அன்புடையீ
அஸ்ஸலாமு அலைக்கும்
தாங்களின் பாராட்டுக்கும் அறிவுரை ஆலோசனைகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் அத்துடன் தாங்களின் வேண்டுதலுக்கு இணங்க நீதி மன்றம் தொடர்பான விமர்சனங்களைத் தவிர்த்துள்ளேன்அல்லாஹ் நம் அனைவரையும் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் நன்மையான கருமங்களில் உதவியாளர்களாக ஆக்கி வைப்பானாக.
சகோதரர் அப்துர் ராசிக் மற்றும் களபொட அத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரதும் மத நிந்தனைத் தொடர்பான வழக்கும் நமது நிலைப்பாடும்.
சுமார் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் நிகழ்தப்பட்ட ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2014 -04-26 ம் திகதி ஹெலஉருமய எனும் கட்ச்சியினரால் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறே பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் கடந்த 2014-04-12 ம் திகதி கொம்பனி வீதி காவல் நிலைத்திற்க்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் புனித அல்-குரு;ஆனை பகிரங்கமாக மனமுறண்டாக அவமதித்துப் பேசினார் இதன் மூலம் இஸ்லாத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவொன்று கொம்பனி வீதி காவல் நிலைத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்கள்.
மேற்படி இருவரது செயற்க்களும் மத நிந்தனை என்று பார்க்கின்ற போது ஒரே விதமானக் குற்றத்தையே செய்திருக்கின்றார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
அத்துடன் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களும் தாம் நிப்போன் ஹோட்டலில் ஏற்ப்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அங்கு அத்து மீறிப் பிரவேசித்து குழப்பம் விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறைப்பாடும் செய்திருந்தார்.
இந்நிலையில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 06-05-2014 ம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்பட்டது
அவ்வேளை விசாரனை மிகவும் கடுமையாகக் கையாளப்பட்டிருந்ததுடன் பின்வரும்
1. பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணை செலுத்தல் வேண்டும்
2. தலா பத்து இலட்ச்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பினைகள் நிறுத்தப்படல் வேண்டும்
3. பிரதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காவல் நிலையத்திற்க்குச் சென்று கையொப்பம் வைத்தல் வேண்டும்
4. அத்துடன் அவரதுக் கடவுச் சீட்டு நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
எனும் நிபந்தனைகளின் பேரில் கண்டித்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது நாம் அறிந்ததே
அவ்வாறே மேற்படி வழக்கின் இரண்டாம் கட்ட விசாரனையும் கடந்த 20-05-2014 ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்த இரண்டாம் கட்ட விசாரனை பற்றியும் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தகவல்களையே வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சில ஊடகங்கள் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் மகாநாயக்கர்களிடம் மன்னிப்புக் கேட்க்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதே நேரம் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 05-05-2014 ம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்பட்டது.
என்றாலும் இந்த வழக்கு பற்றி பல்வேறு ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தெளிவில்லாத இருவிதமான தகவல்களை வெளியிட்டிருந்தன.
சில உடகங்கள் அது பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராhக ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பது போன்ற கருத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இன்னும் சில ஊடகங்கள் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகள் தொடர்பானது என்பது போன்ற கருத்திலும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
எது எப்படி இருந்தாலும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரனை எவ்வித காரசாரமும்; இல்லாது கையாளப்பட்டதுடன்; இரண்டு பிக்குகள் உட்பட மொத்தம் அறுவர் பின்வரும்
1. ஒரு இலட்ச்சம் ரூபா சரீரப் பினை நிறுத்தப்படல் வேண்டும்
எனும் ஒரேயொரு நிபந்தனையுடன் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டார்கள்;
இந்த இரு வகையான தீர்ப்புக்களையும் பார்க்கும் போது அது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடைய வழக்காகத்தான் இருக்க முடியும் எனபதே நமது நிலைப்பாடாகும்
அவ்வாறின்றின்றி ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகளும்; குறித்த ஒரே சம்பவத்துடன் தொடர்புடையதாக இருப்பதனால் அவையிரண்டு முறைப்பாடுகளும் ஒரே வழக்காகக் கோர்வைச் செய்யப்பட்டது என்று கூறினால் அந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல. அதை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
ஏனெனில் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்திற்க்கும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை நிந்தித்ததற்க்கும் எவ்விதமான சம்மந்தமும் கிடையாது காரணம் நிப்பொன் ஹோட்டல் சம்பவம் ஒரு அமைப்புடன் சம்மந்தப்பட்டது இஸ்லாத்தை நிந்தித்தல் என்பது ஒரு மதத்துடனும் அந்த மதம் சார்ந்த சமூகத்துடனும் சம்மந்தப்பட்டதாகும் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்க்கும் எவ்விதமான குறிப்பிடத்தக்க உறவும் கிடையாது என்பதுவே யதார்த்தம்.
அப்படித்தான் இரண்டு முறைப்பாடுகளுக்குமான வழக்குத்தான் என்றிருந்திருந்தால் சிறீ லஹ்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைவிட அதிகப்படியான நிபந்தனைகள் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும்;.
அவ்வாறு இல்லாவிட்டாலும் குறைந்த படச்சம் அரசியல் யாப்பின் அத்தியாயம் 3- 12 (1) ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் முன் ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் : அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்க்கு உரித்துடையவர்கள். எனும் சரத்திற்க்கு அமைய இரு தரப்புக்கும் சரிசமனாகவாவது தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும்
ஏனெனில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பௌத்த மதத்தை நிந்திக்க வேண்டும் என்ற மனோ நிலையில் அவ்வாறு உரை நிகழ்த்தவுமில்லை அது தவறுதலாக எதிர்பாராவிதமாக நிகழ்ந்த ஒரு தவறு என்று கூறி சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே அதற்காக மானசீகமான முறையில் தனது வருத்தத்தையும் தெரித்வித்திருந்ததாகக் கூறியிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆகவே எதிர்பாராவிதமாக நிகழ்ந்த அதற்காக மானசீகமான முறையில் வருத்தமும் தெரிவிக்கப்பட்ட தவறுக்கே இந்த அளவு கடுமையான நிபந்தனைகள் என்றால். வேண்டும் என்று மனமுறண்டாக இஸ்லாத்தை அவமதிக்க வேண்டும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் அதன் மூலம் ஒரு இனக்கலவரத்தை உண்டுபன்னி அந்த இனவாதத் தீயில் குளிர்காய வேண்டும் என்ற மனோ நிலையில் கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பல் வேறு பாத்திரங்களில் பல்வேறு இடங்களில் ஊடகங்கள் காவல் துறையினர்களின் கண் எதிரே பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் மிகக்கீழ்தரமாகவும் இனவாதத்தீயை மூட்டி வரும் பொது பள சேனா அமைப்புக்கும் மற்றும் அதன் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரருக்கும் எந்த அளவு அதிகபட்ச்ச நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை எம்மால் ஊகிக்க முடிகின்றது.
அத்துடன் ஜாதிக பள சேனாவின் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்தில் பொது பள சேனாவினரால் அரசியல் யாப்பின் அத்தியாயம் இரண்டின் 14 வது சரத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்க்கான சுதந்திரம் போன்ற பல சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன என்பதுவும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
அப்படியாயின் மிக்கொடூரமான பல குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு முறைப்பாட்டுகளுடன் சம்மந்தப்பட அந்த வழக்கு எந்த அளவு கடுமையாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.
எனவே மேற்படி கொடூரமான பலகுற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டவரான ஞானசாரவுக்கு மிகச்சாதாதாரணமான நிபந்தனைகளும் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் தவறுதலாக ஏற்பட்ட குற்றத்திற்கு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த வழக்கிற்க்கும் முஸ்லிம்கள் சார்பாக 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை இது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் சமமந்தப்பட்ட வழக்குத்தான் என்பது உறுதியாகிள்றது.
எனவே நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களும்; வழக்கறிஞர்களும் இன்னும் காலம் தாழ்த்தாது மேற்படி ஞானசாரவுக்கெதிரான வழக்கிற்க்கு முடியுமானவரை அழுத்தங்களைக் கொடுத்து அவரையும் முழு முஸ்லிம் சமூகத்திடமும் மன்னிப்புக் கோர வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நம் சமூகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன் உரியவர்கள் முன்வரத் தவறும் பட்ச்சத்தில் நாம் களத்தில் இறங்க வேண்டி வருவது தவிர்க்க முடியாததே என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் .
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக