உனது உண்மையான சுபீட்சத்தைத் தெரிந்து கொள்.
பகுதி -01
அரபி மூலம்: பொறியியலாளர் இப்றாகிம்
அல்- யஹ்யா
தமிழில் : முனாப் நுபார்தீன்
நீர் உனது உண்மையான சுபீட்சத்தினை அடைந்து கொள்ள விரும்புவீராயின்
இப்பகுதியை நன்றாகப் படிப்பீராக.
வாழ்வும், சுபீட்சமும்
சுபீட்சம் மனிதன் தொலைத்த ஒரு உன்னதமான பொருள் அதற்காக
அவன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் முயற்சி செய்து அதனைத் தேடியிருக்கிறான். மனிதர்கள்
எல்லோரும் அதனைத் தேடுகின்றனர். அநேகர் அது பணத்தால்தான் அடையப் பெறும் என நம்புகின்றனர்.
இதனை உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான Bill Gate microsoft நிறுவனத்தின் இஸ்தாபகர்
நிராகரிக்கிறார். மகிழ்சியை செல்வம் மாத்திரம் கொண்டுவர போதுமானதல்ல. மாறாக செல்வம்
அழிவையே கொண்டுவரும் என்கிறார்.
(சிரிய நாட்டு அல்பிராட் செய்திப் பத்திரிகை இதழ் 556 05.07.2006)
ஆயின் மகிழ்சி என்பது பணச் சேகரிப்பு, அந்தஸ்த்துயர்வு, பிள்ளைப் பெருக்கம்
என்பனவல்ல. சுபீட்சம் என்பது கண்களால் காண முடியாத அளவிட முடியாத களஞ்சியப்படுத்த முடியாத
ஒரு ஆத்மீக வயப்பட்டதாகும். மகிழ்ச்சியானது இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவனது படைப்பாளன்
அவனுக்கு வழங்கிய ஆற்றல்கள், சக்திகள், திறமைகள் மூலம் ஒரு
ஊழியனாக ஆத்ம சாந்தி உள நிம்மதி, மன அமைதி, மனிதப் பண்புகள் உடையவனாக
முக மலர்ச்சியுடையவனாக செயற் படுவதாகும். அவனுக்கு சோதனைகள் ஏற்படும் போது அவற்றை பொறுமையுடன்
திருப்தியுடன் கூலியை எதிர்பார்த்து எதிர்கொள்வான். மரணம் அவனை அடையும்போது அதில் அல்லாஹ்வுடனான
நெருக்கத்தைக் காண்கிறான். நிரந்தர உலகை நோக்கி பயணிப்பதை உணர்கிறான். அங்குதான் அவன்
செய்த நன்மை, தீமைகளுக்கான உண்மையான
பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்கிறான்.
இப்பிரபஞ்சம் யாருக்குரியது?
இப்பிரபஞ்சம் அதன் வானங்கள் பமிகள் அதிலுள்ள அனைத்தும்
தூய்மையான அல்லாஹ்வுக்கு சொந்த மானவையாகும் அவன் தான் அவற்றினை இயக்கிக் கண்காணிப்பவன்.
உலகத்தாரின் இரட்சகனான அல்லாஹ் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவன் உரிருள்ளவன், நித்திய ஜீவன், உண வளிப்பவன், படைப்புகளை கண்கானித்து
அவற்றினது அசைவுகள் அசைவற்று நிலையாக உள்ளவைகளை அறிந்தவன். எனவே உண்மையான சுபீட்சத்தினை அடைந்து கொள்வதற்காக.
அவனை விசுவாசம் கொள்வதும் ஏகத்துவப் படுத்துவதும், வணங்கி வழிபடுவதும்தான்
மனிதர்கள் மீது கடமையாகும்.
உலகின் முடிவு
உலக வாழ்க்கை ஒரு குறுகிய காலத் தவனையாகும். அதை அறிந்தவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இப்பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ்வைத் தவிர உலகில்
உள்ள எல்லாம் அழிந்து விடும். பின்னர் விசாரணைக்காக அல்லாஹ் அவர்களை மீண்டும் எழுப்பி
உலகில் அவர்களது செயற்பாடுகளுக்காக விசாரணை செய்வான். அல்லாஹ் யாருக்கும் அநியாயம்
செய்வதில்லை. உண்மையான சுபீட்சம் இவ் விசாரணையில் நீர் வெற்றி பெறுவதாகும். இவ்விசாரணையின் அளவீட்டுக்
கருவி தூதுவருக்கு நீங்கள் என்ன பதில் கூறுனீர்கள் என்பதாகும்.
எமது சுபீட்சத்திற்காக
அல்லாஹ் மனிதர்களில் நின்றும் வேறுபடும் ஒரு படைப்பைப்
படைத்துள்ளான் அவர்கள்தான் சங்கையான மலக்குமார்கள் (வானவர்கள்) அதனை விசுவாசிப்பது
கடமையாகும். அவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்து, உரிய பொறுப்புக்களையும், கடமைகளையும் சுமத்தியுள்ளான்.
உதாரணமாக! செயல் களைப் பதிவுசெய்தல், மழை பொழிவித்தல், உயிர்களைக் கைப்பற்றுதல், சுபீட்சத்திற்கான பாதைகளை
தெளிவு படுத்தும் முகமாக நபிமார்களுக்கு தூது கொண்டு செல்லல் (வஹீ அறிவித்தல்) போன்ற
செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு அல்லாஹ் உருவாக்கிய காரணங்கள், வெளிப்பாடுகள் இல்லை
என்று பொருள் ஆகாது.
மகத்துவமான ஆதாரம்
அல்லாஹ் தௌராத், இன்ஜீல், ஸப10ர், குர்ஆன் ஆகிய வேதங்களை
நபிமார்களுக்கு இறக்கிவைத்துள்ளான். இவ்வேத நூல்கள் யாவும் பரிசுத்தமானவை. அவை தெளிவான
பிரமாண்டமான தூதுத்துவத்தை உறுதிப் படுத்துகின்றன. அதுதான் வழிபடுதல் மூலம் அல்லாஹ்வை
ஒருமைப்படுத்துவதும் அவனுக்கு இணைவைப்பதை தவிர்ப்பதும் கடமையாகும். இவ்வேத நூல்கள்
மக்களை நல்வழிக்கு வழிகாட்டுகின்ற வாழ்க்கையை ஒழுங்கமைக்கின்ற ஷரீஅத் சட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகும்.
இவ்வேதங்கள் அனைத்தும் குர்ஆனைத்தவிர கால ஓட்டத்தில் திரிபுக்கு உட்பட்டுள்ளன. குர்ஆன்
ரஸ_ல்மார்களில் இறுதியான
முஹம்மத் அவர்கள் மீது அருளப்பட்டது அதில் அல்லாஹ் பயனுள்ள முன்னைய வேதங்களின் வழிகாட்டல்கள்
மறுமைவரை மக்களுக்குப் பொருத்தமான சட்டங்கள் போன்றவைகளைச் சேர்த்துள்ளான்.
அதனை அல்லாஹ் நபியவர்களுக்கு ஒரு அத்தாட்சியாக ஆக்கினான்.
அழிவு, மாற்றம் என்பவற்றிலிருந்து
அதனைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுள்ளான். எல்லா நூல்களையும் ஆதிக்கம் செய்யக்
கூடியதாக ஆக்கியுள்ளான். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர்கள் கண்டுபிடித்த பல்வகைக்
கண்டுபிடிப்புகளுக்கு அதனை உத்தரவாதப் படுத்தியுள்ளான். இதனால் எல்லாப் படைப்புகளும்
குர்ஆனை விசுவாசம் கொள்வதையும் பின்பற்றுவதையும் கடமை யாக்கியுள்ளான். உண்மையில் நாம்
எந்த வொரு கருவியையும் இயக்க பயன்படுத்த வேண்டுமாயி;ன் அதனை உருவாக்கியவரின்
வழிகாட்டி நூலைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. அறிவு, ஆத்மா, உடல் ஆகியவற்றைக் கொண்டுள்ள
இறந்த காலம்,
நிகழ்காலம், எதிர்காலம் உள்ள மனிதனுக்கு
எவ்வாறு? இப்பிரபஞ்சத்தில் வெற்றி, சுபீட்சம் மற்றும்
வாழ்வின் அர்த்தத்தை நிறைவு செய்வதன்பால் இட்டுச் செல்லக்கூடிய மனிதனுக்கு வழிகாட்டக்
கூடிய ஒரு கைநூல் உண்டா? மனித சுபீட்சத்திற்கான ஆதாரமாகவும் வழி காட்டியகவும் குர்ஆன்
உள்ளது. அதனைப் படைத்தவன் காரணிகளை அறிந்தவன் சிந்தனை நடை, ஆத்மீக, அறிவியல், உடலியல் தேவைகளை சமநிலையில்
ப10ர்த்தி செய்வதற்கான
முறைகளை உள்ளடக்கியவாறு குர்ஆனை உருவாக்கியுள்ளான்.
எவர் அதனை விளக்கம், கருத்துடன் வாசிக்கிறாரோ
அவர் முழுமையான நிகரில்லாத மகிழ்ச்சியை உணர்வார்.
மனித இனத்தின் தலைவர்கள் (வழிகாட்டிகள்)
அல்லாஹ் ஆதம் அவர்களை மண்ணால் படைத்தான்.
அவர் முதல் மனிதர். ஏகத்துவக் கொள்கையுடையவராக, முஸ்லிமாக ஆக்கினான்.
பரீட்சிப்பதற்காக அவருக்க ஒரு சந்ததியை உருவாக்கினான். கால ஓட்டத்தில் மக்கள் வழி தவறினர்.
ஷைத்தான் அவர்களை வழிகெடுத்தான். சிலைகளை வணங்கினர், பாவகாரியங்களில் வீழ்ந்தனர்.
இதனால் மனிதர்களில் இருந்து தூதர்களை அனுப்பினான். உதாரணம்: நூஹ் , இப்றாஹீம் , மூஸா , ஈஸா போன்றவர்களை அல்லாஹ்
நன்மாராயம் சொல்வோராகவும் எச்சரிக்கை செய்வோராகவும் இம்மையிலும் மறுமையிலும் உண்மையான
மகிழ்ச்சியைப் பெற அல்லாஹ்வுடைய தூதை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக அனுப்பி வைத்துள்ளான்.
அனைத்து நபிமார்களையும் ஈமான் கொள்ளாது, அவர்களை நேசிக்காது
ஓர் அடியானின் இஸ்லாம் சம்ப10ரணமாகுவதில்லை. இறுதியானவர்கள் முஹம்மத் ஆவார். அவர்கள் மனித
வரலாற்றிலே மிக உன்னதமான ஆளுமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு அதிகமான மேற்கத்திய நடுநிலை அறிஞர்கள் சான்று கூறியுள்ளார்கள்.
உதாரணமாக அமெரிக்க அறிஞர் micle h.Hart கூறும்போது நிச்சயமாக முஹம்மத் அவர்கள் மனித வரலாற்றில்
ஆன்மீகம் இலௌகீகம் போன்ற இரு
தளங்களிலும் மிக உயர்ந்த மட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே மனிதரவார். இந்த ஒரே தனித்துவமான
நிலை ஆண்மீகம் இலௌகீகம் இரண்டிலும் தாக்கம் புறிந்தமைக்கு நிகராக யாரும் இல்லை. இதனால்
மனித வரலாற்றில் தாக்கமுடைய பெரும் ஆளுமையாக கருதப்பட உறுதியளித்தது.
குழப்பம் மகிழ்ச்சியை
வேட்டையாடுகிறது.
குழப்பம் எந்தப் பயனையும் அழிப்பதில்லை. ஆனால் உனது
ஆத்மாவில் சோகத்தை உருவாக்குகிறது. உனது உடம்பில் நோயைப் பதிக்கிறது. உனது ஆத்மாவுக்கு
தொடர் கவலையைக் கொண்டுவருகிறது. எவன் ஒருவன் இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பவை யாவும் அல்லாஹ்வின்
நியதிக்குற்பட்டது. அது இடம்பெறமுன் அதனை அல்லாஹ் எழுதி விட்டான் என அறிந்துகொள்கிறானோ
(அவன் அவநம்பிக்கை, கைசேதத்தைக் கொண்டுவரும்
பிரதிகூலமான குழப்பத்தைக் காண்பதில்லை. அதே நேரம் மனிதன் விளைவுகளை அடைந்துகொள்ள இட்டுச்
செல்லும் காரணிகளை மேற்கொள்ள கட்டளை இடப்பட்டுள்ளான்.) அவன் நேரடித் தொடர்பாளன் இம்மை மறுமை செயல்களுக்கும், இம்மை மறுமையில் கிடைக்கும்
பயன்களுக்கும் பொறுப்பாளனாவான் நடவடிக்கையை விட்டுவிட்டு இறை நியதியை காரணங்காட்டுவது
சரியானதல்ல. எனினும் திருப்திகொண்டு நியதிகளை வகுத்தவனிடம் கூலியை எதிர்பார்க்கலாம்.
இந்த நம்பிக்கை மனிதனை சமநிலை உடையவனாகவும் மன அமைதி பெற்றவனாகவும் மகிழ்சியுடையவனாகவும்
விணைத் திறன் உடையவனாகவும் ஆக்குகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக