சுவர்க்கம் நரகத்திற்க்கான அளவுகோல்.
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ -இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும். எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். (அல்-குர்ஆன்: 34-41)
மேற்படி இந்த இறை வசனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதுமாகும் ஏனெனில் இந்த வசனங்கள்;; சுவர்க்கம் நரகத்தின் அளவு கோலாக இருக்கின்றது எனவே இந்த இறை வசனங்களை அளவு கோலாகக் கொண்டு எம்மை நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பது பற்றி நாமே முடிவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேற்பன வசனங்களில் நரகவாசிகளுக்குரிய பண்புகள் இரண்டும் அவ்வாறே சுவர்க்க வாதிகளுக்குரிய பண்புகள் இரண்டு கூறப்பட்டுள்ளன
அல்லாஹ் கூறுகின்றான் :
1. எனவே, எவன் வரம்பை மீறினானோ -
2. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
அவனுக்கு,நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
1. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி
2. மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.(அல்-குர்ஆன்: 34-41)
முதலாவதாக நரகவாசிகளுக்குரிய இரண்டும் பண்புகள்
அவையாவன :
1. அல்லாஹ்வின் வரம்பை மீறுதல் அதாவது அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பற்றி பராமுகமாக இருத்தல்.
2. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தல் அதாவது மறுமைக்கும் பார்க்க இவ்வுலக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
அடுத்ததாக சுவர்க்கவாதிகளுக்குரிய இரண்டும் பண்புகள்
அவையாவன :
1. தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சுதல் அதாவது நாம் இவ்வுலகில் கழிக்கின்ற ஒவ்வொரு வினாடியிற்க்கும் எமது ஒவ்வொரு அசைவுக்கும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கணக்குக் கொடுத்தாக வேண்டும் எப்பது பற்றி சதா அச்சத்துடன் வாழ்வார்கள்.
2. மனோ இச்சைகளிலிருந்து உள்ளத்தைத் தடுத்துக் கொள்ளுதல் அதாவது மனம் போன போக்கில் வாழாது அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகின்ற பிரகாரம் வாழுதல்.
மேற்படி இந்த இரண்டு வகையில் நாம் எந்த வகையைச் சார்ந்திருக்கின்றோம்?
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக