அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் அவல்லாஹ்வின் திருப் பெயரால்…
நபித் தோழர்கள் வாழ்வினிலே.
பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
பின்வரும் பிலால் (ரலி) அவர்கள் மற்றும் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள் ஆகிய இரண்டு நபித் தோழர்களுடைய இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தை உளப்பூர்வமாகப் படித்துப் பாருங்கள் உங்கள் அனுமதியின்றியே உங்கள் கண்கள் கலங்குவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது போகும்.
ஒரு முறை நபித் தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் காலித் பின் வலீத் பிலால் இபுனு ரபாஹ் அபூதர் அல் கிப்பாரி (ரலி) போன்ற நபித் தோழர்கள் ஒரு சபையில் ஏதோ ஒரு விடயம் பற்றி வாதப்பிரதிவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது அபூதர் அல்-கிப்பாரி (ரலி) அவர்களைப்; பார்த்து பிலார் (ரலி) அவர்கள் உமது கருத்துப் பிழையானது என்று கூறினார்கள் அதனைக் கேட்ட அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள் பிலார் (ரலி) அவர்களைப் பார்த்து கறுப்பியின் மகனே என்ன எனது கருத்துப் பிழையா? என்று கூறிவிடுகின்றார்கள்.
உடனே பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் உம்மைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன் என்று கூறியவாறே கோபம் மேலிடக் கவலைத் தோய்ந்தவர்களாக நபி (ஸல்) அவர்களிடம் சென்று சாலாம் கூறிவிட்டு அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அபூதர் எனக்கு என்ன சொன்னார் தெரியுமா என்று வேதனையுடன் கூறினார்;.
அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படி உனக்கு என்னதான் சொன்னார் என்று கேட்டார்கள். அதற்க்கு பிலால் (ரலி) அவர்கள் கறுப்பியின் மகனே என்று கூறி எனதுத் தாயைப் பளித்து விட்டார் என்றார்கள். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் மதிவதனத்தில் கோபத்தின் வெளிப்பாடு தோன்றியது.
அதற்க்கிடையில் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களும் அங்கு வந்து விடுகின்றார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களைப் பார்த்து நீர் கறுப்பியின் மகனே என்று கூறி அவரின் தாயைப் பளித்தீரா என்று வினவியவாறு நீர் அறியாமைக்காலத்து பண்பு கொண்ட ஒரு மனிதராவீர் இன்னும் உம்மிடம் அறியாமை எஞ்சியுள்ளது என்று கண்டித்துக் கூறினார்கள்.
இதனைக் கேட்ட அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள் தனது சகோதரின் தாயைப் பளித்து அவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டேனே எனும் கவலைத் தாங்காது உடனே அளத்தொடங்கி விட்டார்கள் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள் அல்லாஹ்விடம் தனக்காகப் பிழைபொறுக்கத் தேடுமாறு மன்றாடினார்கள்
அதன் பிறகு பிலால் (ரலி) அவர்களின் வழியை மறித்துக் கொண்டு தனது தலையை பிலால் (ரலி) அவர்களின் பாதத்தடியில் வைத்துப் படுத்துக் கொண்டு பிலாலே அல்லாஹ்வின் மீதாணையாக உனது பாதத்தால் எனது கண்ணத்தை மிதிக்கும் வரை நான் எனது தலையை நிமிர்த்தவே மாட்டேன் நீயோ என்னிலும் கண்ணியமானவராவீர் நானோ மிகத்தாழ்தவனாகிவிட்டேன் என்றுக் கூறி அழுதார்கள்.
இதனைக் கேட்ட பிலால் (ரலி) அவர்களும் தன் சகோதரனின் உள்ளத்தை வேதனையடையச் செய்து விட்டேனே என்றுக் கவலைப் பட்டு அழத் தொடங்கி விட்டார்கள் பிறகு அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் கன்னத்தின் மீது முத்தமிட்டு அவர்களை மன்னித்து விடுகின்றார்கள்.
மேற்படி சம்பவம் புகாரி முஸ்லிம் உட்ப்பட இன்னும் பல நபி வழித் தொகுப்புக்களில் சிறு சிறு மாற்றங்களுடன் பதிவாகியுள்ளது. இது அவை அனைத்தினுடையவும் சுருக்கமானத் தொகுப்பேயாகும்
மேற்படி சம்பவத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகளும் முன்மாதிரிகளும் அதிகமாக இருக்கின்றன.
1. அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் ஈமானின் வலிமையும் இறையச்சமும் பிரதிபலிக்கின்றன.
2. ஒரு ஈமானியனிடம் எந்நேரமும் தனது குறங்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலைக் காணப்படும்.
3. பிலால் (ரலி) அவர்களின் தன்னடக்கமும் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையும்
4. தனது சகோதரன் தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பட்ச்சத்தில் அவனை மன்னித்து விடும் மனோ நிலை.
5. பழித்துரைத்தல் என்பது அறியாமைக்காலச் செயலாகும்.
6. தன் சகோதரர்களால் தனக்கு ஏற்படும் அநியாயங்களுக்கெதிராக தான் செயல்படாது அவைகளைத் தiலைமைக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.
இந்த சம்பவத்தில் இது போன்ற இன்னும் பலப் படிப்பினைகளும் முன்மாதிரிகளும் நமக்குக் காணக்கிடக்கின்றன எனவே இப்படியானப் புணிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் இகபரமிரண்டிலும் வெற்றி பெறுவோமாக.
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக