திங்கள், 26 மே, 2014

நபித் தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்.

நபித் தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்.

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்-குர்ஆன் :9 :118)

மேற்படி இறைவசனம் தபூக் யுத்தத்தின் போது அதில் எவ்வித காரணமும் இன்றி கலந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக நபி (ஸல்)  அவர்களால் சமூகப் பகிஷ்கரிப்புச் செய்யப்பட்டு பிறகு அல்லாஹ்வால் மன்னிப்பழிக்கப்பட்ட உண்மையாளர்களான மூன்று நபித்தோழர்களைப் பற்றி அருளப்பட்ட வசனமாகும்.

தபூக் யுத்தத்தின் போது அதிகமான நபித் தோழர்கள் யுத்தத்திற்க்குச் செல்லாது இருந்து விட்டார்கள் அவர்களுள் நயவஞ்சகர்கள் அல்லாஹ்வால் சலுகை அளிக்கப்பட்ட பலவீனர்கள்; மற்றும் இயலாதவர்கள்; போன்றோர் அடங்குவர். 

அவ்வாறு யுத்தத்திற்க்குச் செல்லாது இருந்தவர்களுள் மேற்கூறப்பட்ட இந்த மூன்று நிலகளுக்கும் அப்பாற்ப்பட்ட தங்களது கவனக்குறைவால் போரில் கலந்து கொள்ள முடியாது போன  கஃப் இபுனு  மாலிக் முராரா பின் ரபீஆ அல்-ஆமிரிய்யீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாகிபீ ஆகிய மூன்று நபித்தோழர்களும்; இருந்தனர். 

நபி (ஸல்)  அவர்கள் யுத்தத்திலிருந்து திரும்பி வந்து வழமை போல் பள்ளிவாயிலுக்குச் சென்று முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பின்னர் மக்களைச் சந்திப்பதற்காக பள்ளிவாயலில் அமர்ந்தார்கள். அப்போது சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட நயவஞ்சகர்கள்; ஒவ்வொருவராக வந்து நபி (ஸல்)அவர்களிடம் தாங்கள் யுத்தத்திற்க்கு வர முடியாது போனதை நியாயப்படுத்திப் பொய்யான காரணங்களைச் சத்தியம் செய்து கூறி நபி (ஸல்) அவர்களைத் திருப்த்திப் படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வெளிப்படையில் அவர்கள் கூறிய அக்காரணங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய உண்மை நிலையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு அவர்களை மன்னித்து விட்டார்கள்.

கஃப் இபுனு மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் : 
இப்போது எனது முறை வந்தது நான் நபி (ஸல்)  அவர்கள்  முன் சென்று ஸலாம் கூறினேன். அப்போது நபி (ஸல்)  அவர்கள்; என்னை நோக்கி கோபம் கலந்தபடி புன்னகைத்து விட்டு உம்மைப் போரில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது எது என்று கேட்டார்கள்;. அதற்க்கு நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எவரேனும் ஒரு உலகாதாயவாதியின் முன்னால் இருந்திருந்தால  எனது வாதத்திறமையால் ஏதாவதொரு பொய்யைக் கூறி அவரைத் திருப்திப் படுத்தியிருப்பேன். என்றாலும் உங்களிடம் ஏதாவது பொய்யைக் கூறி உங்களைச் திருப்த்திப்படுத்தி விட்டாலும் அல்லாஹ் நிச்சயம்  என்னைப் பற்றி அதிருப்தி கொள்ளச் செய்து விடுவான்.

எனவே உண்மையைக் கூறி விட்டால் நீங்கள் கோபமடைந்தாலும் சரி அல்லாஹ் எனக்கு மன்னிப்பு பெறுவதற்கான வழி எதனையாவது தோற்றுவித்து விடுவான் என்று நான் நம்புகிறேன். உண்மையில் என்னிடம் உங்கள் முன் சொல்வதற்க்குரிய காரணம் எதுவுமில்லை. நான் போருக்குச் செல்ல சக்தியனைத்தையும் பெற்றிருந்தேன் என்று கூறினேன். 

அப்போது நபி (ஸல்)  அவர்கள்;; இவர் உண்மையைச் சொன்னார் என்று கூறிவிட்டு என்னை நோக்கி எழுந்திருப்பீராக அல்லாஹ் உமது விடயத்தில் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவும்; என்று கூறினார்கள். நான் எழுந்து என் கோத்திரத்தாரிடம் சென்று அமர்ந்தேன். என்னைப் போன்றே இன்னும் முராரா பின் ரபீஆ அல்-ஆமிரிய்யீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாகிபீ ஆகிய இருவரும் நான் கூறியது போன்றே உண்மையான பதிலைக் கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்)  அவர்கள் எங்கள் மூவருடனும் யாரும் பேசக் கூடாது என்று மக்களுக்குக்  கட்டளையிட்டார்கள். மற்ற இருவரும் வீட்டிலேயே அமர்ந்து விட்டார்கள். ஆனால் நான் வெளியே சென்று வந்தேன். ஜமாத்துடன் தொழுகையை நிறைவேற்றி வந்தேன். கடைவீதிகளில்; சுற்றித் திரிந்து வந்தேன். ஆனால் எவரும் என்னுடன் பேசுவதில்லை. இந்த பூமியே சுருங்கி விட்டது போன்றும் இங்கு நான் அந்நியனாய் இருப்பது போன்றும் இங்கு என்னை அறிந்தவர் எவருமேயில்லை என்பது போன்றும் உணர்ந்தேன்.

தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று நபி (ஸல்)  அவர்களுககு ஸலாம் கூறுவேன் பிறகு நபி (ஸல்)  அவர்களின் உதடுகள் பதில் சொல்ல அசைகின்றனவா? என்று பார்த்துக் கொண்டு இருப்பேன்;. நான் தனியாகத் தொழுகையை நிறைவேற்றும் போது நபி (ஸல்)  அவர்கள் என்னை எப்படிப் பார்க்கின்றார்கள் என்று அறிய தொழுகையில் மறைமுகமாக கண்ணை உயர்த்தி நபி (ஸல்)  அவர்களைப் பார்ப்பேன். ஆனால் நபி (ஸல்)  அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது என்னைப் பார்ப்பார்கள். நான் ஸலாம் சொல்லி முடித்தவுடன் என்னை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்வார்கள்.

ஓரு நாள் நான் மிகவும் பயந்து போய் என் ஒன்று விட்ட சகோதரரும் என் பால்ய நண்பருமான அபூகதாதா  அவர்களிடம் சென்றேன். அவர்களுடைய தோட்டச் சுவரின் மீது ஏறி நின்று கொண்டு அவர்களுக்குச் ஸலாம் கூறினேன். ஆனால் அவரோ ஸலாமுக்குப் பதில் கூறவில்லை.

நான் மனவேதனையுடன் கேட்டேன்: அபூகதாதாவே! இறைவன் மீது ஆணையிட்டு நான் கேட்கின்றேன். நான் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பு வைத்திருக்கவில்லையா? அவர் மௌனமாயிருந்து விட்டார். நான் மீண்டும் வினவினேன். அவர் மீண்டும் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது முறை கேட்ட போது அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே நன்கறிவார்கள் என்று மட்டுமே கூறினார். இதனைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. நான் சுவரிலிருந்து கீழிறங்கி விட்டேன்.

இந்த நாட்களில் நான் ஒரு முறை கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது சிரியா நாட்டு பிறஜை ஒருவன் மன்னர் கஸான் எழுதியனுப்பிய கடிதம் ஒன்றை என்னிடத்தில் கொடுத்தான். நான் அதனைத் திறந்து படித்தேன். அதில்  உமது தலைவர் உம்மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன். நீர் இழிவான மனிதரல்லர். நீர் வீணாக்கப்பட வேண்டியவரல்லர். என்னிடம் வந்து விடுங்கள். நான் உங்களைக் கண்ணியப்படுத்துவேன் என்று எழுதப்பட்டிருந்தது. நான் இதுவும் ஒரு சோதனைதான் என்று கூறி அப்பொழுதே அந்தக் கடிதத்தை அடுப்பில் எரித்து விட்டேன்.

இவ்வாறு நாற்பது நாட்கள் நகர்ந்தன. அதற்குள் நபி (ஸல்)  அவர்கள் உமது மனைவியை விட்டு விலகியிருங்கள் என்று ஆணையிட்டார்கள். நான் அவளைத் தலாக் தந்து விடவா? என்று வினவினேன். அதற்குää இல்லைää நீர் உமது மனைவியை விட்டு ஒதுங்கியருந்தால் போதும்| என்ற கட்டளையை அனுப்பி வைத்தார்கள்.

நான் என் மனைவியை அல்லாஹ் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திரு! என்று கூறி அவளது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டேன்.

ஐம்பதாவது நாள் வைகறைத் தொழுகைக்குப் பின் என் வீட்டுக் கூரை மீது அமர்ந்திருந்தேன். என் வாழ்வைக் குறித்து எனக்குள் நானே சலித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் ஒருவர்  உமக்கு வாழ்த்துக்கள்ää கஅப் பின் மாலிக்கே! என்று கூறினார். இதனைக் கேட்டவுடன் சஜ்தாவில் விழுந்து விட்டேன்! என்னை மன்னிக்கும்படி கட்டளை வந்து விட்டது என்று அறிந்து கொண்டேன். மக்கள் திரள் திரளாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை முந்திக் கொண்டு வந்து என்னை வாழ்த்தினார்கள்; உம்முடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் உமக்கு வாழ்த்துக்கள்; என்று கூறிய வண்ணமிருந்தார்கள்.

நான் எழுந்து நேராக மஸ்ஜித் நபவியை நோக்கிச் சென்றேன். நபி (ஸல்)  அவர்களின் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் ஸலாம் கூறியவுடன்ää உமக்கு என் வாழ்த்துக்கள்! இது உம் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த நாள் என்று கூறினார்கள். நான் இந்த மன்னிப்பு நபி (ஸல்) அவர்களின் தரப்பிலிருந்தா? அல்லது இறைவனின் தரப்பிலிருந்தா? என்று வினவினேன்.

அதற்க்கு நபி (ஸல்)  அவர்கள் இது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மன்னிப்பு| என்று கூறி இந்த பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.(நூல் : முஸ்லிம்)

மேற்படி இந்த சம்பவத்திலிருந்து எமக்குப் பல படிப்பினைகளும் முன்மாதிரிகளும் காணக்கிடக்கின்றன.

நயவஞ்சகர்களாகவே இருந்தாலும் அவர்களின் அந்தரங்கம் பற்றிப் பார்க்காது அவர்களின் வெளிப்படையை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்

உண்மையாளர்கள் ஒரு போதும் கைவிடப்படமாட்டார்கள்.

குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட்டு விட்டால் அதன் பிறகு அவர் குற்றவுணர்வுடன் பார்க்கப்படக் கூடாது.

குற்றமிழைத்தவர் மன்னிக்கப்பட்டு விட்டால் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நமது சகோதரத்துவத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்

தலைமைத்துவத்திற்க்கு அணைவரும் முற்றுமுழுதாகக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுதல் வேண்டும்

எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டக் கூடாது.

எந்நிலையிலும் எப்பேர்ப்பட்ட ஆசைவார்த்தைகளுக்கும் விலை போய் விடக் கூடாது.

அல்லாஹ்வின் மன்னிப்பின் மீது ஆளமான உறுதி கொண்டிருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி வரும் வரை எப்படிப்பட்ட கஷ்டங்களையும் பொறுமையுடன் எதிர் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் புறப்பட வேண்டிய கட்டாயமான நேரத்தில் தவிர்க்க முடியாத காரணம் எதுவும் இல்லாது அதில் பங்கேற்க்காது இருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு இதனை இன்னும் ஆழமாக ஆராய்பவர்கள் இன்னும் அதிகமானப் படிப்பினைகளையும் முன்மாதிரிகளையும் கண்டு கொள்வார்கள் என்பது திண்ணம்.

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...