புதன், 7 மே, 2014

அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்களின் அவசர கவனத்திற்க்கு

அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்களின் அவசர கவனத்திற்க்கு

ஞானசாரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இருக்கும் அமைச்சர் ரிஷாட் பதிய்யுத்தீன் அவர்களுக்கு எனது பணிவான ஆலோசனை.

அன்புடையீ
அஸ்ஸலாமு அலைக்கும் 

தாங்கள் ஞானசாரவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது எதன்பது சிலர் நினைப்பது போன்று சாராதணமான ஒரு விடயம் அல்ல. அது உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு துணீகரச் செயலாகும்.  எனவே தயவு செய்து உங்கள் பாதுகாப்பை மிகக் கடுமையாகப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை உங்கள் காலக்கெடுவை நீடித்தக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களைப் போன்றோர்கள் நம் சமூகத்தின் முதுகெலும்புகள் உங்களுக்கு ஏற்படுகின்ற அபாயங்களும் அபகீர்த்திகளும் நிச்சயம் நம் சமூகத்தில் பாரிய அளவிலான மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடக் கூடும். 

ஏனெனில் பேரினவாதிகளின் பிரதான இலக்கு நம் சமூகத்தை அச்சமடையச் செய்து நம் சமூகத்தின் அனைத்து சக்திகளையும் ஆட்டம் காணச் செய்வதுதான் ஆதலால்தான் அவர்கள் தங்களது அறைகூவல்களை நம் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் வர்த்தக சமூகத்தினர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் போன்ற இந்த மூன்று வகுப்பினர்கயையுமே நோக்கியதாகக் காணக்கூடியதாக உள்ளது.

ஏனெனில் மேற்படி மூன்று வகுப்பினர்களும் அடக்கப்ட்டுவிட்டால் மற்றவர்கள் அனைவரும் தாமாகவே அடங்கி விடுவார்கள் என்பது யதார்த்தம்

ஆகவே உங்களுக்காக இல்லா விட்டாலும் நம் சமூகம் மேலும் மேலும் நம்பிக்கையிழந்து நலிவடைந்து விடாதிருக்கும் வகையில் தூர நோக்குடன் ஆளமாக சிந்தித்து செயல்படுங்கள். இது ஒன்றும் கோளைத் தனம் கிடையாது இது கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப்ப களநிலவரங்களை கருத்தில் கொண்டு கையாளப்படும்; விவேகமிக்க முடிவாகும் என்றே கருதுகின்றேன்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு நாடு துறந்து தப்பிச் சென்றது கோழைத் தனமா? இல்லை விவேகமிக்க சமயோசித காய்நகர்த்தல் காலம் கணிந்த போது மீண்டும் எவ்வித இழப்புமின்றி மக்காவை மாத்திரமின்றி முழு அரேபியாவையும் தங்களது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இவ்வாறான முன்னுதாரணங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸ{ன்னாவிலும் நூற்றுக்கணக்கில் காணக்கிடக்கின்றன எனவே அவைகளை முன்மாதிரியாக வைத்து உங்கள் செயற்பாடுகளை அமைத்தக் கொண்டால் அல்லாஹ்வின் அருளால் வெற்றி நிச்சயம். முஸ்லிம்களின் வெற்றி என்னிக்கையில் கிடையாது அது ஈமானின் கணஅளவில்தான் தங்கியுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருடைய உள்ளங்களிலிருந்தும் குரோதங்களை அகற்றி ஒரே சகோதரர்களாக ஒன்றுபட்டு வாழ அருள் செய்வானாக.

மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (அல்-குர்ஆன்: 15: 47)

குறிப்பு: 
இந்த எனது ஆலோசனை றிஷாட் பதிய்யுத்தின் எனும் ஒரு தனிமனினைப் பாதுகாப்பதற்காக அல்ல மாறாக நம் சமூகத்தின் எதிர்காலம் கருதியே முன் வைக்கப்படுகின்றது என்பதனை வாசகர்கள் கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வெண்டிக் கொள்கின்றேன்.

முனாப் நுபார்தீன்
   

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...