சத்தியத்திற்கும் அசத்தியத்திற்க்கும் இடையிலான போராட்டமும்
அதனை எதிர்கொள்வற்கான முன் ஆயத்தமும்
உலகில்; மனிதல் தோன்றிய நாள் முதல் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்க்கும் இடையிலான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அது உலகம் முடியும் வரை ஓயாது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது உறுதி அதனை யாராலும் தடுத்து நிறுத்திவிட அல்லது இல்லாமல் செய்து விட முடியாது ஏனெனில் இது அல்லாஹ்வுடைய நியதியாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) ''நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி"" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.(அல்-குர்ஆன் : 2 : 120)
இப்படியான போராட்டங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது அதன் தண்மை என்ன என்பது பற்றி நாம் அறிந்து கொண்டால் மாத்திரமே இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடையலாம்.
அந்த வகையில் நமது இலங்கையில் இன்று சிறுகச் சிறுக வேரூன்றிக் கொண்டிருக்கும் சத்தியத்திற்க்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இந்தப் போராட்டத்தை நாம் மூன்று வகையாக நோக்கலாம்.
1. இஸ்லாத்தின் வளர்ச்சியின் மீதான அவர்களின் அச்சம்
2. இஸ்லாத்தின் மீது ஏற்ப்பட்டுள்ள அவர்களின் காழ்ப்புனச்சி
3. இஸ்லாம் பற்றியத் அவர்களின் தவறான புரிதல்;.
எனவே இன்றய இந்த சூழ்நிலையில் சதிதியத்திற்க்கு எதிரான இந்தப் போராட்டத்தினை அழித்தொழிக்கும் வகையிலான செயற்திட்டங்கள் பற்றி சிந்திப்பதை விட அதனை எவ்வாறு எதிர் கொள்வது எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி சிந்திப்பதுதான் சாலவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் மேற்கூறப்பட்ட இந்த மூன்று வகையினர்களும் இருக்கும் காலம் எல்லாம் இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தினை ஒரு போதும் இல்லாமல் செய்ய முடியாது.
இவ்வாறான போராட்டங்களின் போது இருத் தரப்புகளுக்கும் பொருட்ச் சேதங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்ப்டுவது தவிர்க்க முடியாததே. இவ்வாறான இழப்புக்களைச் சந்திக்கத் துணிவு ஏற்ப்படாத வரை இந்தப் போராட்டத்திற்கு முகங்கொடுப்பதென்பது அசாத்தியமானதே என்பதுவும் அல்லாஹ்வால் நிர்னயிக்கப்பட்டுள்ள அவனின் நியதியேயாகும் என்பதனையும் நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்: இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும் பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும்- நற்போதனையாகவும் இருக்கின்றது. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் மேன்மையான வெற்றியாளர்கள். உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால்- அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;.
இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும் அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும-காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும் (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்? (அல்-குர்ஆன் : 3 : 138-143)
எனவே அல்-குர்ஆனை எமது வாழும் வழிகாட்டியாக ஏற்றிருக்கும் நாம் முடிந்த வரை நமது வாழ்வில் அதற்க்குச் செயல் வடிவம் கொடுப்பது அவசியமாகும். அந்த வகையில் காபிர்கள் விடயத்தில் நாம் எந்த நேரமும் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்க்குத் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று இஸ்லாம் எம்மைப் பணிக்கின்றதைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான்: அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்,(அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன் : 8 : 60)
எனவே மேற்கூறப்பட்ட இந்தத் தயாரிப்புகள் பற்றி நாம் எந்த அளவு கரிசனை செலுத்தியுள்ளோம் அல்லது குறைந்த பட்ச்சம் இது தொடர்பாக நமது சிந்தனைகளைச் செலுத்தியுள்ளோம் என்பது பற்றி இந்த இடத்தில் ஆராய்தல் அவசியமாகும்.
இவ்வாறு கவனயீனமாக நாம் விட்ட பிழைதான் இன்றய இந்த மிக மோசமான நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் இவ்வாறு நாம் சொன்ன மாத்திரத்தில் உடனடியாக போர் பிரகடணப் படுத்துகின்றோம் என்று யாரும் கருதிவிட வேண்டாம்.
மாறாக மேற்படி வசனத்தில் போர் கருவிகள் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னதாக من قوة அதாவது பலம் அல்லது சக்தி என்று பொதுவாக சொல்லப்பட்டிருக்கின்றது எனவே குறைந்த பட்ச்சம் அந்தப் பலம் அல்லது சக்தி என்ன என்றாவது நாம் இதுவரை சிந்தித்ததுண்டா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.
அவையாவன முதலாவது إيمان எனும் இறை விசுவாசமும் அதற்கு அடுத்ததாக أخوة எனும் சகோதரத்துவமுமாகும். இந்த இரு சக்திகளையும்தான் நாம் இன்று முற்று முழுதாகத் தொலைத்து விட்டுத் தவிக்குகின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் ஈமானுக்கு அடுத்ததாக அன்றய ஈமானிய சமூகத்திற்க்கு மத்தியில் மேற்கொண்ட இரண்டாம் கட்ட நடவடிக்கை ஈமானிய உள்ளங்களுக்கு மத்தியில் ககோதரத்துவப் பாசப் பிணைப்பைக்; கட்டி எழுப்பியதுதான் அவையிரண்டும் வலுவானதற்க்குப் பிற்பாடே ஆயுதம் ஏந்தி எதிரிகளை எதிர் கொண்டார்கள். மேற்படி இரு சக்திகளும் அவர்களிடம் வலுப்பெற்றிருந்ததனால்தான் சிறு சிறுக் குழுவாக இருந்த போதிலும் மிகப் பெரும் படைகளை எல்லாம் வெற்றி கொண்டார்கள்.
இந்த சகோதரத்துவம் என்பது إيمان எனும் இறை விசுவாசத்திற்கு அடுத்துள்ள அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்-குர்ஆன்: 3: 103)
உண்மையான சகோதரத்துவத்தின் அளவு கோல் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : அவர்களுக்குப்பின் தோன்றியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் ''எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் குரோதத்தை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்"" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (அல்-குர்ஆன்: 59: 10)
மேற்படி வசனத்தில் மிக முக்கியமான இரண்டு பண்புகள் கூறப்படுகின்றன.
1. ''எங்கள் இறைவனே! எங்களுக்கும்ää ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் ஈமானியச் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக.
2. ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் குரோதத்தை ஆக்காதிருப்பாயாக.
என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருப்பார்கள்.
அதாவது முதலாவது பண்பு நமக்கு முன் சென்றவர்களான அனைத்து முஸ்லிம்களைப் பற்றியும் நல்லெண்ணம் கொண்டு அவர்களுக்குப் பிளை பொறுக்கத் தேடுதல்.
இரண்டாவது பண்பு சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து சகோதர முஸ்லிம்களைப் பற்றிய குரோத மணப்பாண்மையிலிருந்து நம் உள்ளங்களைப் பரிசுத்தமாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல்;.
இன்று இந்த இரண்டு தன்மைகளில்; ஒரு அனுப்பிரமானமேனும் எம்மிடம் இருக்கின்றதா? எப்பொழுது நம்மிடம் இந்த இரு பண்புகளும் காணப்படுமோ அப்போதுதான் நமது ஈமானும் சகோதரத்துவமும் பலம் பெற முடியும். அதன் பிறகுதான் நாம் இலகுவாக எதிரிகளை எதிர்கொள்ளவும் சக்தி பெறுவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரு உள்ளங்களிலிருந்தும் பிற சகோதர முஸ்லிம்களைப் பற்றிய குரோதங்களைக் களைந்து தூய்மையான சகோதரர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக