புதன், 7 மே, 2014

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் செத்துப் போன பாராளுமன்ற அதிகாரமும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் 

செத்துப் போன பாராளுமன்ற அதிகாரமும்.

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கே அதி கூடிய அதிகாரம் இருக்ந்து வந்தது ஆதலால்தான் நடைமுறையிலுள்ள சட்ட யாப்பில் ஏதாவதொரு மாற்றம் கொண்டுவர தேவை ஏற்படின் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகளைப் பெற வேண்டும். இதுதான் இது காலம் வரைக்கும் நடைமுறையில் இருந்து வந்த அரசியல் பாப்பாகும்.

பாராளுமற்றத்திற்கு இப்படியான அதிகாரம் உண்டு என்பதனால்தான் நாமும் நமது பிரதிநிகளைத் தெரிவு செய்து அனுப்புகின்றோம். மாறாக அவர்கள் தங்களது சுகபோகங்களை மாத்திரம் கவனித்துக் கொண்டு வெறும் ஊமையர்களாக இருந்து பாராளுமன்றத்தை அலங்கரிப்பதற்க்காக அல்ல.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது பாராளுமன்றம் எவ்வித அதிகாரமும் அற்றதாக தூங்கிக்கிடக்கின்றது ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியவாறு சட்டங்களை இயற்றுவதும் அமுல்படுத்துவதுமாக இருக்கின்றது நாட்டின் ஜனாதிபதி அவர்கள்; அவருக்கு தேவைப்பட்ட சட்டங்களை இயற்றிக் கொண்டு அவர் ஒரு வளியாலும் அவரது சகோதரர்களாகிய கோட்டா பசில் போன்றோர்களும் இன்னும் அவர்களுடன் நெருக்கமானவர்களும் அவரவர்களுக்கு வேண்டிய விதமான சட்டங்களை இயற்றிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம். 

அந்த அளவுடனாவது முடிவுற்றதா என்றால் அதுவும் இல்லை காவி உடையினர்கள் நாங்கள்தான் பௌத்த மதத்தின் அறங்காவலர்கள் இது எமது நாடு இந்த நாட்டின் ஏகபோக உரிமையாளர்கள் நாங்கள்தான் எனவே இங்கு நாம் சொல்வதுதான் சட்டம் எமக்கத் தேவைப்பட்ட விதத்தில்தான் சட்டம் இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு அவர்களும் அவர்களுக்கு தேவையான  சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்வதையும் பார்க்கின்றோம்.

நீதித்துறை சட்டத்துறை மற்றும் காவல்துறை போன்ற அத்தனையுமே மரித்து விட்ட நிலையே தோன்றியுள்ளது. ஒவ்வொரு விஹாராதிபதிகளும் அந்த அந்தப் பிரதேசத்தின் அரசர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் 

விஹாராதிபதிகளின் இந்த செற்பாடானது பொது பள சேனாவின் செயற்திட்டம் 4ல் பௌத்த விஹாரயைப் பிரசேத அபிவிருத்தி மத்திய நிலையமாக முன்னேற்றமடையச் செய்தல் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த விஹாரை மற்றும் அதன் நிருவாகத்திற்கு உடபட்டப் பிரதேசத்தை மதம் சமூகம் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளினதும் கவனத்தை ஈர்க்கும்; நிரந்தர அபிவிருத்தி மத்திய நிலையமாக விரிவு படுத்துதல் எனும் அவர்களது கொள்கையின் பிரகாரம் ஒவ்வொரு விஹாராதிபதியும் குறிப்பிட்ட பிரதேசத்தின் அரசர்கள் என்று கருதுகின்றார்கள்.

தம்புள்ள பள்ளி

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது பூரண அதிகாரத்தைப் பயன்படுத்தி தம்புள்ள பள்ளிவாயல் எக்காரணம் கொண்டு உடைக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ மாட்டாது என்று அறிவித்திருந்தும் சுமங்கள தேரர் அதனை அகற்றுவதற்குக் காலக்கெடு கொடுத்திருக்கின்றார் என்றால் இது என்ன பொன்னத்தனமான ஜனாதிபதியும்  கிறுக்குத்தனமான விஹாராதிபதியும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தப்புள்ள பள்ளி இடிக்கப்பட்டால் அல்லது அகற்றப்பட்டால் அது இந்த நாட்டில் ஜனநாயகம் மரித்து விட்டது என்பதுடன் பௌத்த பேரினவாத முறைகெட்ட அரசுதான் மஹிந்த எனும் பெயரில் ஆட்சோட்ச்சுகின்றது என்பதற்கான மிகமிக உறுதியான மறுக்க முடியாத சான்றாகும்.

இப்படி பார்க்கும் போது நம் நாட்டில் தற்பொழுது இரண்டு ஜனாதிபதிகளும் அது தவிர பல உப அரசர்களும் ஆட்ச்சி புரிந்து வருவதனை அண்மைக் காலமாக அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அந்த இரண்டு ஜனாதிபதிகள்

1. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி 
அதி மேதகு மஹிந்த ராஜபக்ஷ 
அவரின் அரசியல் யாப்பு : மஹிந்த நிந்தன தவறியேனும் சிந்தன என்று வாசித்து விடாதீர்கள்.ஏனெனில் அவரின் யாப்பின் பிரகாரம் எந்த அளவு மக்களை நிந்திக்க வேண்டுமோ அந்த அளவு நிந்தித்துக் கொண்டிருக்கின்றார் எனவெ அவரின் செயற்பாட்டுக்கு மிகவும் பொருத்தம் மஹிந்த நிந்தன என்பதுதான்

2. முறைகேட்டு ஜனாதிபதி 
மிக கீழ்தரமான களபொள வத்த அஞ்ஞானசார 
அவரின் அரசியல் யாப்பு : களபொள சிந்தன அவர் அவரின் யாப்புக்கு அமைய நாட்டில் எந்த அளவு களபொள உருவாக்க முடியுமோ அதில் எக்குறையுமின்றி செய்து கொண்டுதான் இருக்கின்றார்.

உப அரசர்கள் : உதாரணம் - ரன்கிரி ரஜமஹா விஹார விஹாராதிபதி சுமங்கள அவர் தம்புள்ள பிரதேச அரசராவார் அங்கு அவர் வெச்சதுதான் சட்டமாம்.

நமது பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் பரிதாபம்

18 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டு பணத்திற்காக கை தூக்கியவர்களுக்கு இப்பொழுதுதான் புறிகின்றது நாங்கள் செய்தது வடிகட்டிய முட்டாள் தனம் என்று. 

இனி புறிந்துதான் என்ன? புறியாவிட்டால்தான் என்ன? பாராளு மன்றத்திற்கு இருந்த முழு அதிகாரத்தையும் தனி ஒரு மனிதனுக்கே தாரவாத்துக் கொடுத்தாச்சு அதனால்தான் பாராளுமன்றம் இன்று யாராளுமன்றமாக மாறி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்கள் எல்லாரும் இன்று யாராளுமன்ற உறுப்பினர்களாக அதாவது யாரோ ஒருவன் ஆளும் உறுப்பினர்களாக உலாவிக் கொண்டிருக்கின்றார்கள்.பாவம் அவர்களுக்கு வாக்களித்த மக்களின் நிலை மிகப்பரிதாபம் 

முனாப் நுபார்தீன்
07-05-2014

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...