அமைச்சர் ரிஷாட்; பதிய்யுத்தீன் அவர்களின்
ஞானசாரருக்கு எதிரான வழக்கும் நமது நிலைப்பாடும்.
அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்கள் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றார் என்றத் தகவல் அறிந்தவுடன் நாம் இச்சந்தர்ப்பத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் ஏனெனில் இது அதற்க்குப் பொருத்தமான சந்தர்ப்பம் கிடையாது சந்தர்பம் சாதகமாக அமையும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தோம்.
இந்த எமது ஆலோசனையைப் பார்த்த அதிகமான ககோதரர்;கள் என்னிடம் அதற்கான காரணம் பற்றி விளக்குமாறுக் கேட்டிருந்தார்கள் ஆதலால் அவர்களுக்காக எமது இந்த விளக்கத்தினை இங்கு பதிவு செய்கின்றோம்..
நாம்;; தற்ச்சமயம் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஆலோசனைசனை வழங்கியதற்க்கான காரணம் பற்றி விழக்குவதற்க்கு முன் இன்றய நீதித் துறையின் பின்வரும் வரலாற்றைத் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
முதல் முதலாக அனுராதபுர அட்டபொக்குன எனுமிடத்தில் பல நூற்றாண்டு பளமைவாய்ந்த முஸ்லிம்களின் பூர்வீகத்தினைப் பறைசாட்டிக் கொண்டிருந்த மண்ணறையுடன் கூடிய தக்கியா காவல் துறையினரின் பூரணப் பாதுகாப்புடன் பௌத்த பாசிச கும்பலால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
அது தொடர்பான வழக்கு இன்றுவரை எவ்வித தீர்ப்புமின்றி நீதி மன்றத்தில் தூங்கிக் கிடக்கின்றது .
அவ்வாறே அதனைத் தொடர்ந்து பல பள்ளிவாயில்கள் மத்ரஸாக்கள் வணக்கஸ்தலங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிருவனங்கள் வர்த்தக நிலையங்கள் வாகணங்கள் சொத்துக்கள் போனறவை தாக்கப்பட்ட அழிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளும் பொலிஸ் முறைப்பாடுகளும் எவ்வித விசாரனையும் தீர்ப்புமின்றி நீதி மன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன.
இவற்றுள் ஒரு சில வழக்குகளும் முறைப்பாடுகளும் பேரினவாத பாசிச கும்பல்களின் அச்சுறுத்தல் காரணமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கதாகும்.
இவ்வாறு வாபஸ் பெறப்பட்டவைகளுள் பெசன் பக் தாக்குதல் தொடர்பான வழக்கு மற்றும் மகியங்கன பள்ளிவாயல் தொடர்பான முறைப்பாட்டை உதாரணமாகக் கூறலாம்
பெசன் பக் தாக்குதல் தொடர்பான வழக்கு முதல் கட்ட விசாரனையிலேயே வாதியினால் வாபஸ் பெறப்பட்டது. அவ்வாறே மகியங்கன பள்ளிவாயல் தொடர்பான விடயம் இறுதிக்கட்டம் வரை பல தசாப்த்தங்களாக இந்த இடத்தில் பள்ளிவாயல் இருந்தது என்;று வாதிட்டு வந்த அதன் தலைவர் அவர்களே ஒரே இரவில் யார் சொன்னது இங்கு பள்ளி இருந்ததென்று இங்கு ஒரு பள்ளி இருந்ததே கிடையாது என்று தலைகீழாக மாறி நின்றுப் பிரகடனப்படுத்தினார்.
மேற்ப்படி சம்பவங்களிலிருந்து நாம் இவ்வாறான வழக்குகளின் முடிவுகளை பின்வருமாறு வகுத்து நோக்கலாம்
1. வழக்குப் பதிவுடன் அது அப்படியே கைவிட்டு விடப் பட்ட நிலை
2. வழக்குத் தாக்கல் செய்தவரே அதனைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளும் நில
இந்த இரண்டு நிலைகளுள் ஒன்றிற்க்குள் அடைக்கலம் பெற மறுக்கும் பட்ச்சத்தில் அதன் மூன்றாம் நிலையாகிய
3. எதிர் தரப்பினரின் அச்சுறுத்தலுக்கும் அத்துமீறலுக்கும் உள்வாங்கப்படுதல் எனும் நிலைக்குத் தள்ளபபடும்
இந்த மூன்று நிலைகளைத் தாண்டி ஒரு போதும் நியாயம் எனும் நான்காவது நிலைக்குச் செல்லவும் முடியாது ஒரு போதும் நியாயம் பெறவும் முடியாது. இதுதான் இன்றைய நீதித் துறையின் கசப்பான வரலாற்றுண்மை.
இந்த மூன்று நிலைகளையும் தாண்டி நியாயம் எனும் நான்காவது நிலைக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால் அதற்க்கு இப்படியான சாதாரணத் துணிச்சல் மட்டும் இருந்து போதாது அதற்க்கென்று பிரத்தியேகமான அசாதாரணத் துணிச்சல் தேவைப்படும்.
அப்போதுதான் தொடர்ந்தும் போராடி நியாயம் பெற முடியும் இன்றேல் மேற்படி மூன்று நிலைகளில் மிக இலகுவான நிலைகளாகிய முதலிரண்டு நிலைகளுள் ஒன்றிற்க்குள் தமது முறைப்பாட்டை அடகு வைத்து விட்டு கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் இன்றைய நீதித் துறையின் யதார்த்தம்.
அமைச்சர் றிஷாட் அவர்களின் வழக்கின் நிலைப்பாடு.
அமைச்சர் றிஷாட் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இரண்டு பிரதான கோரிக்கைகளைக் கொண்டதாகும்
1. தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்ப்படுதியதற்க்காக 500 மில்லியன் ரூபா மான நஷ்டஈடு வழங்கல் வேண்டும்
2. அல்லது பகிரங்கமாக மன்னிப்புக் கோரல் வேண்டும்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளைப் பொறுத்தவரை நிச்சயமாக களபொட அத்த ஞானசாரரை ஒரு போதும் இதற்க்குள் உட்ப்படுத்த முடியாது என்பது தௌ;ளத் தெளிவு.
ஆகவேதான் அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நான் மேலே கூறிய மூன்று நிலைகளாகிய
1. முதலாம் நிலைக்குள் புகுந்து பத்துடன் பதின் ஒன்றாகவே இருக்கும்
2. அல்லது இரண்டாம் நிலைக்குள்ளாகி அதிலிருந்து அவர் வாபஸ் பெற வேண்டும்
3. இல்லை என்றால் மூன்றாம் நிலையாகிய பாசிச பொதுபள சேனாவினர்களின் கடுமையானத் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படக் கூடும்.
இந்த மூன்று நிலைகளைத் தாண்டி நியாயம் எனும் நான்காம் நிலையை அடைவதென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.
எனவே அவர் மேற்படி இந்த மூன்று நிலைகளுள் எந்த நிலைக்கு முககொடுக்க வேண்டி ஏற்ப்பட்டாலும் அது அவருக்கும் மட்டும் பாதிப்பை ஏற்ப்படுத்தாது மாறாக அவர் சார்திருக்கும் சமூகத்திற்கும் சேர்த்தத்தான் அது பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற காரணத்தினால்தான் அவரை அவ்வாறானதொரு வழக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தொடரத் தேவை இல்லை என்று நாம் அவருக்கு ஆலோசனை வழங்கி இருந்தோம்.
அத்துடள் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது முன்னோக்கிச் செல்ல வேண்டுமகவிருந்தால் அதற்க்கு நாம் மேலே கூறிய மூன்றாம் நிலையைச் சமாளிப்பதற்க்கு அவருக்கு அதிகபட்ச்சப் பாதுகாப்புத் தேவைப்படும் ஆதலால்தான் அவர் வழக்குத் தொடர்வதாக இருந்தால் முதலாவதாக அவரதுப் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி இருந்தோம்.
என்றாலும் அமைச்சர் அவர்களின் வழக்கு மேற்கூறப்பட்ட எந்த நிலைக்குள் செல்கின்றதென்றுப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக