சனி, 17 மே, 2014

இயக்கங்களால் நம் சமுதாயத்தில் ஏற்ப்பட்டுள்ள சாதக பாதகங்கள்.

இயக்கங்களால் நம் சமுதாயத்தில் ஏற்ப்பட்டுள்ள சாதக பாதகங்கள்.

இருபதாம் றூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து நம் சமூகத்தில் சமயத்தின் பெயராலும் சமுதாயத்தின் பெயராலும் பல்வேறு இயக்கங்கள் தோற்றம் பெற்று பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதனைப் பார்க்கின்றோம். இந்த அத்தனை இயக்கங்களாலும் எவ்வாறு நம் சமூகத்தில் பாரிய அளவில் நன்மைகள் ஏற்ப்பட்டு இருக்கின்றனவோ அவ்வாறே அதிகமான தீமைகளும் உருவாகாமல் இல்லை.

இன்று நமது இலங்கை நாட்டை எடுத்துக் கொண்டால் பல் வேறு பெயர்களில் பல் வேறுபட்ட நோக்கங்களின் அடிப்படையில் பல் வேறு சமய மற்றும் சமூக இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். அவற்றில் முறையே தப்லீக் ஜமாஅத் ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும்; தவ்ஹீத் ஜமாஅத் போன்றவைகளை முக்கியமானவைகளாகக் குறிப்பிடலாம்.

தப்லீக் ஜமாஅத்து

இவற்றுள் தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்த வரை அதனை ஒரு இயக்கமாகக் கோடிட்டுக்காட்ட முடியாது ஏனெனில் ஒரு இயக்கத்திற்கு இருக்க வேண்டிய எந்தவொரு விடயமும் அந்த அமைப்புக்கு இல்லை.

உதாரணமாக:

தலைவர் செயலாளர் பொருளாளர் போன்ற நிருவாக அமைப்பு

வங்கிக்கணக்கு

அதற்கென்று பிரத்தியேகமான கொள்கைகள் கோட்பாடுகள் சட்டயாப்பு.

உறுப்பபினர் விண்ணப்பப்பங்கள் மூலம் உறுப்பினர் சேர்த்தல்

உறுப்பினர் அட்டை விநியோகம்.

ஜனநாயக முறையிலானப் பதிவு போன்ற எதுவும் கிடையாது. 

அவர்களது ஒரே கொள்கை பெயரளவிலேனும் முஸ்லிமாக இருந்தால் சரி யார் வேண்டும் என்றாலும் அவர்களுடன் இணைந்து கொண்டு செயல்படலாம் அவ்வாறே விரும்பாத போது விலகியும் விடலாம். அத்துடன் அது ஜனநாயக முறைப்படிப் பதிவு செய்யப்பட்டாத போதும் மக்கள் செல்வாக்கு அதற்க்கு  அங்கீகாரம் வழங்கி அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களின் பிரதானக் கொள்கை யாரெல்லாம் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் பொதுவாக படித்தவர் பாமரர் செல்வந்தர் ஏழை அரசன் ஆண்டி அதிகாரி சாமான்யன் முதலாளி தொழிலாளி போன்ற எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் மிக இலகுவாக சென்றடையும் வகையிலான ஒரு தஃவா அமைப்பாகவே அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

எனவே அவர்களது செயற்பாடெல்லாம் ஒவ்வொரு இஸ்லாமியனும் இஸ்லாமிய விழுமியங்களுடன் அதன் கடமைகள் பண்பாடுகள் பளக்க வழக்கங்கள் போன்ற அத்தனையிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதுவேயாகும்.

அதன்; தஃவாப் பணி கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக நம் இலங்கைத் திரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் மூலமாக அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தக் கூடியதான வணக்க வழிபாடுகள் மற்றும் அடியார்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையிலான பண்பாடுகள் பளக்கவழக்கங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களில் நம் சமூகம் மிகப்பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது என்பது யாராலும் மறுத்துரைக்க இயலாத ஒன்றாகும்.

ஜமாஅத்தே இஸ்லாமி

அடுத்ததாக இருக்கக் கூடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட இயக்கமாக ஜமாஅத்தே இஸ்லாமியைக் குறிப்பிடலாம். இதுவும் நம் நாட்டில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு தப்லீக் அமைப்பிலிருந்து சற்று வித்தியாசமான அனுகு முறைகளைக் கொண்டிருக்கின்றது அத்துடன் இது ஒரு இயக்கம் என்ற அந்தஸ்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதுடன் இது இஸ்லாமிய கிலாபத் எனும் ஒரு இலக்கை நோக்கிப் பயனிப்பதனால் அந்த இலக்கை அடைவதற்க்கான சில சட்டத்திட்டங்களின் அடிப்படையில் அதற்கென்று ஒரு யாப்பு உருவாக்கபட்டு அந்த யாப்பின் பிரகாரமே தனது செய்ற்திட்டங்களை அது முன்னெடுப்பதாக இருக்கின்றது இந்த அமைப்பும் இந்த நாட்டில் கால்பதித்த நாள் முதல் நம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதுவும் மறுப்பதற்கில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை அது கடந்த கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட ஒரு அமைப்பாக இருந்த போதும் வரலாற்றில் மிகப் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்த ஒரு அமைப்பாக அது இருப்பதைப் பார்க்கின்றோம் அதன் இலக்கெல்லாம் அனைத்து முஸ்லிம்களும் அல்-குர்ஆன் அஸ்சுன்னாவின் அடிப்படையிலேயே முற்று முழுதாக தங்களது வாழ்க்கைப் பயனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் மேற்படி இரண்டு அடிப்படைகளுக்கும் முறனான எந்த ஒரு சிறிய செயலாக இருந்தாலும் அவை அத்தனைச் செயலும் சமூகத்திலிருந்து முழுமையாகக் கழைப்பட்டாக வேண்டும் என்பதாகும்.

அந்த இலக்கின் அடிப்படையில் அதற்க்கு வெளியில் இருந்து எவ்வாறு பிரச்சினைகள் வருகின்றதோ அவ்வாறே தங்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமைக் காண முடியாத பல விடயங்களில் உள்ளிருந்து வரும் பிரச்சினைகளும் மிகப் பெரும் சவாலாக இருந்து அதன் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதனையும் பார்க்கின்றோம். ஆதலால் இன்று அந்த அமைப்புப் பல பிரிவுகளாகப் பிரிந்து சறிலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இன்னும் பல பெயர்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். என்றாலும் நூதன அனுஷ்டானங்கள் மூடபழக்கவளக்கங்கள் போன்றவைகளை சமூகத்திலிருந்து கழை எடுத்த பெருமை இந்த தவ்ஹீத் ஜமாஅத்துக்களையே சாரும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்படி இந்த மூன்று வகை அமைப்புகளுடைய சேவைகளை எந்த வகையிலும் நாம் குறை கூறவோ அல்லது  குறைத்து மதிப்பிடவோ முடியாது. அவ்வாறு குறைத்து மதிப்பிடவும் கூடாது. என்றாலும் இந்த இயக்கங்களால் எதிர்பாராவிதமாக ஏற்பட்டுள்ள பல தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன அவற்றை இனங்கண்டு களை எடுக்க முடியுமாக இருந்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்ப்பதை விடக்கூடுதலான் நன்மைகளை நம் சமூகத்திற்க்கு இந்த இயக்கங்களால் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது உறுதி.

தீமைகள்;:

1. அல்லாஹ் கூறுகின்றான் : நூஹ{க்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; ''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து  விடாதீர்கள்" 

மேற்படி வசனத்தில் மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்றும் அவ்வாறே மார்க்கத்தின் பெயரால் பிரிவினைகளை ஏற்ப்படுத்தி விடக் கூடாது என்றும் நாம் கட்டளை இடப்பட்டுள்ளோம் இந்த வசனத்தின் முற்பகுதியாகிய மார்க்கத்தை நிலை நாட்டுங்கள் என்பதை ஏற்றுக் கொண்டு  அதன் அடுத்த பகுதியாகிய  அதில் பிரிந்து  விடாதீர்கள்" என்பதை முற்று முழுதாக மீறப்பட்டுள்ள நிலையைப் பார்கின்றோம் மார்கத்தின் பெயரால் இந்தப் பிரிவினை என்பது இயக்கங்கள் ஏறப்படுத்திய முதலாவது மிகப்பெரும் தீமையாகும்.

2. அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; . (அல்-குர்ஆன் :49:10)

இந்த வசனத்தில் இரு முஸ்லிம்கள் தங்களுக்குள் பிணங்கிக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் உடனடியாக சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாம் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டுள்ளோம். என்றாலும் நாம் இயக்கங்களின் பெயரால் பகமையைத்தான் நாளாந்தம் வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம். அத்துடன் சமாதானம் சகோதரத்துவம் என்பதெல்லாம் இயக்கங்களுக்குள் மாத்திரம் சுருங்கி விட்டிருப்பதைப் பார்க்கின்றோம். இதுவும் இந்த இயக்கங்கள் ஏறப்படுத்திய தீமையேயாகும்.

3. அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் :61:4)

இந்த வசனத்தில் ஒரே அனியாக இருந்துதான் முஸ்லிம்கள் தங்களது அழைப்புப் பணியை மட்டுமின்றி அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் ஆனால் இந்த வசனமும் நமக்கு மத்தியில் புறக்கணிக்கப்பட்டு பலபரிவுகளாக இருந்தே அத்தனையையும் முன்னெடுத்து வருகின்றோம் இதுவும் இயக்கங்கள் ஏறப்படுத்திய தீமையேயாகும்.

4. அல்லாஹ் கூறுகின்றான் : முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அல்-குர்ஆன் :49:11)

இந்த வசனம் ஒருவரை ஒருவர் பிரிகசிக்கவோ விமர்சிக்கவோ இழிவாகக் கருதவோ கூடாது என்று தடுக்குகின்றது. இந்த இஸ்லாம் வண்மையாகக் கண்டிக்கின்ற தீய குணங்கள் அத்தனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஒட்டுமொத்த சமூகத்திலும் மலிந்து கிடப்பதைப் பார்கின்றோம்.

5. அல்லாஹ் கூறுகின்றான் : (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். (அல்-குர்ஆன் :49:11)

இங்கு பிறரின் குற்றங் குறைகளை தேடித்திரியாதீர்கள் என்று அல்லாஹ் கட்டளைப் பிறப்பிக்கின்றான். ஆனால் தனது இயக்கத்ததையும் தனது இயக்கம் சார்ந்தவர்களையும் பரிசுத்தவான்கள் என காட்டுவதற்காக பிற இயக்கம் சார்ந்நவர்களின் குற்றம் குறைகளை தேடித்திரிவதும் ஏதாகிலும் ஒன்று கிடைத்து விட்டால் அல்லது கிடைக்கா விட்டாலும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் பல இல்லாத பொல்லாதவைகளை எல்லாம் சொல்லி விமர்சிப்பதனைப் பார்கின்றோம் இதுவும் இயக்கங்கள் ஏறப்படுத்திய தீமையேயாகும்.

இன்னும் எத்தனையோ எத்தனையோ தீமைகள் மலிந்து ஆக மொத்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய சிறந்த நற்குணங்கள் அத்தனையும் தொலைந்து விட்ட நிலையில் அனைத்து விதமான தீய குணங்களும் நம்மை ஆட்கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். இவை எல்லாம் இந்த இயக்கங்கள் ஏற்ப்படுத்திய தீமைகள் இல்லையா?

இவ்வாறான இந்த அனைத்து விதமான தீமைகளும்; நம்மிலிருந்து உடனடியாகக் களையப்படாத வரை நாம் செய்கின்ற சமூகப்பணிகள் அத்தனையும் அர்த்தமற்றதாகும் அவைகள் எதுவும் நாம் எதிர்பார்க்கின்ற எப்பலனையும் எமக்குப் பெற்றுத்தரப் போவதில்லை.  

எனவே சகோதரர்களே அல்லாஹ்வைப் பயந்து அல்லாஹ்வுக்காக நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒருவரையொருவர் மதித்து நாம் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அனைவரும் முஸ்லிம்கள் எனும் தாராள மனதுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு முன்வருவோமாக அதற்கான நற்ப்பாக்கியத்தினை வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக.

முனாப் நுபார்தீன்.


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...