சனி, 10 மே, 2014

தேசிய முஸ்லிம் ஒற்றுமையின் அவசியம்


தேசிய முஸ்லிம் ஒற்றுமையின் அவசியம்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும்

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இன்றய நூற்றாண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் காரணம் முன் எப்போதும் இல்லாத அளவு முஸ்லிம் சமூகம் அரசியல் தலைமைகள் ஆண்மீகத் தலைமைகள் சமூகத் தலைமைகள் கல்வியலாளர்கள் புத்தி ஜீவிகள் தொழிலதிபர்கள் வர்த்தக சமூகத்தினர்கள் வியாபாரிகள் விவசாயிகள் செல்வந்தர்கள் தொழிலாளிகள் ஏழைகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் எவ்வித வேறுபாடுமின்றி விரும்பியோ விரும்பாமலோ இனவாதிகளினால் அடக்கியாளப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதற்க்கு முற்பட்ட காலங்களில் சமூகத்தில் சாமான்ய மக்கள்தான் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் அப்படியான வேளைகளில் எல்லாம் நமது அரசியல் மற்றும் சமய தலைமைகளும் செல்வந்தர்களும் ஒன்றினைந்து நம் சமூகத்தைப் பாதுகாக்கக் கூடியதாக இருந்தது அன்று அத்தகய செல்வாக்கு மிக்கவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள்

ஆனால் இன்றைய நிலை அவர்களால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியாத ஒரு அச்சம் நிறைந்த சூழல் தோன்றியுள்ளதைப் பார்கின்றோம். இன்று சாமான்ய பொது மக்களை விடவும் அதிகமாக சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் அவ்களே. அதுமட்டுமின்றி இவ்வாறான நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது.

இவ்வாறான இந்த மிக மோசமான நிலைக்கு நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் நாம் நம்மை முஸ்லிம் என்று சொல்வதற்கே அச்சப் பட வேண்டிய ஒரு நிலையை அது தோற்றுவித்து விடும்; என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.

இதனை நன்கு உணந்து கொண்ட நமது தலைமைகள் உண்மையாகவே இன்று பல வருடங்களாக தூர நோக்குடன் கூடிய அறிவார்த்த ரீதியிலான பலவிதமான முன்னெடுப்பக்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது உண்மையே. என்றாலும் அந்த முன்னெடுப்பக்கள் இதுவரை நமக்குத் தோல்விகளைத் தவிர வேறு எதனையும் பெற்றுத் தர வில்லை என்பதுவே கசப்பான உண்மையாக இருக்கின்றது.

எனவே நாம்  இதன் பிறகும் இந்த சடவாதக் கொள்கைகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்காது எல்லாக் காலத்திற்கும் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் சரியானதும் முழுமையானதுமான வழி காட்டலினைத் தன்னகத்தே கொண்டுள்ள புனித அல்-குர்ஆன் அல்-ஹதீஸின் வழிகாட்டுதலில் அறிவார்த்த மற்றும் ஆக்கபூவமான செயற்திட்டங்களை வகுத்து எதிரிகளை எதிர் கொள்வதற்குத் தயாராகுதல் மிக அவசியமாகும்.

எனவே முதலாவதாக நாம் செய்ய வேண்டியது சமூகத்தலைவர்கள் ஆண்மீக மற்றும் அரசியல் பிரமுகர்கள் சமூக சிந்தனையாளர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் படித்த வர்க்கத்தினர்கள் பாமரர்கள் சாதாரண தொழிலாளிகள் விவசாயிகள் போன்ற அனைத்து வர்க்கத்தினர்களும் அனைத்து விதமான வேறுபாடுகளையும் மறந்து ஒரே சகோதரர்களாக அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுவதன் மூலம் மாத்திரமே மேற்படி சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க முடியும் என்பதில் நாம் உடன்பாட்டுக்கு வருதல் வேண்டும்.

அவ்வாறு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் உதவியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எம்மை வந்தடையும் என்பதில் ஒரு ஈமானியனுக்க அனுப்பிரமானமேனும் சந்தேகம் ஏற்ப்படக் கூhது.

அவ்வாறு நாம் ஒன்று படாது வழக்கம் போல் இதிலும் அரசியலுக்குள் இஸ்லாத்தைப் புகுத்த வேண்டாம் என்று கூறி இதிலும் கருத்து வேறுபாட்டையே மூலதனமாக்கி நமது இஸ்லாம் பற்றிய ஞானசூண்யத்தை நம் வரலாற்றில் மீண்டும் ஒரு முறைப் பதிவு செய்து விடுவோமாக இருந்தால் நிச்சயமாக அது நம் வருங்கால சந்ததினர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் சமூகத்துரோகச் செயலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே நம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களையும் ஒன்று படுத்துவதற்கான சில செயற்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்பதை வாசகர்களுக்கு ஏற்கனவே  அறியத்தந்திருந்தோம். அதன்பிரகாரம் இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற ரமழான் மாதத்திலிருந்து அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மேற்படி எமது செயற்திட்டங்கள் நம் சமூகத்தில் நடைமுறைப் புடுத்தப்படுவது தொடர்பான தேசிய மட்டத்திலான கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடாத்தப்படவுள்ளன.

ஆதலால் மேற்கூறப்பட்ட அனைத்துத் தரப்பினர்களதும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் பூரண ஒத்துழைப்புக்களும் அதிகளவில் எதிர்பார்கக்கப் படுகின்றன எனவே உங்கள் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பின்ரும் எமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால்ää அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (அல்-குர்ஆன்: 47: 7)

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால்ää உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால்ää அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவேää முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.  (அல்-குர்ஆன்: 3: 160)


இப்படிக்கு 
முனாப் நுபார்தீன்

E-mail : aslislamguide@yahoo.com
Blog : aslislamguide.blogspot.com
Skype : munabu2



கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...