செவ்வாய், 20 மே, 2014

எப்போது மாறும் இந்த நிலை ?

எப்போது மாறும் இந்த நிலை ?

நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது நாம் பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்விக் கற்ற போது எமது ஆசிரியர் எஸ். எம். ஏ. முபாரக் அவர்கள் சொல்லித்தந்த ஒரு கதை ஞாபகத்திற்க்கு வருகின்றது. அது இன்றைய நமது நிலைக்குச் சாலவும் பொருத்தமாக அமைந்திருக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு கையில் சாப்பாட்டுப் பார்சலுடன் மரணத் தறுவாயில் இருக்கும் ஒரு பூனைக்குப் பக்கத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றார் அப்போது அந்த வழியால் வந்த இன்னுமொரு மனிதர் நண்பரே ஏன் அழுகின்றீர்கள் என்று கேட்க்கின்றார் அதர்க்கு அந்த மனிதர் பாவம் இந்தப் பூனை சாகப் போகின்றது என்று கூறுகின்றார் 

அப்போது அந்த வந்த மனிதர் ஏன் சாகப்போகின்றது என்று கேட்குகின்றார் அதர்க்கு அம்மனிதர் சாப்பாடின்றி பசியால் என்று பதில் கூறுகின்றார் அப்போது வந்த மனிதர் சரி உங்கள் கையில் இருக்கும் பார்சல் என்ன என்று கேட்க்கின்றார் அதர்க்கு அம்மனிதர் இது என்னுடைய சாப்பாடு என்று கூறுகின்றார் 

அப்போது வந்த மனிதர் அப்படி என்றால் அந்த சாப்பாட்டைக் கொடுத்து அதன் உயிரைக் காப்பற்றலாம்தானே என்று கூறுகின்றார் அதர்க்கு அம்மனிதர் சீச் சீ அது விலை உயர்த சாப்பாடாயிற்றே அதைக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு மீண்டும் தனது அழுகையைத் தொடர்கின்றார்.

இந்த கதைக்கு ஒப்பானதாகத்தான் நமது முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலைக் காணப்படுகின்றது. 

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் நாலா பக்கத்திலிருந்தும் ஆபத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றது என்று அனைவரும் கவலைப்படுகின்றோம் ஆளையாள் கண்டித்துக் கொள்கின்றோம் நான் உயிரையும் கொடுக்கத்தயார் என்று உணர்ச்சிவசப்படுகின்றோம் என்றாலும் அந்த பசியால் சாகத்துடித்துக்கொண்டிருந்த பூனைக்கு எவ்வாறு அந்த மனிதர் கையில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு அதனைக் கொடுக்க மனமில்லாது கவலைப்பட்டுக் கொண்டிருந்தாரோ அப்படித்தான் நாமும் எதையும் இழக்கத் தயாரின்றி யாராவது முடிந்தவர்கள் இழக்கட்டும் என்றெண்ணி  வெறும் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றோம்.

உயிரைக் கொடுக்கத்தயார் என்று கூறுபவர்கள் கூட இன்னும் ஒரு ரூபாய் கொடுக்கக் கூடத் தயாராகாத நிலையே நீடிக்கின்றது. மனிதனுடைய மனநிலை அப்படித்தான் உயிரையும் துச்சமாகக் கருதுவான் என்றாலும் பணம் பொருளாதாரம் என்று வரும் போது சற்றுத் தாமதம்தான். 

அல்லாஹ் கூறுகின்றான் : அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான். அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், அவர்கள்  உங்களைப் போன்று  இருக்கமாட்டார்கள். (அல்-குர்ஆன்: 47: 37,38)

இத்தகைய கருமித்தனமும் கஞ்சத்தனமும் ஏற்ப்படுவதற்க்கான காரணம் மனிதன் இந்த உலக இன்ப சுகங்களை அளவு கடந்து நேசிப்பதேயாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : மனிதர்களுக்குப் பெண்கள், ஆண் மக்கள்;, பொன்னிலும் வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்;ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள ஆசை அழகாக்கப்பட்டிருக்கிறது. இவைகள் (நிலையற்ற இந்த) உலக வாழ்வின் அற்ப்பமான இன்பப் பொருட்க்;களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.(அல்-குர்ஆன்: 3: 14)

எப்போது இந்த நிலை மாறி எம்மிடம் உள்ளதில் எமது சக்த்திக்குட்ப்பட்ட வகையில் அல்லாஹ்வின் பாதையில் எமது நேரம் எமது பொருளாதாரம் போன்றவற்றிலிருந்து ஓரளவேனும் நாமும் தியாகம் செய்ய வேண்டும் எனும் நிலை ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஏற்ப்படாத வரை நாம் நம்மைப் பாதுகாத்துக்  கொள்ள முடியாது என்பது உறுதி.

நாம் உயிர்த் தியாகம் செய்வதற்க்கு முன்னதாகப் பொருளாதாரத் தியாகம் செய்ய வேண்டும் என்றுதான் இஸ்லாம் போதிக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது. (அல்-குர்ஆன்: 9: 41)

அல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (அல்-குர்ஆன்: 61: 10,11)

எப்போது மாறும் இந்த நிலை யார் மாற்றுவது யார் ஆரம்பித்து வைப்பது என்ற இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் அந்தப் பாக்கியவான்; யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

முனாப் நுபார்தீன்.


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...