வியாழன், 1 மே, 2014

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம்

بسم الله الرحمن الرحيم

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம்

உலகில் மனிதனது வரலாறு என்பது நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே ஆரம்பமாகின்றது அன்றிலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டமும் ஆரம்பமாகுகின்றது. முதலாவது ஏற்பட்ட போராட்டம் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான ஒரு போட்டியிலிருந்தே துவங்குகின்றது. இந்த போட்டி வாணவர்களுக்கும் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையில் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வால் அவனின் மத்தியஸ்த்தத்துடனயேயே அரங்கேறியது. 

போட்டி தற்பொழுது ஆரம்பமாகின்றது வினாப்பத்திரம் முதலாவதாக வானவர்களுக்கே சமர்ப்பிக்கப்படுகின்றது .

அல்லாஹ் கூறுகின்றான் : 

இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி ''நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்"" என்றான்.

அதன் போது அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து தங்களது இயலாமையை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அவர்கள் ''(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்"" எனக் கூறினார்கள்.

அதன் பிறகு வினா நபி ஆதம் (அலை) அவர்களுக்கு விடப்படுகின்றது.

 ''ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!"" என்று (இறைவன்) சொன்னான்; 

அதன் போது நபி ஆதம் (அலை)

அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது ''நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?"" என்று (இறைவன்) கூறினான்

நபி ஆதம் (அலை) அவர்கள் மேற்படி போட்டியில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து 

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ''ஆதமுக்குப் பணி (ந்து ஸ{ஜூது செய்) யுங்கள்"" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸ மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல்-குர்ஆன்: 2: 31-34)

வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிறம் பணிந்த அதே நேரம் வானவர்களுடன் சேர்ந்திருந்த ஜின் இனத்தைச் சார்ந்த இப்லீஸ் மாத்திரம் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கனித்து செயல்பட்டான்.

எப்பொழுது இப்லீஸ் அல்லாஹ்வுடைய கட்டளையைப் புறக்கணித்தானோ அன்றிலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இந்தப் போராட்டம் ஆரம்பித்து விடுகின்றது. இந்தப்போராட்டம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறுதி நாள் வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் தண்மையும் அதற்கான உத்தரவாதமும் கொண்டதாகும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...