ஞாயிறு, 11 மே, 2014

நம் அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களின் கவனத்திற்க்கு.

بسم الله الرحمن الرحيم

நம் அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களின் கவனத்திற்க்கு.

அன்புடையீர் 

அஸ்ஸலாமு அலைக்கும்

தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கான முயற்ச்சிகள் நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம் இதே நிலையில் பள்ளி நிருவாக சபையும் குறித்த பள்ளியை இடம் மாற்றுவதற்க்கு இணக்கப்பாடு தெரிவித்துள்ளதாக வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே அவர்களது இந்த முடிவானது அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். ஏனெனில் தினமும் பிரச்சினைப்பட்டுக் கொண்டு இருப்பதை விட விட்டுக் கொடுத்து நிம்மதி அடைலாம் என்று அவர்கள் நினைக்கலாம் என்றாலும் இது அவர்களுக்கு மாத்திரம் இன்றி அனைத்து முஸ்லிம் சமூகத்திற்க்கும் தற்காலிகமானதொர தீர்வாகத்தான் இருக்குமே தவிர அது நிரந்தர நிம்திக்கானத் தீர்வாக ஒரு நாளும் இருக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம். 

ஏனெனில் பொளன்னறுவ அனுராதபுர பளய நகரம் மிஹிந்தலை அலுவிஹார மற்றும் தம்புள்ள உட்பட இன்னும் இது போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவைகள் அனைத்தும் பௌத்தர்களின் புனித நகரங்களாக அடையாளப் படுத்தப்;பட்டுள்ளன. 

அத்துடன் அவைகள் அனைத்தும் பௌத்த மயமாக்கப்பட்டு தனி பௌத்தர்களைக் கொண்ட நகரங்களாகவும் ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் நீண்டகால உண்மையான கொள்கையாகும்.

இந்த அவர்களின் இலக்கின் முதற்கட்ட நடவடிக்கை பொளன்னறுவ தனி பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அனுராதபுர பளய நகரில் முஸ்லிம்களின் பூர்விகத்தைப் பறைசாட்டிக் கொண்டிருந்த பள்ளி வாயல் அண்மையில் டோசர் இயந்திரம் மூலம் தரை மட்டமாக்கப்பட்டது அத்துடன் அந்த இடத்தில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் நீராவி என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆதலால் அந்த நகரமும் இன்று பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது. இந்த விடயத்திற்கு ஊடகங்கள் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுத்ததாகத் தெரியவில்லை காரணம் அது சிறுகச் சிறுக பல ஆண்டு காலமாக திட்மிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயற்திட்டமாகும்.

இந்த நிலை தம்புள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்றே விரும்புகின்றேன் எனவே நம் சமூக அரசியல் மற்றும் சமய சமூகத் தலைவர்களாகிய தாங்கள் அனைவரும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து உங்களை நோக்கி வருகின்ற விமர்சனங்களைப் பொருட்படுத்தாது அனைத்து வேற்றுமைகளையும் கடந்து நின்று ஒன்றிணைந்து இந்தப் பள்ளிவாயலைப் பாதுகாப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தாங்களின் தார்மீகக் கடமையாகும்.

1. அந்த அடிப்படையில் தாங்கள் உடனடியாக ஒன்றிணைந்து ஒரே குரலில் ஏற்கனவே ஜனாதிபதி அவர்கள் எமக்கு வாக்களித்திருந்த தப்புள்ளப் பள்ளி எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது எனும் வாக்குறுதியைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

2. அடுத்ததாக பள்ளிவாயலுக்கு முழுமையான பாதுகாப்பைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் அழுத்தம் கொடுத்தல் வேண்டும்.

3. பள்ளிவாயலின் இருப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இயங்கிக் கொண்டிருக்கும் சுமங்கள தேரர் என்பவர் எக்காரணம் கொண்டும் பள்ளிவாயலின் பக்கம் செல்லாதவாறு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  வகையிலான ஆணையினை நீதி மன்றம் ஊடாக பிறப்பிப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் 

அவ்வாறு தாங்கள் அனைவரும் ஒன்றினைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் பட்ச்சத்தில் பின்வரும் சில கேள்விகளை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கலாம் என்று விரும்புகின்றேன்.

1. தம்புள்ளையில் முஸ்லிம்கள் பல தசாப்த்தங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு உள்ள ஒரேயொரு அத்தாட்ச்சி இந்த பள்ளிவாயல் ஒன்று மட்டுமே. இதனையும் தாரவாத்துக் கொடுப்பதனால் அங்கு முஸ்லிம்களின் இருப்புக்கே அது அச்சுறுத்தலாக அமைந்து விடாதா?

2. இந்த பள்ளி வாயல் இன்று விட்டுக் கொடுக்கப்படுவதனால் பல தசாப்த காலமாக இதேவிதமான பிரச்சினையில் இருந்து கொண்டிருக்கும் மிஹிந்தலை மற்றும் அலுவிஹார பள்ளிவாயல் போன்று நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் இன்னும் ஏராளமான பள்ளிவாயிற்க்கள் மத்ரஸாக்கள் போன்றவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?

3. அரசால் மாற்றீடாக வழங்கப்படவுள்ள இடத்திற்கும் எதிர்காலத்தில் இப்படியானதொரு நெருக்கடி வரமாட்டாது என்பதற்கு உத்தரவாதம்தான் என்ன? அவர்கள் ஆயிரம் ஆயிரம் உறுதி மொழிகளையும் உத்தரவாதங்களையும் கொடுத்த போதிலும் அவற்றை நம்ப முடியுமா?

4. இன்று புனித பூமி எனும் போர்வையில் மிகவும் புன்னியம் வாய்ந்த பள்ளியையே அகற்றுபவர்கள் நாளை தம்புள்ள சிங்களவர்களின் பூர்வீகப் பூமி எனவே முஸ்லிம்கள் யாரும் இங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது வெளியேற வேண்டும் என்று விரட்டியடிக்கப்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனவே நம் சமூக அரசியல் மற்றும் சமய சமூகத் தலைவர்கள்; மேற்படி கேள்விகளுக்கு விடையைக் கண்டு கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வதுதான் ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் மற்றும் நமக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரக் கூடியதாகவும் இருக்கும் என்றே நம்புகிறேன்.

தற்காலிக விடிவுக்காக ஒவ்வொன்றாகப் பறி கொடுத்து இறுதியில் நமது இருப்பையே பறி கொடுப்பதை விட போராட்டத்துடனாவது நமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளுதல் சிறந்ததல்லவா.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம்களுடைய தலைமைப் பொறுப்பு சுமத்தப்பட்ட ஒருவன் அவன் தனது பொறுப்பில் மோசடி செய்தவனாக மரணித்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக ஆக்கி விடுவான்.(நூல் : புஹாரி- முஸ்லிம்)

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஈருலக வாழ்விற்க்கும் பாதிப்பேது ஏற்பட்டு விடாத வகையிலான முடிவுகளையும்  தீர்மானங்களையும் எட்டச் செய்வானாக.

முனாப் நுபார்தீன்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...