உனது உண்மையான சுபீட்சத்தைத் தெரிந்து கொள். பகுதி - 2
அரபி மூலம் : இப்றாஹிம் அல்-யஹ்யா (பொறியியலாளர்)
தமிழில் : முனாப் நுபார்தீன்.
அல்லாஹ்வின் அடிமை
அல்லாஹ் மனிதர்களைப் படைத்து சத்தித்தையும் அசத்தியத்தையும் பிரித்த றியக்கூடிய பகுத்தறிவை வழங்கினான்;. விளையாட்டாக அவர்களைப் படைக் கவில்லை. இபாதத் எனும் வழிபாட்டுக்காக அவர்களைப் படைத்தான். அது சுருக்கமாக அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் அவனது கட்டளைகளுக்கு கட்டுப்படல் விலக்கல் களைத் தவிர்த்தல் என்பதை உறுதி செய்வதாகும். வழிபாடு மக்களை பரிசோதிக்கும் நிலையில் கணிக்கப்படுகிறது. யார் இபாதத்தை நிறைவேற்றுகிறோரோ அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் நுழைவிப்பான். அவர் உண்மையான சுபீட்சத்தைக் காண்பார். யார் இபாதத் செய்ய மறுக்கிறாரோ அவர் நிலையான துண்பத்தை அனுபவிப்பார். இங்கு நாம் சுட்டிக்காட்டுவது இபாதத் (வழிபாடு) என்பது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் தாக்ககரமான பங்களிப்பை வழங்குவதைக் குறிக்கிறது. மனித சக்திக்கு ஏற்ப இறை வழிகாட்டலின் கீழ் செல்லும் வழிகாட்டல் பண்புகொண்;ட மனித தத்துவ நாகரீகம் ஒன்றை கட்டியெழுப்புவதன் மூலம் மனிதன் நீதிää மரியாதைää கௌரவம்ää மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவிப்பதாகும்.
உயர் கண்கானிப்பு
அல்லாஹ்வின் கண்கானிப்பு மனிதர்களை விட்டும் இமை மூடுமளவுகூட மறையாது. இதை உணர்ந்துகொள்வதானது மனித சமூகங்களுக்கிடையில் நாகரீகமான நடத்தையைப் பதிவதில் பங்களிப்புச் செய்கிறது. மனிதன் அனைத்துச் செயல்பாடு களுக்குமான ஒரு ப10ரணத்துவத்தை வழங்குகிறது. நற்காரியங்களை செய்வதில் ஆர்வமுள்ளவனாகவும் பாவங்களை விட்டும் தூரமானவனாகவும் அவனைக் காண்பாய். மனிதன் பார்வைகளில் இருந்து விடுபட்டாலும் கூட அதே நேரம் இந்நம்பிக்கை மனிதனுக்கு ஒரு பகுதி அமைதி, பாதுகாப்பு, வெற்கம், மகிழ்ச்சி, திருப்தி என்பவற்றை அழிக்கிறது.
மக்களோடு கனிவாக நடந்துகொள்ளல்.
அல்லாஹ{த்தஆலா மக்களுக்கு மத்தியில் நீதி தேவைப்பட்டோருக்கு உதவுதல், உறவுகளைப் பேணுதல் பேணுதலாக நடந்துகொள்ளல், வாய்மை போன்றவற்றை ஏவியுள்ள அதே நேரம் அநியாம், விபச்சாரம், களவு, வட்டி, மக்கள் மீது அத்துமீறல், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரைக் கொலை செய்தல், பெருமை யடித்தல் போன்றவற்றை விலக்கியுள்ளான். அதாவது இஸ்லாமிய மார்க்கம் சிறந்த குணங்கள், இங்கிதங்களை கடைப் பிடிக்குமாறு ஏவுகிறது. மோசமான கீழ்தரமான குணங்களை பண்புகளை விட்டும் தடைசெய்கிறது.
இஸ்லாம் கொண்டுவந்த இப்பண்புகளை மனிதர்கள் கடைபிடிக்கும் போது இவ்வுலகில் ஒன்றுபட்ட பரஸ்பரம் அன்புகாட்டக்கூடிய மனித சமூகத்தில் உண்மையான சமூக சுபீட்சத்தைப் பெற்றுக் கொள்வர். மறுமையில் மனித உள்ளத்தில் தோன்றிடாத இன்பகரமான வாழ்க்கையை அனுபவிப்பர். குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இஸ்லாத்தை சார்ந்த சிலரால் ஏற்படும் தவறுவகள் அந்த மனிதர்களைத் தான் பிரதிபலிக்கிறதே தவிர இஸ்லாத்தைப் பிரதிபலிப்பதில்லை. அந்த மனிதர்கள் அதற்காக சவால் விடுகின்றனர். இஸ்லாமிய சட்டத்திற்கேற்ப தண்டிக்கப்படுவர்.
பிறரை தாழ்நிலைப்படுத்தாதே!
அல்லாஹ்விடத்தில் மனிதர்களில் மிக உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றோர் இறையச்சம் கொண்டோராவர். இஸ்லாம் குழுவாதத்தை ஆதரிப்பதில்லை. கறுப்பன் வெள்ளையன், ஏழை பணக்காரன், அராபியன் அராபயில்லாதவன் என வேறுபாடு காட்டுவதிலலை. மாறாக அல்லாஹ் நட்கருமங்களை நிரந்தர மகிழ்ச்சியைப் பெறுவதற்கு போட்டி போடும் தளமாக ஆக்கியுள்ளான்.
இஸ்லாத்தில் தவறு
மனிதன் பித்ரா எனும் இயற்கை மார்க்கத்திலே பிறக்கிறான். அவன் மீது எந்த முற்பிரவிப் பாவமும் இல்லை. மனிதன் பாவம், தவறில் நிச்சயமாக விழுவான். அப்போது அவனுக்கு விடுதலை,பரிகாரத்தை வைத்துள்ளான். அது கைசேதப்படல், பாவமன்னிப்புத் தேடல், அப்பாவத்தில் திரும்ப மீள்வதில்லை என்ற உறுதி, உரிமை யாளர்களிடம் உரிமைகளை ஒப்படைத்தல், யார் இவ்வாறு செய்கிறாரோ அவரை அல்லாஹ் மன்னித்து இம்மை மறுமை சுபீட்சத்தை வழங்குகிறான். ஒரு குற்றவாளி பாவி எவ்வளதான் பாவம் செய்தாலும் லோகாயதக் கட்டணங்கள் செலுத்தி அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவரிடம் பாவமன்னிப்பு கேட்பது சரியான விடயமல்ல. பாவங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் மன்னிக்க முடியாது. எந்த சந்தேகமுமின்றி இந்த நம்பிக்கை மனிதனுக்கு உள நிம்மதியையும், நீதி, அன்பு, அல்லாஹ்வின் அருளில் ஆதரவு கொள்ளல், உத்வேகம் போன்றவற்றை அளிக்கிறது.
தூய்மையளனாக இரு
சுத்தம் ஒரு நாகரிகத் தேவை, மனிதர்களுக்கு விருப்பத்தைக் கொடுப்பது. வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் சுத்ததை பேணுமாறு இஸ்லாம் தூண்டியுள்ளது. உடம்பு, பாதை, ஆடைகள் எல்லாவற்றிலும் சுத்தத்தைப் பேணச் சொல்கிறது. மனிதன் அழுக்குகளை அகற்றுதல், கடமையான நாளாந்த ஐங்காலத் தொழுகைகளுக்கு முன்னர் உறுப்புக்களை கழுவ வேண்டும் எனப் பணித்துள்ளது.
மற்ற பகுதி:-
பெண்ணை கௌரவப் படுத்தல், மதித்தல், அவளது உரிமைகளைக் கருத்தில்கொள்ளல், அவளது உயர்ந்த பண்பாடுகளை விளங்கிக்கொள்வது, தந்தையாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் அல்லாஹ் விதித்துள்ள கடமையாகும். மனைவி மீது அல்லாஹ் உணர்ப10ர்வ ஆத்மவயப்பட்ட சில உரிமைகளை அதாவது நல்ல முறையில் நடந்துகொள்ளல், செலவு செய்தல், வாரிசு சொத்து பேன்றவற்றை விதியாக்கியுள்ளான். தம்பதிகளுக்கிடையில் அன்பு, பாசம், போன்ற இணைப்பினை ஏற்படுத்தக் கூடிய சகல சட்டப10ர்வ வழிகளையும் தூண்டியுள்ளான். ஏனெனில் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் குடும்பக் கட்டிடத்தின் இரகசியமாகும்.
புதியதை முதலீடு செய்தல்.
இஸ்லாமிய மார்க்கம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய வாழ்க்கை யை இலகுபடுத்தக்கூடிய, மன ஆறுதலை அதிகரிக்கக் கூடிய புதிய நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. மாறாக பிறரை நோவினை செய்யாமை,
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட இம்மையிலும் மறுமையிலும் மனிதர்களை மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய இறைவழிகாட்டல் என்பதை நிபந்தனையாகக் கொண்ட கண்டு பிடிப்பு, புதுமை படைத்தலின் பால் தூண்டுகிறது.
பூரணத்துவம், தெளிவு, எளிமை
இஸ்லாத்தின் சட்டங்கள், தண்டனை முறைகள் தெளிவானவை, இலகுவானவை. அவற்றை வழிபாடாகக் கொள்வதற்கு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்புடைய ஒழுங்குபடுத்தப்பட்ட சட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிக்கல், மயக்கம் இல்லை. அவை மனித ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டவையல்ல. மாறாக மனித இனத்தை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய அறிஞனாகிய, நுட்பமுடையவனாகிய அல்லாஹ் விடமிருந்து அருளப்பட்டவை. மனிதர்கள் எவ்வகை உயர்பதவிகள், அந்தஸ்த்துக்கள் கொண்டிருந்தபோதும் அவர்கள் அனைவரும் அதற்கு கீழ்படிய கடமைப்பட்டுள்ளனர்.
குற்றத்தை எதிர்த்துப் போராடுதல்.
இஸ்லாம் குற்றங்களோடு போராடுகிறது. அதற்காக தண்டிக்கிறது. மனித சமூகம் சுபீட்சமடையவும் மக்களின் உடமைகள், மத அனுஷ்டானங்கள், உயிர், மானம், மரியாதை, பாதுகாக்கப்படவும் ப10மியில் குழப்பம், அட்டகாசத்தை துண்டிக்க வேண்டும் என கட்டளையிடப்படுகிறது. இச்சட்டம் மனித இனத்திற்குத் தேவையான அமைதி, சுபீட்சம், பாதுகாப்பினை அனைவர் மீதும் நடைமுறைப்படுத்தும் வகையில் இறை வழிகாட்டல்களுக்கு ஏற்ப வழங்குகிறது.
வாழ்க்கையின் சுமைகளைக் குறைத்தல்
படைப்புக்கள் படைப்பாளனுடன் தொடர்புபடவும், அன்றாட வாழ்க்கைக் கஷ்டம் நீக்கவும் வித்தியாசமான நேரங்களில் அன்றாடம் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். மனிதன் அங்கு தனது பிரார்த்தனையை கேட்கச் செய்து உயர்ந்த, மகத்துவமிக்க, உணவளிக்கக்கூடிய படைப்பாளனிடம் தனது முதுகை வளைத்து ப10மியில் நெற்றியை பணிவுடன் வைத்து தேவைகள், அபிலாஷைகளை சமர்ப்பிக்கின்றான். அப்போது உள்ளம் வான இரட்சகனுடன் அண்டவெளியில் சஞ்சரிக்கிறது. தொழுகைகள், தரிப்பிடங்கள் என்றவகையில் ஈமானின் மூலம் உள்ளதை நிரப்புகிறது. அதுதான் உண்மையான மகிழ்ச்சியின் அத்திவாரமாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக