வியாழன், 1 மே, 2014

ஊர் இரண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம்


ஊர் இரண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம் 

بسم الله الرحمن الرحيم

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு

السلام عليكم ورحمة الله وبركاته

الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد 

தயவு செய்து இதனை யாரும் பக்கசார்பு சிந்தனையுடன் பார்க்காது நடு நிலையோடு பார்க்குமாறு வேண்டியவனாக தொடர்கின்றேன்.

இன்றய நம் சமூகம் இவ்வாறான அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும்; உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கான பிரதான காரணம் நாம் இயக்க ரீதியாகவும் கட்ச்சி ரீதியாகவும் நமக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்திருப்பதுதான். இது இன்று படித்தவர்கள் முதல் பாமரர்கள் தலைவர்கள் முதல் தொண்டர்கள் அதிகாரிகள் முதல் சாமாண்யர்கள் முதலாளிகள் முதல் தொழிலாளிகள் செல்வந்தர்கள் முதல் ஏழைகள் போன்ற அனைவராலும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதனைத் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரிவினைக்கான காரணம் என்ன? அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி யாரும் பேசுவதாகவோ அல்லது சிந்திப்பதாகவோ அதற்கான தங்களால் முடியுமான ஆக்கபூர்வமான முயற்ச்சிகளைச் செய்வதாகவோ தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு பிரிவை அல்லது கட்ச்சியைச் சார்ந்தவர்களும் இப்படியான கசப்பான நிகழ்வுகள் ஏற்படுகின்ற போதெல்லாம் எவ்வாறு இதனைத் தமக்கும் தமது பிரிவுக்கு அல்லது கடச்சியிக்கும் சாதகமாக அமைத்துக் கொள்வது அல்லது பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றுதான் சிந்திப்பதாக எண்னத் தோன்றுகின்றது.

ஆதலால்தான் சில அறிக்கைகளுடனும் ஆக்ரோசமான உரைகளுடனும் அனைத்தும் முற்றுப் பெற்று விடுகின்றன மீண்டும் அவர்களின் அறிக்கைகளையும் உரைகளையும் நாம் பார்க்க வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இப்படியான விருப்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வேண்டும் அதுவரை அதனை எதிர்பார்த்திருப்பார்கள்.

காரணம் ஊர் இரண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம் என்பது போல் சமூகம் ஒன்று பட்டால் அவர்களின் இலக்கை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆதலால் அவர்கள் இந்தப் பிரிவினையைத் தங்களுக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ள முயற்ச்சி செய்வார்களே தவிர அதனை முடிவுக்குக் கொண்டுவர விரும்ப மாட்டார்கள்.

ஏனெனில் இன்று அனைவரிடமும் கட்ச்சி மோகமும் இயக்க வெறியும்தான் மேலோங்கிக் காணப்படுகின்றது. இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அவர்களின் சதா சிந்தனை எல்லாம் நமது கட்ச்சியின் இருப்பை எவ்வாறு பலப்படுத்துவது அல்லது தமது இயக்கத்தின் இருப்பபை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதாக்த்தான் இருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:
''இன்னும் நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும்  நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சங்கள்"" (என்றும் கூறினோம்). ஆனால் அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து  ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். எனவே அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டு விடும்.  (அல்-குர்ஆன்: 23: 52-54)

மேற்படி வசனம் நாம் எவ்வாறு ஒரே இறைவனை விசுவாசிக்கின்றோமோ அவ்வாறே ஒரே சமுதாயமாக இருந்து அல்லாஹ்வை அஞ்சியவர்களாக எமது செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எமக்கு வழிகாட்டுவதுடன் அதன் தொடரிலேயே பிரிவினை வாதிகள் தமது அறியாமையின் காரணமாக தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டுä தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து  ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். என்று கூறுகின்றது.

அத்துடன் அப்படிப்பட்ட பிரிவனைவாதிகளான அவர்களை ஒரு காலம் வரை அவர்களது அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டு விட வேண்டும். என்றும் மேற்படி வசனத்தின் வாயிலாக வழிகாட்டப்ட்டுள்ளோம்.

எனவே மேற்படி வசனத்தின்படி சமூக ஒற்றுமையைப் பற்றிய எவ்வித கரிசனையும் அற்ற அனைத்துத் தரப்பினர்களையும் புறந்தள்ளி பொது மக்களாகிய நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸின்பால் ஒன்றுபடுதல் அவசியமாகும்.

இஸ்லாம் முழுமையானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு மார்க்கமாகும் அது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியானதும் மிகச்சிறந்ததுமான வழிகாட்டலினைத் தன்னகத்தே கொணடுள்ளது என்பதனை ஏற்றிருக்கும் நாம் இஸ்லாம் பற்றிய எமது அறியாமையின் காரணமாக இஸ்லாத்தை ஆண்மீகம் இலௌகீகம் என்று பிரித்துப் பார்க்கின்றோம்.

ஆதலால்தான் இஸ்லாத்தின் விரோதிகளால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்ககும் அச்சறுத்தல்கள் ஏற்படுத்தப்படுகின்ற போதெல்லாம் அல்குர்ஆனின் பக்கமும் அல்ஹதீஸின் பக்கமும் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவ்விரண்டையும் முற்று முழுதாகப் புறக்கனித்துவிட்டு வேறு வழிகளைத் தேடுவதன் மூலம் சமூகத்தை வேறு விதமாக திசை திருப்புகின்றோம்.

இந்நிலையில் யாராவது ஒருவர் அல்-குர்ஆனின் பக்கமும் அல்ஹதீஸின் பக்கமும் கவனம் செலுத்துங்கள் அதிலே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்று கூறினால் சில சமூகப் புல்லுரிவிகள் அரசியலுக்குள் இஸ்லாத்தைப் புகுத்த வேண்டாம் என்று கூறி அவர்களின் இஸ்லாம் பற்றிய ஞானசூன்யத்தினை வெளிப்படுத்துகிறார்கள். இது அவர்களின் இஸ்லாம் பற்றிய அறியாமையின் அதி உச்சகட்டமாகும் என்றே கூற வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - அவர்கள்தான் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். (அல்-குர்ஆன்: 30: 7)

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...