டு ஒதுங்கியருந்தால் போதும்| என்ற கட்டளையை அனுப்பி வைத்தார்கள்.

நான் என் மனைவியை அல்லாஹ் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திரு! என்று கூறி அவளது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டேன்.

ஐம்பதாவது நாள் வைகறைத் தொழுகைக்குப் பின் என் வீட்டுக் கூரை மீது அமர்ந்திருந்தேன். என் வாழ்வைக் குறித்து எனக்குள் நானே சலித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் ஒருவர்  உமக்கு வாழ்த்துக்கள்ää கஅப் பின் மாலிக்கே! என்று கூறினார். இதனைக் கேட்டவுடன் சஜ்தாவில் விழுந்து விட்டேன்! என்னை மன்னிக்கும்படி கட்டளை வந்து விட்டது என்று அறிந்து கொண்டேன். மக்கள் திரள் திரளாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை முந்திக் கொண்டு வந்து என்னை வாழ்த்தினார்கள்; உம்முடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் உமக்கு வாழ்த்துக்கள்; என்று கூறிய வண்ணமிருந்தார்கள்.

நான் எழுந்து நேராக மஸ்ஜித் நபவியை நோக்கிச் சென்றேன். நபி (ஸல்)  அவர்களின் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் ஸலாம் கூறியவுடன்ää உமக்கு என் வாழ்த்துக்கள்! இது உம் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த நாள் என்று கூறினார்கள். நான் இந்த மன்னிப்பு நபி (ஸல்) அவர்களின் தரப்பிலிருந்தா? அல்லது இறைவனின் தரப்பிலிருந்தா? என்று வினவினேன்.

அதற்க்கு நபி (ஸல்)  அவர்கள் இது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மன்னிப்பு| என்று கூறி இந்த பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.(நூல் : முஸ்லிம்)

மேற்படி இந்த சம்பவத்திலிருந்து எமக்குப் பல படிப்பினைகளும் முன்மாதிரிகளும் காணக்கிடக்கின்றன.

நயவஞ்சகர்களாகவே இருந்தாலும் அவர்களின் அந்தரங்கம் பற்றிப் பார்க்காது அவர்களின் வெளிப்படையை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்

உண்மையாளர்கள் ஒரு போதும் கைவிடப்படமாட்டார்கள்.

குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட்டு விட்டால் அதன் பிறகு அவர் குற்றவுணர்வுடன் பார்க்கப்படக் கூடாது.

குற்றமிழைத்தவர் மன்னிக்கப்பட்டு விட்டால் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நமது சகோதரத்துவத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்

தலைமைத்துவத்திற்க்கு அணைவரும் முற்றுமுழுதாகக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுதல் வேண்டும்

எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டக் கூடாது.

எந்நிலையிலும் எப்பேர்ப்பட்ட ஆசைவார்த்தைகளுக்கும் விலை போய் விடக் கூடாது.

அல்லாஹ்வின் மன்னிப்பின் மீது ஆளமான உறுதி கொண்டிருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி வரும் வரை எப்படிப்பட்ட கஷ்டங்களையும் பொறுமையுடன் எதிர் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் புறப்பட வேண்டிய கட்டாயமான நேரத்தில் தவிர்க்க முடியாத காரணம் எதுவும் இல்லாது அதில் பங்கேற்க்காது இருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு இதனை இன்னும் ஆழமாக ஆராய்பவர்கள் இன்னும் அதிகமானப் படிப்பினைகளையும் முன்மாதிரிகளையும் கண்டு கொள்வார்கள் என்பது திண்ணம்.

முனாப் நுபார்தீன்

SLTJ அப்துர் ராசிக் மற்றும் கலபொட அத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரது வழக்கும் நமது நிலைப்பாடும்.

SLTJ அப்துர் ராசிக் மற்றும் கலபொட அத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரது வழக்கும் நமது நிலைப்பாடும்.

சகோதரர் அப்துர் ராசிக் மற்றும் களபொட அத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரதும் மத நிந்தனைத் தொடர்பான வழக்கும் நமது நிலைப்பாடும்.

அன்புடையீ
அஸ்ஸலாமு அலைக்கும்
தாங்களின் பாராட்டுக்கும் அறிவுரை ஆலோசனைகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் அத்துடன் தாங்களின் வேண்டுதலுக்கு இணங்க நீதி மன்றம் தொடர்பான விமர்சனங்களைத் தவிர்த்துள்ளேன்அல்லாஹ் நம் அனைவரையும் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் நன்மையான கருமங்களில் உதவியாளர்களாக ஆக்கி வைப்பானாக.

சகோதரர் அப்துர் ராசிக் மற்றும் களபொட அத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரதும் மத நிந்தனைத் தொடர்பான வழக்கும்  நமது நிலைப்பாடும்.

சுமார் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் நிகழ்தப்பட்ட ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2014 -04-26 ம் திகதி ஹெலஉருமய எனும் கட்ச்சியினரால்   ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறே பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் கடந்த 2014-04-12 ம் திகதி கொம்பனி வீதி காவல் நிலைத்திற்க்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் புனித அல்-குரு;ஆனை பகிரங்கமாக மனமுறண்டாக அவமதித்துப் பேசினார் இதன் மூலம் இஸ்லாத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவொன்று   கொம்பனி வீதி காவல் நிலைத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்கள்.

மேற்படி இருவரது செயற்க்களும் மத நிந்தனை என்று பார்க்கின்ற போது ஒரே விதமானக் குற்றத்தையே செய்திருக்கின்றார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

அத்துடன் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களும் தாம் நிப்போன் ஹோட்டலில் ஏற்ப்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அங்கு அத்து மீறிப் பிரவேசித்து குழப்பம் விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறைப்பாடும் செய்திருந்தார்.

இந்நிலையில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 06-05-2014 ம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்பட்டது 

அவ்வேளை விசாரனை மிகவும் கடுமையாகக் கையாளப்பட்டிருந்ததுடன் பின்வரும் 

1. பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணை செலுத்தல் வேண்டும்

2. தலா பத்து இலட்ச்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பினைகள் நிறுத்தப்படல் வேண்டும்

3. பிரதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காவல் நிலையத்திற்க்குச் சென்று கையொப்பம் வைத்தல் வேண்டும் 

4. அத்துடன் அவரதுக் கடவுச் சீட்டு நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

எனும் நிபந்தனைகளின் பேரில் கண்டித்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது நாம் அறிந்ததே

அவ்வாறே மேற்படி வழக்கின் இரண்டாம் கட்ட விசாரனையும் கடந்த 20-05-2014 ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்த இரண்டாம் கட்ட விசாரனை பற்றியும் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தகவல்களையே வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சில ஊடகங்கள் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் மகாநாயக்கர்களிடம் மன்னிப்புக் கேட்க்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரம் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 05-05-2014 ம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்பட்டது.

என்றாலும் இந்த வழக்கு பற்றி பல்வேறு ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தெளிவில்லாத இருவிதமான தகவல்களை வெளியிட்டிருந்தன.

சில உடகங்கள் அது  பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராhக ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பது போன்ற கருத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இன்னும் சில ஊடகங்கள் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகள் தொடர்பானது என்பது போன்ற கருத்திலும் செய்திகள் வெளியிட்டிருந்தன.

எது எப்படி இருந்தாலும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரனை எவ்வித காரசாரமும்; இல்லாது கையாளப்பட்டதுடன்; இரண்டு பிக்குகள் உட்பட மொத்தம் அறுவர் பின்வரும் 

1. ஒரு இலட்ச்சம் ரூபா சரீரப் பினை நிறுத்தப்படல் வேண்டும்

எனும் ஒரேயொரு நிபந்தனையுடன் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டார்கள்; 

இந்த இரு வகையான தீர்ப்புக்களையும் பார்க்கும் போது அது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடைய வழக்காகத்தான் இருக்க முடியும் எனபதே நமது நிலைப்பாடாகும்

அவ்வாறின்றின்றி ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகளும்; குறித்த ஒரே சம்பவத்துடன் தொடர்புடையதாக இருப்பதனால் அவையிரண்டு முறைப்பாடுகளும் ஒரே வழக்காகக் கோர்வைச் செய்யப்பட்டது என்று கூறினால் அந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல. அதை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

ஏனெனில் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்திற்க்கும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை நிந்தித்ததற்க்கும் எவ்விதமான சம்மந்தமும் கிடையாது காரணம் நிப்பொன் ஹோட்டல் சம்பவம் ஒரு அமைப்புடன் சம்மந்தப்பட்டது இஸ்லாத்தை நிந்தித்தல் என்பது ஒரு மதத்துடனும் அந்த மதம் சார்ந்த சமூகத்துடனும் சம்மந்தப்பட்டதாகும் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்க்கும் எவ்விதமான குறிப்பிடத்தக்க  உறவும் கிடையாது என்பதுவே யதார்த்தம்.

அப்படித்தான் இரண்டு முறைப்பாடுகளுக்குமான வழக்குத்தான் என்றிருந்திருந்தால் சிறீ லஹ்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைவிட அதிகப்படியான நிபந்தனைகள் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும்;. 

அவ்வாறு இல்லாவிட்டாலும் குறைந்த படச்சம் அரசியல் யாப்பின் அத்தியாயம் 3- 12 (1) ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் முன்  ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் : அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்க்கு உரித்துடையவர்கள். எனும் சரத்திற்க்கு அமைய இரு தரப்புக்கும் சரிசமனாகவாவது தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும்

ஏனெனில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பௌத்த மதத்தை நிந்திக்க வேண்டும் என்ற மனோ நிலையில் அவ்வாறு உரை நிகழ்த்தவுமில்லை அது தவறுதலாக எதிர்பாராவிதமாக நிகழ்ந்த ஒரு தவறு என்று கூறி சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே அதற்காக மானசீகமான முறையில் தனது வருத்தத்தையும்  தெரித்வித்திருந்ததாகக் கூறியிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆகவே எதிர்பாராவிதமாக நிகழ்ந்த அதற்காக மானசீகமான முறையில் வருத்தமும் தெரிவிக்கப்பட்ட தவறுக்கே இந்த அளவு கடுமையான நிபந்தனைகள் என்றால். வேண்டும் என்று மனமுறண்டாக இஸ்லாத்தை அவமதிக்க வேண்டும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் அதன் மூலம் ஒரு இனக்கலவரத்தை உண்டுபன்னி அந்த இனவாதத் தீயில் குளிர்காய  வேண்டும் என்ற மனோ நிலையில் கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பல் வேறு பாத்திரங்களில் பல்வேறு இடங்களில் ஊடகங்கள் காவல் துறையினர்களின் கண் எதிரே பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் மிகக்கீழ்தரமாகவும் இனவாதத்தீயை மூட்டி வரும் பொது பள சேனா அமைப்புக்கும் மற்றும் அதன் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரருக்கும் எந்த அளவு அதிகபட்ச்ச நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை எம்மால் ஊகிக்க முடிகின்றது.

அத்துடன் ஜாதிக பள சேனாவின் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்தில் பொது பள சேனாவினரால் அரசியல் யாப்பின் அத்தியாயம் இரண்டின் 14 வது சரத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்க்கான சுதந்திரம் போன்ற பல சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன என்பதுவும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

அப்படியாயின் மிக்கொடூரமான பல குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு முறைப்பாட்டுகளுடன் சம்மந்தப்பட அந்த வழக்கு எந்த அளவு கடுமையாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.

எனவே மேற்படி கொடூரமான பலகுற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டவரான ஞானசாரவுக்கு மிகச்சாதாதாரணமான நிபந்தனைகளும் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் தவறுதலாக ஏற்பட்ட குற்றத்திற்கு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த வழக்கிற்க்கும் முஸ்லிம்கள்  சார்பாக 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை இது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் சமமந்தப்பட்ட வழக்குத்தான்  என்பது உறுதியாகிள்றது.

எனவே நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களும்; வழக்கறிஞர்களும் இன்னும் காலம் தாழ்த்தாது மேற்படி ஞானசாரவுக்கெதிரான வழக்கிற்க்கு முடியுமானவரை அழுத்தங்களைக் கொடுத்து அவரையும் முழு முஸ்லிம் சமூகத்திடமும் மன்னிப்புக் கோர வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நம் சமூகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன் உரியவர்கள் முன்வரத் தவறும் பட்ச்சத்தில் நாம் களத்தில் இறங்க வேண்டி வருவது தவிர்க்க முடியாததே என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் .


முனாப் நுபார்தீன்


சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு நீதி மன்றத்தால் வழங்கப்படத் தீர்ப்புக்கள் நியாயமானதா?.

சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு நீதி மன்றத்தால் வழங்கப்படத் தீர்ப்புக்கள் நியாயமானதா?.

சுமார் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் நிகழ்தப்பட்ட ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2014 -04-26 ம் திகதி ஹெலஉருமய எனும் கட்ச்சியினரால்   ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறே பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் கடந்த 2014-04-12 ம் திகதி கொம்பனி வீதி காவல் நிலைத்திற்க்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் புனித அல்-குரு;ஆனை பகிரங்கமாக மனமுறண்டாக அவமதித்துப் பேசினார் இதன் மூலம் இஸ்லாத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவொன்று   கொம்பனி வீதி காவல் நிலைத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்கள்.

அத்துடன் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களும் தாம் நிப்போன் ஹோட்டலில் ஏற்ப்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அங்கு அத்து மீறிப் பிரவேசித்து குழப்பம் விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறைப்பாடும் செய்திருந்தார்.

இந்நிலையில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 06-05-2014 ம் திகதியன்று எடுத்துக் கொள்பட்டது 

விசாரனை மிகவும் கடுமையாகக் கையாளப்பட்டிருந்ததுடன் பின்வரும் 
1. பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணை செலுத்தல் வேண்டும்
2. தலா பத்து இலட்ச்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பினைகள் நிறுத்தப்படல் வேண்டும்
3. பிரதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காவல் நிலையத்திற்க்குச் சென்று கையொப்பம் வைத்தல் வேண்டும் 
4. அத்துடன் அவரதுக் கடவுச் சீட்டு நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

எனும் நிபந்தனைகளின் பேரில் கண்டித்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது நாம் அறிந்ததே

அவ்வாறே மேற்படி வழக்கின் இரண்டாம் கட்ட விசாரனையும் கடந்த 20-05-2014 ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்த இரண்டாம் கட்ட விசாரனை பற்றியும் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தகவல்களையே வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சில ஊடகங்கள் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் மகாநாயக்கர்களிடம் மன்னிப்புக் கேட்க்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரம் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 05-05-2014 ம் திகதியன்று எடுத்துக் கொள்பட்டது.

என்றாலும் இந்த வழக்கு பற்றி பல்வேறுபட்ட ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தெளிவில்லாத இருவிதமான தகவல்களை வெளியிட்டிருந்தன.

சில உடகங்கள் அது  பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராhக ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பது போன்ற கருத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இன்னும் சில ஊடகங்கள் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகள் தொடர்பானது என்பது போன்ற கருத்திலும் செய்திகள் வெளியிட்டிருந்தன.

எது எப்படி இருந்தாலும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரனை எவ்வித காரசாரமும்; இல்லாது கையாளப்பட்டதுடன்; இரண்டு பிக்குகள் உட்பட மொத்தம் அறுவர் வெறும் ஒரு இலட்ச்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்; என்பதிலிருந்து அது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடைய வழக்காகத்தான் இருக்க முடியும் என்றே கருத வேண்டியுள்ளது.

அவ்வாறின்றின்றி ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகளும்; குறித்த ஒரே சம்பவத்துடன் தொடர்புடையதாக இருப்பதனால் அவையிரண்டு முறைப்பாடுகளும் ஒரே வழக்காகக் கோர்வைச் செய்யப்பட்டது என்று கூறினால் அந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல.

ஏனெனில் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்திற்க்கும் இஸ்லாத்தை நிந்தித்ததற்க்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது காரணம் நிப்பொன் ஹோட்டல் சம்பவம் ஒரு அமைப்புடன் சம்மந்தப்பட்டது இஸ்லாத்தை நிந்தித்தல் என்பது ஒரு சமூகத்துடன் சம்மந்தப்பட்டதாகும் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்க்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

அப்படித்தான் இரண்டு முறைப்பாடுகளுக்குமான வழக்குத்தான் என்று வைத்தக் கொண்டாலும் இங்கு வழங்கப்பட்டத் தீர்ப்புக்களில் ஏன் இந்த விதியாசம்?  ஏன் இந்த பாகுபாடு? இது நியாயமா? இவ்வாறான நீதி மன்றங்களை முஸ்லிம்கள் தொடர்ந்தும் நம்பத்தான் வேண்டுமா? எனும் கேள்விகள் எழுகின்றன.

சிறீ லஹ்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைவிட அதிகப்படியான நிபந்தனைகள் அல்லவா பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும் குறைந்த படச்சம் இரு தரப்புக்கும் சரிசமனாகவாவது தீர்ப்புக்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா.

ஏனெனில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பௌத்த மதத்தை நிந்திக்க வேண்டும் என்ற மனோ நிலையில் அவ்வாறு உரை நிகழ்த்தவுமில்லை அது தவறுதலாக தடுமாற்றமாக நிகழ்ந்த ஒரு தவறு என்று கூறி சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே அதற்காக மானசீகமான முறையில் தனது வருத்தத்தையும்  தெரித்வித்திருந்ததாகக் கூறியிருந்தார்..

அவ்வாறு எதிர்பாராவிதமாக நிகழ்ந்த அதற்காக மானசீகமான முறையில் வருத்தமும் தெரிவிக்கப்பட்ட தவறுக்கே இந்த அளவு கடுமையான நிபந்தனைகள் என்றால். வேண்டும் என்று மனமுறண்டாக இஸ்லாத்தை அவமதிக்க வேண்டும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் அதன் மூலம் ஒரு இனக்கலவரத்தை உண்டுபன்னி அந்த இனவாதத் தீயில் குளிர்காய  வேண்டும் என்ற மனோ நிலையில் கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பல் வேறு பாத்திரங்களில் பல்வேறு இடங்களில் ஊடகங்கள் காவல் துறையினர்களின் கண் எதிரே பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் மிகக்கீழ்தரமாகவும் இனவாதத்தீயை மூட்டி வரும் பொது பள சேனா அமைப்புக்கும் மற்றும் அதன் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரருக்கும் எந்த அளவு அதிகபட்ச்ச நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அத்துடன் ஜாதிக பள சேனாவின் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்தில் பொது பள சேனாவினரால் அரசியல் யாப்பின் அத்தியாயம் இரண்டின் 14 வது சரத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்க்கான சுதந்திரம் போன்ற பல சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன என்பதுவும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

அப்படியாயின் மிக்கொடூரமான பல குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு முறைப்பாட்டுகளுடன் சம்மந்தப்பட அந்த வழக்கு எந்த அளவு கடுமையாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.

எனவே மேற்படி கொடூரமான பலகுற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப் பட்டவரான ஞானசாரவுக்கு மிகச்சாதாதாரணமான நிபந்தனைகளும் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் தவறுதலாக ஏற்பட்ட குற்றத்திஙற்கு கடுமையான நிபந்தனைகளும் விதித்து நீதி மன்றத்தால் வழங்கப்படத் தீர்ப்பு அநியாயமானதும் அபத்தமானதுமாகும் என்பதே எனது கருத்தாகும்.

அவ்வாறின்றி ஞானசாரவுக்கு எதிரான அந்த வழக்கிற்க்கும்; இஸ்லாத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கும் எவ்வித சம்மந்தமம் இல்லை அது ஜாதிக பள சேனாவின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்காளால் செய்யப்பட்ட முறைப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடைய வழக்குத்தான் என்று நீதி மன்றம் கூறுமாக இருந்தால் நாம் நீதி மன்றத்திடம் கேட்க்குகின்றோம் அப்படி என்றால் ஞானசாரர் இஸ்லாத்தை நிந்தித்தது தொடர்பான முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது? அதற்க்கான விசாரனை எப்போது?

எனவே நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களும்; வழக்கறிஞர்களும் மேற்படி ஞானசாரவுக்கெதிரான வழக்கிற்க்கு முடியுமானவரை அழுத்தங்களைக் கொடுத்து அவரையும் முழு முஸ்லிம் சமூகத்திடமும் மன்னிப்புக் கோர வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நம் சமூகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன் உரியவர்கள் முன்வரத் தவறும் பட்ச்சத்தில் நாம் களத்தில் இறங்க வேண்டி வருவது தவிர்க்க முடியாததே என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன் .

முனாப் நுபார்தீன்


ஞாயிறு, 25 மே, 2014

நடுநிலையும் சகோதரத்துவமும்.

நடுநிலையும் சகோதரத்துவமும்.

நடுநிலைச் சமுதாயம்

இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸ_ல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள், யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி (வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன்,  நிகரற்ற அன்புடையவன். (அல்-குர்ஆன் :2:143)

இந்த வசனத்தின் மூலம் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களாகிய நம்மை வல்ல அல்லாஹ் நமக்கு முன் அனுப்பப்பட்ட சமுதாயங்களுக்குத் தீர்ப்பு வழங்கும் நடு நிலையாளர்களாக மத்தியஸ்த்தர்களாக  ஆக்கியிருக்கின்றான் என்று குறிப்பிடுகின்றான். இதன் பொருள் நாம் நமக்கு முன் சென்ற சமுதாயத்தினர்களுக்கு புனித அல்-குர்ஆனைக் கொண்டு தீர்ப்பு வழங்கக் கூடிய மத்தியஸ்த்தர்களாவோம் என்கபதாகும். 

இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாளை மறுமையில் நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள் அப்போது அவர்கள் இது ஆஜராகி விட்டேன் என் இறiவா என்று கூறுவார்கள் அப்போது அவர்களிடம் (உமக்கு அறிவிக்கப்பட்டதை உமது சமூகத்தினர்களுக்கு) எத்தி வைத்தீரா? என்று கேட்க்கப்படும் அதற்க்கு அவர்கள் ஆம் என்று கூறுவார்கள் அப்போது (அவர்களுடைய சமூகத்திடம்) இவர் உங்களுக்கு எத்தி வைத்தாரா? என்று கேட்க்கப்படும் அதற்க்கு அவர்கள் இல்லை எம்மிடம் எந்தவொரு எச்சரிக்கையாளரும் வரவில்லை என்று கூறுவார்கள். அப்போது (நபி நூஹ் (அலை) அவர்களிடம்) உமக்கு யாரும் சாட்ச்சிகள் உண்டா என்று கேட்கப்படும் அதற்க்கு (நபி நூஹ் (அலை) அவர்ககள்) நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களது உம்மத்தினர்களும் என்று கூறுவார்கள் அப்போது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்கள் அழைக்கப்படு வினவப்படுவார்கள் அதற்க்கு அவர்கள் அவர் எத்தி வைத்தார் என்று சாட்ச்சி கூறுவார்கள். நூல் : புஹாரி)

இன்னும் சில அறிவிப்புக்களில் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களாகிய நாம்  அவ்வாறு சாட்ச்சி கூறும் போது உங்களுக்க எப்படித் தெரியும் என்று கேட்கப்படும் அதற்க்கு நாம் எமது தூதர் (ஸல்) அவர்கள் எமக்க ஒரு வேத்தினைப் பெற்றுத்தந்திருந்தார்கள் அதில் நாம் படித்தோம் எனவே அதனை நாம் முழு மனதுடன் விசுவாசித்தோம் என்று கூறுவதாகப் பதிவாகியுள்ளது.

எனவே அல்-குர்-ஆனைப் படித்து அதன் ஊடாக எமக்க முன் சென்ற சமூகங்களுக்கே நடுநிலையாளர்களாக மத்தியஸ்த்தர்களாக இருக்கும் நாம் எம்முடன் வாழுகின்ற மக்களுடன் எந்தஅளவு நடுநிலையைப் பேனுவது கட்டாயம் என்பது பற்றி நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

நபி (ஸல்) அவர்களின்  உம்மத்தின் மூன்று வகையினர்கள் .

1. தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள்
2. நடுநிலையாக நடந்து கொண்டவர்கள்
3. நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்கள்

அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி;ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்-குர்ஆன் :35: 31-32)

இந்த மூன்று வகையினர்களையும் நாம் பின்வருமாறு விளங்கலாம்.

1. தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள் : இறைநிராகரிப்பிலிருந்தும் இணைவைப்பிலிருந்தும் தம்மை முழுமையாக விடுவித்துக் கொண்டவர்கள் என்றாலும்; தமது பலவீனங்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்; காரணமாக அனைத்து விதமான பாவங்களிலிலும் ஈடுபடக்கூடியவர்கள். 

2. நடுநிலையாக நடந்து கொண்டவர்கள்; : இறை நிராகரிப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் அனைத்து விதமான பாவ காரியங்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பாதச் சிலத் தகாதச் செயல்களைச்; செய்யக்கூடியவர்கள்.

3. நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்கள்; : இறை நிராகரிப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் அனைத்து விதமான பாவ காரியங்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டதுடன் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பாத எந்தவொருச் செயலிலும் ஈடுபடாதவர்கள்.

மேற்கூறப்பட்ட மூவகையினர்களும் சுவர்க்கம் பிரவேசிக்கக் கூடியவர்களே 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்கள் : அவர்கள் எவ்வித விசாரனையுமின்றி சுவர்க்கம் பிரவேசிப்பவர்களாவர்

2. நடுநிலையாக நடந்து கொண்டவர்கள் : அவர்கள் இலகுவாக விசாரனை செய்யப்பட்டு பின்னர் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களாவர்

3. தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள் : அவர்கள் மஹ்ஷர் நாள் முழுவதும் விசாரனைக்குட்படுத்தப்பட்டு அதன் பிறகு அல்லாஹ்வின் அளப்பெரிய அருளின் காரணமாக மன்னிக்கப்பட்டு இறுதியாகச் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களாவர்

எனவே அவர்கள் செய்கின்ற பாவமான கருமங்களினாலும் விரும்பத் தகாத செயல்களினாலும் அவர்கள் ஒரு போதும் நம் சகோதரர்கள் எனும் நிலையிலிருந்து வெளியேறிவிட மாட்டார்கள்.எந்நிலையிலும் அவர்களுடன் நாம் நமது சகோதரத்துவத்தினைப் பேனுவது கடமையாகும்.

சகோதரத்துவத்தின் அளவுகோல்

அல்லாஹ் கூறுகின்றான் : ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்-குர்ஆன் :9:11) 

இதுதான் இஸ்லாம் எமக்குக் கற்றுத்தரும் சகோதரத்துவத்திற்க்கான வரைவிலக்கணமும் அளவுகோலுமாகும் எனவே இந்த வரைவிலக்கணத்தின் பிரகாரம் மேற்கூறப்பட்ட அனைவரும் நமது இஸ்லாமிய சகோதரர்களே.

எனவே அவர்ளால் அறிந்தோ அறியாமலோ நிகழ்கின்ற தவறுகளுக்காகவும் விரும்பத்தகாதச் செயல்களுக்காகவும் அவர்களை பளிப்பதும் விமர்சிப்பதும் மானபங்கப்படுத்துவதும் தரக்குறைவாகப் பேசுவதும் பெரும் பாவமாகும் என்பதை நாம் புரிந்து இவ்வாறான செயல்களிலிருந்து விலகி நமது சகோதரத்துவத்தினை உறுதிச் செயவதற்க்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக. 

முனாப் நுபார்தீன்.

சனி, 24 மே, 2014

அகபுறச் சுத்தத்தின் அவசியம் உணர்வோம்.



அகபுறச் சுத்தத்தின் அவசியம் உணர்வோம்.

இஸ்லாம் எவ்வாறு புறச் சுத்தத்தை வலியுறுத்துகின்றதோ அவ்வாறே அகச் சுத்தத்தையும் கடுமையாகவே வலியுறுத்துகின்றது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் துnhழர்கள் சகிதம் இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்;கள் அப்போ அந்த இரண்டு மண்ணறைவாசிகளும் வேதனைச் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் வேதனைச் செய்யப்படுவது பெரும்பாவங்களுக்காக அன்றி சிறுபாவங்களுக்காவே என்று கூறிவிட்டு இருவருள் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாத காரணத்திற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசித்திரிந்ததன் காரணத்திற்க்காகவுமே  வேதனை செய்யப்படுகின்றார்கள் என்று கூறினார்கள்.

மேற்படி சம்பவத்திலிருந்து ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாது புறச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசியதன் மூலம் அகச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததன் காரணமாகவும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

எம்மில் அனேகர் இந்த இரண்டு வகையான அசுத்தம் பற்றி மிகவும் இலகுவாகவே கருதிக் கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம்.

நண்பர்களே அகம் புறம் ஆகிய இரண்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்ச்சி எடுப்போமாக.

முனாப் நுபார்தீன்

வெள்ளி, 23 மே, 2014

ஒரே வகையான இரண்டு குற்றங்களும் இரு வேறுபட்டத் தீர்ப்புக்களும்

ஒரே வகையான இரண்டு குற்றங்களும் இரு வேறுபட்டத் தீர்ப்புக்களும்

சுமார் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் நிகழ்தப்பட்ட ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2014 -04-26 ம் திகதி ஹெலஉருமய எனும் கட்ச்சியினரால்   ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறே பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் கடந்த 2014-04-12 ம் திகதி கொம்பனி வீதி காவல் நிலைத்திற்க்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் புனித அல்-குரு;ஆனை பகிரங்கமாக மனமுறண்டாக அவமதித்துப் பேசினார் இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவொன்று   கொம்பனி வீதி காவல் நிலைத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்தார்கள்.

சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 06-05-2014 ம் திகதியன்று எடுத்துக் கொள்பட்டது 

விசாரனை மிகவும் கடுமையாகக் கையாளப்பட்டிருந்ததுடன் பின்வரும் 
1. பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணை செலுத்தல் வேண்டும்
2. தலா பத்து இலட்ச்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பினைகள் நிறுத்தப்படல் வேண்டும்
3. பிரதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காவல் நிலையத்திற்க்குச் சென்று கையொப்பம் வைத்தல் வேண்டும் 
4. அத்துடன் அவரதுக் கடவுச் சீட்டு நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
எனும் நிபந்தனைகளின் பேரில் கண்டித்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது நாம் அறிந்ததே

அதே நேரம் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 05-05-2014 ம் திகதியன்று எடுத்துக் கொள்பட்டது.

என்றாலும் இந்த வழக்கு பற்றி பல்வேறுபட்ட ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தெளிவில்லாத இருவிதமான தகவல்களை வெளியிட்டிருந்தன.
சில உடகங்கள் அது  பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராhக ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பது போன்ற கருத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இன்னும் சில ஊடகங்கள் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகள் தொடர்பானது என்பது போன்ற கருத்திலும் செய்திகள் வெளியிட்டிருந்தன.

எது எப்படி இருந்தாலும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரனை எவ்வித காரசாரமும்; இல்லாது கையாளப்பட்டதுடன்; இரண்டு பிக்குகள் உட்பட மொத்தம் அறுவர் வெறும் ஒரு இலட்ச்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்; என்பதிலிருந்து அது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடைய வழக்காகத்தான் இருக்க முடியும் என்றே கருத வேண்டியுள்ளது.

அவ்வாறின்றின்றி ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகளும்; குறித் ஒரே சம்பவத்துடன் தொடர்புடையதாக இருப்பதனால் அவையிரண்டு முறைப்பாடுகளும் ஒரே வழக்காகக் கோர்வைச் செய்யப்பட்டது என்றிருந்தால் வழங்கப்பட்டத் தீர்ப்புக்களில் ஏன் இந்த விதியாசம்?  ஏன் இந்த பாகுபாடு? 

சிறீ லஹ்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைவிட அதிகப்படியான நிபந்தனைகள் அல்லவா பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனெனில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பௌத்த மதத்தை நிந்திக்க வேண்டும் என்ற மனோ நிலையில் அவ்வாறு உரை நிகழ்த்தவுமில்லை அது தவறுதலாக தடுமாற்றமாக நிகழ்ந்த ஒரு தவறு என்று கூறி சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே அதற்காக மன்னிப்பும் கோரியதாகத் தெரித்திருந்தார்.

அவ்வாறு எதிர்பாராவிதமாக நிகழ்ந்த மன்னிப்புக் கேட்க்கப்பட்டத் தவறுக்கே இந்த அளவு கடுமையான நிபந்தனைகள் என்றால்.

வேண்டும் என்று மனமுறண்டாக இஸ்லாத்தை அவமதிக்க வேண்டும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் அதன் மூலம் ஒரு இனக்கலவரத்தை உண்டுபன்னி அந்த இனவாதத் தீயில் குளிர்காய  வேண்டும் என்ற மனோ நிலையில் கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பல் வேறு பாத்திரங்களில் பல்வேறு இடங்களில் ஊடகங்கள் காவல் துறையினர்களின் கண் எதிரே பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் மிகக்கீழ்தரமாகவும் இனவாதத்தீயை மூட்டி வரும் பொது பள சேனா அமைப்புக்கும் மற்றும் அதன் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கும் எந்த அளவு அதிகபட்ச்ச நிபந்தனைகள் விதித்தாலும் அது குறைவானதே.

அத்துடன் ஜாதிக பள சேனாவின் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்தில் பொது பள சேனா அரசியல் யாப்பின் தெ;தியாயம் இரண்டின் 14 வது சரத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்க்கான சுதந்திரம் போன்ற பல சரத்துக்களை மீறப்பட்டுள்ளது என்பதுவும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

இவைகளைக் கேட்ப்பதற்க்கு நம் சமூகத்தில் யாரும் இல்லையா? அல்லது சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் நம் சமூகத்தை விட்டும் வேறானவர்கள் எனும் மனோ நிலையா? ஏன் இந்த குறிகியப் பார்வை?

இன்று அவர்களுக்கு நாளை நமக்கு என்பதை மறந்து விடாதிரப்போம்.

முனாப் நுபார்தீன்

நமது சமூகம் பலமிக்கதொரு சக்தியாக கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம்

நமது சமூகம் பலமிக்கதொரு சக்தியாக கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம்




அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் ஏகன் அல்லாஹ்வின் திருப் பெயரால்

நமது சமூகம் பலமிக்கதொரு சக்தியாக கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம்
الحمد لله الذي وحده والصلاة والسام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن اهتدى بهديه الى يوم الدين - وبعد

பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும்.

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ

இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் இன்றய 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். 

இவ்வாறான இந்த நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரை  ஒருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச் சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது ஒவ்வொரு தனிமனிதனும் இதை தனக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிக அவசியமாகும்.

ஏனெனில்  நமது சமூகம் கமூக, சமய, அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை. 

இந்த வரலாற்றுத் தொடரில் முன்னய காலங்களில் நமது அரசியல் தலைமைகள் எப்படிப்பட்ட சவால்களையும் தனித்து நின்று எதிர்கொள்ளக் கூடிய வகையில்; அன்றய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் களநிலவரமும் ஓரளவேனும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இன்றைய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் களநிலவரமும்; தலைமை, நிறுவாகம், சட்டம், ஒழுங்கு போன்ற அனைத்துப் பகுதிகளிலும்; மிகவும் பாதகமான சூழ்நிலையையே தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் நமது கடந்தகால அரசியல் தலைமைகளை உதாரணம் காட்டி அவர்களால் சாதிக்க முடிந்ததை ஏன் இன்றய நமத அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியாதுள்ளது என்று கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பது ஒரு ஆரோக்யமான அனுகுமுறையாக அமையாது. 
ஏனெனில் இன்றைய இந்த சமூக மற்றும் அரசியல் சூழ்நிலை நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டியதாகவே உருவெடுத்துள்ளது என்பதுவே யதார்த்தமான களநிலவரமாகும்.

எனவே பல தசாப்த்தங்களாக நம் சமூகம் வேண்டி நிற்க்கும் மிக முக்கிய ஒரு விடயமான இந்த சகோதரத்துவம், சமூக ஒற்றுமை, மற்றும் தலைமைத்துவம் ஆகியவை வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இன்று மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினர்களது ஆதங்கமும் ஏக்கமும் எந்த வகையிலேனும்; இவற்றை அடைந்தே தீர வேண்டும் என்பதாகவே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இதன் பிறகும் அது வெறும் பேச்சுப் பொருளாக இருப்பதனை அனுமதிக்க முடியாதுää என்ன வில கொடுத்தேனும் அதனை அடைந்தேத் தீர வேண்டும் என்பதுவே நம் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு முறண்பட்டுக கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103);

எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் “நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து நம் சமூகத்தைப் பலமிக்க ஒரு சமூகமாக் கட்டியெழுப்பி நமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒரே அனியாக நின்று தொடராக முன்னெடுத்துச் செல்வதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கை கோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோ, அவர்களைத்தான் அல்லாஹ் நிச்சயமாக நேசிக்கின்றன். (அல்-குர்ஆன்: 61:4)

ஆகவே நம் சமூகத்தின் சகோதரத்துவத்தினை மீழ்கட்டியெழுப்பி சமூக ஐக்கியத்தினை உறுதிப்படுத்தி அதன் அடித்தளத்தில் நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பலமிக்கதொரு சக்தியாக மாற்றுவதற்க்கு உங்கள் அனைவரதும் பங்களிப்புக்களும் பாரியளவில் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்துடன் இது தொடர்பான கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் மாநாடுகளும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படல் வேண்டும்.

ஆதலால் அதன் முதற்கட்டமாக நமது அனைத்துத் தரப்பு அரசியல் தலைமைகளுடனான கலந்துரையாடலைக் காலதாமதமின்றி எதிர் வரும் புனித ரமழானிற்க்கு முன்னதாக கொழும்பில் நடாத்துவதற்க்குத் தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் எமது நோக்கம் அதனூடாக நாம் அடைந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் இலக்கு அந்த இலக்கை அடைவதற்க்கான எமது செயற்திட்டங்கள் ஆகியவை பின்வருமாறு அமையப் பெறுகின்றன. 

எமது நோக்கு: 

பக்கச் சார்பு இயக்கச் சார்பு மற்றும் கட்ச்சிச் சார்பற்றதும், நேர்மையானதும், தூய்மையானதுமான திறமையும் சுணிச்சலுமிக்கதும் எந்தவொரு சக்த்திக்கும் விலை போய் விடாததும் அல்லாஹ்வைத் தவிர வேறெந்தவொரு சக்த்திக்கும் அஞ்சாத அத்துடன் தூர நோக்குடன் கூடிய சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியதான பொதுவான நடுநிலையானதொரு தலைமையினை அடையாளம் கண்டு ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்துப் பொறுப்புக்களையும் பொறுப்பேற்க்கச் செய்தல்.

எமது இலக்கு : 

இலங்கை வாழ் நமது முஸ்லிம் சமூகத்தை;தை ஆண்மீகம்ää ஈமான்ää இறையச்சம்ää சகோதரத்துவம் ஐக்கியம் ஆண்மீக மற்றும் இலௌகீகக் கல்விப் பொருளாதாரம் அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் கூடிய பலமிக்கதொரு சக்தியாகக் கட்டியெழுப்பப்படுதல்.

எமது செயற்திட்டங்கள்;

1. நாளுக்கு நாள் நலிவடைந்து சென்று கொண்டிருக்கும் நமது சகோதரத்துவத்தினை மீழ் கட்டியெழுப்பும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்

2. சகோதரத்தவத்தினைக் கட்டி எழுப்புவதற்க்குத்; தடையாக இருக்கும் காரணிகள் என்ன என்பது பற்றி இனங்கண்டு அவற்றை முற்றாகக் கழைவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

3. ஒவ்வொரு தனிமனிதன், இயக்கங்கள், அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் முடிந்த வரை நம் சகோதரத்துவத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் அரிக்கைகள் விமர்சனங்கள் போன்ற அத்தனை விதமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்ளும் வகையிலான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல். 

4. இப்பணி அரசியல் தலைவர்களுக்கு அல்லது சமயத் தலைவர்களுக்கு மாத்திரம் கடமையான ஒன்றல்ல. மாறாக  நம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களுக்கும் கடமையாகும் என்பதை அனைவருக்கும் உணரச் செய்தல்.

5. அனைத்து விதமான அரசியல் மற்றும் சமயப் பிரிவுகளுக்கு வெளியே நின்று என்றாலும் அவை அனைத்துத் தரப்பினர்களையும் உள்வாங்கிய வகையிலும் எவ்வித பக்கசார்பும் அற்ற நிலையிலும் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் மட்டும் அனைவர்களையும் ஒன்றிணைத்தல்

6. ஒவ்வொரு தனிமனிதன்;, இயக்கங்கள், அல்லது அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களையும் தங்களுக்குத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணித்து அனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் பொதுவான கொள்கையின் பால் இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருதல்;.

7. அனைத்துத் தரப்பினர்களும் தரத்தினர்களும் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ளும் வகையிலான ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குதல்;.

இவை ஒரு இலகுவான கருமமன்று நம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரதும் உளப்பூர்வமான ஒத்துழைப்பின்றி இது அசாத்தியமே எனவே எமக்கு மத்தியில் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்டத் தலைமைத்துவமும் கட்டி எழுப்பப்பட்டாக வேண்டும் என்பதில் உண்மையாளர்களாக இருப்பவர்கள் மேற்படி எமது முன்னெடுப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குவீர்கள் என்றே நம்புகின்றோம். 

எனவே இது சம்மந்தமான தாங்களின் மேலானக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எமக்கு வழங்குமாறு உரிமையுடனும் அன்புடனும் மிகத்தாழ்மையுடனும் எதிர்பார்கின்றோம்.

முடியாது என்று முயற்ச்சியே செய்யாதிருப்பதைவிட, முயற்ச்சி செய்து முடியாமல் போவது சிறந்ததாகும் என்றே கருதுகின்றோம்;.

இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன் - ஜே. பி.
ஸ்தாபக் தலைவர், பணிப்பாளர்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொடர்புகளுக்கு : aslislamguide@yahoo.com 

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...