பொது பள சேனா மற்றும் அனைத்து இனவாதக் கும்பல்களினதும்
ஒரே இலக்கு…?
இன்று உலக அளவில் பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற பாகுபாடின்றி இஸ்லாமிய உலகம் மிகப்பெரும் சவால்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அராஜகங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது நாமனைவரும் அறிந்ததே. தன்னாதிக்கம் கொண்ட மேற்க்கத்தேய வள்ளரசுகள் தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயல்பட மறுக்கும் இஸ்லாமிய நாடுகளின் மீது நியாம் அற்ற விதத்தில் நீதிக்குப் புறம்பாக பல்வேறு குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி போர் பிரகடனம் செய்து அந்த நாடுகளையே ஆக்கிரமிக்கின்ற காட்ச்சியினை நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம்.இது சர்வதேச மட்டத்தில் இஸ்லாமிய நாடுகளின் நிலையாகும்.
அவ்வாறே தேசிய அளவில் நாம் பார்கின்ற போது குறிப்பாக இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழுகின்ற நாடுகளில் பெரும் பாண்மை சமூகத்தைச் சார்ந்த இனவாதக் கும்பல்கள் தங்களது கட்டுபாட்டுக்குள் கட்டுண்டு வாழ மறுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களது அத்துமீறல்களையும் அராஜகத்தையும் பிரயோகித்து வருகின்றன. அது மட்டுமின்றி தங்களது அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்காக அப்பாவிகளான நிராயுதபானிகளான முஸ்லிம்களை அதிலும் குறிப்பா முஸ்லிம் புத்திஜீவிகளை ஊடகங்கள் வாயிலாக தீவிரவாதிகள் என்று உலகுக்கு அடையாளப்படுத்தி வருவதனையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பொது பள சேனா எனும் அமைப்பும் அதன் கொள்கையை ஒத்த கொள்கையை உடைய இன்னும் சில இனவாத அமைப்புக்களும் அண்மைக் காலமாக இவ்வாறான அத்துமீறல்களில் மிகத்தீவிரமாக முன்னேறி வருவதனையும் அத்துடன் தொடர்ந்து முஸ்லிம் புத்திஜீவிகளை தீவிரவாதிகள் அடிப்படைவாதிகள் என்றும் கூறிவருவதனையும் பார்க்கின்றோம். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளின் பின்னனி மற்றும் அதன் நோக்கம் என்னவென்று நாம் ஆராகின்ற போது பின்வரும் இருவிதமான விடைகளைப் பெறலாம்.
1. முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளையும் அராஜகத்தையும் அத்துமீறல்களையும் பிரயோகிப்பதன் ஊடாக முஸ்லிம்களை கிளந்தௌச் செய்து மிகப்பெரும் இரத்தக் களரி ஒன்றை ஏற்படுத்தி முஸ்லிம்களை கிளர்ச்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அடக்கி ஒடுக்குவதன் மூலம் அவர்களை பொருளாதாரம் கல்வி மற்றும் அரிசியல் அதிகாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் ஒரு நலிவுற்ற சமுதாயமாக மாற்ம் பெறச் செய்தல்.
2. அத்துமீறல்களுக்கு எதிராக நாம் போர்க்கொடி துஸக்கத் தவறும் பட்ச்சத்தில் நம் சமூகத்தில் இருக்கின்ற புத்தி ஜீவிகள் அரசியல் தலைவர்கள் செல்வந்தர்கள் போன்றோர்கள் மீது அவதூறாகச் சோடிக்கப்பட்டத் தீவிரவாதிகள் எனும் பட்டத்தைச் சுமத்தி அவர்களைக் கைது செய்து தடுத்து வைப்பதன் ஊடாக இந்த சமூகத்தின் முதுகெலும்பை முறித்து முடமாக்கி பல்துறைகளிலும் நலிவுறச் செய்தல்.
இவைகள்தாம் பேரினவாதிகளின் இலக்கு என்பதற்க்கு கடந்த கால அவர்களின் செயற்பாடுகள் மறுக்கமுடியாத சான்றுகளாகும். ஆகவே இவ்வாறான அவர்களின் மிகக்கீழ்தரமான நோக்கங்களுக்கு நம் சமூகம் பலியாகிவிடாதவாறு நாம் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பது அவசியமாகும். அதிலும் குறிப்பாக அவர்கள் இலக்கு வைத்திருக்கும் நம் சமூகத்தைச் சார்ந்த செல்வந்தர்கள் அரசியல் தலைவர்கள் புத்தி ஜீவிகள் போன்றோர்கள் தங்களது காய்நகர்த்தல்களை மிகக்கவனமாகக் கையாள்வது அவசியமாகும்.
எனவே மேற்கூறிய இரண்டும் அல்லது இரண்டில் ஒன்று வெகு விரைவில் வந்தடைவதற்கான சமிக்சைகள் தொடர்ச்சியாக விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
என்றாலும் இவ்வாறான ஒரு அபாயகரமான நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நாம் இவற்றை எதிர் கொள்வதற்கு எந்த அளவு நம்மைத் தயார் படுத்திக் கொண்டுள்ளோம் என்பதைப் பார்கும் போது நிச்சயமாக எமது ஈமானின் நிலையை நாம் மீழ் பரிசிலனைக்கு உட்படுத்த வேண்டியவர்களாகவே உள்ளோம்.
அல்லாஹ் கூறுகின்றான் : அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும் திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் இன்னும் அவர்கள் தவிர்ந்த வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம்;. அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)
மேற்படி வசனத்தில் நாம் நமது பகைவர்களான இறை மறுப்பாளர்களை அச்சமடையச் செய்யும் வகையில் எமது சக்திகளை எந்நேரமும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளைப் பிறப்பிக்கின்றான். அந்த சக்திகளுள் இலௌகீக அடிப்படையிலான சக்திதிகளைத் தயார்படுத்துவதற்க்கு முன்னதாக நாம் ஆயத்தம் செய்ய வேண்டிய சக்திகள் إيمان எனும் இறை விசுவாசமும் அதற்கு அடுத்ததாக أخوة எனும் சகோதரத்துவமுமாகும். இந்த இரு சக்திகளும்; வலுவிழந்து காணப்படும் பட்ச்சத்தில் ஏனைய சக்திகள் எந்த அளவு காணப்பட்டாலும் அது வெற்றியளிக்கப் போதுமானது அல்ல.
ஆதலால்தான் நபி (ஸல்) அவர்கள் ஈமானுக்கு அடுத்ததாக மேற்கொண்ட இரண்டாம் கட்ட நடவடிக்கை ஈமானிய உள்ளங்களுக்கு மத்தியில் ககோதரத்துவப் பாசப் பிணைப்பைக் கட்டி எழுப்பினார்கள் அவையிரண்டும் வலுவானதற்க்குப் பிற்பாடே ஆயுதம் ஏந்தி எதிரிகளை எதிர் கொண்டார்கள். ஏனெனில் எதிரிகளை எதிர் கொள்வதற்கு அனைத்துக்கும் முன்னதாக அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பெறுவது அவசியமாகும். ஈமானுக்கு அடுத்ததாக அல்லாஹ்வுடைய மிகப் பெரிய அருள் சகோரத்துவத்தில்தான் உட்பொதிந்துள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்-குர்ஆன்: 3: 103)
இந்த சகோதரத்துவம் என்பது போலியானதாகவோ நயவஞ்சகத் தனமானதாகவோ அன்றி எவ்வித குரோத மணப்பாண்மையும் அற்ற உண்மையான உளப்பூர்வமானதாகவும் இருத்தல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (அல்-குர்ஆன்: 15: 47)
எனவே சமூகத்தலைவர்கள் ஆண்மீக மற்றும் அரசியல் பிரமுகர்கள் சமூகசிந்தனையாளர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் செல்வந்தர்கள் ஏழைகள் படித்தவர்க்கத்தினர்கள் பாமரர்கள் போன்ற அனைவரும் எவ்வித வேறுபாடுகளுமின்றின் ஒரே சகோதரர்களாக ஒன்று படுவதன் மூலமே மேற்படி சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் சடவாதக் கொள்கைகளின் பால் கவனம் செலுத்துவதைக் குறைத்துக் கொண்டு அல்-குர்ஆன் அல்-ஹதீஸின் வழிகாட்டுதலில் அறிவார்த்த மற்றும் ஆக்கபூவமான செயற்திட்டங்களை வகுத்து எதிரிகளை எதிர் கொள்வதற்குத் தயாராகுதல் வேண்டும்.
நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் அடிப்படையில் எம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் உதவியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எம்மை வந்தடையும் என்பதில் ஒரு ஈமானியனுக்க அனுப்பிரமானமேனும் சந்தேகம் ஏற்ப்பட இடம் இல்லை.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (அல்-குர்ஆன்: 47: 7)
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால்ää உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால் அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன்: 3: 160)
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக