بسم الله الرمن الرحيم
உலகளாவிய முஸ்லிம் தீவிரவாமும் யதார்த்தமும்
الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد
قال الله تعالى : وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوف إليكم وأنتم لا تظلمون ( سورة الأنفال : آية 60)
இன்று உலக அளவில் பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற பாகுபாடின்றி இஸ்லாமிய உலகம் மிகப்பெரும் சவால்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அராஜகங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது நாமனைவரும் அறிந்ததே. சர்வாதிகாரம் கொண்ட மேற்க்கத்தேய வள்ளரசுகள் தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயல்பட மறுக்கும் இஸ்லாமிய நாடுகளின் மீது நியாம் அற்ற விதத்தில் நீதிக்குப் புறம்பாக பல்வேறு குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவற்றின் மீது போர் பிரகடனம் செய்து அந்த நாடுகளையே ஆக்கிரமிக்கின்ற காட்ச்சியினை நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். இது சர்வதேச மட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களாகும்.
அவ்வாறே தேசிய அளவில் நாம் பார்கின்ற போது குறிப்பாக இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழுகின்ற நாடுகளில் பெரும் பாண்மை சமூகம் தங்களது கட்டுபாட்டுக்குள் கட்டுண்டு வாழ மறுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களது அத்துமீறல்களையும் அராஜகத்தையும் பிரயோகித்து வருவதுடன் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அடையாளப் படுத்தி வருவதனையும் நாம் அறியாமல் இல்லை.
இந்நிலையில் ஏன் இவ்வாறு முஸ்லிம்கள் மீது உலக அளவில் தீவிரவாதிகள் எனும் பட்டம் சுமத்தப்படுகின்றது என்பதை ஆராய்கின்றபோது பின் வரும் முடிவுக்கு எம்மால் வர முடியும்.
அதாவது அவர்களின் இந்த அச்சத்திற்குப் பிரதானக் காரணம் அல்-குர்ஆனின் 8 ம் அத்தியாயத்தின் 60 வது இறை வசனமாகும்; என்று கூறலாம்.
அல்லாஹ் கூறுகின்றான் : அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும்ää திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்ää உங்களுடைய எதிரியையும் இன்னும் அவர்கள் தவிர்ந்த வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம்;. அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்ää (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)
மேற்படி வசனத்தில் அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும்ää திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும்ää உங்களுடைய எதிரியையும் இன்னும் அவர்கள் தவிர்ந்த வேறு சிலரையும் அச்சமடையச் செய்யலாம்;. என்று கூறப்பட்டிருப்பதனால்தான் இன்று முழு உலகமும் முழு முஸ்லிம் சமூகத்தைத் தீவிரவாதிகளாகக் கற்பனை செய்து கொண்டு அச்சமுறுகின்றது.
ஏனெனில் புனித அல்-குர்ஆனை முஸ்லிம்கள் கற்று விளங்குகின்றார்களோ இல்லையோ இஸ்லாத்தின் விரோதிகள் நன்றாகவே கற்று விளங்குகின்றார்கள். மேற்படி வசனம் ஒவ்வொரு இஸ்லாமியனும் தங்களுடையவும் இஸ்லாத்தினுடையவும் விரோதிகளை அச்சமுறச் செய்யும் வகையில் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க சேவண்டும் என்றுக் கட்டளைப் பிறப்பிக்கின்றது.
அத்துடன் மேற்படி வசனத்தில் அச்சமுறச் செய்தல் என்பதைக் குறிக்க رهبة எனும் மூலத்திலிருந்து பிறந்த ترهبون எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது அவ்வாறே அரபு உலகில் பயங்கரவாதியைக் குறிக்க மேற்படி رهبة எனும் மூலத்திலிருந்து பிறக்கும் إرهابي எனும் சொல்தான் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது.
அதாவது பயங்கரவாதி என்றால் பிறரை அச்சமுறச் செய்பவன் பிறருக்கு அச்சுறுத்தலாக இருப்பவன் என்பதுவே பொருளாகும். எனவே முஸ்லிம்கள் பிறரை அச்சமுறச் செய்யும் வகையில் தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொர இஸ்லாமியனும் ஒவ்வொரு பயங்கரவாதியாகத்தான் இருப்பான் என்பதுவே அவர்களின் குறுகியப் பார்வையாகும்.
முஸ்லிம்களாகிய நாம் மேற்படி வசனத்திற்க்கு செயல்வடிவம் கொடுத்து எமது வாழ்வில் அமுல்படுத்தத் தவறிய போதிலும் முஸ்லிம்கள் என்றால் அல்-குர்ஆனுடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் ஆதலால் அதன் போதனைப்படி வாழ்பவர்கள் எனவே அவர்கள் மேற்படி வசனத்தின் பணிப்புரையின் பிரகாரம்;தான் செயல்படுவார்கள் என்று அவர்கள் நினைப்பதில் தவறேதும் கிடையாது. இப்படியான அவர்களின் நம்பிக்கைதான் அவர்களை இஸ்லாத்தைக் கண்டு அச்சமுறச் செய்திருக்கின்றது எனலாம்
ஆதலால்தான் களபொட அத்த ஞானசாரர் அக்குறனையில் மாத்திரம் சுமார் 80 கும் மேற்ப்பட்ட பள்ளிகள் இருக்கின்றன அவைகள் அனைத்தம் இந்த நாட்டு சிங்களவர்களுக்கு எதிரான பதுங்கு குளிகளாகும் என்று கூறி பள்ளிவாயற்க்களுக்கு எதிரான தனதுப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றார்.
அந்த அச்ச உணர்வின் காரணமாகத்தான் நாட்டில் உள்ள பள்ளிவாயில்கள் மீது தங்களதுத் தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் நடாத்தி வருகின்றார்கள் அவர்களது பார்வையில் ஒவ்வொரு பள்ளிவாயலும் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு முஸ்லிம்களைத் தயார்படுத்தும் பதுங்கு குளிகளாகும்.
இந்த அவர்களது அச்ச உணர்வுக்கு அல்குர்னின் 9வது அத்தியாயத்தின் 5 வது வசனமும் மேலும் வலு சேர்பதாகவுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான் : (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு,முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன்:9:5)
மேற்படி வசனத்தில் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதலால்த்தான் ஞானசாரர் அல்-குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை கானுகின்ற இடத்திலெல்லாம் வெட்டுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்
நாம் வெறுமனே நிராயுதபானிகளாக இருந்த போதிலும் மேற்படி இந்த இரு இறை வசனங்களும்தான் அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது இதுதான் யதார்த்தம்.
இஸ்லாம் என்ற இந்த பெயருக்கே அவர்கள் உள்ளத்தில் எம்மைப் பற்றி இந்த அளவு அச்சமும் பீதியும் இருக்கின்றது என்றால் முஸ்லிம்களாகிய நாம் உண்மையாகவே மேற்ப்படி வசனங்களுக்கு நமது வாழ்வில் உயிர் கொடுத்து செயல் வடிவம் கொடுத்;திருந்தால் நிச்சயமாக இன்று எமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மிக மோசமான அவல நிலை தோன்றியிருக்காது.
எவ்வாறு இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் அவர்களது உள்ளங்களில் இருக்கின்றதோ அவ்வாறே முஸ்லிம்களைப் பற்றிய அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இன்று அவர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றார்களேத் தவிர முஸ்லிம்களைக் கண்டு அல்ல மாறாக அவர்களது உள்ளங்களிலிருந்து எம்மைப் பற்றிய அச்சம் அகன்று விட்டது அதற்கான காரணத்தை நபி (ஸல்) பின்ருமாறு தெளிவு படுத்துகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கம் மிகைத்திருக்கும். அப்போது ஒரு நபித் தோழர் இறைத் தூதர் அவர்களே! நாம் அப்போது எண்ணிக்கை குறைந்து இருப்பதனால் அவ்வாறு நிகழுமோ? என்று கேட்டார் :
அதற்கு நபி (ஸல்) அவர்கள்;: நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் நுரையைப் போன்றும், நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் உள்ளங்களிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்! எனறு பதிலளித்தார்கள்
அப்போது வஹ்ன், என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும், இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : சௌபான் (ரலி) நூல் : அபூதாவூது)
நமது ஈமான் வலுவிழக்குகின்ற போதே தீய சக்திகள் நம்மீது அராஜகத்தினையும் அடக்குமுறைகளையும் பிரயோகிக்கும் என்பது மேற்படி நபிவழிச் செய்தியிலிருந்து நாம் புறிந்து கொள்ள முடிகின்றது.
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக