சமகால சவால்களை எதிர்கொள்வதில் தனிமனிதனின் பங்கு
இலங்கை முஸ்லிம்களின் கமூக சமய அரசியல் வரலாற்றில் 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. காரணம் முன் எப்போதும் இல்லாத அளவு இந்த நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரப்பத்துடனேயே நமது சமூகம் சமயம் மற்றும் அரசியல் போன்றவற்றின் இருப்பிற்க்கான அச்சுறுத்தலும் தோன்றி நாட்க்கள் நகரும்; அதே வேகத்தில் அதுவும் வளர்ந்து கொண்டிருப்பதனைப்; பார்கின்றோம்.
இவ்வாறான இந்த நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்றவைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்;.
இந்நிலையில் நாம் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டு காலத்தைக் கடத்தாது ஒவ்வொரு தனிநபரும் இது தனக்கு விடப்பட்டிருக்கும் சவால் எனக்கருதி இந்த சவாலுக்கு முகங்கொடுக்க உடனடியாக முன்வருதல் வேண்டும்.
ஏனெனில் நமது கமூக சமய அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளுக்கு நம் சமூகம் முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாறு. என்றாலும் இதற்க்கு முற்பட்ட கால அரசியல் சூழ்நிலைக்கும் இன்றைய இந்தக் கால அரசியல் சூழ்நிலைக்கும் மிகப்பெரும் வேறுபாடு காணப்படுகின்றது.
முன்னய காலங்களில் நமது அரசியல் தலைமைகள் எப்படிப்பட்ட சவால்களையும் தனித்து நின்று எதிர்கொள்ளக் கூடிய நிலையில் அன்றய அரசியல் களநிலவரம் ஓரளவேனும் அவர்களுக்கச் சாதகமாக இருந்துள்ளது. ஆனால் இன்றைய அரசியல் களநிலவரம்; தலைமை நிறுவாகம் சட்டம் ஒழுங்கு போன்ற அனைத்துப் பகுதிகளிலும்; மிகவும் பாதகமானதாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் நமது கடந்தகால அரசியல் தலைமைகளை உதாரணம் காட்டி அவர்களால் சாதிக்க முடிந்ததை ஏன் இன்றய நமத அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியாதுள்ளது என்று கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பது அர்த்தமற்ற ஒரு அனுகு முறையாகும்.
அந்த அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்ளு ஏற்ப்பதான் அவர்களால் இயங்க முடியும் சிலபோது அவர்களால் தனியாக எதிர்கொள்ள முடியுமான சவால்களுக்கு அவர்கள் முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் அவ்வாறே சிலபோது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்தே எதிர்கொள்ள வேண்டி இருக்கும் இன்றைய இந்த நிலை நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதிஉயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டியதாகவே உருவெடுத்துள்ளது என்பதுவே யதார்த்தமான களநிலவரமாகும்.
எனவே நமது அரசியல் சமூக மற்றும் சமயத் தலைமைகளால் ஏன் ஒன்றுபட முடியாதுள்ளது என்பதையேப் பேசிப் பேசி நாமும் நமது காலத்தை வீனாக்காது சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த ஒற்றுமையை ஏற்ப்படுத்தி இவ்வாறான சவால்களை எதிர் கொள்வதற்க்கு ஏன் நாம் முன்வரக் கூடாது என்ற கேள்வியை நாம் நம்மிடமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக