நடுநிலையும் சகோதரத்துவமும்.
நடுநிலைச் சமுதாயம்
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸ_ல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள், யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி (வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன். (அல்-குர்ஆன் :2:143)
இந்த வசனத்தின் மூலம் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களாகிய நம்மை வல்ல அல்லாஹ் நமக்கு முன் அனுப்பப்பட்ட சமுதாயங்களுக்குத் தீர்ப்பு வழங்கும் நடு நிலையாளர்களாக மத்தியஸ்த்தர்களாக ஆக்கியிருக்கின்றான் என்று குறிப்பிடுகின்றான். இதன் பொருள் நாம் நமக்கு முன் சென்ற சமுதாயத்தினர்களுக்கு புனித அல்-குர்ஆனைக் கொண்டு தீர்ப்பு வழங்கக் கூடிய மத்தியஸ்த்தர்களாவோம் என்கபதாகும்.
இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாளை மறுமையில் நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள் அப்போது அவர்கள் இது ஆஜராகி விட்டேன் என் இறiவா என்று கூறுவார்கள் அப்போது அவர்களிடம் (உமக்கு அறிவிக்கப்பட்டதை உமது சமூகத்தினர்களுக்கு) எத்தி வைத்தீரா? என்று கேட்க்கப்படும் அதற்க்கு அவர்கள் ஆம் என்று கூறுவார்கள் அப்போது (அவர்களுடைய சமூகத்திடம்) இவர் உங்களுக்கு எத்தி வைத்தாரா? என்று கேட்க்கப்படும் அதற்க்கு அவர்கள் இல்லை எம்மிடம் எந்தவொரு எச்சரிக்கையாளரும் வரவில்லை என்று கூறுவார்கள். அப்போது (நபி நூஹ் (அலை) அவர்களிடம்) உமக்கு யாரும் சாட்ச்சிகள் உண்டா என்று கேட்கப்படும் அதற்க்கு (நபி நூஹ் (அலை) அவர்ககள்) நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களது உம்மத்தினர்களும் என்று கூறுவார்கள் அப்போது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்கள் அழைக்கப்படு வினவப்படுவார்கள் அதற்க்கு அவர்கள் அவர் எத்தி வைத்தார் என்று சாட்ச்சி கூறுவார்கள். நூல் : புஹாரி)
இன்னும் சில அறிவிப்புக்களில் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களாகிய நாம் அவ்வாறு சாட்ச்சி கூறும் போது உங்களுக்க எப்படித் தெரியும் என்று கேட்கப்படும் அதற்க்கு நாம் எமது தூதர் (ஸல்) அவர்கள் எமக்க ஒரு வேத்தினைப் பெற்றுத்தந்திருந்தார்கள் அதில் நாம் படித்தோம் எனவே அதனை நாம் முழு மனதுடன் விசுவாசித்தோம் என்று கூறுவதாகப் பதிவாகியுள்ளது.
எனவே அல்-குர்-ஆனைப் படித்து அதன் ஊடாக எமக்க முன் சென்ற சமூகங்களுக்கே நடுநிலையாளர்களாக மத்தியஸ்த்தர்களாக இருக்கும் நாம் எம்முடன் வாழுகின்ற மக்களுடன் எந்தஅளவு நடுநிலையைப் பேனுவது கட்டாயம் என்பது பற்றி நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களின் உம்மத்தின் மூன்று வகையினர்கள் .
1. தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள்
2. நடுநிலையாக நடந்து கொண்டவர்கள்
3. நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்கள்
அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி;ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்-குர்ஆன் :35: 31-32)
இந்த மூன்று வகையினர்களையும் நாம் பின்வருமாறு விளங்கலாம்.
1. தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள் : இறைநிராகரிப்பிலிருந்தும் இணைவைப்பிலிருந்தும் தம்மை முழுமையாக விடுவித்துக் கொண்டவர்கள் என்றாலும்; தமது பலவீனங்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்; காரணமாக அனைத்து விதமான பாவங்களிலிலும் ஈடுபடக்கூடியவர்கள்.
2. நடுநிலையாக நடந்து கொண்டவர்கள்; : இறை நிராகரிப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் அனைத்து விதமான பாவ காரியங்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பாதச் சிலத் தகாதச் செயல்களைச்; செய்யக்கூடியவர்கள்.
3. நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்கள்; : இறை நிராகரிப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் அனைத்து விதமான பாவ காரியங்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டதுடன் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்பாத எந்தவொருச் செயலிலும் ஈடுபடாதவர்கள்.
மேற்கூறப்பட்ட மூவகையினர்களும் சுவர்க்கம் பிரவேசிக்கக் கூடியவர்களே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்கள் : அவர்கள் எவ்வித விசாரனையுமின்றி சுவர்க்கம் பிரவேசிப்பவர்களாவர்
2. நடுநிலையாக நடந்து கொண்டவர்கள் : அவர்கள் இலகுவாக விசாரனை செய்யப்பட்டு பின்னர் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களாவர்
3. தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்கள் : அவர்கள் மஹ்ஷர் நாள் முழுவதும் விசாரனைக்குட்படுத்தப்பட்டு அதன் பிறகு அல்லாஹ்வின் அளப்பெரிய அருளின் காரணமாக மன்னிக்கப்பட்டு இறுதியாகச் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களாவர்
எனவே அவர்கள் செய்கின்ற பாவமான கருமங்களினாலும் விரும்பத் தகாத செயல்களினாலும் அவர்கள் ஒரு போதும் நம் சகோதரர்கள் எனும் நிலையிலிருந்து வெளியேறிவிட மாட்டார்கள்.எந்நிலையிலும் அவர்களுடன் நாம் நமது சகோதரத்துவத்தினைப் பேனுவது கடமையாகும்.
சகோதரத்துவத்தின் அளவுகோல்
அல்லாஹ் கூறுகின்றான் : ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்-குர்ஆன் :9:11)
இதுதான் இஸ்லாம் எமக்குக் கற்றுத்தரும் சகோதரத்துவத்திற்க்கான வரைவிலக்கணமும் அளவுகோலுமாகும் எனவே இந்த வரைவிலக்கணத்தின் பிரகாரம் மேற்கூறப்பட்ட அனைவரும் நமது இஸ்லாமிய சகோதரர்களே.
எனவே அவர்ளால் அறிந்தோ அறியாமலோ நிகழ்கின்ற தவறுகளுக்காகவும் விரும்பத்தகாதச் செயல்களுக்காகவும் அவர்களை பளிப்பதும் விமர்சிப்பதும் மானபங்கப்படுத்துவதும் தரக்குறைவாகப் பேசுவதும் பெரும் பாவமாகும் என்பதை நாம் புரிந்து இவ்வாறான செயல்களிலிருந்து விலகி நமது சகோதரத்துவத்தினை உறுதிச் செயவதற்க்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக.
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக